Advertisment

கூட்டணி ஆட்சி! காங்கிரஸ் பல்டி!

congress

டிகர் விஜய்யின் த.வெ.க.வை முன்னிறுத்தி தி.மு.க.வை மிரட்டிக்கொண்டி ருந்த காங்கிரஸ் கட்சி திடீரென்று பல்டி அடித்திருக்கிறது. தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி தொடரும் என உறுதிப்படுத்துகிறார் காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஸ் ஜோடங்கர். 

Advertisment

தமிழக காங்கிரசின் மாநில செயற்குழு, சென்னை சத்தியமூர்த்திபவனில் 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் நடந்தது. கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மேலிட பொறுப்பாளர்கள் கிரிஸ் ஜோடங்கர், சூரஜ் ஹெக்டே மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Advertisment

நடிகர் விஜய் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டில் பேசும்போது, "கூட்டணி ஆட்சி; அதிகாரத்தில் பங்கு தரப்படும்' என அறிவித்ததிலிருந்தே தி.மு.க.வுடன் அதன் கூட்டணிக் கட்சிகள் முரண்பட்டிருந்தனர். கூட்டணி ஆட்சி எனும் விஜய்யின் மாயவலை யில் மயங்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், தி.மு.க.வை மிரட்டிப் பார்க்கும் வகையில் பொதுவெளியில் பேசினர். இதனால், தி.மு.க. கூட்டணிக்குள் சலசலப்பு அதிகரித்தது. அதற்கேற்ப, காங்

டிகர் விஜய்யின் த.வெ.க.வை முன்னிறுத்தி தி.மு.க.வை மிரட்டிக்கொண்டி ருந்த காங்கிரஸ் கட்சி திடீரென்று பல்டி அடித்திருக்கிறது. தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி தொடரும் என உறுதிப்படுத்துகிறார் காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஸ் ஜோடங்கர். 

Advertisment

தமிழக காங்கிரசின் மாநில செயற்குழு, சென்னை சத்தியமூர்த்திபவனில் 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் நடந்தது. கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மேலிட பொறுப்பாளர்கள் கிரிஸ் ஜோடங்கர், சூரஜ் ஹெக்டே மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Advertisment

நடிகர் விஜய் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டில் பேசும்போது, "கூட்டணி ஆட்சி; அதிகாரத்தில் பங்கு தரப்படும்' என அறிவித்ததிலிருந்தே தி.மு.க.வுடன் அதன் கூட்டணிக் கட்சிகள் முரண்பட்டிருந்தனர். கூட்டணி ஆட்சி எனும் விஜய்யின் மாயவலை யில் மயங்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், தி.மு.க.வை மிரட்டிப் பார்க்கும் வகையில் பொதுவெளியில் பேசினர். இதனால், தி.மு.க. கூட்டணிக்குள் சலசலப்பு அதிகரித்தது. அதற்கேற்ப, காங்கிரசின் அகில இந்திய தலைவர்களிடம் விஜய்யும், விஜய் தரப்பினரும் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். 

தமிழக காங்கிரஸ் தலைவர்களும், தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸும் இருக்க வேண்டுமானால் விஜய்யுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்கிற தங்களின் அபிலாஷைகளை கட்சியின் டெல்லி மேலிடத் துக்குத் தெரிவித்தபடி இருந்தனர். மேலிட பொறுப்பாளர் கிரிஸ் ஜோடங்கரும், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஸ்குமா ரும் இதனை வெளிப்படையாகவே பகிர்ந்து கொண்டனர். இதனால் தி.மு.க. கூட்டணியை விட்டு காங்கிரஸ் வெளியேறும் என்கிற பர பரப்பு தமிழக அரசியலில் நீடித்தபடி இருக்கிறது. 

இப்படிப்பட்ட புறச்சூழல்கள் அதிகரித்து வந்த நிலையில்தான், காங்கிரசின் செயற்குழு கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை எதிர் கொள்வது, கூட்டணி குறித்த முடிவுகளை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் விவாதிக்கப்படும் எனச் சொல்லப்பட்டது. இதனால், ஏக எதிர்பார்ப்புகளுடன் கூடியது செயற்குழு. ஆனால், காங்கிரஸில் ஒரு தரப்பி னர் எதிர்பார்த்த எந்த விவாதமும் நடக்காமல், கூட்டணி தொடரும் என்கிற நிலைப்பாட்டை உறுதி செய்திருக்கிறார் கிரிஸ் ஜோடங்கர். 

இதுகுறித்து விசாரித்தபோது, "தி.மு.க. கூட்டணியில் அதிக சீட்டுகள் கிடைக்குமா? கூட்டணி ஆட்சிக்கு தி.மு.க. ஒப்புக் கொள்ளுமா? விஜய் கட்சியுடன் கூட்டணிக்கு வாய்ப்பிருக்கிறதா? விஜய் கட்சியை நாம் ஏன் கன்சிடர் பண்ணக்கூடாது? இந்த விவகாரத்தில் மேலிடத்தின் நிலை என்ன? என்கிற கேள்விகளுக்கெல்லாம் இந்த செயற்குழுவில் விடை கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், அது குறித்த விவாதம் நடக்கவில்லை. 

கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என தொடர்ச்சியாக பேசிவரும் ராஜேஸ்குமார் கூட இந்த கூட்டத்தில் வாயே திறக்கவில்லை. தமிழக காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் அனைவரின் கருத்துக்களையும் ராகுல்காந்தியிடமும், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட அகில இந்திய தலைவர்களிடமும் எடுத்துச்சொல்லும் அதிகாரமிக்கவரான கிரிஸ் ஜோடங்கர் கூட, கூட்டணி ஆட்சி மனநிலையிலும், விஜய் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் எனும் எண்ணத்திலும் இருந்தார். ஆனால், அவரும் தனது நிலைப்பாட்டை இந்த செயற்குழுவில் மாற்றிக்கொண்டிருக்கிறார். 

அதாவது, தேர்தல் தொடர்பாக சில நிர்வாகிகள் பேசியபோது, "தி.மு.க. கூட்டணி யில் காங்கிரஸ் இருக்கிறது. கூட்டணி மாறலாம் என்கிற எந்த ஒரு தகவலும் ராகுல்காந்தியிட மிருந்தோ, கார்கேவிடமிருந்தோ, வேணு கோபாலிடமிருந்தோ எனக்கு சொல்லப்பட வில்லை. அதனால், தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி தொடரும். இதுதான் இன்றைய நிலை. நீங்கள் காங்கிரஸ் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் 125 தொகுதிகளை தயார்படுத்துங்கள் என்பதை மட்டும் சொல்லிவிட்டார். முந்தைய நிலைப்பாட்டி லிருந்து பல்டி அடித்திருந்தார் கிரீஸ் ஜோடங்கர். இதனால், இதனையடுத்து பெரிய அளவில் விவாதங்களோ, ஆலோசனை களோ செயற்குழுவில் எழவில்லை.     

அதேசமயம், டெல்லி மேலிடம் கொடுத்தனுப்பிய ஒரு ரகசிய கடிதம் அவரிடம் இருந்தது. அதை மனதில் நிறுத்திக்கொண்டு பேசிய கிரிஸ் ஜோடங்கர், காங்கிரஸ் கட்சியின் அறக்கட்டளை பற்றி பேச்சை எடுத்தார். அகில இந்திய தலைமை பரிந்துரைக்கும் நபர்களை அறக்கட்டளை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்; அதற்கு செயற்குழு அப்ரூவல் கொடுக்க வேண்டும் என்கிற ரீதியில் ஜோடங்கரின் பேச்சு இருந்தது. தமிழக காங்கிரஸ் அறக்கட்டளையை டெல்லியின் கண்ட்ரோலுக்கு கொண்டு செல்லும் சதியை உணர்ந்து இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனாலும், அறக்கட்டளை விசயத்தில் மேலிடத்துக்கு அதிகாரம் வழங்கும் ஒப்புதல் கொடுக்கப்பட்டிருக்கிறது. 

தி.மு.க. கூட்டணியை எதிர்த்து பொதுவெளியில் பலரும் பேசியதை தி.மு.க. ரசிக்கவில்லை என்பது ராகுல்காந்திக்கு தெரியப்படுத்தப்பட்ட சூழலில்... நேரடி யாகவோ, மறைமுகமாகவோ கூட்டணிக்கு எதிராக யாரும் வாய்திறக்கக்கூடாது என டெல்லி மேலிடம் உத்தரவிட்டிருந்ததால் தான், எதிர்ப்புக்குரல் செயற்குழுவில் எழ வில்லை''’என்று விவரிக்கின்றனர் செயற்குழு வில் கலந்துகொண்ட கதர்ச்சட்டைகள். 

கூட்டணியை கிரிஸ் ஜோடங்கர் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி.க்கள் சிலரிடம் பேசியபோது, ‘"கூட்டணிக்கு எதிராக இப்போது யாரும் பேசவேண்டாம் என்பதுதான் ராகுலின் நிலைப்பாடு. தற்போது பீஹார் தேர்தலில் அவர் பிஸியாக இருப்பதால் தமிழகத்தைப் பற்றி தீவிரமாக ஆலோசிக்கவில்லை. பீஹார் தேர்தல் முடிந்ததும் ராகுல் எடுக்கும் முடிவுதான் இறுதி முடிவாக இருக்கும். அப்போது எது வேண்டுமானாலும் நடக்கும். அது தி.மு.க. கூட்டணிக்கு எதிராகவும் இருக்கலாம்''’என்கின்றனர் 

nkn291025
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe