ஓ.பி.எஸ்.ஸின் சொந்த ஊரான பெரியகுளம் பகுதியிலும் அதை ஒட்டியுள்ள கல்லுப் பட்டி, கைலாசம்பட்டி பகுதிகளிலும் நாட்டுச் செங்கல் தயாரிக்கும் 60-க்கும் மேற்பட்ட சூளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த செங்கல் சூளைகளில் அப்பகுதிகளைச் சேர்ந்த 4ஆயிரத்திற் கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் வேலை செய்து வயிற்றைக் கழுவிவருகிறார்கள். இந்த நிலையில்தான் இந்த செங்கல் சூளைகளை இழுத்து மூடச்சொல்லி கலெக்டர் பல்லவி பல்தேவ் அதிரடி உத்தரவிட்டிருக்கிறார்.
செங்கல் சூளை தயாரிப்பு சங்கத்தலைவரான கிருஷ்ணன், ""காலம் காலமாக இதே பகுதிகளில் தான் செங்கல் சூளை நடத்திவருகிறோம். இது குடிசைத் தொழில் என்பதால் லைசென்ஸும் இல்லை. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கனிம வளத்துறை அதிகாரிகள் லைசென்ஸ் வாங்கவேண்டும் என்று சொன்னார் கள். ஒரு சூளைக்கு 11,800 ரூபாய் கட்டினோம். ஆனால் லைசென்ஸ் இதுவரை கொடுக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு மாசுக் கட்டுப்பாட் டுத் துறையிலிருந்து வந்த அதிகாரிகள் புகைக்கூண்டு வைக்கவேண்டும் என்றனர். "அதற்கு பத்துலட்சம் செலவாகும். அந்த அளவுக்கு எங்களுக்கு வரு மானம் இல்லை' என்று சொன்னோம். அதற்கு அந்த அதிகாரிகள் "புகைக்கூண்டு வைக்கவில்லை என்றால் சூளையை நடத்தக்கூடாது என கலெக்டர் உத்தரவு போட்டிருக்கிறார்' என்று சொல்லிவிட்டு, மறுநாளே அனைத்து சூளைகளுக்குமான மின் இணைப்பை முன்னறிவிப்பு இல்லாமல் துண்டித்துவிட்டனர். இதனால் செங்கல் சூளை பணிகள் அனைத்தும் தடைப்பட்டு போய்விட்டன. சங்க நிர்வாகிகள் எல்லாம் கலெக்டரைப் பார்க்கப் போனால் அந்த அம்மா பல மணி நேரம் காக்கப் போட்டுவிட்டு, "அப்பகுதிகளில் செங்கல் சூளை நடத்தக்கூடாது. நீங்கள் வேற தொழில் செய்து கொள்ளுங்கள்' எனக் கூறினார். அதன்பின் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸை மூன்று முறை சந்தித்து முறையிட்டு மனு கொடுத்தும்கூட பலனில்லை.
ஆனால் மாவட்டத்தின் மற்ற பகுதிகளான ஆண்டிப்பட்டி, தேனி, போடி, கம்பம், கூடலூர், சின்னமனூர் பகுதிகளில் இருக்கக் கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. பெரியகுளம் பகுதியில் இருக்கக் கூடிய எங்கள் சூளைகளை மட்டும் மூடச் சொன்னதற்கு என்ன காரணமென தெரியவில்லை. அதிகாரிகளிடம் கேட்கப் போனால் ரோட்டில் புகை வருகிறது; "அதனால் விபத்துக்கள் நடக்கிறது' என்று கூறி வருகிறார்கள். அப்படியென்றால் மற்ற பகுதிகளில் புகை வரவில்லையா? சூளை வைத்திருப்பவர்கள் எல்லோருமே இரவு 11 மணிக்கு செங்கல் வேக வைத்து அதிகாலை ஐந்து மணிக்கு எடுத்துவிடு வோம். அதனால் மக்களுக்கோ போக்குவரத்துக்கோ எந்த பாதிப்பும் இல்லை. கலெக்டரின் நட வடிக்கைக்கு எதிராக ஒட்டுமொத்த தொழிலாளர் களைத் திரட்டி தொடர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்திருக்கிறோம்'' என்றார்.
இது சம்பந்தமாக கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் சில அதிகாரிகளிடம் கேட்டபோது... ""சமீப காலமாகவே துணை முதல்வர் ஓ.பி.எஸ். அவருடைய மகன் ரவீந்திரநாத்குமார் உட்பட அவருடைய குடும்பத்தினர் சொல்வதைத்தான் வேதவாக்காக நினைத்து கலெக்டர் செயல்பட்டு வருகிறார்.
ஓ.பி.எஸ். குடும்பம் பெரியகுளம் பகுதியில் மிகப்பெரிய செங்கல் சூளை அமைக்கப் போவதாக பரவலாக ஒரு பேச்சு இருந்துவருகிறது. அப்படி செங்கல் சூளை அமைத்தால் இந்த நாட்டுச் செங்கல் சூளைகள் மூலம் பாதிப்பு வரும் என்பதனால் தான் சூளைகளை உடனடி யாக மூட கலெக்டருக்கு மறைமுக உத்தரவு போட்டிருக் கிறார்கள்'' என்று கூறினர்.
மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவோ... ""அப்பகுதி யிலுள்ள செங்கல் சூளை புகையினால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அதோடு விபத்தும் நடக்கிறது என்று புகார் வந்ததின் பேரில்தான் "விதிமுறைகளைப் பின்பற்றி நடத்துங் கள்' என்று கூறினேன்'' என்க, அவரிடம் "மாவட் டத்தின் மற்ற பகுதிகளில் சூளைகள் செயல்பட்டு வருகிறதே அப்படியிருக்கும்போது இங்கு மட்டும் துணை முதல்வர் ஓ.பி.எஸ். குடும்பத்தினரின் தூண்டுதலின் பேரில் மூடச் சொல்லி இருப்பதாக ஒரு பேச்சு அடிபட்டு வருகிறதே' என்று கேட்டதற்கு, ""மற்ற பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம்'' என்று முடித்துக்கொண்டார்.
-சக்தி
_________________________
சட்டப்போராட்டத்தில் மீண்டும் நக்கீரனுக்கு வெற்றி!
சேந்தமங்கலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான தே.மு.தி.க.வை சேர்ந்த சாந்தி அ.தி.மு.க.வில் சேர்வதற்காக பேரம் பேசியதாக 2013 ஆம் ஆண்டு வெளிவந்த நக்கீரன் பத்திரிகையில் தகவல்கள் வெளியானது. இது குறித்து மேலும் விசாரிக்கும்போது அப்போதைய தே.மு.தி.க. சட்டமன்ற கொறடாவாக இருந்த சந்திரகுமார் நக்கீரனுக்கு அளித்த பேட்டியில் சாந்திக்கு அ.தி.மு.க. தரப்பில் அமைச்சர் தங்கமணி 5 கோடி ரூபாய் பேரம் பேசுவதாகக் கூறியிருந்தார். இந்த செய்திகள் அனைத்தும் நக்கீரனில் ‘"பெண் எம்.எல்.ஏ. விலை ஐந்து கோடி' என்ற தலைப்பில் செய்தி வெளியாகி யிருந்தது. அமைச்சர் தங்கமணி சார்பாக அரசு வழக்கறிஞர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நக்கீரனுக்கு எதிராக, அவதூறு வழக்கொன்றை தாக்கல்செய்தார்.
அந்த அவதூறு வழக்கில் இந்த செய்திக்கு எந்த வகையிலும் தொடர் பில்லாத தலைமை நிருபர்களான இளையசெல்வன், ராமகிருஷ்ணன், பிரகாஷ் ஆகியோரையும் பழிவாங்கும் நோக்குடன் வழக்கில் சேர்த்திருந் தனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நக்கீரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.டி. பெருமாள் இந்திய பத்திரிகை பதிவு சட்டத்தையும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளையும் மேற்கோள் காட்டி செய்திக்குத் தொடர் பில்லாதவர்களை வழக்கில் சேர்ப்பது தவறு என்று வாதிட் டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதியரசர், "ஒரு பத்திரிகையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு நிருபர் இருப்பார்.
ஒரு மாவட்டத்தில் நடந்த செய்திக்காக மற்ற மாவட்டத்திலுள்ள நிருபர்கள் எவ்வாறு பொறுப்பாக முடியும்?'' என்று கேட்டதுடன், ""இந்த அவதூறு வழக்கு உள் நோக்கம் கொண்டது'' என்றும் கூறி வழக்கை செல்லாது என்று அறி வித்து உத்தரவிட்டார்.
-கீரன்