கேரளாவில் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருக்கும் நிலையில், அதற்கு முன்னோட்டமாக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 9 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. இதில் விசேஷம் என்னவென்றால், தேர்தல் தேதி அறிவித்த இரண்டாவது நாளில் பா.ஜ.க., மொத்தமுள்ள 14 மாவட்டங்களுக்கும் வேட்பாளர் களை அறிவித்தது. அதன்பிறகு இரண்டு நாட்கள் கழித்து காங்கிரஸும் வேட்பாளர்களை அறிவித்த நிலையில், திடீரென்று இரு கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை வாபஸ் பெற்று அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத் தன.

Advertisment

இதற்கு காரணம் தான் என்ன? கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 52 சதவீதம் ஒதுக்கி வேட்பாளர் பட்டியலை அறிவித்த கம்யூனிஸ்ட், அதில் 25 வயதி   லிருந்து 33 வயதுக்குட்பட்ட இளம்பெண்களுக்கு வாய்ப்புக்  களை வாரிவழங்கியது. இதை பின்பற்றி காங்கிரஸும், பா.ஜ.க.வும் இளம் பெண்களை வேட்பாளர் களாக நிறுத்தின. ஆக, மூன்று கட்சிகளுமே இளம்பெண்களை நிறுத்தியதால் கேரள உள்ளாட்சித் தேர்தல், அழகிப்போட்டி போல் விறுவிறுப்பாக இருந்தது. இதன்மூலம் எதிர்காலத்தில் இளம்பெண்கள் அரசியலில் ஆர்வத்தோடு இறங்குவார் களென்று அரசியல் நோக் கர்கள் கருத்து தெரிவித்தனர். 

Advertisment

இந்நிலையில் அந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் நிறுத்திய இளம் பெண் வேட்பாளர்களில் 75 சதவீதம் பேர் வெற்றிபெற்று உள்ளாட்சி பதவிகளைக் கைப்பற்றி னார்கள். காங்கிரஸுக்கும், பா.ஜ.க.வுக்கும் பெரும் தோல்வியே மிஞ்சியதால், இரு கட்சிகளிலுமுள்ள 40 வயதுக்கு மேற்பட்டவர்களின் கோபத் துக்கு ஆளாகியது கட்சித் தலைமை! 

kerala1

இந்த நிலையில் தான் தற்போது நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கும் தேதி அறிவித்தவுடனே காங்கிரஸும், பா.ஜ.க.வும் முந்திக்கொண்டு தங்களின் வேட்பாளர்களை அறிவித்த ஓரிரு நாட்களில் கம்யூனிஸ்ட் அறிவித்த வேட்பாளர்கள் லிஸ்ட், இரு கட்சிகளுக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. 

Advertisment

இதுகுறித்து மூத்த பத்திரிகையாளரான மாத்ருபூமி இராமானந்தன் கூறும்போது, “"கடந்த உள்ளாட்சித் தேர்தலில் 33 வயதிற்குட்பட்ட இளம்பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்த கம்யூனிஸ்ட், இந்த முறை 20 வயதிலிருந்து 23 வயதிற்குட்பட்ட கல்லூரி மாணவிகளுக்கு வாய்ப்புகளைக் கொடுத்து உள்ளாட்சிக் களத்தில் இறக்கிவிட்டிருக்கிறது. 

இவர்கள் மருத்துவம், பொறியியல், சட்டம், ஆராய்ச்சி, ஆயுர்வேதிக், ஆசிரியர் பயிற்சி, கலை, அறிவியல் எனக் கல்லூரிகளில் படிக்கிற மாணவி களாவர். கம்யூனிஸ்ட் கட்சியின் எஸ்..எஃப்.ஐ. அமைப்பை சேர்ந்த இவர்களை முதன்முதலாக உள்ளாட்சித் தேர்தலில் வேட் பாளராக்கியிருக்கிறது அக்கட்சி.

இந்த நிலையில்தான் கம்யூனிஸ்ட் வேட்பாளர்களின் லிஸ்டை பார்த்ததும் அதிர்ந்து போன காங்கிரஸும், பா.ஜ.க.வும் கடந்த தேர்தலில் அனுபவமில்லாத இளம்பெண்களை நிறுத்தி பாடம் படித்ததால் இந்தத் தேர்தலில், அவர்கள் ஏற்கனவே வேட்பாளராக அறிவித்த 35, 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் லிஸ்ட்டை உடனே தூக்கியெறிந்துவிட்டு, மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சியைப்போல் காங்கிரஸ் தனது என்.எஸ்.யூ.ஐ. அமைப்பை சேர்ந்த கல்லூரி மாணவிகளையும், பா.ஜ.க. தனது ஏ.பி.வி.பி. அமைப்பை சேர்ந்த கல்லூரி மாணவிகளையும் களமிறக்கியுள்ளது.

