Advertisment

கோவை: மூன்றாகும் ஐந்து..? மா.செ. போட்டியில் யார்? யார்?

dd

தி.மு.க.வின் 15-ஆவது உட்கட்சித் தேர்தல் இறுதிக் கட்டத்தை நெருங்கிய நிலையில், "இந்தந்த தகுதிகள் இருக்கின்றன. அதனால் எனக்குப் பதவி வேண்டும்” என்று கேட்பதை விட, ”இன்னாருக்குப் பதவி கொடுக்கக் கூடாது'' என்கின்ற புகார் மனுக்கள் தான் அறிவாலயத்தில் வந்து குவிந்து அதிர்ச்சியை ஏற்படுத்திவருகின்றன. குறிப்பாக கோவை மாவட்ட தி.மு.க.வில் இந்தக் குற்றச்சாட்டுகள் அதிகம்.

Advertisment

இந்நிலையில், மாவட்டத்தில் கட்சியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, நிர்வாக ரீதியாக ஐந்து மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்த தி.மு.க.வின் அமைப்பை மூன்றாக மாற்றி, மாவட்டத்தில் தோல்விக்கான காரணிகளைச் சரி செய்யும் வகையிலே மா.செ.க்கள் நியமனம் இருக்குமென சூசகத் தகவல்கள் வெளியாகின்றன. எனவே, பகுதிச் செயலாளர்களின் ஆதரவைத் திரட்டி வருகின்றனர் மா.செ. கனவிலிருக்கும் தி.மு.க. உடன்பிறப்புகள்.

dd

கோவை மாவட்ட தி.மு.க.வைப் பொறுத்தவரை அமைப்புரீதியாக இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒருவர் வீதம், கோவை வடக்கு புறநகர் மாவட்டப் பொறுப்பாளராக சி.ஆர். ராமச்சந்திரன், கிழக்கு மாநகர் மாவட்டப் பொறுப்பாளராக நா.கார்த்திக், வடக்கு மாநகர் மாவட்டப் பொறுப்பாளராக பையா கவுண்டர், கிழக்கு புறநகர் மாவட்டப் பொறுப்பாளராக மருதமலை சேனாதிபதி, தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக டாக்டர் வரதராஜு என ஐந்து மாவட்டங்களாக பிரித்து, அதற்கு பொறுப்பாளர் களையும் நியமித்திருந்தது தி.மு.க. தலை

தி.மு.க.வின் 15-ஆவது உட்கட்சித் தேர்தல் இறுதிக் கட்டத்தை நெருங்கிய நிலையில், "இந்தந்த தகுதிகள் இருக்கின்றன. அதனால் எனக்குப் பதவி வேண்டும்” என்று கேட்பதை விட, ”இன்னாருக்குப் பதவி கொடுக்கக் கூடாது'' என்கின்ற புகார் மனுக்கள் தான் அறிவாலயத்தில் வந்து குவிந்து அதிர்ச்சியை ஏற்படுத்திவருகின்றன. குறிப்பாக கோவை மாவட்ட தி.மு.க.வில் இந்தக் குற்றச்சாட்டுகள் அதிகம்.

Advertisment

இந்நிலையில், மாவட்டத்தில் கட்சியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, நிர்வாக ரீதியாக ஐந்து மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்த தி.மு.க.வின் அமைப்பை மூன்றாக மாற்றி, மாவட்டத்தில் தோல்விக்கான காரணிகளைச் சரி செய்யும் வகையிலே மா.செ.க்கள் நியமனம் இருக்குமென சூசகத் தகவல்கள் வெளியாகின்றன. எனவே, பகுதிச் செயலாளர்களின் ஆதரவைத் திரட்டி வருகின்றனர் மா.செ. கனவிலிருக்கும் தி.மு.க. உடன்பிறப்புகள்.

dd

கோவை மாவட்ட தி.மு.க.வைப் பொறுத்தவரை அமைப்புரீதியாக இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒருவர் வீதம், கோவை வடக்கு புறநகர் மாவட்டப் பொறுப்பாளராக சி.ஆர். ராமச்சந்திரன், கிழக்கு மாநகர் மாவட்டப் பொறுப்பாளராக நா.கார்த்திக், வடக்கு மாநகர் மாவட்டப் பொறுப்பாளராக பையா கவுண்டர், கிழக்கு புறநகர் மாவட்டப் பொறுப்பாளராக மருதமலை சேனாதிபதி, தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக டாக்டர் வரதராஜு என ஐந்து மாவட்டங்களாக பிரித்து, அதற்கு பொறுப்பாளர் களையும் நியமித்திருந்தது தி.மு.க. தலைமை. தமிழ்நாடு முழுவதும் பெரும் வெற்றியைப் பெற்று தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றினாலும் கோவை மாவட்டத்தில் 10 சட்ட மன்றத் தொகுதிகளையும் இழந்தது.

கோவை மாவட்ட தி.மு.க.வில் சட்டமன்ற வாரியாக தொகுதிகள் பிரிக்கப்பட்டதுதான், கடந்த சட்டமன்ற தேர்த லின் தோல்விக்கு மிகப் பெரிய காரணமாக அமைந் தது. மாநகர் பகுதியில் முழுமையாக கோவை தெற்கு, வடக்கு, சிங்கா நல்லூர் ஆகிய தொகுதிகள் வருகின்றன. மீதமுள்ள வார்டுகளான கவுண்டம் பாளையம், தொண்டா முத்தூர், கிணத்துக்கடவு ஆகிய சட்டமன்ற தொகுதி களில் வருகின்றன. இதில் 5 மாவட்டங்களும் அடங்குவதுதான் தலை சுற்றும் சமாச்சாரமே.

வடவள்ளி பகுதியில் வசிக்கும் கோவை கிழக்கு மாவட்டப் பொறுப் பாளரான மருதமலை சேனாதிபதி, கிணத்துக்கடவு, சூலூர் ஆகிய தொகுதிகளுக்கும், கோவை மாநகர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் பையாகவுண்டர் கவுண்டம்பாளையம் மற்றும் கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கும், 2016 தேர்தலில் மாவட்டத்தில் தி.மு.க. வெற்றி பெற்ற ஒரே ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ.வான கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் சிங்காநல்லூர், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கும், பொள்ளாச்சி, வால்பாறை சட்டமன்ற தொகுதிகளுக்கு கோவை தெற்கு மாவட்டப் பொறுப்பாளரான டாக்டர் வரதராஜ னும், கோவை தொண்டாமுத்தூர், மேட்டுப் பாளையம் ஆகிய தொகுதிகளுக்கு கோவை வடக்கு மாவட்டப் பொறுப் பாளரான சிஆர்.ராம சந்திரனும் நியமனம் செய்யப்பட்டார். இதுவே கோவை தி.மு.க. தோல்விக்கு காரணமாக அமைந்தது.

அதைவிட முக்கிய மான காரணம், மாவட் டப் பொறுப்பாளர்கள் எவரும் தொண்டர்களு டன் இணக்கம் காட்டு வதில்லை. முதலமைச்சர் வந்தால் மட்டுமே மா.பொறுப்பாளர்களைப் பார்க்கமுடியும் என்கின்ற நிலை இங்குள்ளது. கோவை மாநகர் மக்கள் பொதுவாகவே புறநகரில் உள்ள மாவட்டச் செயலாளர்களுடன் ஒத்துப்போவதில்லை. கோவை மாநகரின் முக்கிய பகுதியான ஆர்.எஸ். புரம் பகுதி கழக உடன்பிறப்புகள் இல்லத்தில் நடக்கும் விஷேசம் மற்றும் துக்க நிகழ்வுகளில் கலந்துகொள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் வசிக்கும் சி.ஆர் .ராமசந்திரன் வருவதும், வடவள்ளி பகுதி கழக உடன்பிறப்பைச் சந்திக்க காளப்பட்டி பகுதியி லிருந்து மாவட்ட பொறுப்பாளர் பையாகிருஷ் ணன் வருகை தருவதும், அதுபோல் குறிச்சி பகுதியில் உள்ள உடன்பிறப்புகளைச் சந்திக்க வடவள்ளி பகுதியில் உள்ள மருதமலை சேனாதிபதியும் வருகை தருவது, இங்குள்ள மாவட்ட பொறுப்பாளர் களுக்கு அரிதான ஒரு விஷயமாகவே மாறிவிட் டது.

அப்புறம் எப்படி கட்சி பலப்படும்? அந்தந்தப் பகுதியினைச் சேர்ந்தவர்கள் அங்கு மாவட்ட பொறுப்பில் இருந்தால், தொண்டர்களின் இல்ல நிகழ்வில் பங்கேற்று, கட்சியை வலுப்படுத்தலாம்'' என்கின்றார் கணபதி பகுதி யில் வசிக்கும் அந்த உடன்பிறப்பு.

நிர்வாக ரீதியாக இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒருவர் என மா. பொறுப்பாளர்கள் நிய மிக்கப்பட்டது ஒரு காரணம் எனினும், கோவை மாவட் டத்தில் அதிக வாக்கு வங்கியைக் கொண்ட அருந்ததியர் சமூக மக்களை இவர்கள் கண்டுகொள்ளவில்லை என்பதும் தோல்விக்கு ஒரு காரணமாகக் கூறுகின்றார்கள் தி.மு.க.வினர். இவர்களுக்கு தி.மு.க.வில் கடந்த 20 ஆண்டுகளாக முக்கியத்துவம் வழங்கவில்லை. மாநகராட்சி யில் துப்புரவுப் பணியில் மட்டும் இருப்பவர்கள் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த 8000 நபர்கள். ஆனால் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட 10 வார்டுகளில் அவர்களுக்கு ஒன்றை மட்டும் ஒதுக்கியதும், இப்பொழுது நியமிக்கப்பட்ட பகுதி செயலாளர்களில் ஒருவர்கூட அருந்ததியர் சமூகம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனைக் குறிப்பிட்டுத்தான் ஈரோட்டில் நடந்த அரசு விழாவில், அந்தியூர் செல்வராஜ் "உங்களையே நம்பியுள்ளோம் நாங்கள்' என முதலமைச்சரைப் பார்த்து கோரிக்கை வைத்ததையும் மனதில் கொள்ள வேண்டும். "தி.மு.க.வின் தோல்விக்கான காரணமாக மாவட்டப் பொறுப்பிலுள்ளவர்களின் சாதி அரசியல், கழக அடிமட்டத் தொண்டர்களுக்கு முக்கியப் பதவிகளை வழங்காமல் மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு பதவி வழங்கியது, அதிகாலையிலேயே மயக்கத்தில் இருப்பது, கழக உடன்பிறப்புகளுக்கு அறிமுகமே இல்லாதது, கடைசி நேரத்தில் பதவியை வாங்கியது...' என வரிசையாகக் தோல்விக்கான காரணங்களை அடுக்குகின்றனர் தொடக்கக் காலம் தொட்டே தி.மு.க.வில் பயணம் செய்யும் உடன்பிறப்புக்கள்.

தற்பொழுதுள்ள மா. பொறுப்பாளார்கள் மீது கடும் சர்ச்சைகள் எழுந்த நிலையில், தங்களுக்குள்ள மேலிடத் தொடர்புகள் மூலம் மா.செ. பதவிக்கான முண்டியடிப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர் பழையவர்களும், புதியவர்களும்.

இது இப்படியிருக்க... "என்னை மா.செ. பொறுப்பிலிருந்து நீக்கினால் என்னுடைய சமூக மக்களை ஒன்றுதிரட்டி பா.ஜ.க.வில் சேர்ந்துவிடுவேன்'’என்கிற மிரட்டலை, பொறுப்பு அமைச்சரிடம் கூறியிருக்கின்றார் மாவட்ட பொறுப்பிலிருக்கும் ஒருவர். இந்த தகவல் அப்படியே முதலமைச்சருக்கும் சென்ற நிலையில், "எனக்கு கட்சிதான் முக்கியம்... சிறந்த பட்டியலைத் தயார் செய்யுங்கள்'' என சம்பந்தப்பட்ட அமைச்சரிடமே கூறியிருப்பதாக தகவலும் கோவை மாவட்ட தி.மு.க.வில் சுற்றி வருகின்றது.

மாநகர் மாவட்டத்தைப் பொறுத்தவரை மா.செ. போட்டியில் தற்போதைய மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், துணை மேயர் வெற்றிச்செல்வன், அண்ணா, கலைஞரின் நண்பரான சண்முகசுந்தரத்தின் மகன் மு.மா.ச.முருகன், கோட்டை அப்பாஸ் ஆகியோரும், கோவை தெற்கு மா.செ.விற்கான போட்டியில் தற்போதைய மாவட்ட பொறுப்பாளர் வரதராஜு, பொள்ளாச்சி மகேந்திரன், தென்றல் செல்வராஜ் மற்றும் எக்ஸ் எம்.எல்.ஏ. கந்தசாமியின் பேரன் சபரி கார்த்திகேயன் ஆகியோரும், கோவை வடக்கு மா.செ.விற்கான போட்டியில் தொண்டா முத்தூர் ரவி, வடவள்ளி வ.ம.சண்முகசுந்தரம் மற்றும் காரமடை டி.ஆர்.எஸ். சண்முகசுந்தரம் மற்றும் பத்மாலயா சீனிவாசன் ஆகியோரும் களத்தில் நிற்கிறார்கள்.

உள்கட்சித் தேர்தலால் ஜல்லிக்கட்டுக் களமாய்ப் புழுதி பறக்க காட்சி தருகிறது கொங்கு மண்டல தி.மு.க.

nkn140922
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe