Advertisment

நிலக்கரி சுரங்கம்! கொந்தளிக்கும் விவசாயிகள்! - தடுப்பாரா முதல்வர்?

dd

"காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்போகிறோம்” எனும் மத்திய அரசின் அறிவிப்பு ஒட்டுமொத்த விவசாயிகளையும் கொந்தளிக்கச் செய்திருக்கிறது. “அமைதியாக இருக்கும் டெல்டாவை மீண்டும் போராட்டக் களமாக மாற்றி தமிழக அரசுக்கு எதிராக மக்களைத் திருப்பும் முயற்சியை பா.ஜ.க. அரசு செய்துவருகிறது''’என்கிறார்கள் விவசாயிகள்.

Advertisment

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகிய தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நிலக்கரி, நிலக்கரிப் படுகை மீத்தேன் (ஈஇங), நிலத்தடி நிலக்கரியை வாயு வாக்கும் (யூ.சி.ஜி.) திட்டங் களைச் செயல்படுத்துவதற்கான அழைப்பாணைக் குறிப்பை ஒன்றிய பா.ஜ.க. அரசு வெளி யிட்டுள்ளது. டெல்டா பகுதி யான தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் 68 சதுர கிலோமீட்டர் கொண்ட வடசேரி பழுப்பு நிலக்கரி பகுதியில் நிலக்கரியாகவோ நிலக்கரி படுகை மீத்தேனாக வோ, நிலத்தடி நிலக்கரியை வாயுவாகவோ எடுக்கும் திட்டங்களை செயல்படுத்துவதற்கு கடந்த 29.3.2023 அன்று ஒன்றிய நிலக்கரி அமைச்சகம் அழைப் பாணை வெளியிட்டுள்ளது.

deltafarmers

நாடு முழுவதும் 120 இடங்களில் நிலக்கரி மற்றும் அதைச் சார்ந்த பொருட்களை எடுக்க விடுக்கப்பட்ட அழைப்பாணையில், தமிழ்நாட்டின் மூன்று இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை அரியலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி, கடலூர் மாவட்டம் கிழக்கு சேத்தியாதோப்பு, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய வடசேரி. வடசேரி நிலக்கரிப் பகுதிகளில் 66 ஆழ்துளைக் கிணறுகள் மூலம் ஆய்வுசெய்யப்பட்ட தில் சுமார் 463 அடியிலிருந்து 740 அடி ஆழத்தில் பழுப்பு நிலக்கரிப் படிவங்கள் சுமார் 755 மில்லியன் டன் அளவில் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்பட் டுள்ளது. தற்போது அறிவிக் கப்பட்டுள்ள ஏலத்தில் தேர்வுபெறும் நிறுவனங

"காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்போகிறோம்” எனும் மத்திய அரசின் அறிவிப்பு ஒட்டுமொத்த விவசாயிகளையும் கொந்தளிக்கச் செய்திருக்கிறது. “அமைதியாக இருக்கும் டெல்டாவை மீண்டும் போராட்டக் களமாக மாற்றி தமிழக அரசுக்கு எதிராக மக்களைத் திருப்பும் முயற்சியை பா.ஜ.க. அரசு செய்துவருகிறது''’என்கிறார்கள் விவசாயிகள்.

Advertisment

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகிய தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நிலக்கரி, நிலக்கரிப் படுகை மீத்தேன் (ஈஇங), நிலத்தடி நிலக்கரியை வாயு வாக்கும் (யூ.சி.ஜி.) திட்டங் களைச் செயல்படுத்துவதற்கான அழைப்பாணைக் குறிப்பை ஒன்றிய பா.ஜ.க. அரசு வெளி யிட்டுள்ளது. டெல்டா பகுதி யான தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் 68 சதுர கிலோமீட்டர் கொண்ட வடசேரி பழுப்பு நிலக்கரி பகுதியில் நிலக்கரியாகவோ நிலக்கரி படுகை மீத்தேனாக வோ, நிலத்தடி நிலக்கரியை வாயுவாகவோ எடுக்கும் திட்டங்களை செயல்படுத்துவதற்கு கடந்த 29.3.2023 அன்று ஒன்றிய நிலக்கரி அமைச்சகம் அழைப் பாணை வெளியிட்டுள்ளது.

