குடியுரிமை ஆவணம்! பீதி கிளப்பிய வங்கி! பொங்கி எழுந்த மக்கள்!

gg

ன்னர்கள் காலத்தில் தூத்துக்குடி மாவட்டத் தின் திருச்செந்தூர் அருகில் உள்ள மக்கள் அந்தப் பகுதியின் பழைய காயல் துறைமுகம் (இப்போது காயல்பட்டினம்) வழியாக வெளிநாடுகளுக்குப் பண்டமாற்று வணிகத்தை மேற்கொண்டார்கள். கொரியா உள்ளிட்ட தூர கிழக்கு நாடுகளின் வர்த்தகத் தொடர்பால் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது. இப்படி வளர்ச்சியடைந்த காயல்பட்டி னத்தில் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் கிளை தொடங்கப்பட்டது. மெஜாரிட்டியாக முஸ்லிம் மக்களைக் கொண்ட காயல்பட்டினம்வாசிகளின்

ன்னர்கள் காலத்தில் தூத்துக்குடி மாவட்டத் தின் திருச்செந்தூர் அருகில் உள்ள மக்கள் அந்தப் பகுதியின் பழைய காயல் துறைமுகம் (இப்போது காயல்பட்டினம்) வழியாக வெளிநாடுகளுக்குப் பண்டமாற்று வணிகத்தை மேற்கொண்டார்கள். கொரியா உள்ளிட்ட தூர கிழக்கு நாடுகளின் வர்த்தகத் தொடர்பால் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது. இப்படி வளர்ச்சியடைந்த காயல்பட்டி னத்தில் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் கிளை தொடங்கப்பட்டது. மெஜாரிட்டியாக முஸ்லிம் மக்களைக் கொண்ட காயல்பட்டினம்வாசிகளின் சேமிப்புகள், வைப்பு நிதிகள்தான் முழுமையாக இந்த வங்கியில் புழங்கின.

bank

இந்த நிலையில் தற்போது குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினை எதிர்த்து நாடு முழுவதும் கண்டனங்கள், போராட்டங்கள் என அனல் பரவ, சென்ட்ரல் வங்கியின் மும்பைத் தலைமையகம் கடந்த 11-ஆம் தேதியன்று அங்குள்ள தமிழ் தினசரியில் ஒரு அறிவிப்பினை வெளியிட்டது.

"இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின் படி K.Y.C. (Know your customer-தங்கள் வாடிக்கையாளரை அறிவதற்கான ஆவணம்) தொடர்பாக அதிகாரப் பூர்வமாக செல்லத்தக்க ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை ஜனவரி கடைசிக்குள் வங்கியில் வாடிக்கையாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும். தவறினால் அவர்களின் கணக்குகள் முடக்கப்படும்' என்று அறிவிப்பை வெளிட்டது. அந்த ஆவணங்களில் ஒன்றாக தேசிய மக்கள் பதிவேட்டில் (NPR) வழங்கப்பட்ட கடிதத்தையும் குறிப்பிட்டிருந்தது.

இதனால் பீதியடைந்த காயல்பட்டினம் நகரவாசிகள் கடந்த 18-ஆம் தேதி தங்களின் சேமிப்புக் கணக்குகளில் உள்ள பணத்தை எடுப்பதற்காக சென்ட்ரல் வங்கியில் அலை யென திரண்டுவிட்டனர். திங்கள்கிழமையன்று கூட்டம் அதிகமாக, பணத்தைக் கொடுக்க திணறியது வங்கி நிர்வாகம். நாகர்கோவில் உள்ளிட்ட பிற பகுதிகளில் உள்ள தங்கள் பிராஞ்சுகளிலிருந்து கோடிகளை வரவழைத்துப் பட்டுவாடா செய்ய வேண்டிய நிலை. கடந்த நான்கு தினங்களில் மட்டும் இந்தியா முழுவதும் நான்கு கோடிகளுக்கும் மேல் மக்கள் தங்கள் சேமிப்பை எடுத்துள்ளனராம்.

நாம் வங்கியின் மேனேஜர் மாரியப்பனிடம் கேட்டதற்கு... ""பொதுவாக வங்கியில் சேமிப்பு அக்கவுண்ட் தொடங்கி பணம் டெபாசிட் செய்பவர்கள் அதன்பின் வருடக்கணக்கில் அதில் வரவு-செலவு செய்யாமல் விட்டுவிட்டனர். கணக்குகள் தொடர் பராமரிப்பிலிருக்க வேண் டும் என்பதற்காக அவர்கள் தங்களின் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு இதில் எதையாவது ஒன்றை வங்கியில் ஒப்படைக்க வேண்டும் என்று வருடம் தோறும் ஆவணம் கேட்பது நடைமுறைதான். பயம் வேண்டாம் என்று வாடிக்கையாளர்களிடம் தெரியப்படுத்தி விட்டோம்'' என்றார்கள்.

"K.Y.C. என்ற செல்லத்தக்க ஆவணம் பற்றி வங்கி கேட்டது, மக்கள் அறியாத ஒன்று. அது மக்கள் மத்தியில் பீதி உணர்வை ஏற்படுத்தியதால் நமது சேமிப்புகளை திரும்ப எடுக்க ஆவணமா, என்ற கோபத்தில் சேமிப்பு பணத்தை எடுக்கிறார்கள்'' என்றார் காயல்பட்டினத்தின் எக்ஸ் கவுன்சிலர் ஜமால்.

-பரமசிவன்

nkn250120
இதையும் படியுங்கள்
Subscribe