விவசாயிகளுக்கும், நலிவடைந்த மக்க ளுக்கும் குறைந்த வட்டியிலும், வட்டி இல்லாம லும் கடனுதவி செய்து, அவர் களின் வாழ்க்கைத்தரம் உயர பேருதவியாக இருப்பதற்காகத் தான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் தொடங் கப்பட்டன. இப்படி பொது மக்கள், விவசாயிகளென எளிய மக்களுடன் பின்னிப்பிணைந்த கூட்டுறவு சங்கங்களில், தற்போது ஊழியர்கள், அதிகாரிகளென அனைவரும் முறைகேட்டில் ஈடுபடு வது தொடர் சம்பவங்களாக நடைபெற்றுவருகின்றது. இதனால் சுமார் 500 வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் கணக்குகளை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கம் செய்துள்ளனர்.

cc

இதற்கு முக்கிய காரணம், கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும் கடன்களை முறையாக வசூல் செய்யாததே! இதனால் வருவான வரித்துறையினர் ஆய்வு செய்ததில், உரிய காலத்தில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாததால் தமிழகத்திலுள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக பாரதிய கிசான் சங்கத்தின் மாநில செயலாளர் லால்குடி வீராசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, "கூட்டுறவு சங்கங்கள் உரிய காலத்தில் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யாததால் 500க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இதனால் சம்பா சாகுபடிக்காக கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பயிர்க்கடன் பெற முடியாமல் தவிக்கின்றனர்.எனவே கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்கள், வருமானவரித்துறை உயரதிகாரிகளைக் கலந்துபேசி, முடக்கப்பட்டுள்ள கூட்டுறவு சங்கங்களின் செயல் பாடுகளை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். அப்போதுதான் கூட்டுறவு சங்கங்கள் தடையின்றி விவசாயிகளுக்கு தேவையான கடன், உரம் ஆகியவற்றை வழங்க முடியும்' என்று தமிழக அரசுக்கும், கூட்டுறவு பதிவாளருக்கும் மனு அனுப்பியுள்ளார்.

கூட்டுறவு சங்கத்தில் நடைபெறும் முறைகேடுகளால் சங்கங்களின் செயல்பாடுகள் முடங்கிக் கிடக்கின்றன. கூட்டுறவு சங்கங்களின் வங்கிகளில் பணப்புழக்கம் அதிக அளவிலிருப்பதால் சபலப்படும் கூட்டுறவு சங்க ஊழியர்கள், போலி ஆவணங்கள் தயாரித்து பணத்தை கையாடல் செய்வது, அடமானம் வைக்கப்பட்ட நகைகளைத் திருடுவது, ஒரிஜினல் நகைகளை எடுத்துக்கொண்டு கவரிங் நகைகளை வைத்து மோசடி செய்வது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

Advertisment

cc

கடந்த 2021ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் கடம்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில், 2011ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை அடமானம் வைத்த நகை களை மீட்பதற்காக, அதற்குரிய அசலையும், வட்டியையும் செலுத்திவிட்டு நகைகளைத் திரும்பப்பெறுவதற்காக நடையாய் நடந்தும் விவசாயிகளின் நகைகளை ஒப்படைக்கவில்லை. இதனால் விவசாயிகள், மறியல், ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டார்கள். அப்போது, முறைகேடு செய்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்றும், நகைகள் திருப்பித் தரப்படும் என்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் உறுதி யளித்தனர். ஆனால் தற்போதுவரை அடமானம் வைத்த நகை அவர்களுக்கு கிடைக்கவில்லை. அதேபோல் திருநாவலூர் கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்த சுமார் ஒரு கோடியே 60 லட்சம் மதிப்புள்ள நகைகள், கூட்டுறவு வங்கியில் வேலை செய்த ஊழியர்கள் உதவியோடு கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

அதேபோல், கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேயுள்ள தொளார் கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் அடமானம் வைத்திருந்த நகை, வங்கிக்கணக்கிலிருந்த பணம் ஆகிய வற்றை பரமசிவம், வேலாயுதம் ஆகிய ஊழியர் கள் கையாடல் செய்தனர். இது குறித்த புகார்கள் மீது வழக்குகள் நடைபெற்றும், இன்றுவரை விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணமும், நகையும் தரப்பட வில்லை. இந்நிலையில், விழுப் புரம் மாவட்டம் செஞ்சி அருகே யுள்ள சத்தியமங்கலம் கூட்டுறவு வங்கியில், சோ.குப்பம் கிராமத் தின் ஊராட்சி மன்றத் தலைவரும் விவசாயியுமான ராஜேந்திரன், நகையை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளார். இதற்கான அசல், வட்டித்தொகை கணக் கிடப்பட்டு ஒரு லட்சத்து 68 ஆயிரம் ரூபாயை செலுத்துவதற்காக வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு சென்ற அவரை அலைக்கழிய விட்ட னர். இதனால் கோபமடைந்த ராஜேந்திரன், கூட்டுறவு சங்கத்தின் முன்பாகத் தனி மனிதனாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். தகவ லறிந்த கூட்டுறவுத்துறை அதிகாரிகள், ராஜேந் திரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

Advertisment

இதுகுறித்து ராஜேந்திரன் நம்மிடம், "நான் கூட்டுறவு சங்கத்தில் அடமானம் வைத்திருந்த அசல், வட்டித்தொகை ஆகியவற்றை செலுத்து வதற்கு சில மாதங்களுக்கு முன்பு வங்கிக்குச் சென்றேன். அப்போது அங்கிருந்த அதிகாரிகள், சத்தியமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் வேலை செய்த ஊழியர்கள் முறைகேடு செய்துள்ளனர். அதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம். எனவே விசாரணைக்காலம் முடிந்தபிறகு தங்களுக்கு தகவல் அனுப்புகிறோம். அப்போது வந்து பணத்தை செலுத்திவிட்டு நகையைப் பெற்றுக்கொள்ளுங்கள் எனக்கூறி அனுப்பி னார்கள்.

cc

நானும் சில மாதங்கள் காத்திருந்துவிட்டு, சில தினங்களுக்கு முன்பு நகையை மீட்பதற்கு சென்றபோது, அதிகாரிகளோ, சங்கத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த பல மாதங்களாகிவிட்டன. அந்த மாதங் களுக்கான வட்டியையும் சேர்த்து செலுத்தினால் தான் உங்கள் நகையைத் திருப்பித் தருவோம் என்று தெரிவித்தனர். இதனால் கோபமுற்ற நான், ஏற்கெனவே நகையை மீட்க வந்தபோது, விசாரணையைக் காரணம் காட்டி நகையைத் தராமல் திருப்பியனுப்பியது நீங்கள் தான். கால தாமதத்துக்கு கூட்டுறவுத்துறை அதிகாரிகளே காரணம். அவர்கள் செய்த தவறுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியுமென்று, வங்கி வாசலில் அமர்ந்து போராடினேன். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகளும், காவல்துறையினரும், இதுகுறித்து கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகளைச் சந்தித்து தீர்வு காணும்படி எனக்கு அறிவுரை கூறினார்கள். இது எந்த விதத்தில் நியாயம்?

ஒரு விவசாயி வேளாண்மை செலவுக்காக நகையை அடமானம் வைத்து அந்தப் பணத்தில் விவசாயம் செய்து அறுவடை முடிந்ததும் விளைபொருளை விற்று பணத்தைக் கொண்டுபோய்க் கொடுத்து, அடமானம் வைத்த நகையை மீட்பது எல்லா வங்கியிலுமுள்ள நடைமுறை. அதன்படி கூட்டுறவு சங்கத்தை தேடிச்சென்று அசல், வட்டித்தொகையை செலுத்தினால், உடனே எங்கள் நகையைத் திருப்பித்தர வேண்டும். இதுதான் அனைத்து வங்கிகளுக்கான நடைமுறை. ஆனால் சத்தியமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் ஊழியர் கள் செய்த மோசடிச் செயல்களுக்கான காலதாமதத்திற்கு எங்களிடம் வட்டி போட்டு பணம் வசூலிக்க முயற்சிக்கிறார்கள். இதுகுறித்து தமிழக முதல்வர், கூட்டுறவுத்துறை அதிகாரிகள் எனப் பல்வேறு தரப்பினருக்கும் புகாரனுப்பி யுள்ளேன். இதுவரை நியாயம் கிடைக்கவில்லை'' என்கிறார்.

சத்தியமங்கலம் கூட்டுறவு வங்கியில் 2016 - 2021 காலம்வரை சுமார் நாலரை கோடி ரூபாய் கையாடல் செய்துள்ளனர். இதன் காரணமாக சங்கத் தலைவர் சாந்தி, துணைத்தலைவர் அருள்மேரி, ஊழியர்கள் பசுமலை, முருகன், விஜயராஜ் ஆகிய ஆறு பேர் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவு மற்றும் வணிகக் குற்றப்புலனாய்வு போலீசார் விசாரணை செய்து, ஆறு பேர் மீதும் மோசடி உட்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய் தனர். இதில் வங்கியின் செயலாளர் இறந்து போனதால் மீதமுள்ள ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இது நடந்தது கடந்த பிப்ரவரி மாதத்தில். தற்போது சிலர் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். அதில் சிலருக்கு கூட்டுறவுத் துறையிலேயே மீண்டும் வேலையும் வழங்கியுள்ளனர். இது என்ன கொடுமை! மோசடி செய்தவர்களிடமிருந்து சொத்துக்களைப் பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் வழங்க வேண்டிய கூட்டுறவுத்துறை அதிகாரிகள், தவறு செய்தவர்களைப் பாதுகாத்து, அவர்களுக்கு வேலையும் தருகிறார்கள். இதேபோல் விழுப்புரத்திலுள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 42 லட்சம் கையாடல் செய்துள்ளதாக தற்போது புகார் எழுந்து, விசாரணை நடக்கிறது.

இப்படி கூட்டுறவுத் துறையில் நாளுக்கு நாள் ஊழியர்களின் மோசடிகளால் கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள் மூடப்பட்டு வருகின்றன. தமிழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், தேர்தல் வாக்குறுதியின்படி, கூட்டுறவு சங்கங்களில் அடமானம் வைத்த ஐந்து சவரன் நகைகளுக்கான சுமார் 6,000 கோடி ரூபாயை தள்ளுபடி செய்தது. இது பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் பேருதவியாக இருந்தது. இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களின் முறைகேடுகளால் நகையையும், பணத்தையும் இழந்துதவிக்கும் விவசாயிகளின் துயர் தீர்க்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்கிறார்கள் விவசாயிகளும் பொதுமக்களும்.

-எஸ்.பி.எஸ்.