""ஹலோ தலைவரே, தமிழ்நாட்ல எதிர்க்கட்சிகளின் கூட்டணியே இன்னும் முழுசா அமையலை. அதுக்குள்ளேயே கூட்டணியில் பிளவு, விரிசல்ன்னு விவாதங்கள் நடக்குறதைக் கவனிச்சீங்களா?''’

""ஆமாம்பா. சென்னைக்கு வந்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், மு.க.ஸ்டாலினை சந்திச்சதையும், இங்கேயிருந்து சிறுத்தைகள் திருமா, டெல்லிபோய் ராகுலை சந்திச்சதையும் வச்சிதான், இப்படிப்பட்ட விவாதங்கள் கிளம்பியிருக்கு.''’

""உண்மைதாங்க தலைவரே, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், சென்னை வந்து ஸ்டாலினை சந்திச்ச பின்னணி குறித்து போனமுறை நாம பேசிக்கிட்டோம். மாநில சுயாட்சிக் கூட்டணிங்கிற பேர்ல அகில இந்திய அளவில் காங்கிரசும், பா.ஜ.க.வும் இல்லாத ஒரு கூட்டணியை உருவாக்க, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி போன்றோர் எடுத்துவரும் முயற்சி, எல்லோரும் அறிஞ்ச ஒண்ணுதான். ஆனா, ஸ்டாலினை சந்திச்சிட்டு பேட்டி கொடுத்த சந்திரசேகர் ராவ், "எங்க கூட்டணியில் காங்கிரஸ் பற்றியும் பரிசீலிப்போம்'னு சொன்னாரு. அதற்கப்புறம் உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவையும் சந்திச்சிருக்காரு. இருந்தாலும் மம்தாவும் ராவும் அமைக்கும் அணி, பி.ஜே.பி.யின் "பி'’டீமா இருக்கலாம்னும் பலரும் சந்தேகப் பார்வை பார்க்கறாங்க.''’

stalin-thirunavukarasar

Advertisment

""இந்த அணியின் மூவ் எப்படிப் போகுதுன்னு காங்கிரஸ் கவனிச்சிக்கிட்டுத்தானே இருக்கும்?''’

""ஆமாங்க தலைவரே. காங்கிரஸ், இந்த அணியின் கூர்மையா நகர்வை கவனிக்குது. அதிலும் காங்கிரசின் கவனம் மம்தாவைவிட சந்திரசேகர் ராவின் மீதுதான் கூர்மையா குவிஞ்சிருக்கு. ஏன்னா, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போதுதான், சந்திரசேகர் ராவ், பெரிய அளவில் லாபி பண்ணி, தெலங்கானாவுக்கு தனி மாநில அந்தஸ்த்தை வாங்கினார். அப்ப காங்கிரஸில் சீனியர் மந்திரியா இருந்த ப.சி. போன்றவர்கள் சந்திரசேகர் ராவின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தாங்க. அப்படி இருந்தும், தெலங்கானா சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, சந்திரசேகர் ராவ் காங்கிரஸை முழுசா கழற்றி விட்டுட்டு, தனியா ஆட்சியையும் அமைச்சிட்டார். அதனால் அவர்மீது காங்கிரஸுக்கு அப்ப ஏற்பட்ட கோபம் இப்பவும் குறையலை.''’

""சந்திரசேகர் ராவ் பா.ஜ.க. தரப்போடு நெருக்கமா இருக்காரே?''’

Advertisment

raghul-thiruma

""உண்மைதாங்க தலைவரே, தெலங்கானாவில் பா.ஜ.க.வுக்குன்னு பெரிய செல்வாக்கு எதுவும் இல்லை. பா.ஜ.க.வின் தலைவரான அமித்ஷாவோடு சந்திரசேகர் ராவ், அதிக நெருக்கத்தை வளர்த்து வச்சிருக்கார். இந்த நிலையில் சந்திரசேகர் ராவ், எதுக்காக ஒரு புதுக்கூட்டணியை உருவாக்கணும்னு காங்கிரஸ் சந்தேகத்தை எழுப்புது. பா.ஜ.க.வின் தூண்டுதலில் உருவாக்கப்படும் இந்த அணியிடம் தி.மு.க.வும் பலியாயிடுமோன்னு அது கவலைப்படுது. அதனால் தி.மு.க. தன்னைக் கழற்றிவிடப் பார்க்குதோங்கிற டவுட் காங்கிரஸ் தலைமையிடம் இருக்கு.''’

""தி.மு.க. சைடில் என்ன சொல்றாங்க?''’

""தி.மு.க. சீனியர்களோ, தமிழ்நாட்டில் கட்சிக் கிளையே இல்லாத சந்திரசேகர் ராவுடனும் மம்தாவுடனும் கூட்டணி வச்சி தி.மு.க.வுக்கு என்ன ஆகப்போகுது? காங்கிரஸ், சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள்னு இங்க இருக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றுசேர்த்துப் போனால்தான் கரையேற முடியும்னு எங்களுக்கும் தெரியும்னு சொல்றாங்க. தி.மு.க.வைப் பொறுத்தவரை, கூட்டணிக் கட்சிகள் பெரிய அளவில் சீட்டைப் பிரிச்சிடக்கூடாதுன்னு நினைக்குது. அதனால்தான் காங்கிரஸின் அதிக சீட் எதிர்பார்ப்பிற்கு செக் வைக்க, மூன்றாவது அணியோடு பேசுவதுபோல் தோற்றத்தை ஏற்படுத்துது. இதன்மூலம் அதிக சீட்டை எதிர்பார்க்க வேண்டாம்ங்கிற சிக்னலைத்தான் அது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்குக் காட்டுது. இந்த நேரத்தில் தி.மு.க.வோடு நட்புறவில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுலை சந்திச்சி, காங்கிரஸ் தலைமையில் வலிமையான கூட்டணி உருவாகணும்ங்கிறதையும், அதில் தமிழகத்தில் எங்களுக்கும் உரிய மதிப்பான சீட்டுகள் வேணும்ங்கிறதையும் தன் பங்கிற்கு சிக்னல் காட்டியிருக்கார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு வருடம் உள்ள நிலையில், எல்லாக் கட்சிகளுமே தங்கள் சிக்னல்களை காட்ட ஆரம்பிச்சிடுச்சி. ஏன்னா கடைசிநேர குழப்பம் வரக்கூடாதுன்னு இப்பவே பொசிஷனை உறுதிப்படுத்திக்கலாம்ங்கிற எண்ணம்தான்.''’‘

marty

""திருமா, ராகுல் சந்திப்பில் என்ன நடந்ததாம்?''’

""தன் கட்சிப் பொதுச்செயலாளரான ரவிக்குமாரோட 30-ந் தேதி டெல்லி போனார் திருமா. 1-ந் தேதி ராகுலை சந்திக்கணும்னு கேட்டதும், "இன்னைக்கே பார்க்கணும்னா 5 நிமிடம் பேசலாம். நாளைக்குன்னா அரைமணி நேரம் பேசலாம்'னு ராகுல் தரப்பில் இருந்து பதில் வந்தது. "இன்னைக்கே பார்த்துடறோம்'னு திருமா சொல்ல... சந்திப்பு நடந்தது. தானே வீட்டுக் கேட்டைத் திறந்து வரவேற்றிருக்கார் ராகுல். காங்கிரஸ் தலைவராக ராகுல் தேர்வு பெற்றதற்கு வாழ்த்தையும், எஸ்.சி. எஸ்.டி. விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து முதலில் எதிர்வினை ஆற்றியதற்கு நன்றியையும் ராகுலுக்குத் தெரிவிச்ச திருமா, "ஜூனில் தோழமைக் கட்சிகளை அழைத்து, ’"தேசம் காப்போம்'’என்ற பெயரில் தமிழகத்தில் மாநாடு நடத்தப்போறோம். அதில் நீங்க கலந்துக்கணும்'னு அழைப்புவிடுக்க, "வர்றேன்'னு சம்மதம் சொல்லியிருக்கார் ராகுல். பேச்சுவாக்கில், "வர்ணாசிரமத்தையும் மனு தர்மத்தையும் தூக்கிப்பிடிக்கும் பா.ஜ.க.வை தலித் தலைவர்களே ஆதரிக்கிறாங்களே'ன்னு ராகுல் தன் ஆதங்கத்தையும் தெரிவிச்சிருக்கார். திருமாவோ, "எங்களைப் பொறுத்தவரை எந்தக் காலத்திலும் பா.ஜ.கவை ஆதரித்ததில்லை'ன்னு சொல்லிட்டு வந்திருக்கார். இதுபோல மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியையும் சந்தித்து மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து, காங்கிரஸ் பங்கேற்கும் அணி பற்றி திருமா வலியுறுத்தி இருக்காரு.''’

""தமிழ்நாடு காங்கிரஸ்ல என்ன நடக்குது?''’

sitaramhicery

""காங்கிரஸைப் பொறுத்தவரை தேர்தல் களத்தில் வலிமையா இறங்கத் தோதா, கட்சிக் கட்டமைப்பை பலப்படுத்தணும்ன்னு நினைக்கிது. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரோ, கட்சியின் பூத் கமிட்டியினரோடு கலந்துரையாட, மாவட்டம் மாவட்டமா சுற்றுப் பயணத்தை நடத்திக்கிட்டிருக்கார். "ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் வாட்ஸ் ஆப், முகநூலைக் கையாளும் 2 பேர் இருக்கணும். அப்படிப்பட்டவர்களின் லிஸ்ட்டையும் அனுப்புங்கள்'னு ராகுல் உத்தரவு போட்டிருப்பதால், அதையும் அவர் கவனிக்கிறார். இந்த சுற்றுப்பயணம் முடிஞ்சதும் ஜூன், ஜூலையில் ‘"மக்கள் தரிசனம்'’ என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து சென்னைவரை திருநாவுக்கரசர் நடைபயணம் மேற்கொள்ள இருக்கார். இதில் இரண்டு இடங்களில் ராகுலைப் பங்கேற்கச் செய்யும் முயற்சிகளும் நடக்குது.''’

""அரசியல் தகவல்களைக் கேட்டுக்கிட்டேன். அதிகாரிகள் பற்றிய தகவலைச் சொல்றேன். பொருளாதாரக் குற்றப்பிரிவு எஸ்.பி. ரம்யாபாரதி, தன் கணவரும் குடும்பமும் இருக்கும் மேற்குவங்க மாநிலத்துக்கு மாற்றல் வாங்கிய நிலையில், உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்ட்டி, பழைய முரண்பாடு காரணமாக அதை நிறுத்திவைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட தகவல் ஏற்கனவே ஊடகங்கள்ல பரபரப்பாக அடிபட்டது. முதல்வர் எடப்பாடிவரை முறையிட்டும் நீதி கிடைக்காததால், இப்போது நிரஞ்சன் மார்ட்டிக்கு எதிராக ரம்யா பாரதி, மத்திய தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். "என்னைப் பழிவாங்கும் மார்ட்டியை விடமாட்டேன்'னு அவர் அழுத்தமான குரல்ல சொல்லிக்கிட்டிருக்காராம்.''