விருதுநகரில் 8 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பட்டியலினப் பெண்ணின் வழக்கு, சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்ட நிலையில், எஸ்.பி. முத்தரசி தலைமையில் ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை நடந்ததாகச் சொல்லப்படும் இடங்கள், பதிவான அந்தரங்க வீடியோ, புகைப்படங்கள், மிரட்டிய நபர்கள் குறித்தெல்லாம் விசாரிப் பதற்கு சைபர் க்ரைம் போலீசாரின் உதவியை நாடியுள்ளனர்.

அந்தப் பெண் விருதுநகர் ஊரகக் காவல் நிலையத்தில் அளித்துள்ள வாக்குமூலத்தில், என்னென்ன வில்லங்க விவகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன?

ff

Advertisment

"நான் விருதுநகர் -சூலக்கரையிலுள்ள பெண்டகன் கார்மென்ட்ஸில் 6 மாத காலம் ஹெல்ப்பர் வேலை பார்த் தேன். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்தேன். நான் வேலைக்குச் சென்றபோது கார்மெண்ட்ஸ் வேனில் ஏறுவதற்காக தேவர் சிலை அருகே நிற்பேன். அப்படி நின்றபோது, 20-8-2021 அன்று ஹரிஹரன் என்பவர் என்னைக் காதலிப்பதாகச் சொன்னார். இரண்டுநாள் கழித்து நானும் காதலிப்பதாகச் சொன்னேன். அதன்பிறகு, போனில் அடிக்கடி பேசினோம். 10 நாட்கள் கழித்து, அவனுடைய மெடிக்கல் குடோனுக்கு என்னைக் கூட்டிச் சென்றவன், தன்னுடைய ஜாதி என்ன வென்று சொன்னான். நான்தான் உன்னைக் கல்யாணம் செய்துகொள்ளப்போகிறேனே என்று சொல்லி, வலுக்கட்டாய மாக உறவுகொண்டான். இந்த நேரத்தில், என் அம்மா எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார். இந்த விஷயத்தை ஹரி ஹரனிடம் சொல்லி, என் வீட்டில் வந்து பெண் கேளு என்றேன்.

அவன் என் காதலை அலட்சியம் செய்தான். அதனால், வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையைத் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்று அவ னிடம் சொன்னேன். அதற்கு அவன், ‘"அப்படியெல்லாம் என்னைவிட்டு நீ போய்விட முடியாது. உன் செல்லுக்கு ஒரு வீடியோ அனுப்பறேன், பாரு'’ என்றான். அவன் எனக்கு அனுப்பிய வீடியோவில், நாங்கள் உறவு வைத்துக் கொண்டது பதிவாகி இருந்தது. அவனைச் சத்தம் போட்டபோது, "நான் கூப்பிடும்போதெல்லாம் நீ வரணும். இல்லையென்றால் வீடியோ வை பரப்பிவிடுவேன்'’என்று மிரட்டி னான். நானும் பயந்துபோய் சரி என்றேன். அதன்பிறகு, இரண்டு தடவை மெடிக்கல் குடோனுக்கு வரச்செய்து உறவுகொண்டான். ஒருநாள் எனக்கு உடம்பு சரியில் லாதபோது கூப்பிட்டான். நான் மறுத்ததும், ஆத்திரத்தில் அந்த வீடியோவை, அவனுடைய நட்பு வட்டத்திலிருந்த பள்ளி மாணவ னான ரலிக்கு அனுப்பினான். ர என்னை வீடியோ காலில் தொடர்பு கொண்டு, பக்கத்திலிருந்த ல என்ற இன்னொரு பள்ளி மாணவனைக் காட்டி, ‘"வீடியோ எங்ககிட்ட இருக்கு'’ என்று உறவுகொள்ள அழைத்தான். நான் ஹரிஹரனிடம் சண்டை போட்டேன். "அந்த இருவரையும் கண்டித்து அனுப்புவோம், நீயும் வா'’ என்று மெடிக் கல் குடோனுக்கு கூப்பிட்டான். நானும் அவன் வார்த்தையை நம்பிப் போனேன். அதிர்ச்சி காத்திருந்தது. ஹரிஹரன், சிறுவர்களான W மற்றும் X ஆகிய மூவரும் மிரட்டி உறவுகொண்டார்கள்.

ff

Advertisment

13-1-2022 அன்று X-ன் நண்பன் Y எனக்கு போன் பண்ணி, "நானும் வீடியோவைப் பார்த்தேன்' என்றான். அன்றிரவு, அவ னுடைய நண்பன் பிரவீன் என்ற இளைஞனைக் கூட்டிக்கொண்டு என் வீட்டுக்கு வந்தான். மிரட்டி இருவரும் உறவுகொண்டார்கள். அடுத்து, Wஅண்ணன் Z எனக்கு போன் செய்து மெடிக்கல் குடோனுக்கு வரச்சொல்லி உறவுகொண்டான். அந்த வீடியோவை என் அம்மாவிடம் காட்டுவேன் என்று மிரட்டி, பக்கத்து வீட்டில் வசிக்கும் மாடசாமி என்பவன், என் வீட்டில் வைத்து பலமுறை உறவுகொண்டான். சில நாட்களுக்குப் பிறகு ஹரி ஹரன் எனக்கு போன் பண்ணி மெடிக்கல் குடோனுக்கு வரச்சொன்னான். வீடியோவை அழித்துவிடுவதாக அவன் சொன்னதை நம்பிச் சென்றேன். அங்கே ஹரிஹரனும் அவனுடைய நண்பன் ஜுனத் அகமதுவும் இருந்தார்கள். என்னை வற்புறுத்தி ஜுனத் அகமது உறவுகொண்டான். ஆனால், சொன்னபடி வீடியோவை அழிக்கவில்லை. மீண்டும் 18-3-2022 அன்று ஹரிஹரன் கூப்பிட் டான். வரவில்லையென்றால் சோசியல் மீடியாவில் பரப்பிவிடுவேன் என்றான். பிறகுதான்Women Helpline 181-க்கு போன் செய்தேன். காவல்துறை அதிகாரிகள் என் வீட்டிற்கே வந்து, என்னைக் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள். நானும் ஹரிஹரன் மற்றும் அவனுடைய நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டேன்'' என உருக்கமாக விவரித்துள்ளார்.

ff

அந்தப் பெண் அளித்துள்ள புகாரில் மேற்கண்டவாறு தொடர் மிரட்டலும், ஒருவரைத் தொடர்ந்து இன்னொருவர் என மாறி மாறி உறவுகொண்டதும் இடம்பெற்றுள்ளன. ஆனாலும், கைதானோர் உறவு வட்டத்தில், ‘"வீடியோ எடுத் திருக்கலாம்; மிரட்டி உறவுகொண்டிருக்கலாம்; தொடர்ந்து டார்ச்சர் செய்திருக்கலாம். அதேநேரத் தில், பணமும் கைமாறியிருக்கலாம். இல்லையென் றால், 8 மாதங்களோ, ஒரு வருடமோ கூப்பிட்ட இடத்துக்கெல்லாம் அந்தப் பெண் ஏன் போக வேண்டும்? இத்தனை காலம் பெற்ற தாயிடம்கூட சொல்லாமல் ஏன் மறைக்கவேண்டும்?''’என்று கேள்வி எழுப்புகின்றனர்.

"ஏற்கனவே மனதாலும் உடலாலும் பாதிக்கப் பட்டுள்ள அந்தப் பெண் மீது அபாண்டமாக குற்றம் சாட்டுவதெல்லாம் அக்கிரமம்' என பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டன ஆர்ப்பாட்ட மேடையிலேயே குரல் கொடுத்தார்.

முறையாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது... யார், யார் என்னென்ன குற்றம் செய்தார்கள் என்ற உண் மைகள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்துவிடும்.

____________________

பாலியல் விவகார ஆர்ப்பாட்டம்! -வலிமை காட்டிய பா.ஜ.க.!

விருதுநகரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பட்டியலினப் பெண்ணிற்கு நீதி வேண்டி பா.ஜ.க. மகளிரணி நடத்திய கண்டன ஆர்ப்பாட் டத்தில் மைக் பிடித்த அக்கட்சி யின் மாநிலத் தலைவர் அண்ணா மலை “இந்த ஆர்ப்பாட்டம் அரசியல் செய்வதற்காக அல்ல...” எனக் குறிப்பிட்டார்.

bjp

டெல்லியில் 10 வருடங் களுக்கு முன், ஒரேநேரத்தில் 6 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த மருத்துவ மாணவி நிர்பயா விவகாரத்தோடு, விருது நகரில் கடந்த 8 மாதங்களாக 8 பேரால் இளம்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமையை முடிச்சுப் போட்டு, “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. காவல் துறையின் கைகள் கட்டப்பட் டுள்ளன. இந்த வழக்கில் முதல் மற்றும் இரண்டாம் குற்றவாளி தி.மு.க.தான்..” எனத் தி.மு.க. மீதான தாக்குதலையே பெரிதாக அண்ணாமலை முன்னிறுத்த, ஆர்ப்பாட்ட மேடையில் அண்ணாமலைக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத் திய பா.ஜ.க. நிர்வாகிகள், “எங்கள் புரட்சித் தலைவர்..” என அவரைப் புகழ்ந்து தள்ளினர்.

பா.ஜ.க. நிர்வாகிகளில் ஒருவர் அந்தக் குற்றச் சம்பவத் தைக் குறிப்பிட்டபோது, “"பாலியல் வன்புரட்சி'’என்ற புது வார்த்தையைப் பிரயோகித்தார். “"ஸ்டாலின் நல்லவர் கிடையாது. நல்லவர் போல நடிக்கிறார்'’ எனத் திட்டித் தீர்க்க, அந்த ஆர்ப் பாட்ட மேடை பா.ஜ.க.வுக்கு தாராளமாகப் பயன்பட்டது.

அந்தப் பெண்ணிடம் எந்தெந்த இடங்களில் எப்படி யெல்லாம் அந்த 8 பேரும் நடந்து கொண்டார்கள் என்பதை விலா வாரியாகப் பேசிய ஒரு நிர்வாகி, குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான தி.மு.க. இளைஞரணி யைச் சேர்ந்த ஹரிஹரனை அக்கட்சி நீக்கியதை தற்காலிக மானதெனக் குறிப்பிட்டு, ஆளும்கட்சியான தி.மு.க., இதுபோன்ற சம்பவங்களுக்குத் துணைபோவதாகக் கடுமையாக விமர்சித்தார்.

ஆர்ப்பாட்ட மேடையில் ஆளாளுக்கு ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டிருந்த விருது நகர் நகர பா.ஜ.க. சிறுபான்மை அணித் தலைவர் ஜாபர் சாதிக், “"ஆம்பளையோ, பொம்பளை யோ எல்லாரும் உயிர்தான். உண்மையிலேயே என்ன நடந் துச்சுன்னு தெரியாம, இந்தக் கேவலமான விஷயத்தை பப்ளிக்கா பேசிட்டு இருக்காங்க'' ’என்று வெள்ளந்தியாகக் கவலைப்பட்டார்.

"நீதி வேண்டும்! பெண் களுக்கு பாதுகாப்பு வழங்கமுடி யாத விடியா அரசைக் கண்டிக் கிறோம்!'’ என்ற பதாகையைக் கையில் வைத்திருந்த அருப்புக் கோட்டை விஷ்ணுபிரியா, “"அந்தப் பெண் இந்து என்பதால் யாரும் குரல் கொடுக்க முன்வர வில்லை. பா.ஜ.க. குரல் கொடுக் கிறது''’என்று இதிலும் மத அரசியலை முன்வைத்தார். அழைத்துவரப்பட்ட மூதாட்டி களில் ஒருவரான செல்லத்தாய், "கையில கொடியைக் கொடுத் தாங்க, வச்சிருக்கேன். யாரும் எதுவும் கவனிக்கல தம்பி... பெயரைக் கேட்கிறீங்க, எனக்கு பிரச்சனை எதுவும் வராதுல்ல'' என்று வறட்சியாகச் சிரித்தார்.

தி.மு.க.வுக்கு எதிராக வலு வான அரசியல் குற்றச்சாட்டுகள் இல்லாத நிலையில், பா.ஜ.க. அரசியல் செய்வதற்கு, விருதுநகர் பாலியல் வன்கொடுமை விவகா ரம் பெரிதும் பயன்பட்டுள்ளது.