சர்வதேச விதிகளுக்கு எதிரான குடியுரிமை சட்டத் திருத்தம்! -டாக்டர் அண்ணாமலை மகிழ்நன், PhD, ஆஸ்திரேலியா.

cas

லகின் பல நாடுகளில் பல்வேறு காரணங்களுக்காக மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். சித்திரவதைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அதிகபட்சமாக அரச பயங்கரவாதத்தினால் கொல்லவும்படுகிறார்கள். இதனை சர்வாதிகாரிகளும் செய்கிறார்கள், சனநாயகத்தின் பெயரால் அரசியல்வாதிகளும் செய்கிறார்கள். துன்புறுத்தப்படும் மக்கள் தங்களின் உயிர் பாதுகாப்பிற்காக தங்கள் நாடுகளை விட்டு வெளியேறுகிறார்கள். அவர்களின் பெயர் ‘ஏதிலிகள்’ அல்லது ‘அகதிகள். இந்தியாவிற்கு, தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வந்த அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கத்தான், “இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்தம் 2019-ல் இந்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், உண்மையிலேயே இந்திய அரசு, ‘ஓர்ந்து கண்ணோடாது’ ஏதிலிகளுக்கு உதவுவதற்காகத்தான் இந்த சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கின்றதா என்றால், இல்லை.

ஒரு நாட்டிற்குச் சென்று வாழவேண்டுமென்றால் மூன்றே வழி முறைகள்தான் உண்டு. 1. நிரந்தர வாழ்வுரிமை, 2. தற்காலிக வாழ்வுரிமை, 3. அகதிகள் அல்லது ஏதிலிகள். இந்த மூன்று வழிகளில் ஏதாவது ஒரு முறையில் ஒரு நாட்டில் குடியேறியவர்கள், பின்னர் அந்த நாட்டின் குடியுரிமையைப் பெறலாம். ஒவ்வொரு நாட்டிற்கும் குடியுரிமைச் சட்டங்கள் வேறுபடும். இந்திய அரசு, இப்பொழுது அகதிகளுக்கான குடியுரிமைச் சட்டத்தில் செய்துள்ள திருத்தங்கள்தான் சர்ச்சைக் குள்ளாகியிருக்கிறது.

caa

அகதிகளின் வரலாறு

தொன்று தொட்டு மனித குலம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து கொண்டேதான் உள் ளது. நாடுகள் தங்களின் நிலப் பரப்பை வரையறை செய்து கொண்ட பின்னர், தங்களின் இனம், மொழி, மதம் சாராத மற்றவர்களைக் கொடுமைப் படுத்தத் தொடங்கின. அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அகதி களாக வெளியேறினார்கள்.

aa

முதன்முதலில் உலகில் அகதிகளாக வெளியேற்றப்பட்ட வர்கள் யூதர்கள்தான். பதினைந் தாம் நூற்றாண்டில் ஸ்பெயினி லிருந்தும், 19-ஆம் நூற்றாண்டில் 1930-களில் தொடங்கி, இரண் டாம் உலகப்போர் முடியும் வரையில் இட்லரின் ஜெர்மனியி லிருந்தும், ஆஸ்திரியா, போலந்த் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் யூதர்கள் விரட்டியடிக்கப்பட் டார்கள். பல லட்சக் கணக் கானோர் கொடூரமாகக் கொல் லப்பட்டனர்.

பதினாறாம் நூற்றாண்டில், ஃப்ரான்சு நாட்டில், அதன் பேரரசர் நான்காம் ஹென்றி கத்தோலிக்க மதத்தைத் தழுவியதால், ப்ராட்டஸ்டென்ட்டுகள் கொடுமைப்படுத்தப்பட்டு அகதிகளாக ஃப்ரான்சை விட்டு வெளியேறினார்கள்.

1917-1921-ல் ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர், பொதுவுடைமைச் சித்தாந்தத்திற்கு எதிரானவர்கள் 15 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறினர். 1915-1923-ல் 10 லட்சம் ஆர்மீனியர்கள் துருக்கி யிலிருந்து அகதிகளாக வெளியேறினர்.

1947-ல் இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் போது ஒரு கோட

1947-ல் இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் போது ஒரு கோடியே 80 லட்சம் இந்துக்களும், இசுலாமியர்களும் இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற் கும் அகதிகளாக இடம்பெயர்ந்தனர். அப்படி இந்தியாவிற்கு அகதியாக வந்தவர்தான் முன்னாள் துணைப் பிரதமர் எல். கே.அத்வானி.

1949-ல் 20 லட்சம் பேர் சீனாவிலிருந்து தைவானிற்கும், ஹாங்காங்கிற்கும் அகதிகளாகக் குடியேறினர். 1950-ல் கொரியப் போர், 1956-ல் ஹங்கேரியப் புரட்சி, 1959-ல் க்யூபப் புரட்சி உள்ளிட்ட பல புரட்சிகளின் போதும் மக்கள் அகதி களாக வெளியேறினர். 1959-ல் திபெத்திலிருந்து தலாய்லாமாவுடன் பல்லாயிரம் பேர் இந்தியாவிற்கு அகதிகளாக வந்தனர். 1971-ல் வங்கதேசத்திலிருந்து ஒரு கோடிக்கும் அதிகமான அகதிகள் இந்தியா விற்குள் வந்தனர்.

தமிழ் அகதிகள்

1962-ஆம் ஆண்டில் பர்மாவில் பௌத்த மத வெறியர்களால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் பர்மாவிலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாக வந்தனர். 1965-ஆம் ஆண்டு ஏற்பட்ட லால்பகதூர் சாஸ்த்ரி -சிரீமவோ பண்டாரநாயகா ஒப்பந் தத்தின்படி இலங்கையிலிருந்து தமிழர்கள் ஏதிலிகளாக வெளியேற்றப்பட்டார்கள்.

மற்ற அகதிகளுக்கும் பர்மா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து வந்த தமிழ் அகதிகளுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு. யூதர்கள் தங்களுக்கென்று ஒரு நாடு இல்லாமல் அகதி களாகத் திரிந்தார்கள். ஆனால், இந்தியாவிலிருந்து இலங்கை மலையகத்திற்கும், பர்மாவிற்கும் ஆங்கிலேயர்களால் குடியேற்றப்பட்ட தமிழர்கள் தங்களின் தாய்நாட்டிற்கு ஏதிலிகளாக திருப்பி அனுப்பப்பட்டார்கள்.

1983 இனக் கலவரத்திற்குப் பிறகு லட்சக்கணக்கான தமிழர்கள் ஈழத்திலிருந்து தமிழகத்திற்கு ஏதிலிகளாக வந்தார்கள். உலகெங்கும் உள்ள பல நாடுகளுக்கும் சென்றார்கள். அவர்கள் தங்கள் சொந்த மண்ணிலிருந்து, சிங்களப் பேரினவாத அரசாலும், பௌத்த பிக்குகள் என்னும் போர்வையில் வாழும் சிங்களக் காடை யர்களாலும் அகதிகளாகத் துரத்தியடிக்கப் பட்டனர்.

ஜெனீவா அகதிகள் மாநாட்டு ஒப்பந்தம்

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு அய்க்கிய நாடுகள் சபையில் உலகெங்கும் நாடற் றுத் திரிந்துகொண்டிருந்த அகதிகளுக்கு மறுவாழ்வு அளிக்க ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் பெயர், "1951 அகதிகள் மாநாட்டு ஒப்பந்தம்' என்பதாகும். இந்த ஒப்பந்தத்தில் ஏற் படுத்தப்பட்ட விதிமுறைகளை செயல்படுத்துவதற் காக, அய்க்கிய நாடுகள் சபை, 1967-ஆம் ஆண்டு “வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்தியது (1951 Convention and the 1967 Protocol relating to the Status of Refugees). உலகில் அகதிகளை ஏற்றுக்கொள்கிற, அவர்களுக்கு குடி யுரிமை வழங்குகின்ற எல்லா நாடுகளும் “1951 ஜெனீவா அகதிகள் மாநாட்டு ஒப்பந்த விதிமுறைகளை “1967 வழிகாட்டு நெறி முறைகளின்படித்தான் செயல்படுத்த வேண்டும்.

