திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும், பாரதிதாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் (பிம்) கல்லூரி பற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் சுழன்றடிக் கின்றன. குறிப்பாக, தன்னிச்சையாக இதன் சட்ட திருத்தங்களைத் திருத்துகிறார்கள், இதைத் தனியார் கல்லூரி என்றும் அறிவித்துக் கொள்கிறார் கள், கல்லூரி தொடங்கி இத்தனை ஆண்டுகளில் ஒரு தலித், பழங்குடி பேராசிரியரைக் கூட நிய மிக்காமல் சமூக நீதியை குழிக் தோண்டிப் புதைத்து வருகிறார்கள் என்றெல்லாம் இந்த பிம் கல்லூரி யைப் பற்றிய புகார்களைப் பலரும் அடுக்குகின்றனர்.
இந்த நிலையில் பேராசிரியர் ஒருவர் இங்கு நடக்கும் குளறுபடிகளுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியிருப்பதாகவும் தகவல் வர, இதுகுறித்து பாரதிதாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ் மெண்ட் அலுமினியும் வழக்கறிஞருமான முருகையா ராமையாவிடம், விசாரித்தோம். குமுறலோடு பேச ஆரம்பித்த அவர்...
"பி.ஐ.எம். கல்லூரியை 1983-ல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்ஸ் லிமிடெட் இரண்டும் சேர்ந்து தொடங்கிவைத்தன. நிர்வாகம் மற்றும் கல்வித்துறை சார்ந்த ஆதரவை பாரதிதாசன் பல்கலைக்கழகமும், பொருளாதார உதவியை பெல் நிறுவனமும் இதற்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.நிறுவனங்களுக்குத
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும், பாரதிதாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் (பிம்) கல்லூரி பற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் சுழன்றடிக் கின்றன. குறிப்பாக, தன்னிச்சையாக இதன் சட்ட திருத்தங்களைத் திருத்துகிறார்கள், இதைத் தனியார் கல்லூரி என்றும் அறிவித்துக் கொள்கிறார் கள், கல்லூரி தொடங்கி இத்தனை ஆண்டுகளில் ஒரு தலித், பழங்குடி பேராசிரியரைக் கூட நிய மிக்காமல் சமூக நீதியை குழிக் தோண்டிப் புதைத்து வருகிறார்கள் என்றெல்லாம் இந்த பிம் கல்லூரி யைப் பற்றிய புகார்களைப் பலரும் அடுக்குகின்றனர்.
இந்த நிலையில் பேராசிரியர் ஒருவர் இங்கு நடக்கும் குளறுபடிகளுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியிருப்பதாகவும் தகவல் வர, இதுகுறித்து பாரதிதாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ் மெண்ட் அலுமினியும் வழக்கறிஞருமான முருகையா ராமையாவிடம், விசாரித்தோம். குமுறலோடு பேச ஆரம்பித்த அவர்...
"பி.ஐ.எம். கல்லூரியை 1983-ல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்ஸ் லிமிடெட் இரண்டும் சேர்ந்து தொடங்கிவைத்தன. நிர்வாகம் மற்றும் கல்வித்துறை சார்ந்த ஆதரவை பாரதிதாசன் பல்கலைக்கழகமும், பொருளாதார உதவியை பெல் நிறுவனமும் இதற்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.நிறுவனங்களுக்குத் தேவையான நிர் வாகத் திறன் கொண்ட திறனாளர்களை உருவாக்குவதற் காக இந்த கல்லூரி தொடங்கப்பட்டது.
2003வாக்கில், ஜெய்சங்கர் இந்த கல்லூரியின் பொறுப்பு இயக்குநராகவும், ராம்மோகன் ராவ், ராகவன் போன்றோர் இதன் போர்டு உறுப்பினர் களாகவும் இருந்தபோதும், நிர்வாகத்தில் பெரும் பாலும் பிராமணர்களே இருப்பது போல் மாற்ற ஆரம்பித்துவிட்டார்கள். இதற்கு அப்போதைய கவர்னரை அணுகி, இதைத் தனியார் கல்லூரியாக நடத்த அனுமதி பெற்றுவிட்டதாகவும் தெரிவித் தார்கள். ஆனால் அதற்கான எந்த ஆதாரத்தையும் அவர்கள் காட்டவில்லை.
அதேபோல, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலிடம், இதை பாரதிதாசன் பல்கலைக் கழகத்துக்குக் கீழ செயல்படுற கல்லூரி என்று நிர்வாகம் சொல்கிறது. ஆனால், மாணவர்களின் அட்மிஷன் நேரத்தில் இதைத் தனியார் கல்லூரின்னு சொல்லிக்கொள்கிறார்கள்.
2003, ஜூலை 3-ல் சென்னை பிரசிடென்சி ஓட்டலில் நடந்த 54ஆவது கூட்டத்தின் போது, கல்லூரி நிர்வாகக் குழுவிலிருந்த ஒரு கும்பல் பைலாவைத் திருத்தி, விதிகளை தங்களுக்குச் சாதகமாக மாற்றி அமைத்துவிட்டனர். இந்த மாற்றத்தை எல்லாம் பாரதிதாசன் யூனிவர்சிட்டி ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் திருத்தத்தை மேற்கொள்ளும்போது, டைரக்டர் இன்சார்ஜாக இருந்த பேராசிரியர் சங்கரன்தான் அனைத்திலும் கையெழுத்தைப் போட்டிருக்கிறார். அவர் டைரக்டர் இன்சார்ஜ் தானே தவிர, டைரக்டர் கிடையாது. ஒரு கல்லூரி யின் பைலாக்களை டைரக்டர் இன்சார்ஜை வைத்து மாற்றியிருக்கிறார்கள். அப்போதிலிருந்து பல்கலைக் கழகத்துக்கும் கல்லூரிக்குமான மோதல் நீடித்து வருகிறது. இதற்கு பொருளாதார ஆதரவைத் தந்து வந்த பெல் நிறுவனமும் பைலாக்களை மாற்றிய பிறகு, பிம்லிமின் நடவடிக்கைகளை ஆதரிக்கவில்லை.