இதில் மூன்று கட்சிகளும் அறிவார்ந்த, அழகான கல்லூரி மாணவிகளை வேட்பாளர்களாக்கியிருப்பதால் திரும்பிய பக்கமெல்லாம் திருவிழா போல் தேர்தல் பிரச்சாரம் களைகட்டியிருக்கிறது. பல இடங்களில் ஒரே கல்லூரியில் படிக்கும் தோழிகள் நேரடியாக மோதுகின்றனர். அதேபோல் போஸ்டர் களில்கூட கட்சியை யும், சின்னத்தை யும்விட வேட் பாளர்களான மாணவிகளின் கிளாமரான படத்தைத்தான் முன்னிலைப் படுத்தியுள்ளனர்.

மேலும் உரிமையோடு வீட்டுக்குள்ளேயே சென்று அவர்கள் வாக்கு சேகரிக்கும் போது, தங்கள் வீட்டுப் பிள்ளையைப்போல் மகிழ் வோடு வரவேற்கிறார்கள். அதேபோல் வேட்பாளர்களான கல்லூரி மாணவிகளோடு அந்த ஊர் இளைஞர்கள் ரீல்ஸ் எடுத்து அதை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்கள். 

kerala2

இதையெல்லாம் பார்க் கும்போது, இது தேர்தல் போட்டியா? அல்லது அழகிப் போட்டியா? எனக் கணிக்க முடியாதபடி அனைவரும் ஆர்வத்தோடு தேர்தல் பிரச்சாரத்தை கண்டுரசிக்கி றார்கள்.  மொத்தம் 75,632 வேட்பாளர்கள் களத்தில் நிற்கும் நிலையில், இதில் கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள், குடும்பப்பெண்கள் என 39,604 பேர் போட்டி யிடுகிறார்கள். இதில், திரு வனந்தபுரம் மாநகராட்சியில் பா.ஜ.க. மேயர் வேட்பாளராக சாஸ்த்தமங்கலம் வார்டில் போட்டியிடும், சமீபத்தில் ஓய்வுபெற்ற சிறைத்துறை டி.ஜி.பி. ஸ்ரீலேகாவை எதிர்த்து, கம்யூனிஸ்ட் மேயர் வேட் பாளராக 22 வயதான கல்லூரி மாணவி அமிர்தா போட்டி யிடுவது அனைவரின் கவனத் தையும் ஈர்த்துள்ளது''’என்றார்.

சமூக விமர்சகரும் பத்திரிகையாளருமான சூர்யகாயத்திரி கூறும்போது..., "உள்ளாட்சித் தேர்தலில் கல்லூரி மாணவிகளுக்கு வாய்ப்பு கொடுத்திருப்பது நல்ல விசயம் தான். எதிர்காலத்தில் பெண்களின் அரசியல் பொறுப்புகளை அதிகரிக்க இது நல்ல வாய்ப்பாக இருப்பதோடு, இத்தகைய போட்டி யால் உள்ளாட்சியில் பெண்களின் பங்கும் வலுப்பெற்று வருகிறது. தேர்தலில் போட்டியிடும் கல்லூரி மாணவிகள், புதிய உற்சாகத்துடன் சமூக முன்னேற்ற நோக்கத்துடன் சமூகப்பணி என்ற ஈடுபாட்டுடன், கல்வி மற்றும் பெண் உரிமைகளை முன்னிறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டு வருவது கவனத்தை ஈர்க்கிறது. மேலும் இவர்கள் சோசியல் மீடியாவைப் பயன்படுத்தி இளம் வாக்காளர்களைக் கவர் கின்றனர்.

kerala3

கல்வி அனுபவம் மட்டுமேயிருக்கும் இந்த மாணவிகளுக்கு அரசியல் அனுபவம் இல்லை என்ற அதிருப்தி குரல்கள் எழுந்தாலும், படித்த இளைய தலை முறையினரின் திறமை  உள்ளூர் ஆளுமைக்கு பலத்தை கொடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. கடந்த தேர்தலில் கம்யூனிஸ்டை சேர்ந்த அரசியல் அனுபவமில்லாத முதுகலை பட்டதாரியான 25 வயதான இளம்பெண் ஆர்யா, நாட்டிலேயே இளம் வயதில்  திருவனந்தபுரம் மாநகராட்சி மேயரானார். எதிர்க்கட்சிகளால் கூட அவர்மீது குற்றம்சாட்ட முடியாத அளவில் அனுபவத்தை விட திறமையால் மாநகராட்சியில் மக்கள் பணியை திறம்பட செய்தார். இந்த நிலையில் இளைய தலைமுறையினரின் அரசியல் வேட்கைக்கு கேரளா முன்னுதாரணமாக அமைந்திருப்பது  போல் மற்ற மாநிலங்களும் இதை பின்பற்ற வேண்டும்''’என்றார்.

இதற்கிடையில், பல மாணவிகள் தங்கள் பெற்றோர்களின் விருப்பமில்லாமல் தேர்தலில் நிற்பதால் அந்த மாணவியின் படிப்பு கேள்விக்குறியாகி விடுமோ என்ற அச்சத்தில் பெற்றோர்கள் கட்சி நிர்வாகிகளிடம் புலம்பி வருகிறார்கள். மேலும், கல்லூரியில் மாணவிகள் தங்களின் விருப்பத்தை பொறுத்து எதாவது ஒரு மாணவர் அமைப்பில் இருப்பார்கள். அந்த அமைப்பைச் சேர்ந்த கட்சியின் வேட்பாளராக நிற்பதால் இதில் சில பெற்றோர்களுக்கு உடன்பாடு இல்லை. ஏனென்றால் பெற்றோர்கள் இன்னொரு கட்சியின் அனுதாபியாக இருப்பதால் வீட்டுக் குள்ளேயும் அந்த மாணவிகளுக்கு இருக்கும் கடுமையான எதிர்ப்பையும் மீறி பலர் களத்தில் நிற்கிறார்கள்.

கோட்டக்கல் நகராட்சியின் 29ஆம் வார்டில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் பொறியியல் கல்லூரி 3ஆம் ஆண்டு மாணவி நவ்யா மோகனின் குடும்பம், பா.ஜ.க.வின் தீவிர ஆதரவாளர்களாக இருப்பதோடு, தந்தை பா.ஜ.க.வில் நிர்வாகியாகவும் உள்ளார். ஆனால் அந்த மாணவியுடன் படிக்கும் சக மாணவர்கள் கேட்டுக்கொண்டதால் அவர்களின் ஆதரவுடன் நவ்யா மோகன் போட்டியிடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த அவரின் தந்தை, மகளை எதிர்த்து தன் னுடைய சகோதரியின் மகளை பா.ஜ.க. சார்பில் நிறுத்தியுள்ளார். இதேபோல் தான் பல இடங்களில் குடும்பங்களையும் உறவினர்களை யும் எதிர்த்து  மாணவிகள் பலர் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் தேர்தலில் போட்டியிடும் மாணவிகள் சிலரின் அந்தரங்க விசயங்களையும், புகைப்படங்களையும் மார்பிங் செய்து வக்கிரமாகப் பதிவிட்டு, அந்த மாணவிகளின் மனதை நோகடித்துவருகிறார்கள். இதனால் அந்த மாணவிகளின் பெற்றோர்கள் பெரும் வருத்தத்தில் இருக்கிறார்கள். இது சம்பந்தமாக தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருக்கிறார்கள்.

இந்த நிலையில், தேர்தல் களத்தில் நிற்கும் மாணவிகள், "நாட்டின் நலனுக்கு நாட்டுக்காரிக்கு ஒரு ஓட்டு' என்றும், "மாறாதது இனி மாறும்' என்றும், "எப்போதும் கூட இருப்போம் உடன்பிறப்பாய்' என்றும், "நம்புங்கள் இந்த கைகள் பாதுகாப்பானது' என்றும், பல வாசகங்களோடு ஓட்டுக்கேட்டு வீட்டுப் படியேறும் அந்த மாணவிகளை சம்பந்தப்பட்ட கட்சிகள் ஊக்கப்படுத்தினாலும், அவர்களின் அனுபவ மின்மை, அவர்களுக்கு சவாலாகத்தான் இருக்கிறது என்கிறார்கள் வாக்காளர்கள்.