கடந்த சட்டமன்றத் தேர்தலில் மேட்டுப் பாளையம் சட்டமன்றத் தொகுதியில் சொற்ப வாக்குகளில் தன்னுடைய வெற்றி வாய்ப்பை இழந்தாலும் துவண்டு போகாமல் இன்முகத் துடன் தன்னுடைய தொடர்ச்சியான சேவைகள் மூலம் மக்களிடையே நெஞ்சம் நீங்கா அன்பைப் பெற்றுள்ளார் டி.ஆர்.எஸ். என்று மக்களால் அன் பாக அழைக்கப்படும் டி.ஆர். சண்முகசுந்தரம்
அடிப்படையில் விவசாயக்குடும்பம் என்பதால் மக்களின் கஷ்ட நஷ்டங்களைப் புரிந்த TRS கடந்த 40 ஆண்டுகாலமாக மக்களுக்கான சேவையை இன்றுவரை விடாமல் தொடர்ந்து செய்துவருகின்றார். தி.மு.க.வில் இணைந்த நாள்முதல் இன்றுவரை கழகத்திற்க
கடந்த சட்டமன்றத் தேர்தலில் மேட்டுப் பாளையம் சட்டமன்றத் தொகுதியில் சொற்ப வாக்குகளில் தன்னுடைய வெற்றி வாய்ப்பை இழந்தாலும் துவண்டு போகாமல் இன்முகத் துடன் தன்னுடைய தொடர்ச்சியான சேவைகள் மூலம் மக்களிடையே நெஞ்சம் நீங்கா அன்பைப் பெற்றுள்ளார் டி.ஆர்.எஸ். என்று மக்களால் அன் பாக அழைக்கப்படும் டி.ஆர். சண்முகசுந்தரம்
அடிப்படையில் விவசாயக்குடும்பம் என்பதால் மக்களின் கஷ்ட நஷ்டங்களைப் புரிந்த TRS கடந்த 40 ஆண்டுகாலமாக மக்களுக்கான சேவையை இன்றுவரை விடாமல் தொடர்ந்து செய்துவருகின்றார். தி.மு.க.வில் இணைந்த நாள்முதல் இன்றுவரை கழகத்திற்காக தன்னை அர்ப்பணித்து, கட்சி அறிவித்த உறுப்பினர் சேர்க்கை, தேர்தல் பணி, நலத்திட்டங்கள் என தனித்துவமாக இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
கொரோனா நேரத்தில் தலைவர் மு.க.ஸ்டா லின் கட்டளைக்கிணங்க, தமது உயிரையும் பொருட்படுத்தாமல் களத்திலிறங்கி தொகுதிமுழு வதும் வேலையில்லாமல் முடங்கிக்கிடந்த ஏழை, எளியோர்களுக்கு மருத்துவ உதவி, உணவு, மளிகைப் பொருட்களை வழங்கி தலைவரின் பாராட்டைப் பெற்றார். 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளராகக் களம் கண்டு, மேட்டுப்பாளையம் தொகுதியில் 1,02,500 வாக்குகளைப் பெற்று அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஏ.கே. செல்வராஜைத் திணறடித்து, சொற்ப வாக்குகளில் வெற்றிவாய்ப்பை இழந்தார்.
இருப்பினும், தனது சேவையை இன்றுவரை நிறுத்தவில்லை. எந்த மதமாக இருந்தாலும் அவர்களின் ஆலயங்கள் சார்பான நற்பணியில் TRS-ன் பங்கு கண்டிப்பாக இருக்கும். மத்தம்பாளையத்தில் அமைந்த சிவன் கோவிலுக்கு இவர் சொந்தச் செலவில் ரூ.60 லட்சம் மதிப் புடைய ராஜகோபுரத்தை அமைத்துக்கொடுத்த தும், இந்தமாத இறுதியில் திறக்கப்படவுள்ள சொந்த நிதியில் கட்டிமுடிக்கப்பட்ட தேவாலய மும் இவரது நற்பணிகளுக்குச் சான்றாகும்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/03/trs1-2026-03-03-11-48-42.jpg)
கலைஞர் நூற்றாண்டு நூலகம்:
மேட்டுப்பாளையம்- அன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள TRS VIP CITY நகரில் 4 செண்ட் இடத்தில் ஏழை, எளிய மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் இவர் உருவாக்கிய நூலகத்தை, பொதுமக்கள் பயன்பெறுகின்ற வகையில் சென்னை தி.மு.க. கழகத்தின் அண்ணா அறிவாலயத்திற்கு பத்திரப்பதிவு செய்துகொடுத்து முதல்வரின் நன்மதிப்பைப் பெற்றுள்ளார்.
முதல்வர், துணைமுதல்வர் பிறந்தநாள் விழா நலத்திட்டங்கள்:
துணைமுதல்வரின் 49-ஆவது பிறந்தநாள் விழா நலத்திட்டங்களாக 49,000 குடும்பங்களுக்கு வேஷ்டி, சேலை, பாத்திரங்கள், பொங்கல் பரிசுகள் வீடு வீடாக வழங்கப்பட்டன. முதல்வரின் 73-வது பிறந்தநாள் விழா தொகுப்பாக தொகுதி முழுவது முள்ள பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன. தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடை, பரிசுகள் வழங்கப் பட்டன. தொகுதியிலுள்ள 73,000 குடும்பங் களுக்கு வேஷ்டி, சேலைகள், பாத்திரங்கள், பால் அண்டா, மாணாக்கர்களுக்கு சீருடை, நோட் புத்தகங்கள், கல்லூரி மாணாக்கர்களுக்கு புத்தாடை, பாடப்புத்தகங்கள் கொடுக்கப்பட்டன. முத்தாய்ப்பாக தொகுதியிலுள்ள பழங்குடியின மக்களுக்கு நலத்திட்டங்கள், சீருடைகள் புத்தாடைகள் என வாரிவழங்கியது தலைவரின் பாராட்டைப் பெற்றுள்ளது. தொடர்ந்து இவர் ஆற்றும் சேவை எதிரணியினரை திக்குமுக்காட வைத்துள்ளது நிஜம்.
-NG'26
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us