ஆட்சியரின் அலட்சியம்! பலியான 5 உயிர்கள்! - சிவகங்கை பயங்கரம்

ss

"அதிகாரிகள் என்ன சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு, எந்த ஆய்விற்கும் செல்லாமல், இருக்கின்ற இடத்தைவிட்டு அகலாமல் கோப்புக்களில் கையெழுத்திட்டு 'சிட்டிங் கலெக்டராகவே' இருக்கின்றார் சிவகங்கை மாவட்ட ஆட்சியர். அதனால் தான் இத்தனை உயிரிழப்புகளும்! பாறை இடுக்கில் சிக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு என்ன பதில் வைத்திருக்கின்றார் ஆட்சியர்?'' என்ற கேள்வி சிவகங்கை ஆட்சியரை வறுத்தெடுக்கிறது என்றால் மிகையல்ல!

சிவகங்கை மாவட்டத்திற்கும், மதுரை மாவட்டத்திற்குமான நடுப்பகுதியில் அமைந்துள்ளது மல்லாக்கோட்டை கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக "மேகா ப்ளூ மெட்டல்ஸ்' எனும் நிறுவனத்தை நடத்தி வருகின்றார் மேகவர்மன் என்பவர். பாறைகளை உடைத்து வெவ்வேறு அளவில் சல்லிக்கற்களும், முண்டுக்கல்லும், எம் சாண்ட் மற்றும் பி சாண்ட் எனத் தரம் பிரித்து விற்பனை செய்து வருகின்றது இந்நிறுவனம். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி அருகிலுள்ள ஓடைப்பட்டி, இ.மலம்பட்டி, கீழவளவு உள்ளிட்ட பகுதிகளிலுள்ளவர்களும், வட மாநிலத் தொழிலாளர்களும் பணியாற்றிவருகின்றனர்.

ss

"கடந்த செவ்வாய்க்கிழமையன்று காலை 9 மணிக்கு, கிரேன் ஆபரேட்டர், மிஷின் கொண்டு துளையிடுபவர், வெடி வைப்பவர், சிக்னல் காண்பிப்பவர், பளு தூக்குபவர் என 18க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் பாறைகளை உடைக்க 250 அடிக்கு அதிகமான ஆழம் கொண்ட குவாரி பள்ளத்தில் இறங்கியிருக்கின்றனர். ஏற்கெனவே கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் பாறைகளுக்கு இடையே நீர்க்கசிவும், குவாரிப் பகுதிகளில் தண்ணீரும் நிறைந்தி

"அதிகாரிகள் என்ன சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு, எந்த ஆய்விற்கும் செல்லாமல், இருக்கின்ற இடத்தைவிட்டு அகலாமல் கோப்புக்களில் கையெழுத்திட்டு 'சிட்டிங் கலெக்டராகவே' இருக்கின்றார் சிவகங்கை மாவட்ட ஆட்சியர். அதனால் தான் இத்தனை உயிரிழப்புகளும்! பாறை இடுக்கில் சிக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு என்ன பதில் வைத்திருக்கின்றார் ஆட்சியர்?'' என்ற கேள்வி சிவகங்கை ஆட்சியரை வறுத்தெடுக்கிறது என்றால் மிகையல்ல!

சிவகங்கை மாவட்டத்திற்கும், மதுரை மாவட்டத்திற்குமான நடுப்பகுதியில் அமைந்துள்ளது மல்லாக்கோட்டை கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக "மேகா ப்ளூ மெட்டல்ஸ்' எனும் நிறுவனத்தை நடத்தி வருகின்றார் மேகவர்மன் என்பவர். பாறைகளை உடைத்து வெவ்வேறு அளவில் சல்லிக்கற்களும், முண்டுக்கல்லும், எம் சாண்ட் மற்றும் பி சாண்ட் எனத் தரம் பிரித்து விற்பனை செய்து வருகின்றது இந்நிறுவனம். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி அருகிலுள்ள ஓடைப்பட்டி, இ.மலம்பட்டி, கீழவளவு உள்ளிட்ட பகுதிகளிலுள்ளவர்களும், வட மாநிலத் தொழிலாளர்களும் பணியாற்றிவருகின்றனர்.

ss

"கடந்த செவ்வாய்க்கிழமையன்று காலை 9 மணிக்கு, கிரேன் ஆபரேட்டர், மிஷின் கொண்டு துளையிடுபவர், வெடி வைப்பவர், சிக்னல் காண்பிப்பவர், பளு தூக்குபவர் என 18க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் பாறைகளை உடைக்க 250 அடிக்கு அதிகமான ஆழம் கொண்ட குவாரி பள்ளத்தில் இறங்கியிருக்கின்றனர். ஏற்கெனவே கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் பாறைகளுக்கு இடையே நீர்க்கசிவும், குவாரிப் பகுதிகளில் தண்ணீரும் நிறைந்திருக்க, எவ்விதப் பாதுகாப்பு உபகரணங்களுமின்றி பணியைத் துவங்கியிருக்கின்றனர். வெடி வைப்பதற்காக பாறையைத் துளையிட்ட வண்ணம் ஒருவர் சென்றுகொண்டிருந்தபோதே, பாறைகளின் இடையே விரிசல் ஏற்பட்டு நீர்க்கசிவு இருந்திருக்கின்றது. அதனையும் பொருட்படுத்தாமல் பணியை மேற்கொள்ள, துளையிட்ட பாறை கீழே சரிந்ததில், பாறையின் கீழ்ப்புறத்தில் ஆறு நபர்கள் சிக்கிக்கொள்ள, அப்போதே 3 பேர் உடல் நசுங்கி இறந்திருக்கின்றனர். மற்ற மூவரும் மீட்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே இருவர் இறந்திருக்கின்றனர். ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றார்' என்கிறது காவல்துறை தனிப்பிரிவின் முதற்கட்ட குறிப்பு.

பாறையிடுக்கில் சிக்கி இறந்த செய்தி கேட்டு உள்ளூர் மக்களும், சுற்றுவட்டார மக்களும் மேகா ப்ளூ மெட்டலை நோக்கி முற்றுகையிட, நிறுவனத்தாரால் வாசலிலேயே தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டனர். செய்தியாளர்களோ நடந்தது என்ன.? என அறியும் ஆர்வத்தில் களத்திலிறங்க, நிறுவனத்தின் விசுவாச காவல்துறையால் அப்புறப்படுத்தப்பட்டனர். உள்ளே என்ன நடக்கின்றது? என வெளியே தெரியாதவண்ணம் கனகச்சிதமாகப் பார்த்துக்கொண்டது காவல்துறையும், வருவாய்த்துறையும். இதே வேளையில், தீயணைப்புத் துறையும், இந்தோ திபெத் பாதுகாப்புப் படையினரும் இணைந்து பாறையின் இடுக்கில் சிக்கிய சடலங்களை மீட்டு அனுப்பி வைப்பதில் மும்முரம் காட்டினர். இதனிடையே மக்களின் விசும்பல் சத்தத்தை விலக்கிய வண்ணம் மாவட்ட அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் ஆகியோரின் கார்கள் நிறுவனத்தில் நுழைந்தது. இதில் மாவட்ட அமைச்சர் பெரியகருப்பன் உள்ளூர்வாசியாகவே மாறி, அங்கு ஏதேனும் மிச்சம் இருக்கின்றதா? என மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 30 பேர் வரவழைக்கப்படவுள்ளனர். அவர்கள் வந்ததும் பாறை சரிந்து விழுந்த இடத்தை பார்வையிட்டு நவீன தொழில்நுட்ப உதவியுடன் பாறைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

ss

"மல்லாக்கோட்டை குவாரியில் பாறையிடுக்கில் சிக்கி உயிரிழந்த ஓடைபட்டி முருகானந்தம், மதுரை மாவட்டம் மலம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம், ஆண்டிச்சாமி, குழிசேவல்பட்டி கணேசன், ஒடிசாவை சேர்ந்த அர்ஜித் ஆகியோரின் குடும்பத்தினருக்கு ஆறுதலை யும், தலா ரூ.4 லட்சமும் பொது நிவாரண நிதியி லிருந்து வழங்குகின்றேன். மேலும், காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் மைக்கேலுக்கு ரூ.1 லட்சமும் வழங்க உத்தரவிடுகின்றேன்'' என அறிவித்தார் முதலமைச் சர் ஸ்டாலின்.

"ஊரில் திருவிழா, லீவு கேட்டுத்தான் வந்தான். வந்த இடத்துல இப்படி ஆகி யிருக்கு. மாவட்ட நிர்வா கத்தின் அலட்சியப்போக்கின் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். 250 அடிக்கும் ஆழமான பள்ளத்திற்கு யார் அனுமதி கொடுத்தார்கள்?'' என அழுது புலம்பினார்கள் ஓடைப்பட்டி முருகானந்தம் மற்றும் குழிசேவல்பட்டி கணேசனின் உறவினர்கள். சம்பவம் குறித்து மல்லாக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் கொடுத்த புகாரில், மேகா புளூ மெட்டல் உரிமையாளர் மேகவர்மன் உள்ளிட்ட மூன்றுக்கும் மேற்பட்டோர் மீது எஸ்.எஸ்.கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள கல்குவாரி உரிமையாளர் உள்ளிட்டோரை திருப்புத்தூர் டி.எஸ்.பி. செல்வகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வருவதாகத் தானாகமுன் வந்து கூறியது காவல்துறை.

