ழப்போரில் தமிழர்களைக் கொன்றுகுவித்த ராஜபக்சே சகோதரர்கள் இலங்கை அரசியலின் ஆட்சி பீடத்தை மீண்டும் கைப்பற்றி இருக்கிறார்கள். அதுவும் தமிழர்களின் குறைந்தபட்ச ஆதரவுகூட இல்லாமல். ஈழப்போர் முடிவடைந்து பத்தாண்டுகளில் இலங்கை அரசியலில் ஏற்பட்டிருக்கும் இந்த மிகப்பெரிய மாற்றம், அதற்கான நீதிப் போராட்டத்திற்கு தடையாக நிற்குமோ என்கிற அச்சம் ஏற்படுகிறது. இலங்கை பத்திரிகையாளரும், ஆவணப்பட இயக்குனருமான சோமீதரனைச் சந்தித்து இந்த மாற்றத்துக்கான காரணம், எதிர்கால நகர்வுகள் எப்படி இருக்கப்போகிறது என்பது பற்றிப் பேசினோம்.

kk

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜ பக்சேவின் வெற்றி, தமிழர்கள் மத்தியில் எப்படி உணரப் படுகிறது?

ராணுவ அதிகாரியாக, பாதுகாப்புத்துறை செயலாளராக, அரசியலில் ஈடுபாடு இல்லாதவராக இருந்த கோத்தபய ராஜபக்சே அதிப ராக வரமாட்டார் என்பதுதான் பெரும்பாலானவர்களின் எண்ணமாக இருந்தது. மகிந்த ராஜபக்சே நின்றிருந்தால் அது வேறுமாதிரி இருந்திருக்கும். சிங்கள மக்களோடு நெருக்க மாக இருக்கும் பத்திரிகை யாளர்களிடம் பேசியவரையில், ராஜபக்சேவுக்கான ஆதரவு அதிகமாக இருந்ததை நாம் புரிந்துகொள்ள முடிந்தது. சிறிசேன அரசாங்கம் வந்ததில் இருந்து ராஜபக்சேவுக்கான ஆதரவுத்தளத்தை வேரி லிருந்தே கட்டமைத்து வந்தி ருக்கிறார்கள். அதிபர் கோத்த பய தன்னை ஒரு மிதவாதி யாகவும், கடந்த காலத்து கறைகளை வெள்ளையடிப்பதற்காகவும் தனது ஆட்சியைப் பயன்படுத்தலாம். அதேசமயம், போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகள் மேற்கொண்ட முந்தைய ஆட்சியைப் போன்ற எந்த நடவடிக் கையும் இனி ஏற்பட வாய்ப்பே இல்லை. இது நிச்சயம் தமிழர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடியதாகவே இருக்கும்.

Advertisment

ஒருவேளை சஜித் பிரேமதாசா அதிபராகி இருந்தால் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வாய்ப்புகள் இருந் திருக்குமா?

அதற்காக போராடுகிற வாய்ப் பாவது கிடைத்திருக்கும். சஜித் பிரேமதாசா வந்திருந்தால், கோத்தபய ராஜபக்சே முற்றிலும் நிராகரிக் கப்பட்ட ஒருவராக ஆகி யிருப்பார். அப்போது அவர்மீது குற்ற விசா ரணைகள் நடந்திருக் கும். ரணில் விக்கிரம சிங்கே ஆட்சிக் காலத்தில் முன் னாள் கடற் படைத் தள பதியையே கைது செய் தார்கள். ராணுவத்தினர் மீது ஒரு துரும்பு படுவதற்குக்கூட கோத்தபய அனுமதிக் கப் போவதில்லை.

மீண்டும் ராஜபக்சே குடும்பக் கட்டுப்பாட்டுக்குள் இலங்கை போகிறதா?

Advertisment

இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பாகவே உருவானது ஐக்கிய தேசிய கட்சி. சுதந்திரம் பெற்ற பத்தாண்டுகளில் உருவானது சுதந்திர கட்சி. இந்த இரண்டு கட்சிகள் மட்டுமே இலங்கை அரசியலில் கோலோச்சிவந்த நிலையில், பாரம் பரியமிக்க இந்த இரண்டு கட்சி களுக்கும் மாற்றாக, பவுத்த சிங்கள தேசியவாதத்தை முன்னிறுத்துகிற ஸ்ரீலங்கா பொது ஜன பெர முனா என்கிற கட்சியைத் தொடங்கியிருக் கிறார் மகிந்த ராஜபக்சே. அது அவ ருடைய குடும் பத்துக்கான ஒரு புதிய கட்சி. அதன் தலைவரான மகிந்த ராஜபக்சே பிரதமராகிவிட்டார். கோத்தபய ராஜபக்சே அதிபராகிவிட்டார். தேசிய அமைப்பாளரான பஷில் ராஜபக்சேவுக்கும், இவர்களின் மூத்த அண்ணனான சமல் ராஜபக்சேவுக்கும் நிச்சயம் மிகப்பெரிய பதவியைத்தான் ஒதுக்கப்போகிறார்கள்.

