டந்த 10 வருடங்களுக்கும் மேலாக திண்டுக்கல் மாவட்ட முத்தனாம்பட்டி அருகே சுரபி நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் ரமாபிரபா கல்லூரி மற்றும் பாலிடெக்னிக், கேட்டரிங் மற்றும் பேஷன் டிசை னிங் போன்ற கல்லூரிகளும் நடந்துவருகின்றன. இவற்றின் தாளாளராக இருப்பவர் ஜோதிமுருகன்.

தினகரனின் அ.ம.மு.க.வில் மாநில இளைஞரணி துணைச்செயலாளராக இருக்கும் இவர், கடந்த பாராளுமன்றத் தேர்தலில், அக்கட்சியின் சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டார். இந்த நிலையில், சினிமா தயாரிப்பாளராகவும், "அண்ணாத்த' உள்ளிட்ட படங்களில் வில்லன் -துணை நடிகர் எனவும் முகம் காட்டியிருக்கிறார். இந்த நிலையில்தான், அவரது முகமூடி கிழிந்து, அவரது மோசமான காமுக முகம் வெளிப்பட்டிருக்கிறது.

ff

கடந்த 19-ஆம் தேதி வழக்கம்போல் தனது நர்சிங் கல்லூரிக்குச் சென்ற தாளாளர் ஜோதி முருகனை திடீரென மாணவிகள் முற்றுகை யிட்டனர். திகைத்துப் போய் நின்றவரிடம், ஒரு மாணவி, அவர் செய்த சில்மிஷம் பற்றிச் சொல்ல... அதைக்கேட்டு உணர்ச்சிவசப்பட்ட மாணவிகள், அவரைத் தாக்க முயன்றனர். அவர்களிடமிருந்து தப்பித்து ஓடினார் மன்மத தாளாளர் ஜோதிமுருகன்.

Advertisment

உடனே, தாளாளர் ஜோதிமுருகனையும், அவ ரது லீலைகளுக்கு உடந்தையாக இருக்கும் விடுதி வார்டன் அர்ச்சனாவையும் கைதுசெய்யக் கோரி, மாணவிகள் மறியல் போராட்டத்தில் குதித்தனர்.

எஸ்.பி. சீனிவாசன் தலைமையிலான போலீசார் ஸ்பாட்டுக்கு ஓடிவந்து, மாணவிகளை சமாதானப்படுத்த முயன்றனர். டி.ஐ.ஜி. விஜயகுமாரி நேரில்வந்து அந்த மாணவிகளை சமாதானம் செய்து, கூடிய விரைவில் அந்த இருவரையும் கைது செய்வதாகக் கூற... அதன் பிறகே போராட்டம் கைவிடப்பட்டது. எனினும் கல்லூரியிலும் அவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இது தொடர்பாக மாணவிகளிடம் நாம் விசாரித்தபோது, "திருப்பூரைச் சேர்ந்த ஒரு மாணவி, தாளாளரின் டார்ச்சருக்கு பயந்து டீ.சி. வாங்கிட்டுப் போயிட்டா. பணக்கட்டுகளை எண்ணனும்னு சொல்லி தன் ரூமுக்கு வார்டன் மூலம் அழைத்த தாளாளர் ஜோதி, திருப்பூர் மாணவியிடம் பாலியல் ரீதியாக டார்ச்சரை ஆரம்பித்ததும், தப்பித்து ஓடிவந்துவிட்டாள். இதுபற்றி வார்டன் அர்ச்சனாவிடம் அந்த மாணவி புகார் சொன்னபோது, "இதெல்லாம் சகஜம்தான், அட்ஜஸ் பண்ணிக்க'ன்னு சொல்லியிருக்கார்.