deltafarmers

நாடு முழுவதும் 120 இடங்களில் நிலக்கரி மற்றும் அதைச் சார்ந்த பொருட்களை எடுக்க விடுக்கப்பட்ட அழைப்பாணையில், தமிழ்நாட்டின் மூன்று இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை அரியலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி, கடலூர் மாவட்டம் கிழக்கு சேத்தியாதோப்பு, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய வடசேரி. வடசேரி நிலக்கரிப் பகுதிகளில் 66 ஆழ்துளைக் கிணறுகள் மூலம் ஆய்வுசெய்யப்பட்ட தில் சுமார் 463 அடியிலிருந்து 740 அடி ஆழத்தில் பழுப்பு நிலக்கரிப் படிவங்கள் சுமார் 755 மில்லியன் டன் அளவில் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்பட் டுள்ளது. தற்போது அறிவிக் கப்பட்டுள்ள ஏலத்தில் தேர்வுபெறும் நிறுவனங்கள், மேற்கண்ட பகுதியில் நிலக்கரியாகவோ, நிலக்கரிப் படுகை மீத்தேனாகவோ, நிலத்தடி நிலக்கரியை வாயுவாகவோ என்று எந்தவடிவத்தில் வேண்டு மானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்கிற அறிவிப்புதான் டெல்டா மாவட்டங்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

Advertisment

பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டன. அறிவித்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இங்கு எந்த ஒரு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்படாது என்ற தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியுள்ளது. மேலும் நிலக்கரி படுகை மீத்தேன் திட்டத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட ஆட்சியர்கள் கடந்த 2015-ஆம் ஆண்டில் பிறப்பித்த நிரந்தர தடையும் அமலில் உள்ளது.

இந்தச் சூழலில் ஒன்றிய அரசின் அறிவிப்பு ஒட்டு மொத்த தமிழகத்தையும் திரும்பிப்பார்க்க செய்துள்ளது. அரசியல் தலைவர்கள் கண் டனம் தெரிவித்துவருகின்ற னர். விவசாயிகள் போராட் டத்தில் இறங்கியுள்ளனர். அனைத்து விவசாய சங்கத்தின் சார்பாக பி.ஆர்.பாண்டியன் முதல் ஆளாக மன்னார்குடி பகுதியில் அரசின் அறிவிப்பு நகல் எரிப்பு போராட்டத்தைச் செய்துள்ளார்.

deltafarmers

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த மன்னார்குடி சேதுராமன், “"முப்போகம் விளையும் பசுமையான பகுதிகளை அழிக்க நினைப்பது வேத னையானது. டெல்டா பகுதிகளில் செயல்படுத்தப் பட உள்ள இந்த திட்டம் விவசாயிகளுக்கும், நிலவளத்திற்கும், நிலத்தடி நீருக்கும் எதிரானது. இந்தியாவில் நிலக்கரி பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கையாக 2030-ஆம் ஆண்டுக்குள் மொத்த எரிசக்தியில் 50% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யவும், 2070-ஆம் ஆண்டு நிகர கார்பன் வெளியேற்றத்தை சைபர் சதவீதமாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறும் சூழலில் அதிக நிலக்கரி சுரங்கங்களை ஏலத்திற்கு விடுவது முரணாக உள்ளது''’என்கிறார்

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமிநடராஜன், “"ஒன்றிய அரசின் இதுபோன்ற திட்டங்களை எந்த வகையிலும் அமல்படுத்த மாட்டோம் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கவேண்டும். மத்திய அரசு இந்த அறிவிப்பை உடனே திரும்பப்பெற வேண்டும். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இதுபோன்ற திட்டங்களை அமல்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு நினைத்தால் அதற்கு எதிராக விவசாயிகளையும் பொதுமக்களையும் திரட்டி தொடர் போராட்டங்களை நடத்த தயங்க மாட்டோம்''” என்கிறார்.

மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப் பாளர் பேராசிரியர் ஜெயராமனோ, “"காவிரி டெல்டா மாவட்டங்களில் தமிழக அரசின் எவ்வித அனுமதியும் இல்லாமல் எம்.இ.சி.எல். நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு நிலக்கரி இருப்பை மதிப்பீடு செய்துள்ளது. சட்டப்படி இது குற்றம். இந்த நிறு வனத்தின் மீது தமிழக அரசு சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழகத்தின் கனிம வளத்தை கையகப்படுத்தி தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இத்திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டால் காவிரிப் படுகையில் ஒட்டுமொத்த மக்களும் அகதிகளாக வெளியேறவேண்டிய நிலை உருவாகும். எனவே தமிழக அரசு இத்தகைய திட் டங்களை முற்றிலுமாக தடுத்து நிறுத்தவேண்டும். இத்திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்''’என்கிறார்.

மத்திய அரசின் டெண்டர் அறிவிப்பு நகலை எரித்து போராட்டம் நடத்திய பி.ஆர். பாண்டிய னோ, "கார்ப்பரேட் முதலாளிகள் அரசியல் துணையோடு விவசாயத்துக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்து கிறார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது. இது குறித்த தகவல் வெளியான உடனே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி யிருப்பது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதற் கெதிராக தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறை வேற்றி மத்திய அரசுக்கு அனுப்பவேண்டும்''’என்கிறார்.