பைலாவைத் திருத்தி போர்டு உறுப்பினர் களில் இடம்பெற்றிருந்த அரசு சார்ந்த அனைவரை யும் நீக்கிவிட்டு தங்களுக்கு வேண்டியவர்களை நிய மித்துக்கொண்டார்கள். அவர்கள் திருத்தம் செய்த விதிகளில் முக்கியமான சிலவற்றை குறிப்பிட்டாக வேண்டும்.
பல்கலைக் கழகத்துக்குத் தெரியாமல் அசை யும், அசையா சொத்துக்கள் வாங்கவோ, விற்கவோ கூடாது என்பதை மாற்றி, எதையும் செய்யலாம் என்று மாற்றிவிட்டார்கள். வருடந் தோறும் கணக்குத் தணிக்கை செய்து பல்கலைக் கழகத்துக் கும் அரசுக்கும் அதற்கான அறிக்கையை அனுப்பவேண் டும் என்ற விதியையும், அப் படிச் செய்யவேண்டிய தில்லை என்று மாற்றிவிட் டார்கள்.
போர்டு உறுப்பினர் களின் பதவிக் காலம் மூன்று வருடம் மட்டும்தான். அத்தியாவசியம் எனில், ஒரே ஒருமுறை மட்டும் மூன்றாண்டு நீட்டிப்பைத் தரலாம். ஆனால், இவர்கள் தாங்கள் விரும்புகிறவரை இருப்பது போல் விதியை மாற்றி அமைத்திருக்கிறார்கள். டைரக்டர் நியமனத்துக்கு துணைவேந்தரின் அனு மதி தேவை என்ற விதியையும் மாற்றிவிட்டார்கள்.
இந்த கல்லூரியை மூடிவிட்டுப் போவதாக இருந்தால் கல்லூரியின் சொத்துக்களை, அரசோ, பல்கலைக்கழகமோ என்ன முடிவெடுக்கிறதோ, அதுதான் செல்லுபடியாகும் என்பதையும் மாற்றி, இதே மாதிரி நோக்கம்கொண்ட ட்ரஸ்ட்டுக்கோ, சொஸைட்டிக்கோ கொடுத்துவிடலாம் என்றும் திருத்தி அமைத்திருக்கிறார்கள்.
சமூகத்திலும் அதிகாரத்திலும் எவ்வளவோ மாற்றம் வந்த நிலையிலும், இந்த பிம் கல்லூரி போர்டில் எஸ்.சி., எஸ்.டி. சமூகத்தினருக்கு பிரதி நிதித்துவமே இல்லை. பேராசிரியர் நியமனத்திலும் கிடையாது. போர்டில் முற்பட்ட, பிராமண வகுப் பினர் மட்டுமே அதிகளவில் காணப்படுகிறார்கள். கடந்த 40 வருட கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்களில் ஐம்பது சதவிகிதத் துக்கும் மேல் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் கள்தான் இருக்கிறார்கள்''’என்றெல்லாம் குற்றச் சாட்டுகளை அடுக்கினார்.
இதுகுறித்தெல்லாம் பல்கலைக் கழகப் பதிவாளர் காளிதாசிடம் கேட்டபோது, "தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. எனவே நான் இதுபற்றி கருத்து சொல்லக்கூடாது. இருப்பினும் ஒரு பேராசிரியர் சில பிரச்சனைகள் தொடர்பாக எங்களிடம் புகார் மனு அனுப்பி இருக்கிறார். அதோடு, அவர் எங்களிடம் முன் வைத்த கேள்விகளை மேலிடத்திற்கு அனுப்பி உள்ளோம்.''’என்று முடித்துக் கொண்டார்.துணை வேந்த ரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.
பிம் கல்லூரி மேலாண் அதிகாரி காசிவிஸ்வநாதன் கூறுகையில், "கல்லூரி ஒரு சொசைட்டியாக பதிவு பெற்றுள்ளது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான இட ஒதுக் கீட்டை மாணவர் சேர்க்கையில் கடைபிடிக்கிறோம், பேராசிரி யர்கள் நியமனத்தில் கடை பிடிப்பதில்லை. பிம் கல்லூரிக்கு புதிய கட்டடம் அரசு அனுமதி பெற்று, பஞ்சாயத்தின் அனுமதி பெற்றுதான் கட்டப்படு கிறது. இது பிம் கல்லூரியைச் சேர்ந்தது. நீதிமன்றத் தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், பிம் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தோடு சேர்ந்ததா? என்பதற்குப் பதில் தர இயலாது'' என்று விளக்க மளித்தார். பிம் கல்லூரியின் இயக்குநர் ஆசிச் குமார் பர்மாவை தொடர்பு கொண்ட போது, தனக்குத் தமிழில் பேசத் தெரியாததால் தன் நண்பர் மூலம் தொடர்பு கொள்வதாகச் சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தார்.
பிம் கல்லூரியில் நடக்கும் நிர்வாகக் குளறுபடிகள் உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.