கோவை தெற்கு! கரையேறுவாரா கமல்?

kamal

கோவையில் உள்ள 10 தொகுதிகளில் குறைவான வாக்குகளைக் கொண்டது கோவை தெற்கு. கடந்த முறை அ.தி.மு.க.வின் அம்மன் அர்ஜூனன் 59ஆயிரம் வாக்குகள் பெற்றார். தி.மு.க. கூட்டணியில் நின்ற காங்கிரசின் மயூரா ஜெயக்குமார் 44 ஆயிரம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், பி.ஜே.பி.யின் வானதி சீனிவாசன் 33 ஆயிரத்துக்கு மேல் வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திலும், மக்கள்நலக் கூட்டணியினர் 24 ஆயிரம் வாக்குகள் பெற்று நான்காம் இடத்திலும் வந்தனர். இளைஞர்கள், வட மாநிலத்தவர்கள், இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், அருந்ததிய மக்கள் நிறைந்த தொகுதி இது.

kamal

பின்னர் கடந்த 2019 எம்.பி. தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெற்றது. இதனால் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வும், பி.ஜே.பி.யும் கலந்துபேசி, தி.மு.க. கூட்டணியை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்போடு இந்த 2021 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்கின்றன.

பி.ஜே.பி. சார்பாக வானதி சீனிவாசனும், காங்கிரஸ் சார்பாக மயூரா ஜெயகுமாரும் போட்டியிடுகின்றனர்.

கோவையில் உள்ள 10 தொகுதிகளில் குறைவான வாக்குகளைக் கொண்டது கோவை தெற்கு. கடந்த முறை அ.தி.மு.க.வின் அம்மன் அர்ஜூனன் 59ஆயிரம் வாக்குகள் பெற்றார். தி.மு.க. கூட்டணியில் நின்ற காங்கிரசின் மயூரா ஜெயக்குமார் 44 ஆயிரம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், பி.ஜே.பி.யின் வானதி சீனிவாசன் 33 ஆயிரத்துக்கு மேல் வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திலும், மக்கள்நலக் கூட்டணியினர் 24 ஆயிரம் வாக்குகள் பெற்று நான்காம் இடத்திலும் வந்தனர். இளைஞர்கள், வட மாநிலத்தவர்கள், இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், அருந்ததிய மக்கள் நிறைந்த தொகுதி இது.

kamal

பின்னர் கடந்த 2019 எம்.பி. தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெற்றது. இதனால் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வும், பி.ஜே.பி.யும் கலந்துபேசி, தி.மு.க. கூட்டணியை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்போடு இந்த 2021 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்கின்றன.

பி.ஜே.பி. சார்பாக வானதி சீனிவாசனும், காங்கிரஸ் சார்பாக மயூரா ஜெயகுமாரும் போட்டியிடுகின்றனர். இந்த பரபரப்பை மேலும் அதிகப்படுத்தி, தமிழகத்தின் பார்வையை கோவை தெற்கு பக்கம் ஈர்த்திருக்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நடிகர் கமல். அவர் களமிறங்கியிருப்பதால் நட்சத்திர தொகுதியாக மாறியிருக்கிறது கோவை தெற்கு.

kamal

""அன்பார்ந்த கோவை தெற்கு தொகுதியின் வாக்காளப் பெருமக்களே... இந்த தமிழ்நாட்டில் நான் எந்த ஒரு தொகுதியில் வேணாலும் நின்றிருக்க முடியும். ஆனால் நான் இந்த கோவைத் தொகுதியை தேர்வு செய்ததிற்கு காரணமிருக்கிறது. அது இந்த கோவை மக்கள் என் மீது மாறாத அன்பு கொண்டவர்கள் என்பதால்தான்'' எனச் சொல்லி கைத்தட்டல் வாங்குகிறார் கமல்.

அ.தி.மு.க. கூட்டணியில் பி.ஜே.பி.க்கு இந்த தொகுதியை கொடுத்தது, சிறுபான்மை மக்களை கொதிப்படையச் செய்திருக்கிறது. அ.தி.மு.க.வினரே அதிருப்தியுடன் கட்சி அலுவலகமான இதய தெய்வம் மாளிகையை முற்றுகையிட்டு, உருண்டு புரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அ.தி.மு.க.வின் மேல் மட்ட நிர்வாகிகள் அவர்களை எவ்வளவோ சமாதானம் செய்த போதும், ""எங்கள் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த அம்மன் அர்ஜூனன், ஒரு கவுன்சிலரைப் போல தொகுதியில் உள்ள வார்டுகளில் நடமாடிக்கொண்டிருந்தார். இந்த வானதி சீனிவாசன் அப்படி தொகுதிக்குள் சுற்றி எங்கள் குறை களைத் தீர்ப்பாரா?'' எனக் கேட்டது வானதி சீனிவாசனுக்கு என்னவோ போல ஆகிவிட்டது.

kamal

வானதி தன்னுடைய பிரச்சாரத்தில்... ""எனக்கு தனியாகத் தோட்டம் இருந்தபோதும்... மக்கள் சேவை மையம் ஒன்றை நிறுவி உங்களுக்காகத்தான் இங்கேயே தங்கி பாடுபட்டு வருகிறேன். மோடி அவர்களின் நலத் திட்டங்களை உங்களுக்கு பெற்றுத்தருவேன் எனச் சொல்கிறார்... சொல்லிக்கொண்டேயிருக்கிறார்'' என்கிறார்கள் தொகுதிவாசிகள்.

தேர்தல் அறிக்கையை முதலில் வெளியிட்ட தி.மு.க.வின் கியாஸ் சிலிண்டருக்கு மானியம், மாநகரப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் இல்லை, ஆட்டோ எடுப்பவர்களுக்கு 10,000 ரூபாய் மானியம் என தேர்தல் அறிக்கையையே பிரசாரத் தில் முதன்மைப்படுத்துகிறார்.

அதோடு தொழில் நிறுவனங்கள் இந்த தொகுதியில் உள்ள முதலாளிகளை கூட்டமாய் சந்தித்த காங்கிரசின் ராகுல்காந்தியிடம்... ""நீங்கள் வந்ததும் எங்கள் தொழில்களை சிதைக்கும் ஜி.எஸ்.டி. வரியை நீக்குவீர்கள் என நம்பலாமா'' எனக் கேட்டார்கள். அதற்கு ராகுல்காந்தி, ""நிறைவேற்றுவேன்'' என உறுதியளித்தார்.

அதோடு காங்கிரஸுக்கு இந்த தொகுதியில் வெற்றிக்கு நம்பிக்கை தருவது, கடந்த எம்.பி. எலெக்சனில் தி.மு.க. கூட்டணியில் நின்ற சி.பி.எம்.மின் பி.ஆர். நடராஜன் பெரும்வாக்குகளை இந்த தொகுதியில் அள்ளினார் என்பதுதான்.

இத்தகைய சூழலில், கடந்த எம்.பி. தேர்தலின்போது மக்கள் நீதி மய்யம் குறிப்பிட்டத்தக்க அளவில் பெற்ற வாக்குகள்தான் கமலை, கோவை தெற்குக்கு ஈர்த்திருக்கிறது. தேர்தல் களத்தில் கமல் எம்.ஜி.ஆரா? சிவாஜியா? என்பதை கோவை தெற்கு வாக்காளர்கள் முடிவு செய்வார்கள்.

-அ.அருள்குமார்

________________

ஆலந்தூர்! மாஜிக்கள் ஃபைட்!

எம்.ஜி.ஆர் ஜெயித்த பரங்கிமலைத் தொகுதிதான் பின்னர் ஆலந்தூர் ஆனது. இங்கு தி.மு.க.வின் தா.மோ.அன்பரசனும் அ.தி.மு.க.வின்

aa

வளர்மதியும் மோதுகின்றனர். இருவரும் முன்னாள் அமைச்சர்கள். மக்கள் நீதி மய்யம் சரத்பாபுவை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது.

ஆலந்தூரில் ஆர்.எம். வீரப்பனை வென்றவர் வளர்மதி. தா.மோ. அன்பரசனிடம் தோற்று 2011-ல் ஆயிரம்விளக்கு தொகுதிக்கு மாறியவர். 2016-ல் அங்கும் தோற்றார். இம்முறை ஆயிரம்விளக்கு பா.ஜ.க.வுக்குப் போனதால், ஆலந்தூருக்கு மாறியிருக்கிறார். தா.மோ.அன்பரசன் எதிர்க்கட்சியாக இருந்தபோதும் பல திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். மக்கள் குறைகளைத் தீர்ப்பதில் ஆர்வமுள்ளவர்.

மூன்று லட்சத்து இருபத்தெட்டாயிரம் வாக்குகளைக் கொண்ட ஆலந்தூரில், வாக்காளர்களை வளைப்பதில் இரு கட்சிகளுமே மும்முரம் காட்டிவருகின்றன. தா.மோ. அன்பரசனுக்கு உடன்பிறப்புகள் ஆர்வமாக களத்திலிறங்கி வேலைபார்த்து வருகின்றனர். சோழிங்கநல்லூரில் போட்டியிடும் கந்தனுக்கு ர.ர.க்கள் பெரும்பான்மையாகக் கிளம்பிவிட்டதால், தனக்கென சிறப்பு ஆட்களை வைத்து தொகுதி மக்களைச் சந்தித்துவருகிறார் வளர்மதி.

வெற்றிபெற்றால் இருவரின் சீனியாரிட்டிக்கும் அமைச்சர் பதவி நிச்சயம் என்பதால் இருதரப்பினரும் வரிந்துகட்டுகிறார்கள்.

-அரவிந்த்

nkn200321
இதையும் படியுங்கள்
Subscribe