அசைக்க முடியாத கூட்டணி என்கிற அசுரபலத்தில் இருந்துவரும் தி.மு.க. கூட்டணிக்குள் காங்கிரஸ் ஏற்படுத்திவரும் கலகத்தால் எரிச்சலடைந்துவருகிறது தி.மு.க. "காங்கிரசின் கலகத்துக்கு கடிவாளம் போடுங்கள்' என்று முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தபடி இருக்கிறார்கள் தி.மு.க.வின் மூத்த அமைச்சர்கள்.
தி.மு.க. தலைமையிலான கூட்டணி யில் காங்கிரஸ், ம.தி.மு.க., வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம்., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இருந்துவருகின்றன. தி.மு.க. தலைமையிலான இந்த கூட்டணிதான் மிக வலிமையான கூட்டணி என்கிற அடையாளத்தைப் பெற்றுள்ளது. அதற்கு வலிமை சேர்க்கும் வகையில் தொடர் வெற்றிகளைப் பெற்றுவருகிறது இந்த கூட்டணி.
இதற்கு காரணம், கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின்தான்.
கூட்டணிக் கட்சிகளை ஸ்டாலின் அரவணைக்கும் தன்மையும், பொதுஎதிரியான அ.தி.மு.க. -பா.ஜ.க.வை எதிர்ப்பதில் கையாளும் அரசியல் வியூகமும்தான் கூட்டணியை வலிமையாகவே வைத்தி ருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில்தான், "அதிக சீட்; ஆட்சியில் பங்கு' என்கிற கோஷத்தை முன் வைத்து தி.மு.க.வை சீண்டிப்பார்த்து வருகிறது காங்கிரஸ் தலைமை. நடிகர் விஜய்யை முன்னிறுத்தி இத்த கையச் சீண்டல்கள், சமீபநாட்களாக அதி கரித்து வருகின்றன. இதற்காக, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை அகில இந்திய தலை மையே தூண்டுவதாகவும் சந்தேகப்படுகிறது தி.மு.க. அதற்கேற்பத்தான் காங்கிரசின் கலகமும் இருந்துவருகிறது.
தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளின் தலைமையில் கூட்டணி உருவாகி தேர்தலை சந்திக்குமே தவிர, தமிழகத்தில் கூட்டண
அசைக்க முடியாத கூட்டணி என்கிற அசுரபலத்தில் இருந்துவரும் தி.மு.க. கூட்டணிக்குள் காங்கிரஸ் ஏற்படுத்திவரும் கலகத்தால் எரிச்சலடைந்துவருகிறது தி.மு.க. "காங்கிரசின் கலகத்துக்கு கடிவாளம் போடுங்கள்' என்று முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தபடி இருக்கிறார்கள் தி.மு.க.வின் மூத்த அமைச்சர்கள்.
தி.மு.க. தலைமையிலான கூட்டணி யில் காங்கிரஸ், ம.தி.மு.க., வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம்., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இருந்துவருகின்றன. தி.மு.க. தலைமையிலான இந்த கூட்டணிதான் மிக வலிமையான கூட்டணி என்கிற அடையாளத்தைப் பெற்றுள்ளது. அதற்கு வலிமை சேர்க்கும் வகையில் தொடர் வெற்றிகளைப் பெற்றுவருகிறது இந்த கூட்டணி.
இதற்கு காரணம், கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின்தான்.
கூட்டணிக் கட்சிகளை ஸ்டாலின் அரவணைக்கும் தன்மையும், பொதுஎதிரியான அ.தி.மு.க. -பா.ஜ.க.வை எதிர்ப்பதில் கையாளும் அரசியல் வியூகமும்தான் கூட்டணியை வலிமையாகவே வைத்தி ருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில்தான், "அதிக சீட்; ஆட்சியில் பங்கு' என்கிற கோஷத்தை முன் வைத்து தி.மு.க.வை சீண்டிப்பார்த்து வருகிறது காங்கிரஸ் தலைமை. நடிகர் விஜய்யை முன்னிறுத்தி இத்த கையச் சீண்டல்கள், சமீபநாட்களாக அதி கரித்து வருகின்றன. இதற்காக, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை அகில இந்திய தலை மையே தூண்டுவதாகவும் சந்தேகப்படுகிறது தி.மு.க. அதற்கேற்பத்தான் காங்கிரசின் கலகமும் இருந்துவருகிறது.
தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளின் தலைமையில் கூட்டணி உருவாகி தேர்தலை சந்திக்குமே தவிர, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வந்ததில்லை. 2006-11ல் ஆட்சி அமைப்ப தற்கான பெரும்பான்மை பலத்தை தி.மு.க. பெறாத நிலையிலும் கூட, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஏற்படவில்லை. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் தனித்த ஆட்சியைத்தான் தி.மு.க. நடத்தியது. அதனால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லாதபோது, கூட்டணி ஆட்சியை வலியுறுத்தும் வகையில் அதிக சீட்; ஆட்சியில் பங்கு என்கிற போர்க்குரலை தொடர்ச்சியாக உயர்த்துகிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.
இது தொடர்பாக காங்கிரசில் நடக்கும் ஆலோசனைக் கூட்டங்களில், "60 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் நாம் இல்லை. அதிகாரத்தில் இல்லாததால் தமிழகத்தில் காங்கிரசை வளர்க்க முடியவில்லை. அதனால், இந்த முறை ஆட்சியில் பங்கு கேட்டு கூட்டணி ஆட்சிக்கு தி.மு.க.வை ஒப்புக்கொள்ள வைக்கவேண்டும். அவர்கள் மறுத்தால் விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்கலாம். கூட்டணி ஆட்சிக்கு விஜய் ஒப்புக்கொள்கிறார். இந்த வாய்ப்பை விட்டுவிடக் கூடாது. கூட்டணியை மையப்படுத்தித்தான் தி.மு.க.விடம் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்களுக்கு அக்கட்சியின் நிர்வாகிகள் நெருக்கடி தந்து வருகின்றனர். இது, பொதுவெளியிலும் பகிரங்கமாக வெடிக்கிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/08/dmk-congress1-2026-01-08-15-04-15.jpg)
ராகுல்காந்திக்கு நெருக்கமானவரும் காங்கிரஸ் கட்சியின் டேட்டா அனலைஸிஸ்ட் பிரிவின் தலைவருமான ப்ரவீன் சக்ரவர்த்தி, நடிகர் விஜய்யை சந்தித்து அரசியல் ரீதியாக பேசியதிலிருந்து காங்கிரஸ் எம்.பி.க்களும் பொது வெளியில் பேசத் தொடங்கிவிட்டனர்.
குறிப்பாக, கட்சியின் மேலிடத்துக்கு நெருக்கமானவரான காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், "கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் யாரும் வெல்ல முடியாது. இப்போது அதிகாரம் மட்டுமல்ல; அதிகாரப் பகிர்வு குறித்தும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது' என்று சொல்கிறார். பொதுவெளியில் இவர் கொடுக்கும் பேட்டிகளும், ஆட்சியில் காங்கிரசுக்கு பங்கு தரவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவே இருக்கிறது.
மாணிக்கம் தாகூரின் இந்த கருத்து காங்கிரசில் மட்டுமல்ல தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் என பெரும்பான்மையினர் இதே கருத்தை ராகுல் காந்தியிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழக காங்கிரஸின் மேலிட பொறுப்பாளரும் தி.மு.க.விடம் பேச்சுவார்த்தை நடத்தும் ஐவர் குழுவின் தலைவருமான கிரிஸ் சோடங்கர், தி.மு.க. கூட்டணியில் நீடிக்கிறோம். அதில் மாற்றம் இல்லை. ஆனால், நாங்களும் கட்சிதான் நடத்துகிறோம்; என்.ஜி.ஓ. அல்ல! தேர்தலில் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமானால் ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் இருக்க வேண்டும். ஆட்சியில் பங்கு கேட்பது தவறானது இல்லை''’என்று சொல்கிறார்.
இதனால், தமிழக காங்கிரஸ் இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து நிற்கின்றது. அதாவது, தி.மு.க. கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்று ஒரு கோஷ்டி யும், நீடிக்கலாம். அதேசமயம் தி.மு.க.விடம் ஆட்சியில் பங்குக்கு உத்தரவாதம் பெறவேண்டும். ஆட்சியில் பங்கு இல்லையெனில் தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியேறலாம் என்று ஒரு கோஷ்டியும் என 2 கோஷ்டிகளாக பிரிந்து மல்லுக் கட்டுகின்றன.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/08/dmk-congress2-2026-01-08-15-04-29.jpg)
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள் சிலர், தேசிய அளவில் காங்கிரசின் எதிரியான பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டுமானால் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி வலிமையாக இருக்கவேண்டும்; தி.மு.க.வை சங்கடப்படுத்தும் வகையில் காங்கிரசின் நிலைப் பாடுகள் இருக்கக்கூடாது என்கிற கருத்தினை முன்னிறுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, "தமிழ்நாடு காங்கிரசில் நடக்கும் விசயங்கள் கவலையளிப்பதாக இருக்கிறது. கொள்கை நிலைப்பாடுகள் மற்றும் அரசியல் செயல்பாடுகளை நீர்த்துப் போகச் செய்ய நடக்கும் முயற்சிகள் வேதனையளிக்கிறது. எந்த காலத் திலும் இல்லாத ஒரு பேராபத்தை, பிரிவினைவாத -மதவாத -வன்முறை சக்திகளிடமிருந்து தமிழகம் எதிர் நோக்கியுள்ளது.
எதையாவது செய்து மக்கள் உணர்வுகளைத் தூண்டி, ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து இம்மண்ணில் சமூக நீதி, சுயமரியாதை, மக்கள் நல அரசியல், வளர்ச்சியை குழிதோண்டிப் புதைக்க ஒரு கூட்டம் காத்துக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், தேர்தலை மிகக் கவனமாக கையாள வேண்டிய பொறுப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது.
காங்கிரஸ் கட்சி அந்த மாபெரும் பொறுப்பை சரியாக உணர்ந்துள்ளதா? என்கிற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. தமிழ்நாடு காங்கிரஸில், எவ்வித கட்டுப்பாடுமற்று தொடரும் உட்கட்சிப் பிரச்சனைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. சித்தாந்த ரீதியிலான அரசியலை முன்னெடுக்காமல், வெறும் கூட்டல், கழித்தல் கணக்குகளை மட்டுமே செய்து கொண்டு ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது என்பதை தொண்டர்கள் உணரவேண்டிய நேரம். ராகுல்காந்தியின் தன்னலமற்ற, கொள்கைப்பிடிப்பு மிகுந்த,
அச்சமற்ற அரசியலுக்கு நேர் எதிரான பாதையில் தமிழ்நாடு காங்கிரஸ் சென்றுகொண்டிருக்கிறது' என்று காட்டமாகச் சொல்லியிருக்கிறார். அதாவது, கிரீஷ் சோடங்கர், ப்ரவீன் சக்ரவர்த்தி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் எழுப்பும் கூட்டணி ஆட்சி; கூடுதல் சீட் ஆகியவைகளை கேட்டு தி.மு.க.வை சீண்டும் அரசியலுக்குப் பதிலடி தந்திருக்கிறார் ஜோதிமணி.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/08/dmk-congress3-2026-01-08-15-04-42.jpg)
இப்படி இருவேறு கருத்துக்களால் காங்கிரசில் பிளவு ஏற்பட்டிருந்தாலும், ஆட்சியில் பங்கு எனும் கோஷத்தை முன்னிறுத்தி தி.மு.க.வை காங்கிரஸ் தலைவர்கள் சீண்டிப் பார்ப்பதை முதல்வர் ஸ்டாலின் உட்பட மூத்த தலைவர்கள் யாரும் ரசிக்கவில்லை. தேர்தல் நெருங்கி விட்ட சூழலில், காங்கிரசின் இந்த கலகம், தி.மு.க.வை பாதிக்கும் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.
இந்த நிலையில், தேர்தல் களம், தேர்தல் பணிகள் குறித்து அண்மையில் சீனியர்களிடம் விவாதித்தார் ஸ்டாலின். அதில் பல்வேறு காரண-காரணிகள் அலசப்பட்டன. தம்மிடம் கொடுக் கப்பட்ட பல்வேறு ரிப்போர்ட்டு களின் அடிப்படையில் இந்த ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார் ஸ்டாலின். அப்போது, காங்கிரஸ் ஏற்படுத்தும் சர்ச்சைகள் குறித்து ஸ்டாலினிடம் சீனியர்கள் சில கேள்விகளை கேட்க, "காங்கிரசை பற்றி கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன்'' என சொல்லியிருக் கிறார் ஸ்டாலின்.
அதற்கு சீனியர்களோ, "அந்த தம்பியை (விஜய்) நம்பி காங்கிரஸ் எப்படி கணக்குப் போடுகிறது?'' என்று கேட்டதுடன், "கூட்டணியில் இருந்து கொண்டு பொதுவெளியில் காங்கிரஸ் இப்படி கலகத்தை ஏற்படுத்துவது நம் கூட்டணிக்கு நல்லதல்ல. அதனால், காங்கிரஸ் கட்சியினருக்கு கடிவாளம் போட அக்கட்சியின் தலைமையிடம் நீங்கள் பேசுங்கள்'' என வலியுறுத்தியுள்ளனர்.
தி.மு.க.விடம் காங்கிரஸ் எழுப்பும் பஞ்சாயத்து இப்போதைக்கு ஓயாது என்கிற நிலையில், காங்கிரஸ் தலைமையிடம் கட்-அண்ட் ரைட்டாக பேசி முடிவெடுக்கத் திட்டமிட்டுள்ளது அறிவாலயம்!
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us