"இங்கு சுரங்கம் அமைக்க போகிறோம் என்று கூறு வதும், எங்களின் வயிற்றைக் குத்தி குடலை உருவி வெளி யேபோடுவதும் ஒன்றுதான். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழகத்தை கலவரக் காடாக மாற்றி அரசியல் ஆதாயம் தேடுவதற்கான மிகப்பெரிய வேலையை பா.ஜ.க. செய்து வருகிறது. அதற்கு தமிழக அரசு ஒருபோதும் வளைந்து கொடுத்து விடக்கூடாது''’என்கிறார் முக்குலத்து புலிகள் அமைப்பின் தலைவர் ஆர்.சரவணன்.

deltafarmers

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனோ, "ஒன்றிய அரசின் இந்த நாசகார அறிவிப்பு விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் வாழ்வில் விழுந்த பேரிடி. இதுதொடர்பாக தமிழக அரசு விரைந்து செயல்பட்டு காவிரிப் படுகை பகுதியில் சுரங்கம் அமைக்கும் பணிகளுக்கான ஆய்வுப் பணி நடக்காமல் தடுக்கவேண்டும்''’என்கிறார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலை வர் திருமாவளவனோ, "ஒன்றிய பா.ஜ.க. அரசு இந்த அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், மக்களின் எதிர்ப்பை அலட்சியப் படுத்திவிட்டு டெல்டா பகுதிகளில் திட்டங்களை செயல்படுத்த முற்பட்டால் பாரதிய ஜனதா அரசு கடுமையான மக்கள் போராட்டங்களை எதிர்கொள்ள நேரிடும்''’என்கிறார்.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், "கடலூர் மாவட்டத்தை சீரழித்துக் கொண்டிருக் கும் நிலக்கரி சுரங்கங்கள் எனப்படும் பேரழிவுசக்தி யின் கொடுங்கரங்கள் காவிரிப் பாசனம் மாவட்டங்களையும் நெருக்கி பிடிக்கத்தொடங்கி இருக்கிறது. இது தடுக்கப்படாவிட்டால் வளம் மிகுந்த காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதிகள் பாலைவனமாக மாறுவதை எவராலும் தடுக்க முடியாது''’என்கிறார்.

இதற்கிடையில் மத்திய அரசின் அறிவிப்பு வெளியான சமயத்தில் டெல்டா மாவட்டங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலினோ, "நிலக்கரி சுரங்கத் திட்டத்தை ஒருபோதும் முதலமைச்சர் அனுமதிக்கமாட்டார். எனவே விவசாயிகள் ஒருபோதும் கவலைப்பட வேண்டாம்''’என்று ஆறுதல் கூறி சென்றிருக்கிறார்.

தமிழக முதல்வர் மிகுந்த பொறுப்புணர் வோடு பிரதமருக்கு கடிதம் வாயிலாக கண்டனத் தைத் தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில், "தமி ழகத்தின் முக்கிய உணவு உற்பத்தி மண்டலமான காவிரி டெல்டா பகுதியில் மத்திய அரசு நிலக்கரி சுரங்க அறிவிப்பு தமிழகத்துக்கு ஒரு தீவிரமான பிரச்சனையைக் கொண்டுவந்துள்ளது. இந்த விவகாரத்தில் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பு தமிழக அரசிடம் கலந்து ஆலோசிக்காததோடு, ஒப்புதல் பெறவில்லை. இது போன்ற முக்கியமான விஷயங்களில் மாநிலங்களுடன் எந்த ஆலோசனை யும் நடத்தாமல் மத்திய அரசின் நிலக்கரி அமைச்ச கம் தன்னிச்சையாக செயல்படுவது துரதிஷ்டவச மானது. எனவே மத்திய அரசு வெளியிட்டுள்ள ஏல அறிவிப்பில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று சுரங்கப் பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டத்தால் தடைசெய்யப்பட்ட பணிகளை மேற்கொள்ள முடியாது. எனவே இந்த அறிவிப்பு செயல்படுத்தப்பட்டு ஏலத்தாரைக் கண்டறிந்தாலும் அவரால் சுரங்கப் பணிகளை மேற் கொள்ள முடியாது. எனவே இந்த ஏல நடைமுறை ஒரு வீணான செயல்''’என துனிச்சலோடு கூறியிருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

அத்துடன் நில்லாமல், ஏப்ரல் 5-ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுப்பதற்கு எதிராக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் பேசினர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், "நானும் டெல்டா காரன்தான். இத்திட்டத்துக்கு அனுமதியகிக்கப் படாது'' என உறுதிபடக் கூறினார்.

nkn080423
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe