Advertisment

ஆட்சியர் பங்களா விற்பனை! கள்ளக்குறிச்சி பரபரப்பு!

ss

ள்ளக் குறிச்சியில் பொதுப் பணித்துறைக்கு சொந்தமான இடத்திலுள்ள பங்களாவில், ஆட்சியர் குடியிருப்பு முகாம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அந்த பங்களாவை கதிரவன் என்ற சார்பதிவாளர், வேறொருவருக்கு விற்பனை செய்திருப்பது தமிழக அளவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

ss

கள்ளக்குறிச்சி - கச்சராபாளையம் செல்லும் சாலையில்தான் இந்த அரசு பங்களா உள்ளது. இதன் அருகில் சிறுவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் என்பவரின் மகன் கோபி என்பவருக்கு சொந்தமான இடம் இருந்துள்ளது. அதில் பிரச்சனை ஏற்பட்டு நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், கோபிக்கு சொந்தமானது என தீர்ப்பு வந்துள்ளது. அதையடுத்து தன் பெயருக்கு வருவாய்த்துறை மூலம் பட்டா மாற்றம் செய்யும்போது மாவட்ட ஆட்சியர் பங்களாவையும் சேர்த்து பட்டா மாற்றம் செய்துள்ளனர்.

இந்நிலையில் கோபி, கள்ளக்குறிச்சி ஹாஸ்பிடல் ரோடு பகுதியைச் சேர்ந்த ராமையா என்பவரது மனைவி சேதுமணி என்பவருக்கு, சர்வே எண் 5ல் உள்ள இர

ள்ளக் குறிச்சியில் பொதுப் பணித்துறைக்கு சொந்தமான இடத்திலுள்ள பங்களாவில், ஆட்சியர் குடியிருப்பு முகாம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அந்த பங்களாவை கதிரவன் என்ற சார்பதிவாளர், வேறொருவருக்கு விற்பனை செய்திருப்பது தமிழக அளவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

ss

கள்ளக்குறிச்சி - கச்சராபாளையம் செல்லும் சாலையில்தான் இந்த அரசு பங்களா உள்ளது. இதன் அருகில் சிறுவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் என்பவரின் மகன் கோபி என்பவருக்கு சொந்தமான இடம் இருந்துள்ளது. அதில் பிரச்சனை ஏற்பட்டு நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், கோபிக்கு சொந்தமானது என தீர்ப்பு வந்துள்ளது. அதையடுத்து தன் பெயருக்கு வருவாய்த்துறை மூலம் பட்டா மாற்றம் செய்யும்போது மாவட்ட ஆட்சியர் பங்களாவையும் சேர்த்து பட்டா மாற்றம் செய்துள்ளனர்.

இந்நிலையில் கோபி, கள்ளக்குறிச்சி ஹாஸ்பிடல் ரோடு பகுதியைச் சேர்ந்த ராமையா என்பவரது மனைவி சேதுமணி என்பவருக்கு, சர்வே எண் 5ல் உள்ள இரண்டரை சென்ட் இடத்தை, 5.12.2022ஆம் தேதி, கிரையம் எழுதிக் கொடுத்துள்ளார். இதன் மதிப்பு சுமார் 7 லட்சத்து 33 ஆயிரத்து 600 ரூபாய். இந்த கிரையப் பத்திரத்தை சார்பதிவாளர் கதிரவன் பதிவு செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில், கள்ளக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் உயரதிகாரிகள் ஆய்வு செய்தபோது, கோபி விற்பனை செய்த இடத்தின் அருகிலுள்ள ஆட்சியர் பங்களா வின் ஒரு பகுதியையும் சேர்த்து கிரையம் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாவட்ட பதிவாளர் ரூபியா பேகம், சென்னை பத்திரப்பதிவுத்துறை தலைவருக்கு புகாரளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் பதிவுத்துறைத் தலைவர் சிவன் அருள், சார்பதிவாளர் கதிரவனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள கதிரவன், "கடந்த ஐந்தாம் தேதி பத்திரப்பதிவு செய்யப்பட்டது' நீதிமன்ற வழக்கில் தீர்ப்பளிக் கப்பட்ட இடமென்பதால், ஆவணங்கள் சரியாக இருக்குமென்று நினைத்து தவறுதலாகப் பதிவு செய்துவிட்டேன். பிறகு தான் கள்ளக்குறிச்சி பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஆட்சியர் பங்களா இடமும் பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது' என்று அதிகாரிகளிடம் விளக்கமளித்துள்ளார். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணித்துறை நீர்வள நிர்வாக அலுவலகமாகக் கட்டப்பட்ட அந்த பங்களா, தற்போது புதிய மாவட்டம் உருவானதும் ஆட்சியர் குடியிருப்பு பங்களாவாக மாற்றம் செய்யப்பட்டது. தற்போது, கோபியிடமும், சேதுமணியிடமும் அதிகாரிகள் விசாரணை செய்துவரு கிறார்கள்.