Advertisment

ff

அதேபோல், இரவு நேரத்தில் அடிக்கடி கல்லூரிக்கு வரும் தாளாளரை, விடுதி மாணவிகளைப் பார்க்கும்படி வற்புறுத்துவார். அப்படி போகும்போது சால் போடாமல் போகச்சொல்வார். தாளாளரோ, சில்மிஷத்தில் இறங்குவார். தடுத்தால் மார்க்கில் கைவைப்போம் என்று மிரட்டுவார். தாளாளரோடு அடிக்கடி அவுட்டிங் போய்ட்டு வாங்கன்னு மாணவிகளை அனுப்புவார் ffவார்டன். இதுவரை குறைந்த பட்சம் 500-க்கு மேற்பட்ட மாணவிகளுக்கு தாளாளர் செக்ஸ் டார்ச்சர் கொடுத்திருப்பார். இதற்கு அடிபணியாத மாணவிகளை பாத்ரூம் கழுவச் சொல்லி டார்ச்சர் கொடுப்பார்கள். கல்லூரி வளாகத்திலேயே பகிரங்கமாக வார்டன் அர்ச்சனாவும் தாளாளர் ஜோதி முருகனும் வெட்கமே இல்லாமல் கொஞ்சிக்கொள்வார்கள்''” என்று கலக்கமும் சங்கடமுமாகச் சொன்னார்கள்.

ரெட்டியார்சத்திரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சக்திவேல் நம்மிடம், "கடந்த 2013-ல் இதேபோல் மாணவி களை தாளாளர் ஜோதிமுருகன் பாலியல் டார்ச்சர் செய்தபோது, அவர்களில் 3 மாணவிகள் மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தனர். அவர்களை மற்ற மாணவிகள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து உயிர் பிழைக்க வைத் தனர். அப்போது தற்கொலைக்கு தூண்டியதாக தாளாளர் கைது செய்யப்பட்டார். இருந்தும்... அந்த ஆள் திருந்தவே இல்லை. இந்த பாலியல் டார்ச்சர் கல்லூரியை மொத்தமாய் இழுத்து மூட வேண்டும்''’என்றார் அழுத்தமாக.

நாம் சந்தித்த பெற்றோர் தரப்பைச் சேர்ந்த துரையோ, "கூலி வேலை பார்க்கக்கூடிய நான், கஷ் டப்பட்டு என் பிள்ளையை இந்த நர்சிங் கல்லூரியில் சேர்த்தேன். ஆனால் தாளாளரே பிள்ளை களுக்கு பாலியல் டார்ச்சர் கொடுக்கிறார் என்றால்... எப்படி இந்த கல்லூரியில் என் பிள்ளையை தொடர்ந்து படிக்கவைக்க முடியும்? அதனாலதான் டி.சி. வாங்க வந்திருக்கேன். நாங்க ஏழையா இருந்தாலும் மானம், மரியாதைதான் எங்களுக்கு முக்கியம்''’என்றார் சங்கடமாக.

ff

மாவட்ட எஸ்.பி. சீனிவாசனிடம் இதுபற்றிக் கேட்டபோது, "மாணவிகளை பாலியல் ரீதியாக தாளாளர் டார்ச்சர் செய்திருக்கிறார். அதுபற்றி வெளிப்படையாகவே மாணவிகள் புகார் கொடுத் திருக்கிறார்கள். அதன் அடிப்படையில்தான் தாளாளர் ஜோதிமுருகன் மற்றும் வார்டன் அர்ச்சனா ஆகியோர் மேல் போக்ஸோ சட்டத்தில் வழக்கைப் பதிவுசெய்து, வார்டன் அர்ச்சனாவை கைதும் செய்திருக்கிறோம். தலைமறைவான தாளாளரைப் பிடிக்க, நான்கு தனிப்படைகள் அமைத்துத் தேடிவருகிறோம். கூடியவிரைவில் கைது செய்துவிடுவோம். இந்தக் கல்லூரியில் உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் சீல்வைத்து கல்லூரியையும் இழுத்து மூடிவிட்டோம். அதனால் போராட்டத்தில் ஈடுபட்ட ஒட்டுமொத்த மாணவி களும் அமைதியாக பெற்றோருடன் வீடுகளுக்குத் திரும்பிவிட்டனர்''’என்றார் அழுத்தமாக.

இதற்கிடையே 23-ந் தேதி திருவண்ணாமலை மாவட்ட போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்த தாளாளர் ஜோதிமுருகனை, போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கவுள்ளது காவல்துறை.

பயிரை மேயும் வேலிகளை இனியும் விட்டுவைக்கலாமா?