அகதிகள் யார்?

அய்க்கிய நாடுகள் சபையில் 14-12-1950-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 429(V)ன் படியும் (United Nations General Assembly resolution 429(V) of 14 December 1950),, அய்க்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தின் விதிமுறை உறுப்பு ஒன்றின் (Article 1) படியும், அகதிகள் என்பவர்கள் யார் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

caa

அதன்படி, ‘அகதிகள்’ அல்லது ‘ஏதிலிகள்’ என்பவர்கள்:

“தன்னுடைய நாட்டில் தன்னுடைய உயிருக்கு உண்மையிலேயே ஆபத்து இருக்கிறது என்கிற நிரூபிக்கப்பட்ட அச்சத்தைக் கொண்டவர்கள்.

அதேபோல், தன்னுடைய நாட்டு அரசும், அரசு இயந்திரங்களும், காவல்துறையும், பாதுகாப்புப் படையும் தனக்கு எந்தவிதத்திலும் பாதுகாப்பு அளிக்காது என்கிற நிலையில் தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேறு ஒரு நாட்டில் தஞ்சம் புகுந்தவர்கள்.

என்னென்ன காரணங்களால் ஒருவருக்கு அவருடைய சொந்த நாட்டில் பாதுகாப்பாக வாழமுடியாத (அச்ச) நிலை ஏற்படலாம் என்பதையும் அய்க்கிய நாடுகள் சபை தீர்மானித்துள்ளது. அப்படி வரையறுக்கப்பட்ட காரணங்கள் அய்ந்து.

1. இனம் (Race)

2. மதம் (Religion)

3. நாட்டுரிமை (Nationality)

4. ஒரு குறிப்பிட்ட சமுதாயக் குழுவில் உறுப்பினராயிருத்தல் (Membership of a particular social group)

5. அரசியல் கருத்து (Political opinion)

இந்திய குடியுரிமை திருத்த சட்டம்

இந்திய அரசு, “1951 ஜெனீவா அகதிகள் மாநாட்டு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு கையெழுத்திடாத ஒரு நாடு என்பதை இங்கே நினைவில் கொள்ளவேண்டும். இந்த நிலையில் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி அகதிகளாக அங்கீகரிக்கப்படக்கூடியவர்கள் யார் என்றால், “பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ் தானை சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோர். இவர்களுக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும் அவர்கள் இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வாழ்ந்திருந்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது.

ஏனென்றால், ஒரு மதத்தைச் சார்ந்தவர் களுக்குள்ளேயே இனம், மொழி, நாட்டுரிமை, ஒரு குறிப்பிட்ட சமுதாயக் குழுவில் உறுப்பினரா யிருத்தல் மற்றும் அரசியல் கருத்துக்களால் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினருக்கு உயிர்ப் பயத்தை ஏற்படுத்தக்கூடும்.

பாகிஸ்தானில் துன்புறுத்தப்படுவோர்

பாகிஸ்தானில் இசுலாமியர்களுக்குள்ளேயே அவர்கள் சார்ந்திருக்கும் சமூகக் குழுவின் காரணமாக மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். எப்படி இந்தியாவில் இந்துக்களுக்குள்ளேயே மாட்டுக்கறி உண்போர் அடித்துக் கொலைசெய்யப் படுகின்றார்களோ அதேபோல் இசுலாமியர் களுக்குள்ளே இருக்கும் பல பிரிவுகளைச் சார்ந்தவர்களை, பெரும்பான்மைப் பிரிவைச் சார்ந்தவர்கள் தாக்குவதும், கொல்வதும் நடக் கின்றது. அவர்களின் பட்டியலை அய்.நா. மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி அகமதியர்கள், ஷியா, சுஃபிகள், பேரல்விகள் மற்றும் சிக்ரிகள் ஆகிய பிரிவினர் இசுலாமியத் தீவிரவாதத்தினால் தாக்குதலுக்குள் ளாக்கப்படுகிறார்கள். அதேபோல் ‘பகாய்’ என்ற மதத்தைச் சேர்ந்தவர்களும் கொடுமைக்குள்ளாக்கப் படுகிறார்கள். ஆனால், இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் இந்த சிறுபான்மையினரை ஏற்றுக்கொள்ளவில்லை.

