Advertisment

கூட்டணி ஆட்சி! டெல்லியில் அவசர அலோசனை! விஜய்யை விளாசிய ராகுல்!

raghul

ராகுல்காந்தி தலைமையில் நடந்த காங்கிரசின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில், தி.மு.க.விடம் ஆட்சியில் பங்கு கேட்டுப் போர்க்கொடி உயர்த்திய தமிழக கதர்ச்சட்டைகளுக்கு கடிவாளம் போடப்பட்டிருக்கிறது. இதனால், தி.மு.க.விற்கு நெருக்கடிதரும் சூழல் இனி உருவாகாது என்கிற  நம்பிக்கையில் இருக்கிறது அறிவாலயம். 

Advertisment

டெல்லியில் நடந்தது என்ன?  

தி.மு.க. கூட்டணியிலுள்ள காங்கிரஸ், ’2006 தேர்தல் போல ஏமாந்துவிடக்கூடாது; கூட்டணி ஆட்சியை வலி யுறுத்த நல்ல சந்தர்ப்பம் வந்திருக்கிறது, நழுவ விட்டுவிடக் கூடாது”என்கிற திட்டமிடலில் இருந்தது. அதன் தொடர்ச்சியாக, ராகுல்காந்தியை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அனைவரும், கூட்டணி ஆட்சியை வலியுறுத்திப் பேசினர். இதற்கு ராகுல்காந்தியிடமிருந்து க்ரீன் சிக்னல் கிடைத்ததால், காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடங்கி, பலருக்கும் துணிச்சல் வந்தது. அந்த துணிச்சல், தி.மு.க.விடம் 5 அமைச்சர்கள் வேண்டும் என வெளிப் படையாக கோரிக்கை வைக்குமளவுக்குப் போனது.  இதனால் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை மீது கடும் கோபம்கொண்டார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். 

Advertisment

இந்த நிலையில்தான், தமிழக காங்கிரஸ் தலைவர்களை டெல்லிக்கு வரவழைத்து அவசர ஆலோசனை நடத்தினார் ராகுல்காந்தி. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பலரிட மும் நாம் விசாரித்தபோது, "மல்லிகார்ஜுனகார்கே, ராகுல்காந்தி, கே.சி.வேணுகோபால் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் முதலில் மைக் பிடித்த வேணுகோபால், "கூட்டணி ஆட்சி பற்றி ஆளாளுக்கு பேச யார் உங்களுக்கு அனுமதி தந்தது? தி.மு.க.விடமிருந்து டெல்லிக்கு வரும் மெசேஜ் என்னன்னு உங்களுக்குத் தெரியுமா?' என்று எகிறினார். 

வேணுகோபால் இப்படி பேசிக்கொண்டிருந்தபோது, அவரிடமிருந்து மைக்கை வாங்கிய மல்லிகார்ஜுன கார்கே, "என்னை பல ரும் சந்திக்கிறபோது, தி.மு.க.வுடன்தா

ராகுல்காந்தி தலைமையில் நடந்த காங்கிரசின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில், தி.மு.க.விடம் ஆட்சியில் பங்கு கேட்டுப் போர்க்கொடி உயர்த்திய தமிழக கதர்ச்சட்டைகளுக்கு கடிவாளம் போடப்பட்டிருக்கிறது. இதனால், தி.மு.க.விற்கு நெருக்கடிதரும் சூழல் இனி உருவாகாது என்கிற  நம்பிக்கையில் இருக்கிறது அறிவாலயம். 

Advertisment

டெல்லியில் நடந்தது என்ன?  

தி.மு.க. கூட்டணியிலுள்ள காங்கிரஸ், ’2006 தேர்தல் போல ஏமாந்துவிடக்கூடாது; கூட்டணி ஆட்சியை வலி யுறுத்த நல்ல சந்தர்ப்பம் வந்திருக்கிறது, நழுவ விட்டுவிடக் கூடாது”என்கிற திட்டமிடலில் இருந்தது. அதன் தொடர்ச்சியாக, ராகுல்காந்தியை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அனைவரும், கூட்டணி ஆட்சியை வலியுறுத்திப் பேசினர். இதற்கு ராகுல்காந்தியிடமிருந்து க்ரீன் சிக்னல் கிடைத்ததால், காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடங்கி, பலருக்கும் துணிச்சல் வந்தது. அந்த துணிச்சல், தி.மு.க.விடம் 5 அமைச்சர்கள் வேண்டும் என வெளிப் படையாக கோரிக்கை வைக்குமளவுக்குப் போனது.  இதனால் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை மீது கடும் கோபம்கொண்டார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். 

Advertisment

இந்த நிலையில்தான், தமிழக காங்கிரஸ் தலைவர்களை டெல்லிக்கு வரவழைத்து அவசர ஆலோசனை நடத்தினார் ராகுல்காந்தி. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பலரிட மும் நாம் விசாரித்தபோது, "மல்லிகார்ஜுனகார்கே, ராகுல்காந்தி, கே.சி.வேணுகோபால் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் முதலில் மைக் பிடித்த வேணுகோபால், "கூட்டணி ஆட்சி பற்றி ஆளாளுக்கு பேச யார் உங்களுக்கு அனுமதி தந்தது? தி.மு.க.விடமிருந்து டெல்லிக்கு வரும் மெசேஜ் என்னன்னு உங்களுக்குத் தெரியுமா?' என்று எகிறினார். 

வேணுகோபால் இப்படி பேசிக்கொண்டிருந்தபோது, அவரிடமிருந்து மைக்கை வாங்கிய மல்லிகார்ஜுன கார்கே, "என்னை பல ரும் சந்திக்கிறபோது, தி.மு.க.வுடன்தான் கூட்டணி, தேர்தல் வேலைகளை நீங்க சீரியசா பாருங்க'ன்னு எத்தனை முறை சொல்லியிருப்பேன். நீங்க கேட்ட மாதிரி தெரியலை. இப்போ, கூட்டணிக்குள் சிக்கலை ஏற்படுத்துற மாதிரி நடந்துக்கிறீங்க. கூட்டணி பத்தி, தொகுதி பத்தியெல்லாம் நீங்க பேசினீங்கன்னா, நாங்க எதுக்கு இருக்கோம்? நாங்க யூஸ்லெஸ்சா? நீங்கதான் யூஸ்லெஸ் ஃபெல்லோஸ். இனி யாரும் பவர் ஷேரிங், சீட் ஷேரிங் பத்திப் பேசக்கூடாது' என காட்டமாகக் கடிந்துகொண்டார். 

கூட்டத்தில் கடுகடுப்பு அதிகமாகப் போகு தேன்னு நினைத்த ப.சிதம்பரம், "இப்போ நாம் இருக்கிற கூட்டணி வின்னிங் கூட்டணி. மீண்டும் தி.மு.க.தான் ஆட்சிக்கு வரும். தி.மு.க. கூட்டணியில் நீடிப்பதுதான் எல்லா வகையிலும் நமக்கு நல்லது' என்றார். இதனை உன்னிப்பாக கவனித்துக்கொண் டிருந்தார் ராகுல்காந்தி. இதனையடுத்து உங்கள் கருத்துக்களை  ஒவ்வொருவராக சொல்லலாம் என்ற பேச்சு வந்தபோது, தனியாக ஒன் டூ ஒன் சொல்லச் சொல்லலாம் எனத் தீர்மானித்தனர். அதன் தொடர்ச்சியாக, ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகக் கருத்துக்களைக் கேட்டனர் தலைவர்கள். அதிலும் நிறைய விசயங்கள் நடந்தன''’என்று நம்மிடம் விவரித்தனர். 

மேலும் நாம் விசாரித்தபோது, "தனித்தனி யாக கருத்துக்களை தலைவர்கள் கேட்டபோது, தி.மு.க. கூட்டணியில் நீடிக்கலாம் என்றும், தி.மு.க.விடம் ஏன் கூட்டணி ஆட்சியை வலி யுறுத்த வேண்டும் எனக் கோருகிறோம் என்றும், இரு அணிகளாகப் பிரிந்து ஆளாளுக்கு அவர்களின் கருத்தை தெரிவித்திருக்கிறார்கள். திமுக கூட்டணியை ஆதரிக்கும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க.வும் காங்கிரசும் இயற்கையான கூட்டணி. நமது கோரிக்கைகள், எதிர்பார்ப்புகளுக்கு மரியாதை கொடுப்பவர் ஸ்டாலின். கறாராக அவர் நம்மிடம் இருந்ததில்லை. வெற்றிக் கூட்டணி இதுதான் என்கிற அடையாளம் இந்த கூட்டணிக்கு இருக்கிறது. அதனால் கூட்டணி தொடர வேண்டும். அதேசமயம், கூட்டணி பற்றி தலைமை எந்த முடிவை எடுத்தாலும் நாங்கள் ஏற்போம்'' எனச் சொல்லியிருக்கிறார்கள். 

raghul1

அதேபோல, தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகி விஜய்யுடன் கூட்டணி வைக்க வேண்டும் என வலியுறுத்துபவர்கள், "தி.மு.க.வுடன் பல வருடங்களாகக் கூட்டணியில் இருக்கிறோம். ஆனா, எந்த பலனும் இல்லை; மரியாதையும் இல்லை. அரசாங்கத்திடம் நிறைய பதவிகள் இருக்கிறது. அதில் காங்கிரஸ்காரர்களுக்கு வாய்ப்பு தந்திருக்க வேண்டும். இந்தமுறை ஆட்சியில் பங்கு கேட்கக் கூடிய சூழல் இருப்பதால், அதை கேட்பதில் என்ன தவறு இருக்கமுடியும்ங்கிற எண்ணத்தில்தான் எங்கள் கருத்தை வெளிப்படுத்தினோம். கேட்பதே தி.மு.க.வுக்கு எரிச்சல் வருதுன்னா,…நாம் என்ன அடிமைகளா?' என்று சில எம்.பி.க்களும் சில எம்.எல்.ஏ.க்களும் சொல்லியிருக்கிறார்கள். 

அதனைக்கேட்டு, குறுக்கிட்ட ராகுல்காந்தி,  "கூட்டணி ஆட்சியை வலியுறுத்துற அளவுக்கு கட்சியை நீங்கள் வளர்த்திருக்க வேண்டும், செய்திருக்கிறீர்களா? 17 எம்.எல்.ஏ.க்கள் இருக்கி றீர்கள். ஒருத்தர் கூட தொகுதியை நல்லா வைத்திருக்கவில்லை. மீண்டும் அதே தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டால் பல பேர் ஜெயிக்க மாட் டீர்கள்னு எங்களுக்கு ரிப்போர்ட் வருது. அந்தளவுக்குத்தான் கட்சியை வெச்சிருக்கீங்க. இதுல எப்படி கூட்டணி ஆட்சியை தி.மு.க.விடம் வலியுறுத்த முடியும்? நாம வலிமையாக இருந்தாதானே தி.மு.க.விடம் கேட்க முடியும்?' என்று காட்டமாக கேட்டுள்ளார்.  

தி.மு.க.வுக்கு எதிராகக் கருத்துச் சொன்னவர் களிடம், "தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகணும்னு ஒவ்வொரு கூட்டத்துலயும் சொல்றீங்க. வேற என்ன சாய்ஸ் இருக்கு நமக்கு?'  என ராகுல்காந்தி கேட்டிருக்கிறார். அதற்கு சில எம்.பி.க்கள், "நடிகர் விஜய்க்கு இளைஞர்களிடமும், பெண்களிடமும் நிறைய ஆதரவு தன்னெழுச்சியாக இருக்கு. ஆட்சியில் பங்கு தர்றோம்னு சொல்றார். அந்த அளவுகோல்ல நாம ஏன் யோசிக்கக் கூடாது?' என்று தெரிவித்தனர். 

அப்போதும் "தேர்தலில் விஜய் இன்னும் தனது செல்வாக்கு என்னன்னு நிரூபிக்கலை. ஃப்ரூப் பண்ணாத தலைவர் அவர். சி.பி.ஐ. விசாரணையை எதிர்கொண்டு வர்றார். அவர் எப்படி வேணாலும் மாறக்கூடும். பா.ஜ.க.வின் நெருக்கடி தாங்காம பா.ஜ.க. கூட்டணின்னு அவர் முடிவெடுக்கவும் வாய்ப்பிருக்கில்ல. அப்படிப்பட்டவரை நம்பி நாம எப்படி தேர்தல் முடிவை எடுக்க முடியும்? அதே மாதிரி, அவர் நடிச்ச படத்துக்கு சென்சார் சிக்கல் வந்தததும் அதை நாமதான் முதல்ல கண்டிச்சோம். அதுக்காக ஒரு நன்றிகூட சொல்லலை விஜய். நம்பகத்தன்மை இல்லாத நபராக இருக்கிறார். அவரை நாம் எப்படி முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த முடியும்?' என விஜய் -பா.ஜ.க. பத்தி தனக்கு கிடைக்கும் தகவல்களை வைத்து கடுமையாகப் பேசினார் ராகுல்காந்தி. 

தி.மு.க.வை எதிர்ப்பவர்களால் இதற்கு பதில் சொல்ல முடியவில்லை. அப்போது பேசிய மல்லிகார்ஜுனகார்கே, "தேர்தலுக்கு முன்னாலேயே பா.ஜ.க. பக்கம் விஜய் போயிடுவாரு. இல்லைன்னா தேர்தல் முடிவுக்கு பிறகு போய்டுவாரு. ஒருவேளை நீங்க சொல்ற மாதிரி விஜய்யோடு கூட்டணி வைக்கிறோம்னு வெச்சிக்கிங்க. நம்ம ஆதரவுல கனிசமான சீட்ஸ் ஜெயிக்கிறார். தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க.வுக்கு ஆதரவா மாறமாட்டார்னு உங்களால உத்தரவாதம் தரமுடியுமா?' என கோபமாக கேட்க... அப்போதும் அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. 

இதன்பிறகு "தி.மு.க.வுடன்தான் கூட்டணி. தி.மு.க.விடம் என்ன கேட்கணும், என்ன கேட்கக் கூடாதுன்னு எங்களுக்குத் தெரியும். ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்குன்னு பேட்டி கொடுக்க வோ, பொதுத் தளங்களில் பதிவு செய்யவோ கூடாது. இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்தார் மல்லிகார்ஜுன கார்கே''’என்று நம்மி டம் பகிர்ந்துகொண்டார்கள் கூட்டத் தில் கலந்துகொண்ட நிர்வாகிகள். 

அவசர ஆலோசனைக் கூட்டத் தில்  ராகுல்காந்தி உள்ளிட்ட தலை வர்கள் இப்படி நடந்து கொண்ட தற்கும் ஒரு பின்னணி இருக்கிறது என்கிறார்கள்  கதர் சட்டையினர். 

பொங்கல் விழாவைக் கொண்டாட நீலகிரிக்கு வந்தார் ராகுல்காந்தி. நீலகிரியின் எம்.பி.யான ஆ.ராசாவை அழைத்து, சில விசயங்களைச்சொல்லி ராகுல் காந்தியை சந்தித்துப் பேசுமாறு  உத்தரவிட்டிருந்தார் ஸ்டாலின். அப்போது ராகுலிடம், ஸ்டாலின் சொல்லியனுப்பியதை தெரிவித்தார் ஆ.ராசா. அதற்கு, "அரசியல் பேசும் சூழல் இங்கில்லை. கிரீஷ் சோடங்கரிடம் பேசுங்கள்' என சொல்லிவிட்டு, டெல்லிக்கு பறந்தார் ராகுல்காந்தி.
 
இதனையடுத்து காங்கிரஸ் ஐவர் குழுவினரும் ஆ.ராசாவும் ஹோட்டல் ஒன்றில் சந்தித்தனர். அப்போது, பொதுவெளியில் பேசும் காங்கிரசின் கோரிக்கை குறித்து பேசத் தொடங்கிய ஆ.ராசா, "தமிழகத்தைப் பொறுத்தவரை கூட்டணி ஆட்சியை மக்கள் ஏற்பதில்லை. நாங்களும் ஏற்கவில்லை. தேவையற்ற குழப்பத்தை காங்கிரஸ் உருவாக்குவதாக தலைவர் (ஸ்டாலின்) நினைக் கிறார்' எனச் சொல்ல... "கூட்டணி ஆட்சியை மக்கள் நிராகரிக்கமாட்டார்கள். தி.மு.க.விடம் மனது இருந்தால் மார்க்கம் உண்டு, மக்கள் ஏற்பார்கள். கூட்டணியாக தேர்தலை சந்தித்து, ஜெயித்த பிறகு ஆட்சியில் பங்கில்லை என சொல்வது ஏற்புடையதுதானா? காங்கிரசும் வளர வேண்டாமா? இந்த முறை தி.மு.க. கேபினெட்டில் காங்கிரசுக்கு இடம் வேண்டும். குறைந்தபட்சம் 3 அமைச்சர்களை எதிர்பார்க்கிறோம்' என ஐவர் குழுவினர் சொல்ல, அதனை ஏற்காத ஆ.ராசா, கடந்த கால சம்பவங்களைச் சுட்டிக்காட்டிவிட்டு, "கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை. அதன்பிறகு, உங்கள் விருப்பம் என்பதை தலைவர் (ஸ்டாலின்) சொல்லச் சொன்னார்' என்று கூறிவிட்டு சந்திப்பை முடித்துக்கொண்டார் ஆ.ராசா. 

தி.மு.க.வின் இந்த முடிவை ராகுல்காந்திக்கு பாஸ் செய்தது ஐவர் குழு. உங்கள் விருப்பம் என ஸ்டாலின் சொன்னதில் பதட்டமான ராகுல்காந்தி, உடனடியாக அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி தி.மு.க.வின் மனம் கோணாதவாறு காங்கிரஸ்காரர்களுக்கு கடிவாளம் போட்டுள்ளார். மேலும், பிரவீன் சக்ரவர்த்தி மற்றும் மாணிக்கம் தாக்கூருக்கும் பொது வெளியில் கூட்டணிக்கு எதிராக பேச வேண்டாம் என ராகுல்காந்தி வலியுறுத்தியிருக்கிறார். 

nkn210126
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe