Advertisment

கல்லூரி நிர்வாகியின் நிர்வாண சாட்டிங்! மாணவிகள் அலறல்! -பா.ஜ.க.வில் மானக்கேடு!

ff

ருப்புக்கோட்டையில் ஒரு வாடகைக் கட்டிடத்தில் இயங்கும் அரசு எலக்ட்ரோ ஹோமியோபதி மெடிக்கல் கல்லூரியின் சேர்மனான டாஸ்வின் ஜான் கிரேஸ், தேசிய கட்சியான பா.ஜ.க. சிறுபான்மைப் பிரிவின் விருதுநகர் கிழக்கு மாவட்டத் தலைவராக இருந்தும், வக்கிரத்துடன் தவறான வழிகளிலேயே பயணித்திருக்கிறார். மாணவி ஒருவரது புகாரைத் தொடர்ந்து, ஒரு பெண்ணின் அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவித்தல், ஆபாச குறுஞ்செய்தி அனுப்புதல், வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவாகி, கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

bjp

சாலை மறியலில் ஈடுபட்ட மாணவிகளும், பெற்றோரும், சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய டி.எஸ்.பி. சகாயஜோஸ், தாசில்தார் அறிவழகன் மற்றும் டவுண் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோரிடம், “கல்லூரி சேர்மன் டாஸ்வின் ஜான்கிரேஸ், கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவிகளின் வறுமைச் சூழலைப் பயன்படுத்தி, பாலியல் தொல்லை தந்துள்ளார். மாணவி ஒருவரை நிர்வாணமாக வீடியோ கா

ருப்புக்கோட்டையில் ஒரு வாடகைக் கட்டிடத்தில் இயங்கும் அரசு எலக்ட்ரோ ஹோமியோபதி மெடிக்கல் கல்லூரியின் சேர்மனான டாஸ்வின் ஜான் கிரேஸ், தேசிய கட்சியான பா.ஜ.க. சிறுபான்மைப் பிரிவின் விருதுநகர் கிழக்கு மாவட்டத் தலைவராக இருந்தும், வக்கிரத்துடன் தவறான வழிகளிலேயே பயணித்திருக்கிறார். மாணவி ஒருவரது புகாரைத் தொடர்ந்து, ஒரு பெண்ணின் அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவித்தல், ஆபாச குறுஞ்செய்தி அனுப்புதல், வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவாகி, கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

bjp

சாலை மறியலில் ஈடுபட்ட மாணவிகளும், பெற்றோரும், சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய டி.எஸ்.பி. சகாயஜோஸ், தாசில்தார் அறிவழகன் மற்றும் டவுண் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோரிடம், “கல்லூரி சேர்மன் டாஸ்வின் ஜான்கிரேஸ், கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவிகளின் வறுமைச் சூழலைப் பயன்படுத்தி, பாலியல் தொல்லை தந்துள்ளார். மாணவி ஒருவரை நிர்வாணமாக வீடியோ காலில் பேச வைத்ததற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. அந்த மாணவியிடம், சக மாணவிகள் குறித்து கேட்ட றிந்து, "அவர்களையும் அந்த மாதிரி நடந்து கொள்ளத் தூண்டியிருக்கிறார்'’எனக் குமுற... "இதெல்லாம் எப்போதோ நடந்ததுதானே? நேரடியாக பாதிக்கப்பட்ட மாணவி யாரும் புகார் தரவில்லையே? யாரும் தூண்டிவிட்டுப் போராட்டம் நடத்துகிறீர்களா?''’என்கிற ரீதியில் பேசி விவகாரத்தை அமுக்க முயற்சித்துள்ளனர். மாணவிகளின் உறுதியான போராட்டத்தால் கல்லூரி சேர்மன் கைது செய்யப்பட்டார்.

பட்டியலினத்தைச் சேர்ந்த அந்த 19 வயது மாணவி, டாஸ்வின் ஜான் கிரேஸ் மீது சுமத்தும் குற்றச்சாட்டு இது: "நான் இஊஙந இரண்டாமாண்டு படித்து வருகிறேன். ஒருநாள் கல்லூரி சேர்மன் டாஸ்வின் ஜான் கிரேஸின் செல்போனிலிருந்து, "உண்மையாக இரு.. வகுப்பு லீடராக இரு..'’என்று எனக்கு குறுஞ்செய்தி வந்தது. நானும் ‘சரி’ என் றேன். பிறகு, கல்விக்கட்டணம் குறித்து இருவரும் தகவல் பரிமாறிக்கொண்டோம். கடந்த 6-6-2022 அன்று சேர்மன் என்னை வாட்ஸ்-ஆப் வீடியோ காலில் கட்டாயப்படுத்தினார். என்னுடைய டி.சி. மற்றும் மார்க்- ஷீட் அவரிடம் இருப்பதால், நான் பயந்தபடி பாத்ரூம் சென்று ஆடை களைக் களைந்தேன். என்னை அந்தக் கோலத்தில் பார்த்துவிட்டு, நார்மல் காலில் பேசிய சேர்மன் ‘"நாம் மதுரைக்குச் சென்று ரூம் எடுத்துத் தங்கலாம்'’என்று அழைத்தார், நான் மதுரைக்குப் போக வில்லை''’என்று போலீசாரிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

nn

Advertisment

எதிர்காலம் குறித்த விழிப்புணர்வைக் காட்டிலும், வறுமையின் பிடியிலிருந்து தற் காலிகமாகத் தப்பித்தால் போதும்..’ என்ற மனநிலைக்கு அந்த ‘டீன்-ஏஜ்’ மாணவியைக் கொண்டு வந்து, காதல் மயக்கத்தில் சரியச் செய்துள்ளார். தன்னுடைய பாலியல் உணர்வு சேர்ந்த கேள்வி களுக்கு, ஆம் என்ற வகையிலேயே அந்த மாணவி பதில் தரும் வகையில் சாட்டிங் அமைந்துள்ளது. அந்த அரட்டையில், அச்சிலேற்ற முடியாத அருவருப்பான வார்த்தைகள் கொட்டிக் கிடக்கின்றன.

’அரசு எலக்ட்ரோ ஹோமியோபதி மெடிக்கல் கல்லூரியில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனதில், அருப்புக் கோட்டை, சாத்தூர் மற்றும் கோவில்பட்டி ஆகிய ஊர்களில் நர்சிங் கல்லூரிகளுக்கிடையே உள்ள போட்டியும், இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ளது.’ என ஒருதரப்பு கொளுத்திப்போட, அரசு எலக்ட்ரோ ஹோமியோபதி மெடிக்கல் கல்லூரியின் நிர்வாகத் தரப்பிடமிருந்து விளக்கம் பெற, 99xxxxxxxx & 90xxxxxxxx ஆகிய கைபேசி எண்களில் தொடர்புகொண்டோம். தொடர்ந்து ஸ்விட்ச்-ஆப் நிலையிலேயே இருந்தது. அந்தக் கல்லூரி நிர்வாகத்துக்கு ஆதரவான வழக் கறிஞரும்கூட, நம்மிடம் பேசுவதைத் தவிர்த்தார். நடந்தது குறித்து அக்கல்லூரி தரப்பில் விளக்கம் அளிக்க முன்வந்தால் பிரசுரிக்கத் தயாராக உள்ளோம்.

கல்லூரி சேர்மன் பா.ஜ.க. என்பதால், அரசியல்ரீதியாகவும் சமூக வலைத்தளங்களில் இந்தியா முழுவதும் ட்ரெண்ட் ஆனது. மூன்று மாதங்களுக்கு முன்பே கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட டாஸ்வின் ஜான் கிரேஸ், பாலியல் வழக்கில் கைதானதைத் தொடர்ந்து, பா.ஜ.க. அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்படுகிறார் எனத் தெரிவித்துள்ளார், விருதுநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் ‘பெண்டகன்’ பாண்டுரங்கன்.

___________________________

அமைச்சரை கேலி செய்யும் பா.ஜ.க. போஸ்டர்!

டாஸ்வின் ஜான் கிரேஸ் 11-ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், அருப்புக்கோட்டையில் சரிந்த பா.ஜ.க. இமேஜை தூக்கி நிறுத்தவோ, இருப்பைக் காட்டிக்கொள்ளவோ என்னவோ, தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆரை கேலி செய்து, விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க., 12-ஆம் தேதி நகர் முழுவதும் போஸ் டர் ஒட்டியது. தன்னை வெற்றி பெறச் செய்த வாக்காளர் களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை அருப்புக்கோட் டையில் ஒவ்வொரு பகுதி யிலும் நடத்தி, சொந்தப் பணத்திலிருந்து ரூ.420 மதிப்பிலான சர்ய்-Non-stick Fry Pan எனப்படும் வடைச் சட்டியைக் கொடுத்து வருகிறார் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இதனைத்தான், வாக்குறுதிகளை நிறைவேற்றாத வருவாய்த்துறை அமைச்சர் வடைச் சட்டி வழங்கி வாக்காளர்களுக்கு வந்தனம் செய்கிறார்’ என நக்கலான தொனியில் போஸ்டரில் வாழ்த்தியிருக்கிறது பா.ஜ.க. எதிர்த் தரப்பிலோ, 8 ஆண்டுகளாக மோடியின் பா.ஜ.க. அரசு வடைதானே சுடுகிறது என்கின்றனர் பதிலடியாக.

nkn150622
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe