"எனது பணி மாறுதலுக்கு மாவட்ட ஆட்சியர்தான் காரணம்'’என்கிறார் விழுப்புரம் கோட்டாட்சியர். ‘"அதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. 150 பேருக்கு நடந்த பணிமாறுதலில் அவரும் ஒருத்தர்'’என்கிறார் மாவட்ட ஆட்சியர். விழுப்புரமே அணி பிரிந்து விவாதித்துக் கொண்டிருக்க... நீதிமன்றம் கோட்டாட்சியரின் பணி மாறுதலை ரத்துசெய்து மீண்டும் விழுப்புரத்துக்கே அனுப்பியிருக்கிறது. கோட் டாட்சியர் குமாரவேல் கடந்த ஆண்டு அக்டோபர் 20-ஆம் தேதி விழுப்புரத்தில் பணியில் சேர்ந்தார். குறுகிய காலத்தில் பணிமாறுதல் நடக்க என்ன காரணம்? “
""எங்கள் அலுவலகத்தில் கிளார்க் வேலை பார்த்த அன்பானந்தன் என்பவர் 22 லட்சம் கையாடல் செய்துவிட்டு கைதாகி ஜாமீனில் இருக்கிறார். இவர் சமீபத்தில் என்னிடம் நேரடியாகவே வந்து, "மாவட்ட ஆட்சியரிடம் பேசிவிட்டேன். நான் கையாடல் செய்த பணத்தை திரும்பக் கட்டிவிடுகிறேன். எனக்கு மீண்டும் பணி வழங்கவேண்டும்'’என்றார் நான் மறுத்தேன். உடனே அவர், "நீங்க இங்க ஆர்.டி.ஓ.வா நீடித்தால்தானே...'’என்று என்னை மிரட்டிவிட்டுப் போகிறார்.
வானூர் தாலுகாவைச் சேர்ந்த ஒரு வி.ஏ.ஓ.வை ஏற்கனவே இங்கிருந்த ஆர்.டி.ஓ. பிரச்சினையின் அடிப்படையில் பணிமாறுதல் செய்துள்ளார். அந்த வி.ஏ.ஓ. வை மீண்டும் பழைய இடத்திற்கு மாற்றச்சொல்லி அவர் சார்ந்துள்ள சங்கப் பிரதிநிதிகள் என்னிடம் வந்தார்கள். அவர்களிடம் நான் "ஏற்கனவே ஒரு அதிகாரி போட்ட உத்தரவை மாற்றமாட்டேன்' என்று சொன்னேன
"எனது பணி மாறுதலுக்கு மாவட்ட ஆட்சியர்தான் காரணம்'’என்கிறார் விழுப்புரம் கோட்டாட்சியர். ‘"அதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. 150 பேருக்கு நடந்த பணிமாறுதலில் அவரும் ஒருத்தர்'’என்கிறார் மாவட்ட ஆட்சியர். விழுப்புரமே அணி பிரிந்து விவாதித்துக் கொண்டிருக்க... நீதிமன்றம் கோட்டாட்சியரின் பணி மாறுதலை ரத்துசெய்து மீண்டும் விழுப்புரத்துக்கே அனுப்பியிருக்கிறது. கோட் டாட்சியர் குமாரவேல் கடந்த ஆண்டு அக்டோபர் 20-ஆம் தேதி விழுப்புரத்தில் பணியில் சேர்ந்தார். குறுகிய காலத்தில் பணிமாறுதல் நடக்க என்ன காரணம்? “
""எங்கள் அலுவலகத்தில் கிளார்க் வேலை பார்த்த அன்பானந்தன் என்பவர் 22 லட்சம் கையாடல் செய்துவிட்டு கைதாகி ஜாமீனில் இருக்கிறார். இவர் சமீபத்தில் என்னிடம் நேரடியாகவே வந்து, "மாவட்ட ஆட்சியரிடம் பேசிவிட்டேன். நான் கையாடல் செய்த பணத்தை திரும்பக் கட்டிவிடுகிறேன். எனக்கு மீண்டும் பணி வழங்கவேண்டும்'’என்றார் நான் மறுத்தேன். உடனே அவர், "நீங்க இங்க ஆர்.டி.ஓ.வா நீடித்தால்தானே...'’என்று என்னை மிரட்டிவிட்டுப் போகிறார்.
வானூர் தாலுகாவைச் சேர்ந்த ஒரு வி.ஏ.ஓ.வை ஏற்கனவே இங்கிருந்த ஆர்.டி.ஓ. பிரச்சினையின் அடிப்படையில் பணிமாறுதல் செய்துள்ளார். அந்த வி.ஏ.ஓ. வை மீண்டும் பழைய இடத்திற்கு மாற்றச்சொல்லி அவர் சார்ந்துள்ள சங்கப் பிரதிநிதிகள் என்னிடம் வந்தார்கள். அவர்களிடம் நான் "ஏற்கனவே ஒரு அதிகாரி போட்ட உத்தரவை மாற்றமாட்டேன்' என்று சொன்னேன். அவர்கள் நீதிமன்றம் சென்று உத்தரவு வாங்கி வந்து காட்டினார்கள். அந்த உத்தரவில், "ஏற்கனவே அதிகாரி உத்தரவு போட்டிருந்தால் அதை மாற்றத் தேவையில்லை' என்று இருந்தது. அதனைப் புரிந்து கொள்ளாத அந்த சங்கத்தினர் என்மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு போட்டனர். இதைப்பற்றி மாவட்ட ஆட்சியர் முழுமையாக விவரம் கேட்காமல் என்னை சத்தம்போட்டு மிரட்டுகிறார்.
இப்படி தவறு செய்பவர்களுக்கு நான் துணைபோகாததால் எனக்கு பணி மாறுதல் உத்தரவு வந்தது''’என தனக்கு நேர்ந்த இடைஞ்சல்களை அடுக்கும் குமாரவேல்... “""குண்டர் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கக்கோரும் பைல் என்னிடம் வரும்போது என்ன, ஏது என்று எதுவும் கேட்காமல் நீட்டிய இடத்தில் கையெ ழுத்து போடச் சொல்கிறார். அவருக்கு இசைவாக நடந்துகொள்ளாததன் விளைவுதான் எனது பணிமாறுதல்''’என்கிறார். "ஒன்பது மாதங்களில் அவருக்கு காத்திருப் போர் பட்டிய லுக்கு மாறுதல் ஏன்?' மாவட்ட ஆட்சியர்தான் கார ணம் என்று பலரும் குற்றம்சாட்டுகிறார் கள்.
ஆட்சியர் சுப்பிர மணியனோ, ""ஆர்.டி.ஓ. பணி மாறுதலுக்கு நான் காரணமல்ல. தமிழக அளவில் 150 பேர் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். அதில் இவரும் ஒருவர்''’என தன் கையை விரிக்கிறார்.
தன் மீதான பணிமாறுதல் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டார் குமாரவேல். நீதிமன்றம் இவரது பணி மாறுதலுக்கு தடை விதித்ததோடு உள்துறை செயலரிடம் விளக்கம் கேட்டுள்ளது. இதை யடுத்து ஜூன் 28-ஆம் தேதி மீண்டும் விழுப்புரத்தில் கோட்டாட்சியராக பணி ஏற்றுக்கொண்டார். "அப்பாடா… பிரச்சினை தீர்ந்தது' என விழுப்புரம் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். ஆனால், விஷயம் அத்தனை எளிதில் முடிந்துவிடவில்லை.
பிரச்சினையின் அடுத்த கட்டம் தொடங்கியது. விக்கிரவாண்டி, விழுப்புரம், வானூர் ஆகிய மூன்று தாலுகாவின் அதிகாரியான குமாரவேல் ஜூலை 1-ஆம் தேதி வானூர் சமூகநல தாசில்தார் சங்கரலிங்கத்திடம் போன்மூலம் ‘"விதவை, முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை பெறுபவர்களில் இறந்து போனவர்களுக்கு பதிலாக புதி தாக எத் தனை பேருக்கு உதவித்தொகை பெற உத்தரவு போடப்பட்டுள்ளது'’ என்று விவரம் கேட்டார். ‘"நான் யாருக்கும் உத்தரவு போடவில்லை'’ என்று சொல்ல... ‘"ஏன்'’ என கோட்டாட்சியர் கேட்க... ‘"தேர்தல் விதிமுறை மற்றும் பணிகள் காரணம்'’என்று சொல்லியிருக்கிறார். ‘"தேர்தல் முடிந்து ஒருமாதம் கடந்தும் ஏன் பணி செய்யவில்லை'’என்று கேட்க... "அதைக் கேட்க நீங்க யார்? அங்க என்ன நடக்குது என்று உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும். உங்களால் என்னை என்ன செய்ய முடியுமோ செய்துகொள்ளுங்கள்... சந்திக்க தயார்'’என்று கோட்டாட்சியரை எதிர்த்துப் பேசியுள்ளார். (இதன்ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.)
