கடந்த 10 வருடங்களாக எந்த வருமானமும் இல்லாமலிருந்த தி.மு.க.வினர், ஆட்சிக்கு வந்ததும் உற்சாகமடைந்திருந் தனர். "சின்னச் சின்ன கான்ட் ராக்ட்கள் கிடைக்கும். ஊருக்கு ஊர் இருக்கும் டாஸ்மாக் கடை களிலுள்ள பார்களை நடத்த வாய்ப்பு கிடைக்கும்' என்ற எதிர் பார்ப்பில் இருந்தார்கள் உ.பி.க்கள்.
கொரோனா ஊரடங்கு காலம் முதல் கடந்த 2 வருடங் களுக்கு மேலாக அரசு அனுமதி பெற்ற பார்கள் இல்லாமல் ஒப்பந்தக்காரர்களும், அதிகாரிகளும் பங்குபோட்டு பார் நடத்திக் கொண்டிருந்த நிலையில் அரசுக்கான வருமானத்தில்
கடந்த 10 வருடங்களாக எந்த வருமானமும் இல்லாமலிருந்த தி.மு.க.வினர், ஆட்சிக்கு வந்ததும் உற்சாகமடைந்திருந் தனர். "சின்னச் சின்ன கான்ட் ராக்ட்கள் கிடைக்கும். ஊருக்கு ஊர் இருக்கும் டாஸ்மாக் கடை களிலுள்ள பார்களை நடத்த வாய்ப்பு கிடைக்கும்' என்ற எதிர் பார்ப்பில் இருந்தார்கள் உ.பி.க்கள்.
கொரோனா ஊரடங்கு காலம் முதல் கடந்த 2 வருடங் களுக்கு மேலாக அரசு அனுமதி பெற்ற பார்கள் இல்லாமல் ஒப்பந்தக்காரர்களும், அதிகாரிகளும் பங்குபோட்டு பார் நடத்திக் கொண்டிருந்த நிலையில் அரசுக்கான வருமானத்தில் கோடிக் கணக்கில் இழப்பு ஏற்பட்டது.
ஜனவரி முதல், அரசு அனுமதிபெற்ற பார்களை இயக்க அரசு திட்டமிட்டுள்ள நிலையில், நகராட்சி, பேரூராட்சிகளிலுள்ள பார்களை கைவசப்படுத்த அந்தந்த நகர, பேரூர் கழக தி.மு.க நிர்வாகிகள் கூட்டணியமைத்து வருகின்றனர். இந்தக் கூட் டணிக்கு சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது கரூர்.
கடந்த ஒரு வாரமாக ஒவ் வொரு மாவட்டத் தலைநகரிலும் முகாம் அமைத்துள்ள கரூர், கோவை மாவட்ட பிரமுகர்கள், தினசரி ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் சென்று பார் நடத்த ஆயத்தமாகியுள்ள உள்ளுர் உ.பி.களைச் சந்தித்து, "நாங்க கரூர்ல இருந்து வருகிறோம். மது விலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அண்ணன் அனுப்பியிருக்கார். இனிமேல் பாருக்கான டெண்டர் படிவம் எங்ககிட்டதான் வாங்கனும். அதற்கு நீங்க மாதாமாதம் பணம் தருவீங்களா, தினசரியா… அப்பறம் பாருக்குத் தேவையான தண்ணீர் பாட்டில் தொடங்கி தின்பண்டங்கள் வரை எங்ககிட்டதான் வாங்கணும், வெளியில வாங்கக்கூடாது'' என்று சொல்லி டைரிகளில் கணக்கெழுதிச் சென்றுள்ளனர்.
இதனால் அதிர்ந்துபோன லோக்கல் உ.பி.க்கள், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், மா.செ.க் கள் வரை புகார் வாசித்துள்ளனர். இதுகுறித்து புதுக்கோட்டை, தஞ்சை மாவட்ட தி.மு.க. புள்ளிகள் கூறும்போது... "கடந்த 10 வருசமா ரொம்பவே காய்ஞ்சு போய் கிடக்கிறோம். ஒவ்வொரு தேர்தலுக்கும் நாங்க செலவு செஞ்சிருக்கோம். இப்பதான் பார் டெண்டர் வருது. இதுல அந்தந்த பகுதி உ.பி.க்கள் இணைந்து கடைநடத்த திட்டமிட்டிருந் தோம். ஆனால் அதுலயும் செந் தில்பாலாஜி பெயரைச் சொல்லிக் கிட்டு ஒரு கூட்டம்வந்து கள மிறங்கியிருப்பது வருத்தமாக உள்ளது. இப்படியே போனா நடக்கப் போற நகராட்சி, பேரூ ராட்சி தேர்தல்கள்ல கட்சிக் காரங்க யாரும் வேலைபார்க்க வரமாட்டாங்க. அதோட ரிசல்ட் தேர்தல்ல தெரியும்''’ என்றவர்கள், “"இதுவரை அ.தி.மு.க ஆட்சியில் அந்தந்த ஒ.செ., ந.செ. மூலம் டெண்டர் படிவம் கொடுப்பாங்க அவங்களுக்கு ஒருமாதக் கட்டணத்தை மட்டும் கொடுப் பாங்க. அதன் பிறகு எந்த பணமும் கேட்கமாட்டாங்க. ஆனா இப்ப கட்சிக்காக உழைச்ச லோக்கல் கட்சிக்காரங்களுக்கு துரோகம் செய்ய வந்துட் டாங்க''’என்றனர்.
இதேபோல சீனியர் அமைச்சர்களுள்ள மாவட்டங் களில் அந்தந்த அமைச்சர்கள் மூலமாக வசூல் நடக்கிறது என்கின்றனர்.