கிளப்ஹவுஸ் சமாச்சாரங்கள்

aa

னைத்து வீடுகளுக்குள்ளும் தொலைக்காட்சி நுழைந்திடாத காலம், குறுகலான சாலைகளின் இருபுறமும் வரிசைகட்டி நிற்கும் வீடுகளில் ஏதாவது ஒரு வீட்டில் இரைச்சலோடு ஓடும் பொதிகை சேனலும், தொலைபேசியும் புது வரவாக வந்திருக்கக்கூடிய காலகட்டம். இக் காலகட்டத்திலும், அதற்கு முன்பும் வளர்ந்தவர்களுக்கு அன்றாட வாழ்வியலோடு ஒன்றிப்போன ஒரு பொழுதுபோக்கு, திண்ணைக் கதை பேசுவது. ஒவ்வொரு வீட்டின் திண்ணையிலும் ஆண், பெண் பாகு பாடின்றி வயதானவர்கள் அமர்ந்துகொண்டு, தங்களின் அனுபவங்களையும் கனவுகளையும் பேரார்வத்துடன் பேசிக்கொண்டிருப்பர். அதில் விருப்பம் இருந்தால், இளைஞர்களும் கலந்துகொண்டு அந்த அனுபவசாலிகளின் கதைகளைக் கேட்கலாம். இளம் தலைமுறை தங்களுக்கான வாழ்வியலைக் கற்றுக்கொண் டிருந்த இந்த அழகிய பொழுதுபோக்கு சாலைகள் அகலமாகி, தொலைக்காட்சி சேனல்கள் எண்ணிக்கை அதிகரித்த பின்னர் மெல்ல காணாமல் போகத்துவங்கியது. அதிலும், தொலைபேசிகள் சுருங்கி கையடக்க அளவில் வந்த பின்னர், வளரும் தலைமுறை பெரும்பாலும் கீபேட்கள் மூலமாக மட்டுமே கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் அளவுக்கு முற்ற

னைத்து வீடுகளுக்குள்ளும் தொலைக்காட்சி நுழைந்திடாத காலம், குறுகலான சாலைகளின் இருபுறமும் வரிசைகட்டி நிற்கும் வீடுகளில் ஏதாவது ஒரு வீட்டில் இரைச்சலோடு ஓடும் பொதிகை சேனலும், தொலைபேசியும் புது வரவாக வந்திருக்கக்கூடிய காலகட்டம். இக் காலகட்டத்திலும், அதற்கு முன்பும் வளர்ந்தவர்களுக்கு அன்றாட வாழ்வியலோடு ஒன்றிப்போன ஒரு பொழுதுபோக்கு, திண்ணைக் கதை பேசுவது. ஒவ்வொரு வீட்டின் திண்ணையிலும் ஆண், பெண் பாகு பாடின்றி வயதானவர்கள் அமர்ந்துகொண்டு, தங்களின் அனுபவங்களையும் கனவுகளையும் பேரார்வத்துடன் பேசிக்கொண்டிருப்பர். அதில் விருப்பம் இருந்தால், இளைஞர்களும் கலந்துகொண்டு அந்த அனுபவசாலிகளின் கதைகளைக் கேட்கலாம். இளம் தலைமுறை தங்களுக்கான வாழ்வியலைக் கற்றுக்கொண் டிருந்த இந்த அழகிய பொழுதுபோக்கு சாலைகள் அகலமாகி, தொலைக்காட்சி சேனல்கள் எண்ணிக்கை அதிகரித்த பின்னர் மெல்ல காணாமல் போகத்துவங்கியது. அதிலும், தொலைபேசிகள் சுருங்கி கையடக்க அளவில் வந்த பின்னர், வளரும் தலைமுறை பெரும்பாலும் கீபேட்கள் மூலமாக மட்டுமே கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் அளவுக்கு முற்றிலுமாக டிஜிட்டல்மயமாகிப் போய்விட்டது. டிக்டாக், ரீல்ஸ் என ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கும் இளம் தலை முறைகளுக்கு திண்ணைப் பேச்சை மீண்டும் அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்தியுள்ளது கிளப்ஹவுஸ் செயலி.

cinema

கிளப்ஹவுஸ். பெயரைக் கேட்டதும் சிலருக்கு வேறுபல கிறுகிறு நினைவுகள் கூட வரலாம். ஆனால், அப்படியெல்லாம் எதுவுமில்லை. இந்த செயலி முழுக்க முழுக்க நாம் பயன்படுத்தும் ஃபேஸ்புக், ட்விட்டர் போல ஒரு சமூக வலைத்தளம்தான். இருப் பினும், மேற்கூறிய சமூக வலைதளங்களைப் போல அல்லாமல், குரல் வடிவிலேயே நேரடி யாக நமது கருத்துக்களை மற்றவர்களுடன் நேரலையில் பரிமாறிக்கொள்ள லாம் என்பதே இதன் சிறப்பு (ட்விட்டர் நிறுவனமும் "ட்விட்டர் ஸ்பேஸ்' என்ற பெயரில் இதுபோன்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள் ளது). படிக்கும் பழக்கத்துக்கு மாற்றாக தற்போது புதிதாக வந்திருக்கக்கூடிய பாட்காஸ்ட், ஆடியோ புத்தகங்கள் எனும் வசதிகளின் அடுத்தகட்டம்தான் இந்த கிளப் ஹவுஸ். மற்ற சமூக வலை தளங்களைப்போல அல்லாமல், ஏற்கனவே இந்த செயலியைப் பயன் படுத்தும் நமது நண்பர்கள் யாராவது நம்மை உள்நுழைய அனுமதித்தாலோ அல்லது இன்வைட் செய்தாலோ மட்டுமே இதில் நாம் புதிய கணக்கைத் தொடங்க முடியும்.

அப்படி கணக்கைத் தொடங்கி உள்ளே நுழையும் நமக்கு, தொடக்கத்தில் திக்குத் தெரியாத காட்டில் கண்ணைக் கட்டிவிட்டது போலத்தான் இருக்கும். ஏனென்றால், இதற்கு முன் நாம் பயன்படுத்திய சமூக வலைத்தளங் களி-ருந்து சற்றே வித்தியாசமானது இது. அவற்றில் இருப்பது போல கலர் கலரான ஃபோட் டோக்களோ, வீடியோக்களோ, நீளமான கட்டுரைகளோ இதில் இருக்காது. நமது ஆர்வத்திற்கு ஏற்ப பல்வேறு தலைப்புகளில் பல குழுக் களின் பெயர்கள் மட்டும் தான் இதில் இருக்கும். அதில் நமக்கு பிடித்த தலைப்புடைய ஏதேனும் ஒரு குழுவில் உள்நுழைந்தால், அது குறித்த கலந்துரையாடலில் நம்மால் பங்கேற்க முடியும். அரசியல், சினிமா, பொழுது போக்கு, புதிய தொழில்கள், அறிவியல், கலை என நமது விருப்பம் எதுவாயினும் அது தொடர்பான குழுக்கள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன இச்செயலியில். அப்படி நமது விருப்பத்திற்கேற்ற குழுக்கள் கிடைக்கவில்லை எனில், நாமே ஒரு குழுவை உருவாக்கி மற்றவர்களுடன் கலந்துரையாடலாம்.

ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை மற்றவர்களுக்குக் கொண்டுசெல்லவும், மாற்றுக் கருத்து கொண்டவர்களிடம் நேரலையில் ஆரோக்கியமான ஒரு விவாதத்தை முன்னெடுக்கவும் ஒரு புதியதளமாக உருவாகிவருகிறது இந்த கிளப் ஹவுஸ். அரசியல் வட்டாரத்தில் உள்ளவர்கள் முதல், திரைத்துறையினர், எழுத்தாளர் கள் என பல தரப்பினரையும் கடந்த சில நாட்களாக ஆட்கொண்டிருக்கிற இந்த கிளப் ஹவுஸ், பல்வேறு துறை சார்ந்த ஜாம்பவான்களுடனும், வல்லுநர்களுடனும் நேரடியாக நம்மை உரையாட வைக்கிறது.

ஒரு அரசியல் தலைவரிடம் அவரது செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களை நேரலையில் நேரடியாக முன்வைக்க முடியும். ஒரு திரைப்பட இயக்குநரிடம் அவரது அனுபவங் களை நேரடியாகக் கேட்கவோ, அவரது படத்தின் நிறை குறைகளைக் கூறவோ முடியும். ஒரு எழுத்துப் படைப்பு தொடர்பாக, எழுத்தாளர்களுடன் நேரடியாக விவாதிக்க முடியும். இதில் எதுவுமே ஒத்துவரவில்லை என்றால்... இளையராஜா பாடல் முதல் இமான் பாடல்வரை நாம் பாடுவதற்கும், பிறர் பாடுவதைக் கேட்பதற்கும் பல பொழுதுபோக்கு குழுக்களும் உள்ளன. அதில் சேர்ந்து ஃபன் பண்ணலாம்.

எழுத்துக்களைவிட நமது உணர்வுகளை மிக நேர்த்தியாகக் கடத்தக்கூடிய ஆற்றல் நமது பேச்சுக்கு உண்டு. அதனைக் கருத்து பரிமாற்றத்திற்கான வழி யாகப் பயன்படுத்துவதே இச் செயலியின் வைரல் ஹிட்டிற்கு முக்கிய காரணம். தங்களது அனு பவங்களையோ, ஐயங்களையோ, எண்ணங்களையோ எழுத்தில் கொண்டுவர முடியாதவர்களுக்கும், எழுத நேரமில்லாதவர்களுக்கும் ஒரு வரப் பிரசாதம் இந்த கிளப் ஹவுஸ். அனைத்திலும் நன்மை, தீமை என இரண்டும் உண்டென்ற உணர்தலோடு, இதனைச் சரியாகக் கையாள்வோமேயானால், இச்செயலி ஃபேஸ்புக், ட்விட்டர் தளங்களைவிட அதிக நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தவும் வாய்ப் புண்டு. இந்த செயலியில் ஒருவரின் பேச்சைக் கேட்ட நடிகை அனுபமா பரமேஸ்வரன், தனது அடுத்த படத்திற்கான கதை சொல் லும் வாய்ப்பை, அந்த நபருக்கு வழங்கியுள்ளார் என்று வெளியாகியுள்ள செய்தியே, இதன் சரியான கையாளுதல் ஏற்படுத்தும் நேர்மறை தாக்கத்தை நமக்கு உணர்த்திவிடு கிறது. நமது உரையாடல்கள் அனைத்தும் பொதுவெளியில் நடத்தப்படுகின்றன என்ற கவனமும், அதற்கேற்ற ஒழுக்கமும் பயனர்களிடம் இருக்கும்பட்சத்தில், இது ஏற்படுத்தப்போகும் விளைவு நிச்சயம் ஆக்கப்பூர்வமானதாகவே இருக்கும்.

-கிருபாகர்

nkn160621
இதையும் படியுங்கள்
Subscribe