திருநங்கையரும்-திருநம்பியரும்

பால்நிலை திரிந்த திருநங்கையர், திரு நம்பியர், ஓரினச் சேர்க்கையாளர் ஆகியோருக்கு இசு லாமில் இடமில்லை. அது மட்டுமல்ல, ஓரினச் சேர்க்கை யாளர்களுக்கு ‘மரண தண்டனை வழங்க வேண்டும் என்று இசுலாமியச் சட் டங்கள் கூறுகின்றன. ஏறத்தாழ 13 இசுலாமிய நாடுகள், பாகிஸ்தான் உட்பட ஓரினச் சேர்க்கை யாளர்களுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத்தைக் கொண் டுள்ளன. அவர்கள் சிறுபான்மையினர். அவர்களுக்கு பாகிஸ் தான், ஆப்கானிஸ் தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் உயிராபத்து உள்ளது. ஆனால், இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம், இந்த பால்நிலை திரிந்து பாவியானவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை.

இந்தியா, பார்சிகளைச் சேர்த்தது ஏன்?

பார்சிகள் இந்தியர்களோ அல்லது இந்திய வம்சாவழியினரோ அல்ல. அவர்கள் அன்றைய பாரசீகம் அதாவது ‘பெர்சியா, ‘இன்றைய ஈரானை’ உள்ளடக்கிய நிலப்பகுதிகளிலிருந்து வந்தவர்கள். அவர்கள் ‘சோரோயிசம்’ என்னும் தத்துவத்தைக் கடைப்பிடிக்கிற மதத்தைச் சார்ந்தவர்கள். அவர்கள் பேசும் மொழி, இன் றைக்கும் ஈரானில் பேசப்படும் “ஃபார்சி மொழிதான்.

இருந்தும் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் பார்சிகள் கொடுமைப் படுத்தப்படுவதால் அவர்களுக்கு ஆதர வளிக்க இந்தியா முடிவு செய்துள் ளது. ஏன் என்றால் இந்த பார்சிகள் எனப் படுவோர் கடந்த 800 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் குடியேறியவர்கள். ஆகவேதான் தங்க ளுடைய குஜராத்திப் பாசத்தைக் காண் பிப்பதற்காக இந்திய அரசு பார்சிகளுக்கு குடியுரிமை வழங்க முன்வந்துள்ளது. ஆனால், ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க முன்வர வில்லை. இந்த சூட்சுமத்தைப் புரிந்துகொள்ளக் கூடிய ஆற்றல் படைத்த அரசியல்வாதிகள் அ.இ.அ.தி.மு.க.வில் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. இல்லையென்றால், இந்தச் சட்டத்தை அ.இ.அ.தி.மு.க. ஆதரித்திருக்குமா?

பூட்டான் இந்துக்களைக் கழட்டிவிட்டது ஏன்?

தற்போதைய இந்திய அரசு வலதுசாரி, இந்துமத வெறிபிடித்த அரசு என்பதுதான் சர்வதேச நாடுகளின் கணிப்பு. உலக ஆங்கிலப் பத்திரிகைகள் இந்திய அரசை, “'ஆ ழ்ண்ஞ்ட்ற் ஜ்ண்ய்ஞ், ஐண்ய்க்ன் ச்ஹய்ஹற்ண்ஸ்ரீ ஏர்ஸ்ங்ழ்ய்ம்ங்ய்ற்' என்றுதான் எழுதுகின்றன. ஆனால், இந்திய அரசின் செயல்பாடுகள், இவ்வரசு இந்திய இந்துக்களுக்கு ஆதரவான அரசாகவும் இல்லை, உலக இந்துக்களுக்கு ஆதரவான அரசாகவும் இல்லை என்பதையே நிரூபிக்கிறது. இந்தியாவில், மாட்டுக்கறி உண்ணும் இந்துக்களை அடித்துக் கொல்வதை இந்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ளது. ஆனால், “மாட்டுக்கறி ஏற்றுமதியில் உலக சாதனை படைத்துள்ளது. எப்படிப்பட்ட மோசமான முரண்பாடு இது?

இந்தியாவின் அண்டை நாடான பூட்டானில், இந்து மதத்தைச் சார்ந்த நேபாளியர்களும், இந்தியர்களும் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். இவர்கள் பூட்டானை விட்டு அகதிகளாகத் துரத்தி யடிக்கப்பட்டு, உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழ்கிறார்கள். பூட்டானில் உள்ள இந்துக்கள் அங்கேயே வாழ வேண்டுமென்றால், ஒன்று புத்த மதத்தைத் தழுவ வேண்டும். அல்லது புத்த மதத்தவரை மணந்துகொண்டு, தன் மதத்தைத் துறந்து வாழவேண்டும். வரலாற்றில் இது ஒன்றும் புதுமையல்ல. அன்று சமணர்களை, சைவர்கள் துன்புறுத்தினார்கள்; இன்று புத்த மதத்தினர் இந்துக்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள்.

இப்படி லட்சக்கணக்கான இந்துக்களை அவர்களின் சொந்த நாட்டிலிருந்து அகதிகளாக்கி வெளியேற்றும் பூட்டான் இந்துக்களுக்கு ஆதர வளிக்காத இந்திய அரசு, ஈரான் பகுதியில் இருந்து வந்த இந்துக்கள் அல்லாதவர்களுக்கு, இந்திய மொழியல்லாத “பார்சி மொழி பேசுபவர்களுக்கு குடியுரிமை வழங்குகிறது என்றால் இந்திய அரசின் நிலைப்பாடு என்ன?

இந்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம், அண்டை நாடுகளில் கொடுமைப்படுத்தப் படும் சிறுபான்மையினரைப் பாதுகாப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டம் அல்ல. மாறாக, இசுலாமிய மதத்திற்கும், இசுலாமிய நாடுகளுக்கும் இந்திய அரசு எதிரான அரசு என்பதை நிரூபிப்ப தற்காக கொண்டுவரப்பட்ட சட்டம். இந்திய அரசு குடியுரிமை மறுக்கும் அகதிகள் அனைவருமே, “1951 ஜெனீவா அகதிகள் மாநாட்டு விதிமுறைகளின்படி அகதிகளே.

________________

வடகலை - தென்கலை; சன்னி - அகமதியர் ஒப்பீடு!

தமிழகத்தின் கோவில்நகரமான காஞ்சியில் புகழ்பெற்ற வைணவத்தலம் காஞ்சி வரதராச பெருமாள் கோவில். இங்குதான் அதன் மேலாளர் சங்கரராமன், சங்கராச்சாரி ஜெயேந்திர சரசுவதியின் தூண்டுதலால் கொலை செய்யப்பட்டார். இந்தக் கோவிலின் யானைக்கு வடகலை நாமம் ('ம'’போன்ற நாமம்) போடு வதா அல்லது தென்கலை நாமம் ('வ'’போன்ற நாமம்) போடுவதா என்ற வழக்கு லண்டன் ப்ரிவி கவுன்சில் வரை சென்று அந்த வழக்கில் கிறித்துவ நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்கள். இரு தரப்புமே வைணவர்கள் என்றாலும் வடகலையிலும் தென்கலையிலும் ஒருவரை மற்றவர் விரோதியைப் போலவே பார்ப்பார்கள். இன்றைய இந்திய சட்டப்படி இவர்கள் இருவருமே இந்துக்கள்தான். இதேபோன்ற வேறுபாடுதான் இசுலாமிய மதத்தில் உள்ள பெரும்பான்மையினருக்கும், மற்ற... மற்ற உட்பிரிவினருக்கும் உள்ள வேறுபாடு. ஆனால் இந்த உட்பிரிவினரை இந்திய அரசு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

nkn250120
இதையும் படியுங்கள்
Subscribe