சாதிகள் இல்லையடி பாப்பா’ என்ற பாரதியாரின் பாடல் பாடப் புத்தகங்களில் இடம்பெற்றாலும், சாதி என்பது ஒரு அடிப்படை சமூகக் கட்டமைப்பாக தொடர்ந்த படியே இருக்கிறது. அதே நேரத்தில், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பிலிருந்தும் வலியுறுத்தப்படு கிறது. கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்புகளில் மட்டுமல்ல, பரந்துபட்ட மக்கள் அனைத்து அதிகாரங்களைப் பெறுவதற்கும், சாதி ரீதியிலான சரியான தரவுகள் அவசிய மாகின்றன. குறிப்பாக, இட ஒதுக்கீடு அடிப்படையில் கல்வி உதவித்தொகை மற்றும் பிற அரசு சலுகைகளைப் பெறுவதற்கு சாதி அடையாளம் தேவைப்படுகிறது.

Advertisment

sasi

தமிழ்நாட்டில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பட்டியலினத்தவர் 20%, பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் 1%, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 68%, உயர் சாதியினர் 11% இருக்கிறார்கள். இந்த 68 சதவீதத்தில்தான் வன்னியர், கொங்கு வேளாளர், கவுண்டர், அகமுடையார், மறவர், கள்ளர், நாடார், இடையர் வெள்ளாளர் போன்ற பல்வேறு சமுதாயத்தினரும், சிறுபான்மையினரும் உள்ளனர். இதில் கிறிஸ்தவர் கள் 6 சதவீதத்துக்கு அதிகமாகவும், இஸ்லாமியர் கள் 6 சதவீதத்துக்கு அருகிலும் உள்ளனர். கிறிஸ்தவ மக்கள் தொகையில் கணிசமானோர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள்.

‘அந்தந்த சாதிகளின் வாக்கு வங்கியின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் தருவதற்கு, தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள், இட ஒதுக்கீடு கொள்கையை மிகச்சரியாக அமல் படுத்துவதில்லை. கட்சிப் பொறுப்புகளைப் பகிர்ந்து அளிப்பதிலிருந்து, தொகுதி களில் வேட்பாளரை நிறுத்துவது வரை, ‘ஏனோ தானோ’ போக்கினையே கடைப்பிடிக்கின்றன. இத னைச் சாதகமாக்கிக் கொண்டு அந்தந்த மாவட் டங்களில் குறிப்பிட்ட பிரிவினர், தங்களது சாதியினரை மட்டும் சகல பொறுப்புகளிலும் வலியத் திணித்து, தகுதியுள்ள பெரும்பான்மை சமுதாயத் தினரை ஓரம் கட்டிவிடுகின்றனர்.’

-இப்படி ஒரு குற்றச்சாட்டினை விருதுநகர் மாவட்டம் -திருச்சுழி தொகுதி யில் மெஜாரிட்டியாக உள்ள அக முடையார் சமுதாயத்தினர் நம்மிடையே முன்வைத்தனர். அவ்விவகாரத்துக்குள் போவதற்கு முன், தங்களைக் கடந்து சென்ற அரசியல் கட்சிகளின் நட வடிக்கைகள் குறித்து ஆதங்கத்துடன் குமுறலைக் கொட்டினார்கள்.

“போற்றுதலுக்குரிய தேசியத் தலைவரான பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவருக்கு தொடர்ந்து குருபூஜை நடத்தி வரு வதும், 1994ல் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை நந்தனத்தில் முத்துராமலிங்கத் தேவருக்கு முழு உருவ வெண்கலச் சிலையைத் திறந்து வைத்த தும், அக்-30 நாளை அர சியல் குறியீடாக மாற்றி அனைத்துக் கட்சித் தலை மைகளையும் பசும் பொன்னை நோக்கி அணிதிரளச் செய்ததும், அதற்குக் கிடைத்த அரசியல் முக்கியத்துவமும் பிற சமுதாய மக்களைக் கவனிக்கவைத்தது. அதனால், தங்களது சமுதாயத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளை, அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த ஆளுமைகளை, தங்களது சாதிய அடையாளமாக முன்னிறுத்த நாமும் அணிதிரள வேண்டும் என்ற சிந்தனை எழுந்தது.

Advertisment

sasi

இந்திய தேசத்தின் அரசியல் சாசனத்தை உருவாக்கித் தந்தவர் அண்ணல் அம்பேத்கர். அனை வருக்கும் பொதுவான அந்த சட்டமேதையை, முன்பெல்லாம் பட்டியலின மக்கள் பாகுபாடின்றி கொண்டாடினார்கள். காலப்போக்கில் அரசியல் மற்றும் சாதிப் பார்வையுடன் தேவேந்திர குல வேளாளர்களில் கணிசமான ஒரு பிரிவினர் அம்பேத்கரை முற்றிலுமாகத் தவிர்த்தனர். அந்த இடத்தில் வீரன் சுந்தரலிங்கத்தையும், இம்மானு வேல் சேகரனையும் தங்களது அடையாளமாக்கி னார்கள். அதனால், தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் களின் ‘ஐகான்’ ஆகிவிட்டார் அம்பேத்கர். இது போல், ஒவ்வொரு சாதியினருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மனிலிருந்து வ.உ.சிதம்பரனார் வரை வரலாற்று நாயகர்கள் தாராளமாகக் கிடைத்தனர். அந்த வகையில், முத்துராமலிங்கத் தேவர் மறவர்களின் அடையாளமாகவும், மாமன்னர் மருதுபாண்டியர்கள் அகமுடையார்களின் பெருமிதமாகவும் ஆனார்கள்.

அகமுடையார், மறவர், கள்ளர் ஆகிய மூன்று பிரிவுகளையும் ஒன்றிணைத்து முக்குலத் தோர் என்று பொதுவாகப் பேசப்படும் விஷயத் துக்கு வருவோம். தேவர் என்பது சாதியல்ல. அது ஒரு பட்டம். அதுபோல் சேர்வை, தேவர், பிள்ளை, முதலியார், உடையார் போன்ற எண்ணற்ற பட் டங்கள் அகமுடையார்களுக்கு உண்டு. மறவர்கள் குறிப்பாக, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் சீர்மரபினராகவும் சில மாவட்டங்களில் பிற்படுத்தப் பட்டவராகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். கள்ளர் இனக் குழுவினரில் கந்தர்வக்கோட்டை கள்ளர், கூட்டப்பார் கள்ளர், பெரிய சூரியூர் கள்ளர், பிறமலை கள்ளர் ஆகிய உட்பிரிவினர் திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் சீர்மரபினராக உள்ளனர். ஈசநாட்டு கள்ளர், நாட்டு கள்ளர் உள்ளிட்ட உட்பிரிவினர் பிற்படுத்தப்பட்டவராக உள்ளனர்.

Advertisment

தமிழ்நாடு முழுவதும் பரவலாக இருக்கும் அகமுடையார்கள் இரண்டு சம்பவங்களைக் குறிப்பிடுகிறார்கள். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது ‘தமிழ்நாட்டில் வாழும் அக முடையார்களை ஒருங்கிணைத்து சுமார் 65 இலட்சம் அகமுடையார் சமுதாய மக்கள் இருக் கிறோம். இந்தக் கணக்கில் மறவர்களோ, கள்ளர் களோ வரமாட்டார்கள் என்ற புள்ளிவிபரத்துடன் அச்சமுதாயப் பிரதிநிதிகள் அவரைப் பார்க்கச் சென்றார்கள். சிலருடைய குறுக்கீட்டால் அச் சந்திப்பு நிகழாமலே போயிற்று. கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, அகமுடையார், மறவர், கள்ளர் ஆகிய மூன்று பிரிவினரையும் ஒன்றிணைத்து தேவர் என்று அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அப்போது கலைஞர் சூசகமாக உதாரணத்துடன் இப்படி கூறினாராம் -“ஒரு பிள்ளை கையில் அரிசி இருக்கிறது. மற்ற இரண்டு பிள்ளைகளின் கையில் உமி இருக்கிறது. அந்த இரண்டு பிள்ளைகள் அரிசி வைத்திருக்கும் பிள்ளையிடம் ‘அரிசியையும் உமியையும் ஒண்ணா கொட்டி ஊதி ஊதி சாப்பிடுவோம்’ என்றார் களாம். அந்தக் கதையாக அல்லவா இருக் கிறது'’என்றாராம்.

sasi

முன்பே முக்குலத்தோர் சங்கமும், தமிழ்நாடு தேவர் பேரவையும் முத்துராமலிங்கத் தேவரை அகமுடையார் வாழும் பகுதிகளிலும், மாநிலம் முழுவதும் பரவலாகக் கொண்டுபோய்ச் சேர்த்து விட்டன. அப்போதெல்லாம் மருதுபாண்டியரின் உருவப்படம் கூட இல்லை. ஓவியங்களாக வரைந்தே பயன்படுத்தினார்கள். 2007-ல் மதுரை தெப்பக்குளத்தில் மருதுபாண்டியருக்கு சிலை திறந்த பிறகே, வெளியுலகத்துக்குத் தெரிய ஆரம்பித்தது. அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கியபோது, பக்க பலமாக இருந்த அகமுடையார்கள், அவருடைய இறப்புக்குப்பின் ஜானகி அணியாகப் பிரிந்தபோது, விசுவாசத்துடன் ஜானகி அம்மாள் பக்கம் நின்றார் கள். அகமுடையார் வீழ்ச்சி அப்போதுதான் ஆரம்பித்தது. பின்னாளில் இதை மனதில் வைத்து சசிகலா, அகமுடையார்கள் குறித்து ஜெயலலிதா விடம் தவறான எண்ணத்தை உருவாக்கி முற்றிலு மாக ஓரம்கட்டினார். முழுக்க முழுக்க இதன் பின்னணியில் செயல்பட்டது சசிகலாவின் கணவர் எம்.நடராஜன். சசிகலாவின் தம்பி திவாகரனின் ஆதரவு இருந்ததாலேயே அகமுடையார் சமுதாயத்தைச் சேர்ந்த ஓ.எஸ்.மணியனை விட்டு வைத்தார்கள்.

மூன்று பிரிவினரையும் முக்குலத்தோர் என்ற பெயரில் அழைப்பதற்கு அகமுடையார் சமுதாயம் ஒருபோதும் உடன்படாது. அவர்களது வாழ்வியல் வேறு; எங்களது வாழ்வியல் வேறு. அகமுடையார் என்ற அடையாளத்தை எதற்காகவும் இழக்கமாட் டோம். ஏனென்றால், இதில் வஞ்சகம் நிறைந்த ஓட்டரசியல் இருக்கிறது. தமிழ்நாட்டில் அரசியல் அதிகாரத்தைத் தொடர்ந்து அனுபவித்து வருவது மறவர் களும் கள்ளர்களும்தான். எப்படியென் றால், முக்குலத்தோர் என்ற அடையாளத் துடன் முன்னாடி போய் நின்று அவர் களால் கட்சிகளில் பொறுப்பு வாங்கிவிட முடிகிறது. தேர்த லில் போட்டியிட சீட்டும் கிடைத்துவிடுகிறது. குறிப்பாக, அ.தி.மு.க.வில் 1991-க்குப் பிறகு அக முடையார்களுக்கான பிரதிநிதித்துவம் என்பதே இல்லாமல் போய்விட்டது. இதற்கு வலுவான காரணம் உண்டு. கட்சியில் பொறுப்பு வாங்கவோ, தேர்தலில் போட்டியிட சீட் வாங்கவோ, எப்பாடு பட்டாவது பணத்தைத் திரட்டி, கொடுக்க வேண் டிய இடத்தில் முந்திக்கொண்டு கொடுப்பதற்கு அக முடையார்கள் தயங்குவார்கள். அரசியலுக்காக சொந் தப் பணத்தைச் செலவழித்தால் எப்படி மீட்க முடியும், மக்களுக்கு எப்படி நன்மை செய்யமுடியும் என்றெல்லாம் பலவாறாக யோசிப்பார்கள்.

மூன்று பிரிவுகளும் சேர்ந்து 100 சதவீதம் என் றால், அதில் 60 சதவீதம் பேர் அகமுடையார்கள். மக்கள் தொகை எண்ணிக்கையில் இத்தனை வலுவாக இருந்தும், போதிய அரசியல் விழிப் புணர்வு ஊட்டப்படாததால், அகமுடையார்களால் அரசியலில் தனிப்பெரும் ஆளுமைகளாக உருவெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், பல்வேறு பட்டங்களுடன் சிதறிக்கிடக் கும் அகமுடையார் சமுதாயத்தை ஓரணியில் திரட் டும் முயற்சி ஒருபுறம் நடந்து கொண்டிருக்கிறது'' என்றனர்.

தொகுதி மறுசீரமைப்பினால் விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக உருவான திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் 2011, 2016, 2021 ஆகிய மூன்று தேர்தல்களிலும் தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார், தற்போது நிதி மற்றும் சுற்றுச்சூழல் & காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பதவி வகிக்கும், மறவர் சமுதாயத்தைச் சேர்ந்த தங்கம் தென் னரசு. இத்தொகுதியில் அகமுடையார் சமுதாயத்துக்கான சூழ்ச்சி வலை எவ்வாறு பின்னப்பட்டுள்ளது தெரியுமா?

வரும் இதழில்...!…