இதுபற்றி கோட்டாட்சியர் குமாரவேலிடம் நாம் கேட்டோம். “""ஒரு உயர் அதிகாரியிடம் எப்படி பேசவேண்டும் என்றுகூட தெரியாமல் பேசியுள்ளார் அந்த தாசில்தார். அதற்கு நேரில் விளக்கம் தரச்சொல்லி நோட்டீஸ் அனுப்பினேன். பயந்துபோய் ஒருமாத மருத்துவ விடுப்பில் போய்விட்டார். அரசு விதிமுறைகளின்படி அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்சியர், வருவாய் அலுவலர் ஆகிய இருவரும் தரும் ஆதரவின் தெம்பில்தான் தாசில்தார் என்னை எதிர்த்துப் பேசியுள்ளார். எதற்கும், யாருக்கும் பயப்படாமல் என் பணியைத் தொடர்வேன்' ’என்கிறார்.
இவரை மிரட்டிய தாசில்தார் சங்கரலிங்கத்திடம் கேட்டபோது, ""கோட்டாட்சியர் குமாரவேல் இங்கு வந்தவுடன் "நிறைய செலவுசெய்து பணிமாறுதல் பெற்று வந்துள்ளேன். அதனால் எனக்கு அவ்வப்போது கமிஷன் தரவேண்டும்' என்றார். "தர முடியாது' என்றேன். மேலும் விக்கிர வாண்டி தாலுகாவில் கோட் டாட்சியர் அனுமதியோடு முறைகேடாக கிராமப் பணியாளர்கள் நிய மனம், வி.ஏ. ஓ.க்கள் பணிமாறுதல் நடந் துள்ளன. ஆனால் என்னை மட்டும் திட்டமிட்டு பழிவாங்கப் பார்க்கிறார். இதற்கு காரணம் விக்கிரவாண்டி தாசில்தார்தான் (சுந்தரராஜன்). அவருக்கும் எனக்கும் சங்கரீதியான பிரச்சினை உள்ளது. அதற்குப் பழிவாங்கப் பார்க்கிறார்கள். கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு அவரிடம் பேசிவிட்டேன். அதனால் மாவட்ட ஆட்சியரை சந்தித்து விளக்கம் சொன்னேன். அவரும் நான் பேசியது தவறு என்று கடிந்துகொண்டார். இந்த பிரச்சினைக்கு மாவட்ட ஆட்சியரோ, வருவாய் அலுவலரோ காரணமோ தூண்டுதலோ அல்ல''’என்கிறார் சங்கரலிங்கம்.
இரு தரப்பையும் சாராத அரசு ஊழியர்கள், ""மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் -வருவாய் அலுவலர் திருமதி பிரியா இவர்களின் ஆட்சிதான் கொடிகட்டிப் பறக்கிறது. சமீபத்திய எம்.பி. தேர்தலின்போது தேர்தல் அதிகாரியாக ஆட்சியரும் உதவித் தேர்தல் அதிகாரி கோட்டாட்சியர் குமாரவேலும் நியமிக்கப்பட்டனர். ஆனால் குமாரவேலை கண்டுகொள்வதோ… ஆலோசிப்பதோ இல்லை. குமாரவேல் செய்யவேண்டிய பணிகளை மாவட்ட வருவாய் அதிகாரி பிரியாவே செய்ய அனுமதித்தார் ஆட்சியர். இந்த பிரியா சுமார் 10 ஆண்டுகளாக விழுப்புரத்திலேயே கோலோச்சி வருகிறார் (சேலத்தில் சில மாதங்கள் மட்டும் பணி). இவருக்கு மட்டும் ஏன் பணி மாறுதல் இல்லை''’என்று கேட்கிறார்கள்.
மாவட்ட வருவாய் அலுவலர் பிரியாவிடம் கருத்து கேட்க அவரைத் தொடர்பு கொண்டோம்... அவர் போனையே எடுக்கவில்லை.
அடுத்து மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியனைத் தொடர்புகொண்டோம். அவர் நம்மிடம், “""தாசில்தாருக்கும் ஆர்.டி.ஓ.வுக்கும் உள்ள பிரச்சினை பற்றி என் கவனத்திற்கு வரவில்லை. என்னிடம் புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கலாம். எனது தூண்டுதலில் தாசில்தார் பேசினார் என்று சொல்வது தவறு. ஆதாரம் இல்லாமல் யார், எதை வேண்டுமானாலும் பேசலாம். அதை எல்லாம் நம்பக்கூடாது''’’ என்கிறார்.
""அதிகாரிகளுக்குள் ஆயிரம் தன்முனைப்பு மோதல்கள் இருக்கலாம். அதையெல்லாம் பணியில் கொண்டுவரக்கூடாது. இரண்டு பேரும் இப்படி முட்டி மோதிக்கொண்டிருந்தால், எங்களுக்கான பணிகள்தான் பாதிக்கப்படும்'' என்கிறார்கள் விவரமறிந்த விழுப்புரம் பொதுமக்கள்.
-எஸ்.பி.சேகர்