தமிழ்நாடு சிறு கனிமங்கள் சலுகை விதிகள் 1959 விதி 23-ன்படி, பதிவுபெற்ற உடமையாளர் மற்றும் குத்தகையாளர், கனிமம் வெட்டும் பணி முறையாக நடப்பதற்கு பொறுப்பாவார்கள். அனைத்து நேர்வுகளிலும், பதிவுபெற்ற உடமையாளர் மற்றும் குத்தகையாளர் கூட்டாகவும், தனித்தனியாகவும்,தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் கனிமங்களின் பாதுகாப்பிற்கு பொறுப்பாவார்கள். அதேபோல் தவறு நடந்தாலும், முறைகேடு நடந்தாலும் அவர்களே பொறுப்பாவார்கள். தமிழ்நாடு சிறு கனிமங்கள் சலுகை விதிகள் 1959 விதி 24 நீக்கம்படி, தமிழ்நாடு சிறு கனிமங்கள் சலுகை விதிகள் 1959 விதி 25, சுரங்கங்கள் ஆய்வு செய்தல் விதிப்படி, பதிவுபெற்ற உடமையாளர் அல்லது குத்தகையாளர், மண்ணியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குனர் அல்லது மாவட்ட ஆட்சியர் அல்லது இயக்குனர், இந்திய சுரங்கங்கள் கழகம் ஆகியவற்றால் அதிகாரம் வழங்கப்பட்ட அலுவலர், சுரங்கப் பணிகள் நடைபெறும் வளாகங்களில் ஆய்வு செய்திடும் நோக்கத்திற்காக நுழைந்திட, பதிவு பெற்ற உடமையாளர் அல்லது குத்தகையாளர் அனுமதித்தல் வேண்டும் என்கிறது. ஆனால் அதன்படி ஆய்வுகள் நடை பெற்றனவா? விதி முறைகள் பின்பற்றப் பட்டனவா? என்பது தான் கேள்வியே.

ss

"இந்த ஐந்து உயிர்கள் மட்டுமல்ல, இதற்கு முன் நடந்த அத்தனை கொடூர சம்பவங்களுக்கும் மாவட்ட ஆட்சியர் தான் காரணம். பொதுவாகக் கல் குவாரிகளின் ஆழம் 33 மீட்டரை தாண்டாமல் இருக்க வேண்டும். அதாவது 165 அடி ஆழம் மட்டுமே இருக்க வேண்டும். இந்தக் குழியின் ஆழம் என்ன? என்றாவது புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆய்வு செய்ததா? ஆய்வு செய்ததை நாட்குறிப்பேட்டில் பதிவிட வேண்டும். அப்படி ஆய்வு செய்ததை நாட்குறிப்பேட்டில் பதிவிட்டுள்ளார்களா? இல்லை. வனத்துறையோ, வருவாய்த்துறையோ ஆய்வு செய்ததா? சிவகங்கை மாவட்ட ஆட்சியராக ஆஷா அஜித் பொறுப்பேற்றதிலிருந்து எத்தனை குவாரிகளை ஆய்வு செய்தார்? இந்த குவாரியை ஆய்வு செய்தாரா? இந்த குவாரி இருப்பதாவது தெரியுமா? அதிகாரிகள் நீட்டுகின்ற கோப்புக்களில் எல்லாம் கையெழுத்திடுவதற்கு "க்ளார்க்' போதுமே? ஆட்சியர் எதற்கு? வெறுமனே அமைச்சர் வரும்போது உடனிருந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பது தான் ஆட்சியரின் வேலையா? நடந்த சம்பவத்திற்கு ஆட்சியர் பொறுப்பேற்க வேண்டும். இனிமேலாவது தனது பணி என்னவென்பதை உணர்ந்து, தனது பணியின் முக்கியத்துவத்தை அறிந்து, இருக்குமிடத்தில் அமர்ந்தபடி பணி செய்யாமல், சிரமம் பாராது மக்கள் நலனுக்காக ஒவ்வொரு இடத்திற்கும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.'' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இதுகுறித்துக் கருத்தறிய ஆட்சியர் ஆஷா அஜித்தைத் தொடர்புகொண்டோம். வழக்கம்போல் போனை எடுக்கவில்லை. தேர்தல் காலம் நெருங்கிவிட்டது. மக்களின் காவலனாய் இந்த அரசு இருக்க வேண்டுமென்பதே அனைவரின் வேண்டுகோள்!

படங்கள்: விவேக்

nkn240525
இதையும் படியுங்கள்
Subscribe