Advertisment

கோவில் நிலத்தில் கலெக்டர் அலுவலகம்! -கள்ளக்குறிச்சி சர்ச்சை!

dd

புது மாவட்டம் என்றால் முக்கியமானது, கலெக்டர் அலுவலகம். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோவில் நிலத்தில் அது கட்டப்படுவதால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Advertisment

kalachruchi

இதபற்றி சிவனடியார்கள் திருக்கூட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தர்மசிங் நம்மிடம், “""கள்ளக்குறிச்சிக்குக் கிழக்கே ஐந்து கி.மீ. தொலைவில் உள்ள வீரசோழபுரத்தில் இருக்கும் பழம்பெருமை வாய்ந்த, ராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட அர்த்தநாரீஸ் வரர் கோவிலுக்குச் சொந்த

புது மாவட்டம் என்றால் முக்கியமானது, கலெக்டர் அலுவலகம். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோவில் நிலத்தில் அது கட்டப்படுவதால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Advertisment

kalachruchi

இதபற்றி சிவனடியார்கள் திருக்கூட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தர்மசிங் நம்மிடம், “""கள்ளக்குறிச்சிக்குக் கிழக்கே ஐந்து கி.மீ. தொலைவில் உள்ள வீரசோழபுரத்தில் இருக்கும் பழம்பெருமை வாய்ந்த, ராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட அர்த்தநாரீஸ் வரர் கோவிலுக்குச் சொந்தமான சுமார் 40 ஏக்கர் நிலத்தை அபகரிக்கப் பார்க்கிறார்கள். ஏறத்தாழ 100 கோடி மதிப்பிலான அந்த இடத்துக்கு வெறும் 1.95 கோடி என்று மதிப்பீடு போட்டிருக்கிறார்களாம். கோயில் நிலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைக் கட்டக் கூடாது என் பது எங்கள் சிவனடியார்கள் திருக்கூட்டத்தினரின் உறுதியான நிலைப்பாடாகும்'' என்றார்.

Advertisment

தமிழகத்தின் 300-க்கும் மேற்பட்ட கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்து ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் தொடர்ந்த வழக்கில் kalakurchiஉயர்நீதி மன்ற நீதியரசர்கள் சத்யநாராயணா, ஹேமலதா அமர்வு, அரசுத் தரப்பின் உரிய விளக்கம் தெரிவிக்கப்படும்வரை கலெக்டர் அலுவலக கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதித்தனர்.

கள்ளக்குறிச்சி மக்கள் நல சங்கத்தைச் சேர்ந்த ஹாரூண் நம்மிடம், ""கோயில் இடத்தில் கலெக்டர் அலுவலகம் கட்டுவது குறித்து இணையவழியிலான மக்கள் கருத்துக் கேட்பு முடிவதற்கு முன்பே அவசர அவசரமாக கடந்த 23-ஆம் தேதி தமிழக முதல்வர் சென்னையில் இருந்தபடியே கான்பரன்ஸ் மூலம், 374 கோடி மதிப்பீட்டில் வீரசோழபுரம் சிவன் கோயில் நிலத்தில், ஆட்சியர் அலுவலக வளாகம் கட்டுவதற் கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்தியிருக் கிறார். கள்ளக்குறிச்சி நகரில் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் கட்டுவதற்கு ஏற்ற இடங்கள் சிறுவங்கூர் பகுதியிலேயே உள்ளன'' என்கிறார் அழுத்தமாக.

சி.பி.எம். கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் மணி, தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய இடம் என்பதால் மக்கள் வந்து செல்ல வசதி என்பதையும், கோயில் நிலத்திற்கு மாதம் தோறும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை, வாடகையாகக் கொடுக்க அரசு முன் வந்திருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

மாவட்ட ஆட்சியர் கிரண் குராலாவைத் தொடர்புகொண்டோம். ""ஆட்சியர் அலுவலகம் கட்ட பல்வேறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. நகரை ஒட்டிய பகுதிகளில் போதுமான இடம் கிடைக்காததால் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. சிலர் சுயநலம் காரணமாக எதிர்க்கிறார்கள்?'' ’என்று முடித்துக்கொண்டார்.

நீதிமன்றம் என்ன சொல்லப் போகிறது?

-எஸ்.பி.எஸ்.

nkn121220
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe