"ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல' என்கிற எடப்பாடி பழனிச்சாமியின் வார்த்தைகள் டெல்லியை கோபப்படுத்தியிருக்கின்றன. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் பிஸியாக இருந்த சூழலிலும், எடப்பாடியின் இந்த ஆவேசம் குறித்து விசாரித்திருக்கிறார் அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணியின் சூத்திரதாரியான மத்திய அமைச்சர் அமித்ஷா.
இதுகுறித்து பா.ஜ.க.வின் மேலிட தொடர்பாளர்களிடம் விசாரித்தபோது, ”இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சி அல்லது பா.ஜ.க. ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் பா.ஜ.க. -ஆர்.எஸ்.எஸ்.ஸின் அஜெண்டா. அதை நிறைவேற்றும் முகமாகத்தான் அமித்ஷாவிடம் அரசியல் அதிகாரம் கொடுக்கப் பட்டிருக்கிறது. அதை நோக்கிய பயணத்தில் அமித்ஷாவின் சமீபகால இலக்கு தமிழ்நாடு.
தமிழகத்தில் திராவிட கட்சிகளின் (தி.மு.க. -அ.தி.மு.க.) வலிமையான, ஆழமான மக்கள் செல்வாக்கும் ஆதிக்கமும் அரசிய லில் இருந்துவருவதால், அவைகளை மீறி எந்தக்காலத்திலும் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதை பல்வேறு ரிப்போர்ட்டுகள் மூலம் டெல்லி அறிந்து வைத்தி ருக்கிறது. அந்த ரிப்போர்ட்டுகளில், ஏதேனும் ஒரு திராவிட கட்சியை வீழ்த்த வேண்டும்; மற்றொரு கட்சியின் ஆதரவைப் பெறவேண்டும்; அப்போது பா.ஜ.க.வின் கனவு நிறைவேறும் என சொல்லப்பட்டி ருக்கிறது.
அந்தவகையில், இன்றைய சூழலில் தி.மு.க. வுடன் கூட்டணிக்கு வாய்ப்பு கிடையாது. அதனால் தி.மு.க. ஆட்சியை வீழ்த்தவேண்டும் என்பது முதல் அஜெண்டா. அதேசமயம், அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து, அதன் மூலம் ஆட்சி அதிகாரத் தைக் கைப்பற்றுவது என்பது இரண்டாவது அஜெண்டா. இதனை நிறைவேற்றத்தான் சிலபல நெருக்கடிகளைத் தந்து அ.தி.மு.க.வுடன் கூட்டணி உறவை புதுப்பித்தார் அமித்ஷா.
ஆனால், அ.தி.மு.க.வுடனான கூட்டணியைப் பற்றி பேசும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், எங்கள் கூட்டணிக்கு அ.தி.மு.க.தான் தலைமை. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் எனச் சொல்லிவருகிறார் அமித்ஷா. இதன் உட்பொருள், அ.தி.மு.க. தலைமையில் கூட் டணி ஆட்சியை பாஜக அமைக்கும் என்பதுதான். அமித்ஷாவின் பேச்சுக்களிலுள்ள மறைமுக அழுத்தத்தையும் ஆழத்தை யும் புரிந்துகொண்ட எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அ.தி.மு.க. தலைவர்கள், கூட்டணி ஆட்சியைப் பற்றி அமித்ஷா பேசவில்லை என் கிற ரீதியில் மறுத்து வருகின்றனர்.
ஆனால், உண்மையில் கூட் டணி ஆட்சிக்கான அடித்தளத்தைத் தான் அமித்ஷா சீக்ரெட்டாக கட்டமைத்துவருகிறார். அதன் முதல்கட்டம்தான், கூட்டணி ஆட்சியை வலியுறுத்தும் வகையில் பேசுங்கள் என தமிழக பா.ஜ.க. தலைவர்களை டெல்லி மேலிடம் தூண்டியது. அதுதான் தற்போது நடந்துகொண்டிருக்கிறது''’என்கின்றனர்.
அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி மீண்டும் உருவானதிலிருந்தே இரு கட்சிகளுக்குமிடையே இணக்கமான சூழல் உண்டாகவில்லை. குறிப்பாக, கூட்டணி ஆட்சி என்கிற கான்செப்ட்டில் இரு தரப்பும் முட்டி மோதிக்கொண்டிருக்கின்றன. இத்தகைய மோதல், அ.தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டர்களிடம் பா.ஜ.க.விற்கு ஆதரவற்ற நிலையை ஏற்படுத்திவருகிறது என மத்திய உளவுத்துறை டெல்லிக்கு தகவல்களை பாஸ் செய்தபடி இருக்கிறது.
இதனையறிந்ததாலோ என்னவோ, இந்த மோதல் நீர்த்துப் போய்விடக்கூடாது; ஊதிப் பெரிதாக்க வேண்டும் என நினைத்த பா.ஜ.க.வின் முன்னாள் மாநில தலைவர், பத்திரிகையாளர் களுக்கு பேட்டி தந்தபோது, "சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும் பட்சத்தில் கூட்டணி ஆட்சிதான். இதில் அமித்ஷா உறுதியாக இருக்கிறார். அவர் சொல்வதைத்தான் நான் பேசிவருகிறேன். இந்த விசயத்தில் அ.தி. மு.க.விற்கு நெருடல் இருந்தால் அமித்ஷாவிடம், எடப்பாடி பழனிச்சாமி பேசட்டும்'' என்று பிளிறினார். பா.ஜ.க. மாஜி தலைவர் எதிர்பார்த்தது போலவே அவரின் பேச்சு அ.தி.மு.க.வில் பெரிதாக வெடித்தது. கட்சியின் சீனியர்கள் பலரும் எடப்பாடி பழனிச்சாமியிடம் இதைப்பற்றி ஏகத்துக்கும் மல்லுக்கட்டியிருக்கிறார்கள். இதனையடுத்துத்தான், "மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்!' எனும் தனது தமிழக சுற்றுப்பயணத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. ஆட்சியை அமைக்கும். தனித்தே ஆட்சியை அமைப்போம். அமித்ஷா சொல்வதைக் கேட்க நாங்கள் ஏமாளிகள் அல்ல. ஆட்சியில் பா.ஜ.க.வுக்கு பங்குகொடுக்க வாய்ப்பே இல்லை'' என்று சீறியிருக்கிறார். ஆனால், "இந்தச் சீறலுக்கு ஒரு பின்னணி இருக்கிறது' என்கின்றனர் அ.தி.மு.க.வினர்.
இதுகுறித்து அ.தி.மு.க.வின் சீனி யர்களிடம் விசாரித்தபோது,’ "கூட்டணி ஆட்சி என அமித்ஷா சொல்வதையும், சொன்னதையும்தான் நான் கூறுகிறேன்'' என பா.ஜ.க.வின் மாஜி தலைவர் ஆவேசமாகப் பேசியதை அ.தி.மு.க.வில் யாரும் ரசிக்கவில்லை. "ஆரோக்கியமாக இருக்கும் கூட்டணிக்குள் மோதலை உருவாக்குவது அவர்தான். அவர் இப்படியே பேசிக் கொண்டிருந்தால் கூட்டணியை மறுபரிசீலனை செய்யவேண்டியதிருக்கும் என டெல்லிக்கு எச்சரிக்கை செய்யுங்கள்' என எடப்பாடியிடம் வலியுறுத்தினோம்.
உடனே தம்பிதுரையை தொடர்புகொண்டு, "சீனியர்கள் வலியுறுத்தியதை அமித்ஷாவிடம் தெரிவியுங்கள்' என கேட்டுக்கொண்டார் எடப்பாடி. ஆனால் அமித்ஷாவை, தம்பிதுரை தொடர்புகொண்டபோது அவரது தொடர்பு கிடைக்கவில்லை. இதனால், அமித்ஷாவுக்கு மெசேஜ் அனுப்பப்பட்டது. அதற்கும் நோ ரெஸ்பான்ஸ். பிஸியான ஷெட்யூல் முடிந்ததும் அமித்ஷாவே கூப்பிடுவார் என எதிர்பார்த்த நிலையில் அதுவும் நடக்கவில்லை. இந்த விபரங்கள் எடப்பாடிக்கு தெரிவிக்கப்பட்டதும், டெல்லி மீது எரிச்சலானார். அதேசமயம், "பா.ஜ.க.வின் மாஜி தலைவரின் கருத்துக்கு பொதுவெளியில் பதிலடி கொடுக்க வேண்டும்; இல்லையேல் நம்மை சீண்டிக் கொண்டேயிருப்பார்கள்' என் றும் எடப்பாடியிடம் வலியுறுத் தப்பட்டது. இதன் பிறகுதான், "பா.ஜ.க.வுக்கு ஆட்சியில் பங்கு தர நாங்கள் ஏமாளிகள் அல்ல' என ஆவேசப்பட்டார் எடப் பாடி பழனிச்சாமி. இந்த ஆவேசம், பா.ஜ.க.வுக்கு மட்டும் அல்ல; தி.மு.க.வுக்கும் சேர்த்துத்தான்.
எடப்பாடியின் இந்த ஆவேசப் பேச்சினை அறிந்து, தம்பிதுரையிடம் பேசியிருக் கிறார் அமித்ஷா. அப்போது, "உங்கள் கட்சியை சேர்ந்த முன்னாள் தலைவர், உங்கள் பெயரை அழுத்தமாகச் சொல்லி கூட்டணி ஆட்சியை வலியுறுத் திப் பேசுவதும், அதனை நீங்கள் கண்டிக்காமல் இருப்பதும் சரியாகப்படவில்லை. இப்படித் தான் இருக்குமெனில், கூட் டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டியது வரும் என தங்க ளிடம் தெரிவிக்கச் சொல்லி கட்சித் தலைமை (எடப்பாடி) எனக்கு அறிவுறுத்தியிருக்கிறது. அதனை உங்களிடம் தெரிவிக் கிறேன்' என விவரித்துள்ளார் தம்பிதுரை. அதற்கு, "கவனிக்கிறேன்' என்று மட்டும் சொல்லியுள்ளார் அமித்ஷா.
"இந்த விவகாரத்தில் பா.ஜ.க. தலைமை இறுதியான ஒரு முடிவை எடுக்காதுபோனால், தேர்தல் நெருக்கத்தில் பா.ஜ.க.வை கழட்டிவிட எடப்பாடி பழனிச்சாமி தயங்கமாட்டார். ஏனெனில், இப்போதும்கூட பா.ஜ.க.வுடனான கூட்டணியை அ.தி.மு.க. தொண்டர்கள் விரும்பவில்லை என்பது தான். பா.ஜ.க. இல்லையெனில், விஜய்யின் த.வெ.க. உட்பட முக்கிய கட்சிகள் அ.தி.மு.க.வை நோக்கி வருவது இயல்பாக நடக்கும். ஆக, ஆட்சியில் பங்கு தர நாங்கள் ஏமாளிகள் அல்ல என்ற ஆவேசத்தின் மூலம் அமித்ஷாவுக்கு செக் வைத்துள் ளார் எடப்பாடி பழனிச் சாமி'’என்று விரிவாக சுட்டிக் காட்டுகின்றனர் அ.தி.மு.க. சீனியர்கள்.
அ.தி.மு.க.வின் இந்த மெசேஜை அறிந்த அமித்ஷா, பா.ஜ.க.வின் முன்னாள் தலை வரை தொடர்புகொண்டு கடிந்துகொண்டதாக பா.ஜ.க. வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதுகுறித்து விசாரித்த போது, ‘"எடப்பாடி தலைமையி லான அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணியை ஆரம்பத்திலிருந்தே விரும்பாதவர் மாஜி தலைவர். அதனாலேயே எடப்பாடிக்கு எதிராகவும் கூட்டணிக்கு எதிராக வும் அவ்வப்போது பேசுகிறார். கூட்டணி ஆட்சிதான் என பொத் தாம்பொதுவாகப் பேசியிருந் தால்கூட பெரிதாக ஏதுமில்லை. ஆனால், அமித்ஷா சொன்னதைத் தான் நானும் சொல்கிறேன் என எடப்பாடிக்கு எதிராக அமித்ஷா பெயரை பயன்படுத்தி அவர் பேசியதுதான் பிரச்சனை. அதனால், அமித்ஷாவின் நாலெட்ஜுடன்தான் மாஜி தலைவர் பேசுகிறார்னு எங்களுக்குக்கூட ஒரு சந்தேகம் இருந்தது.
அதே சந்தேகம் அ.தி.மு.க.வுக்கு இருந்திருக்க வேண்டும். உடனே, பா.ஜ.க. தலை வரான நயினார் நாகேந்திரனிடம் இது குறித்து எடப்பாடி விவாதித்துள்ளார். அமித்ஷாவின் கவனத்துக்கு இதனைக் கொண்டு சென்றார் நயினார் நாகேந்திரன். மேலும், பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர்களும் டெல்லிக்கு இதனை தெரியப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, எங்க கட்சியின் தமிழக மாஜி தலைவரை தொடர்பு கொண்டு கடுமையாக கண்டித்திருக்கிறார் அமைச் சர் அமித்ஷா’என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.
_______________
இறுதிச் சுற்று!
உடல் பரிசோதனைக்காக அப்பல்லோவில் முதல்வர்!
அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், சிறுபான் மையின மக்களின் பிரதிநிதியாகப் பார்க்கப்படும் அன்வர்ராஜா, அ.தி.மு.க.வி-ருந்து விலகி முதல்வர் ஸ்டா-ன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத் தில் நடந்த இந்நிகழ்வுக்குப் பின் தமிழக முதல்வர் ஸ்டா-ன், சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் வழக்கமான பரிசோத னைகளுக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முதல்வரின் இருநாள் நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-கீரன்