நேரடி அரசியல் அனுபவம் இல்லையெனினும், கோத்தபயவின் பதவியேற்பில் ஒரு அரசியல் இருப்பதாகத் தெரிகிறதே?

dd

இலங்கை முழுவதையும் ஆட்சிசெய்த எல்லாளன் என்கிற தமிழ் மன்னனை, அனுராதபுரத்தில் வைத்து சிங்கள மன்னனான துட்டகைமுணு வீழ்த்தியதாக, இலங்கையின் பவுத்த புராணநூல் மஹாவம்சம் சொல்கிறது. அந்த வெற்றிக்குப் பிறகாக துட்டகைமுணுவால் கட்டப்பட்ட பவுத்த விகாரான ருவான்வெளிசாயாவில்தான் கோத்தபய அதிபராகப் பதவியேற்றார். 2009-ல் ஈழப்போர் முடிந்ததும் இவர்கள் துட்டகைமுணுவின் வாரிசுகள் என்றுதான் தங்களை அறிவித்துக் கொண்டார்கள். தொடர்ச்சி யாக சிங்களர்களின் கதாநாயகர்களாகவும் காட்டிக் கொண்டார்கள். இதுவரையில் சிறுபான்மையின ரின் வாக்குகளே இலங்கை அதிபருக்கான வெற்றி யைத் தீர்மானித்தன. அப்படி சஜித் பிரேமதாசா வந்துவிடக்கூடாது என்பதில் சிங்களர்கள் தெளிவாக இருந்தார்கள். அவர்களைத் திருப்திபடுத்துவதற்காக கோத்தபய இந்த முடிவை எடுத்திருக்கலாம்.

தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபக்சே மீதான போர்க்குற்ற விசாரணை தொடர வாய்ப்பிருக்கிறதா?

2015-ல் இலங்கை அரசாங்கத்தை மாற்றி யமைத்த இந்திய அரசு, இலங்கைத் தமிழருக்கான தீர்வை வழங்கவேண்டும் என்ற அழுத்தத்தைக் கொடுக்கத் தவறியது. தமிழகத்தைச் சேர்ந்தவர் களும் இதற்கு பொறுப்பாவார்கள். அதே சமயம், கோத்தபய என்கிற ராணுவ அதிகாரியையே அதிபராக்கும் வேலைத் திட்டத்தில் சிங்களர்கள் வெற்றி கண்டிருக்கிறார்கள்.

இதற்காக சர்வதேச அளவில் அவர்கள் லாபி செய்திருக்கிறார்கள். தமிழக அரசியல் தலைவர்கள் ஈழம் குறித்து உணர்ச்சி பொங்க பேசுவதெல்லாம், இலங்கை யில் தலைப்புச் செய்தி ஆகி விட அதன்மூலம், சாமான்ய சிங்கள மக்கள் மத்தியில் உருவாகும் அச்சத்தையும் தங்களுக்கு சாதகமாக அவர் கள் மாற்றிக்கொண்டார்கள். அதன் தொடர்ச்சியாகவே போர்க்குற்றவாளிகளான ராஜபக்சேக்கள் அதிகாரத் தைப் பிடித்திருக்கிறார்கள். குஜராத் கலவரத்தைக் கார ணம் காட்டி, மோடிக்கு அமெரிக்காவில் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், அவர் பிரதமரான பின்பு, எத்தனை முறை அமெரிக்க அரசே சிவப்புக் கம்பளம் விரித்திருக்கிறது. நாளை கோத்தபய அமெரிக்காவுடன் ஒத்துப்போய்விட்டார் எனில், இத்தனை காலமும் பேசிவந்த போர்க்குற்ற விசாரணையெல்லாம் என்னவாகும் என்ற கேள்வி எழுகிறதே.

-சந்திப்பு: பெலிக்ஸ்

தொகுப்பு: -ச.ப.மதிவாணன்

படம் : ஸ்ரீ பாலாஜி