அமைதிப் பூங்கா என எடப்பாடி பழனிச்சாமி பெருமிதப்பட்டு பிரச்சாரம் செய்த அதேவேளையில், தமிழகத்தில் அந்தக் கொடூரம் நடந்துள்ளது.
நாகப்பட்டினம் வெளிப்பாளையம் நாகத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 40 வயதான கவிதாவின் கணவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். சித்தாள் வேலைக்குப் போய்வருகிறார். வழக்கமாக ஆறு மணிக்கு வீட்டிற்குச் சென்றுவிடும் கவிதா, சம்பவத்தன்று வேலை முடிய நேரமானதால், நாகை வெளிப்பாளையம் அருகே காமராஜர் காலனியில் குடியிருக்கும் தனது சகோதரி வீட்டில் தங்கிவிடலாம் என லேசான மழையில் நடந்தே சென்றிருக்கிறார்.
கவிதா தனியாக நடந்துசெல்வதைக் கவனித்த கஞ்சா போதையில் இருந்த இரண்டு இளைஞர்கள், பைக்கில் பின்தொடர்ந்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் கவிதாவின் வாயைப் பொத்தி அருகிலிருந்த விநாயகர் கோயிலுக்குள் தூக்கிச்சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். அவர்களிட
அமைதிப் பூங்கா என எடப்பாடி பழனிச்சாமி பெருமிதப்பட்டு பிரச்சாரம் செய்த அதேவேளையில், தமிழகத்தில் அந்தக் கொடூரம் நடந்துள்ளது.
நாகப்பட்டினம் வெளிப்பாளையம் நாகத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 40 வயதான கவிதாவின் கணவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். சித்தாள் வேலைக்குப் போய்வருகிறார். வழக்கமாக ஆறு மணிக்கு வீட்டிற்குச் சென்றுவிடும் கவிதா, சம்பவத்தன்று வேலை முடிய நேரமானதால், நாகை வெளிப்பாளையம் அருகே காமராஜர் காலனியில் குடியிருக்கும் தனது சகோதரி வீட்டில் தங்கிவிடலாம் என லேசான மழையில் நடந்தே சென்றிருக்கிறார்.
கவிதா தனியாக நடந்துசெல்வதைக் கவனித்த கஞ்சா போதையில் இருந்த இரண்டு இளைஞர்கள், பைக்கில் பின்தொடர்ந்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் கவிதாவின் வாயைப் பொத்தி அருகிலிருந்த விநாயகர் கோயிலுக்குள் தூக்கிச்சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். அவர்களிடமிருந்து தப்பிக்க முடியாமல் தவித்த கவிதாவின் அலறல் சத்தம் சிலமணி நேரம் கழித்தே அக்கம் பக்கத்தினருக்குத் தெரியவர... அந்த இரண்டு கஞ்சா போதை நபர்களும் தப்பியோடியிருக்கின்றனர்.
அக்கம்பக்கத்தினர் உதவியோடு நாகை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார் கவிதா. அவர் கூறிய அடையாளங்களைத் தொடர்ந்து நாகை வண்டிப்பேட்டையைச் சேர்ந்த அருள்ராஜ், அக்கறைகுளம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் ஆகிய இருவரையும் வெளிப்பாளையம் போலீசார் கற்பழிப்பு உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து பொறையார் சிறையிலடைத்துள்ளனர். இதற்கிடையில் இருசக்கர வாகனத்தில் கவிதாவைப் பின்தொடர்ந்து செல்வதும், பின்னர் இருட்டில் அவரை மடக்கி கோவிலுக்கு இழுத்துச்செல்வதும் சி.சி.டி.வி. பதிவாக கிடைக்கவே... சமூகநலத்துறை அதிகாரிகள் தாமாகவே முன்வந்து விசாரணையை மேற் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், ""வெளிப்பாளையம் என்பது நாகையின் மையப்பகுதி. இங்கு தான் காவல்நிலையம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், நீதிமன்றம், நீதிபதிகள் குடியிருப்பு, வட்டாட்சியர் அலுவலகம், அனைத்தும் இருக்கிறது. அதே பகுதியில்தான் குடிசைத்தொழில் போல தெருவுக்குத் தெரு கஞ்சா, கள்ளச்சாராய விற்பனையும், காரைக்கால் மதுபாட்டில்களும் பஞ்சமே இல்லாமல் ஆறாக ஓடுகிறது.
போலீஸுக்குத் தகவல் கூறினால் கூறியவர்களின் முழுவிவரங்களும் கஞ்சா, சாராய வியாபாரிகளுக்கு போய், அன்று இரவே புகார் தந்தவர்களின் வீட்டிற்கே வந்து மிரட்டுவாங்க. அந்த அளவுக்கு குற்றவாளிகளின் கொட்டம் அதிகரித்துவிட்டது. மாவட்ட எஸ்.பி.யின் கேம் ஆபீஸுக்கு நேர் எதிரேயுள்ள பாழடைந்த கஸ்டம்ஸ் கட்டடத்தில் கஞ்சா விற்பனை நடக்கிறது'' என்கிறார் ஆதங்கமாக.
வெளிப்பாளையம் காவல்நிலையத்திலுள்ள காவலர் ஒருவரிடம் விசாரித்தோம்... ""இந்த சம்பவம் நடந்தது ஆறாம் தேதி இரவு. அன்று இரவே அவங்க கவிதாவின் தங்கை வீட்டுக்குச் சென்று கொலை மிரட்டல் விட்டிருக்கானுங்க. கவிதாவிற்கு வயதுக்குவந்த இரண்டு பெண்பிள்ளைகள் இருக்கிறது. அதனால அவங்க பயத்தில் வெளியில் சொல்லாமல் இருந்துட்டாங்க, இதைத் தெரிந்துகொண்ட அந்தப் பகுதி தி.மு.க.காரர் ஒருவர் எப்படியாவது நடவடிக்கை எடுக்கவேண்டுமென புகார் கொடுக்கவைத்தார்.
குற்றவாளிகளில் ஒருவன் திருச்சி நகைக் கொள்ளையன் திருவாரூர் முருகனின் உறவுக்காரன், மற்றொருவன் அரசியல் பிரமுகர் ஒருவருக்கு நெருக்கமானவன். இந்த விவகாரத்தில் அந்த இரண்டு பேருக்காகவும் அரசியல் கட்சியினர் சிலர் வெளிப்பாளையம் காவல்நிலைய ஆய்வாளர் தியாகராஜனிடம் பேரம் பேசி மூடிமறைக்கும் வேலையைச் செய்துவிட்டனர். ஊடகத்திற்கு செய்தி பரவியதால் வேறு வழியில்லாமல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்'' என்கிறார் விரிவாக
கவிதாவின் சகோ தரியோ... ""எப்பவுமே வேலைக்குப் போய் லேட்டாகிட்டா, எங்க வீட்டுக்கு வந்துருவா. இவனுங்க ரொம்ப தூரமா தொடர்ந்து வந்திருக் கானுங்க, அவனுங்ககிட்ட சிக்கியதும், கையிலிருந்த சம்பள பணத்தைக் கொடுத்து, என்ன விட்டுடுங்கனு கெஞ்சியிருக்கா. ஆனாலும் அவங்க விடாம சீரழிச்சிருக்காங்க. தப்பிச்சாலே போதும்னு நிலைகுலைஞ்சு ஓடிவந்தா. அக்காவுக்கு ஏதாவது ஆகியிருந்தா இரண்டு பெண் பிள்ளைகளும் அனாதையாகியிருக்கும். அங்க நடந்ததோடு இல்லாம வீட்டுக்கே வந்து வெளியில் சொன்னால் என் வீட்டுக்காரரையும் உன்னையும் உங்க அக்கா குடும்பத்தையும் அழிச்சுடுவோம், எல்லாத்துக்கும் ஒரே கேஸ்தான், போலீஸ் எங்க கையிலனு மிரட்டினாங்க. காவல்துறைதான் எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கணும்'' என்று கலங்குகிறார்.
வெளிப்பாளையம் காவல்நிலைய ஆய்வாளர் தியாகராஜனோ, ""வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளைச் சிறையில் அடைத்திருக்கிறோம். மேலும் யாருக்காவது தொடர்பிருக்கிறதா என விசாரித்து வருகிறோம்'' என்கிறார்.
-க.செல்வகுமார்