ss

Advertisment

கள்ளக்குறிச்சி மக்கள் நல இயக்கத்தை சேர்ந்த ஹாருன், "கள்ளக் குறிச்சி நகரின் பத்திரப்பதிவுத் துறையில் நிறைய மோசடிகள் அவ்வப்போது நடந்துகொண்டிருக்கிறது. ஐம்பது, நூறு ஆண்டுகளுக்கு முன்பு நமது முன்னோர்கள் விட்டுச்சென்ற பூர்வீக சொத்தை உடன் பிறந்தவர்கள் பாகப்பிரிவினை செய்யவோ, வயதானவர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு தான செட்டில்மெண்ட் எழுதிக்கொடுக்கவோ விரும்பினால், அதற்குரிய மூல ஆவணம் வேண்டுமென்றும், சிட்டா அடங்கலில் அரசு முத்திரை இருக்க வேண்டுமென்றும், மூல ஆவணம் தொலைந்தால் காவல்துறையில் புகாரளித்து எஃப்.ஐ.ஆர். காப்பி தர வேண்டுமென்றும் சாதாரண பொதுமக்களிடம் ஏகப்பட்ட கெடுபிடிகளைச் செய்கிறார்கள். ஆனால் மோசடியாளர்களுக்கு போலி ஆவணங் கள் மூலம் தங்குதடையில்லாமல் பத்திரப்பதிவு செய்கிறார்கள். காரணம் லஞ்சம்.

கள்ளக்குறிச்சி அரசு பங்களாவை பதிவுசெய்து கொடுத்ததில் உள்நோக்கம் உள்ளது. கள்ளக்குறிச்சி, மாவட்ட தலை நகரமாக அறிவிக்கப்பட்டு ஒருங்கிணைந்த ஆட்சியர் அலுவலக வளாகம் கட்டுவதற்காக பல்வேறு இடங்களை ஆய்வுசெய்து வரு கிறார்கள்.

பொதுப்பணித்துறை, சுற்றுலாத்துறை மாவட்ட தலைமை அலுவலகங்கள் கட்டுவதற்கு கள்ளக்குறிச்சி நகரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வீரசோழபுரம் பகுதியில் இடம் தேர்வு செய்துள்ளனர். எனவே, நகரிலுள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இடம், தனி நபர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது சந்தேகத் தைக் கிளப்புகிறது'' என்கிறார்.

"சேத்தியாத்தோப்பு சார்பதிவாளர் அலுவலகத்தில் துரிஞ்சி கொல்லை, பரவனாறுகரை பகுதியில் சுமார் 400 ஏக்கர் அரசு படுகை நிலத்தை பல்வேறு நபர்கள் பெயரில் போலி பட்டா ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்துள்ளனர். இது குறித்து பத்திரப்பதிவு துறைக்கு பல புகார்கள் அனுப்பப்பட்டு மாவட்ட பதிவாளர் விசாரணை நடத்தி மோசடி நடைபெற்றது உண்மைதான் என்று கண்டுபிடிக்கப்பட்டும், இதுவரை சம் பந்தப்பட்டவர்கள்மீது எந்த நடவடிக்கையும் இல்லை. மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 1, 2022 நக்கீரன் இதழில் மோசடி குறித்து விரிவாக செய்தி வெளிவந்தது. அதன்பிறகும் இதுவரை எவ்வித நடவடிக்கையுமில்லை'' என்கிறார் உழவர் பேரியக்க மாநிலத் துணைத்தலைவர் சிட்டிபாபு.

"எத்தனை விதமான விதிமுறைகளை அரசு போட்டாலும், அதையும் மீறி பணத்திற்காக பத்திர பதிவுத்துறையில் மோசடியில் ஈடுபடுபவர்களை, வெறுமனே சஸ்பெண்ட் செய்வதோடு விட்டுவிடாமல், கிரிமினல் வழக்குகளைப் பதிந்து அவர்கள்மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

nkn180123
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe