"தமிழகத்தில் என்.ஆர்.சி. எனப்படும் தேசிய ‘குடிமக்கள்’ பதிவேடுக் கான கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. தேசிய ‘மக்கள்தொகை’பதிவேட்டிற்கான கணக்கெடுப்புதான் நடத்தப்பட இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்தான் மக்களை குழப்பி சூழ்ச்சி செய்கிறார்' என்று குற்றஞ்சாட்டுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. "என்.பி.ஆரும் என்.ஆர்.சி.யும் ஒன்றுதானே? அப்படியென்றால், மக்களைக் குழப்பி சூழ்ச்சிசெய்வது நீங்கள்தானே? என்று முதல்வர் எடப்பாடியைப் பார்த்து, எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் ஏன் கேள்வி எழுப்பவில்லை?' என கேள்வி எழுப்புகிறார்கள் சமூக செயற்பாட்டாளர்களும் பொதுமக்களும்.
இரண்டும் எப்படி ஒன்று?
என்.பி.ஆர். என்பது (National Population Register) தேசிய மக்கள் தொகை பதிவேடு. என்.ஆர்.சி. என்பது (National Register of Citizens) தேசிய குடிமக்கள் பதிவேடு. என்.பி.ஆர் எனப்படும் மக்கள் தொகை பதிவேடு என்பது குடியுரிமை சட்டத்தின் கீழ்தான் வருகிறது. மீசை இருந்தா சந்திரன், மீசை இல்லைன்னா இந்திரன் என்று ‘"தில்லுமுல்லு'’ படத்தில் ரஜினி ஏமாற்றுவதுபோல, என்.பி.ஆரும் என்.ஆர்.சியும் வேறு வேறு என்று சொல்லி மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றன மத்திய-மாநில அரசுகள். ஆக, என்.பி.ஆரும் என்.ஆர்.சி.யும் ஒன்றுதான் என்பதைப் புரிந்துகொண்டால்தான் சி.ஏ.ஏ. (ஈண்ற்ண்க்ஷ்ங்ய்ள்ட்ண்ல் ஆம்ங்ய்க்ம்ங்ய்ற் ஆஸ்ரீற் 2019) எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஏன் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
மத்திய சட்டஅமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சமீபத்திய பேட்டியில், ‘சென்சஸ் எனப்படும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலுள்ள தனிநபர் விபரங்களை எங்களால் பார்க்க முடியாது; எடுக்க முடியாது. எங்க ளுக்கு மக்க ளுக்கான திட்டங்களை உருவாக்குவதற்கு விவரங் கள் தேவைப்படுகின்றன. மக்களுக்கான நல்வாழ்வு திட்டங்களை நேரடியாக பயனாளிகளுக்கு கொண்டுபோய் சேர்க்கவும் என்.பி.ஆர். எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேடு தேவைப்படுகிறது. அதனால்தான், என்.பி.ஆரை நடைமுறைப்படுத்து கிறோம்’என்று சொல்லியிருக்கிறார். மேலும், இதை நியாயப்படுத்த ‘2010 ஆம் ஆண்டு தேசிய மக்கள் தொகை பதிவேடு நடந்ததே… அப்போது ஏன் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?’ என்றும் பா.ஜ.க. தரப்பில் கேள்வி எழுப்பப்படுகிறது.
உதாரணத்துக்கு, நம்ப கிராமத்துல ஒரு பள் ளிக்கூடம் கட்டி அந்த மக்களுக்கு ஒரு நல்வாழ்வுத் திட்டத்தை அமல்படுத்தப்போறோம்னு வெச்சுக்கு வோம். இதுக்கு, என்ன விவரங்கள் தேவை?
அதாவது, எத்தனை ஆண்குழந்தைகள், எத்தனை பெண் குழந்தைகள் இந்த கிராமத்தில் இருக்கிறார்கள்? எந்தெந்த வயதில் இருக்கிறார்கள்? என்ற வயது மற்றும் பாலின புள்ளிவிவரங்கள் இருந்தால் போதும்தானே? குழந்தைகளின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் தேவையா? அது, குழந்தை பள்ளியில் சேரும்போது தெரிந்துவிடும். அப்போ, நமக்கு தேவை புள்ளி விவரம். அதா வது, ஒரு நல்வாழ்வுத் திட்டத்தை அமல்படுத்த அரசாங்கத்திற்கு தேவை தனிநபர் விவரங்கள் இல்லை. புள்ளிவிவரங்கள் மற்றும் அட்ட வணைதான். இந்த, புள்ளி விவரங்கள் அனைத்தையும் இத்தனை வருடங்களாக சென்சஸ் சட்டம் 1948-ன்படி மக்கள் தொகை கணக்கெடுப்பு கொடுத்துவருகிறது. சென்சஸ் எனப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும் என்.பி.ஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்குமுள்ள வேறுபாடு என்ன?
உங்கள் வீட்டுக்கு வந்து உங்கள் பெயர் என்ன? வயது? பிறந்த தேதி? பிறந்த இடம்? உடன் பிறந்தவர்கள் எத்தனை பேர்? அப்பா, அம்மா பெயர் என்ன? என்ன படிச்சிருக்கீங்க? என்ன மொழி பேசுறீங்க? பட்டியல் இனமா? பழங்குடி யினரா? உள்ளிட்ட விவரங்கள்தான் சென்சஸ் எனப்படும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் விசாரிக்கப்படும்.
மேலும், சென்சஸ் 1948 சட்டத்தின்படி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை யாராலும் பார்வையிட முடியாது. இன்னும் சொல் லப்போனால் நீதிமன்றத்தால்கூட பார்வையிட முடியாது. அதன், காரணமாகத்தான் 10 ஆண்டு களுக்கு ஒருமுறை எடுக்கப்படும் சென்சஸுக்கு மக்கள் நம்பிக்கையோடு தங்களது முழு விவரத் தையும் தந்து சென்சஸ் வெற்றிகரமாக நடத்தி முடிக்க தங்களது முழு ஒத்துழைப்பையும் தருகிறார் கள். இந்நிலையில்தான் ரேஷன் கடை, கேஸ் மானியம், விவசாயிகளுக்கான மானியம் என்று அரசு வழங்கும் நல்வாழ்வுத்திட்டங்கள் யாருக்குப் போய் சேர்கிறது? சரியான பயனாளிக்கு போய் சேர்கிறதா? ஏழை மக்கள் பயன் அடைகிறார்களா? என்பதை எல்லாம் தெரிந்துகொள்ளவேண்டும் என்றால் தனிநபர் விவரம் தெரிந்தால்தானே சரியாக கொண்டுபோய் சேர்க்கமுடியும்? என்று கேட்கிறது மத்திய அரசு.
ஆதார் இருக்க என்.பி.ஆர் எதற்கு?
இதற்கான, வேலையைத்தான் ‘ஆதார்’ கார்டு செய்துவருகிறது. 2016-ல் ஆதார் என்பது ஒரு சட்ட ரீதியாக உருவாக்கப்பட்ட அமைப்பு. இதற்கு, மஒஉஆஒ (மய்ண்வ்ன்ங் ஒக்ங்ய்ற்ண்ச்ண்ஸ்ரீஹற்ண்ர்ய் ஆன்ற்ட்ர்ழ்ண்ற்ஹ் ர்ச் ஒய்க்ண்ஹ) என்று பெயர். அதன் வலைதளத்தில், 125 கோடி இந்திய மக்களுக்கு ஆதார் அட்டை கொடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல், அவ்வப் போது அப்டேட்டும் செய்துகொள்ளலாம். அதா வது, ஒருவர் வேறு முகவரிக்கு சென்றுவிட்டால், பெயர் மாற்றிவிட்டால், பிறந்ததேதி இப்படி தனிப்பட்ட விவரங்கள் எதுவாக இருந்தாலும் ஆதாரில் மாற்றிக்கொள்ளமுடியும். அந்த, அடிப்படையில் மக்கள் பலகோடி தடவை மாற்றங்கள்/திருத்தங்கள் செய்திருக்கிறார்கள். அதேபோல், குழந்தை பள்ளித்தேர்வு எழுத ஆதார் வேண்டும் என ஆரம்பித்து வங்கி, கேஸ், சிம்கார்டு, ஃபைனான்ஸ், அட்ரஸ் ப்ரூஃப் ஏ டூ செட் எல்லாவற்றிற்குமே ஆதார் அட்டை ஆதாரமாக பெறப்படுகிறது. இப்படி, பல காரணங்களுக்கு பலகோடி பேரின் ஆதார் அட்டை வெரிஃபி கேஷனுக்காக பயன்பட்டுவருகிறது.
ஆதார் மூலம் ஒவ்வொரு மானியமும் செல்வதால் ஊழலற்ற நிர்வாகம், இடைத்தரகர் களுக்கு வேலையில்லை, நேரடியாக பயனாளி களுக்கு கொண்டுசெல்லப்படுகிறது. வெளிப்படைத் தன்மையும் உள்ளது. அதாவது, பழ்ஹய்ள்ல்ஹழ்ங்ய்ற் ஹய்க் ஸ்ரீர்ழ்ழ்ன்ல்ற்ண்ர்ய் ச்ழ்ங்ங் ஆக்ம்ண்ய்ண்ள்ற்ழ்ஹற்ண்ர்ய் என்று சொல்லிக்கொள்கிறார்கள். மேலும், தற்போது ஆதாரை பான் கார்டோடு இணைக்கவேண்டும் என்றும் சொல்லிவிட்டார்கள். எல்லா வகையிலும் ஆதாரை பயன்படுத்த வைத்துவிட்டது அரசாங் கம். ஆதாரே, யுனிக் ஐ.டி.தானே? அப்படியென்றால், நல்வாழ்வுத்திட்டங்களை கொண்டு செல்ல ஆதார் போதாதா?
2010-ல் என்.பி.ஆர். எடுக்கப்பட்டபோது எதிர்க்காமல் இப்போது எதிர்ப்பது ஏன்? என்று கேட்கிறார்கள்.
தற்போது, அரசின் சில நட வடிக்கைகளின் காரணமாக சந்தேகம் வருகிறது. மேலும், 2010 தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது நமது பெயர்? பிறப்பிடம்? அம்மா பெயர்? அப்பா பெயர்? உள்ளிட்டவைதான் கேட்கப்பட்டது. ஆனால், 2020 தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் நமது அப்பாவோட பிறப்பிடம்? அம்மா வோட பிறப்பிடம் கேட்டால் அரசின் மீது சந்தேகம் எழாமல் இருக்குமா?
“நமக்கான திட்டத்தை உருவாக்கத்தான் நம்மிடம் விவரங்கள் கேட்கிறார்கள் என்றால், நம்மை அடையாளப்படுத்த அப்பா-அம்மா பெயர் கேட்பதிலும் நாம் பிறந்த இடத்தை கேட்பதிலும் நியாயம் இருக்கிறது. நம், அப்பா-அம்மா பிறந்த இடத்தை நம்மிடம் கேட்கவேண்டிய அவசியம் என்ன? இதில்தான், 2020 தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் (என்.பி.ஆர்) சந்தேகம் எழுகிறது'' என மேற்கண்ட விவரங்களை சுட்டிக் காட்டிப் பேசும் பொதுப்பள்ளிக்கான மாநிலமேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு நம்மிடம்,
""தேசிய மக்கள் தொகை பதிவேடு விண்ணப்பத்தின் கடைசியில் "ரிமார்க்ஸ்' என்ற குறிப்பு உள்ளது. அந்த, குறிப்பில் என்ன எழுதப்படும்? நம்முடைய அப்பாவின் பிறப்பிடம் குறித்து சொல்லத்தெரியவில்லை என்றாலோ, அதற்கான சான்று கொடுக்கமுடியவில்லை என்றாலோ ‘ "ரிமார்க்ஸ்'’ என்ற இடத்தில் ‘டவுட் ஃபுல்’ அதாவது சந்தேகம் என்று எழுதப்படுமா இல்லையா? அப்படி, டவுட்ஃபுல் என்று எழுதிவிட்டால் அதனுடைய விளைவு என்னவாக இருக்கும்?
அதாவது, யார் யாருடைய பெயருக்கு பக்கத்தில் டவுட்ஃபுல் என்று எழுதப்பட்டிருக் கிறதோ அவர்களிடம் மட்டும்தான், என்.ஆர்.சி.க் கான விவரங்கள் கேட்கவருவார்கள். இதனை, முதலமைச்சர் ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறார்? என்.பி.ஆரை தமிழக முதல்வர் முடித்துக் கொடுத்துவிட்டால் என்.ஆர்.சிக்கு மாநில அரசிடம் மத்திய அரசு வரவேண்டிய அவசியமே இல்லை. என்.பி.ஆரில் இல்லாத விவரங்களையும் ஆவணங்களையும் என்.ஆர்.சியில் கேட்கும்போது கொடுக்கவில்லை என்றால் அவர் இந்தநாட்டின் குடிமக்கள் அல்ல என்று முடிவு செய்து டிடென்ஷன் செண்டரில் அதாவது முகாமிற்கு கொண்டு போய் வைக்கப்படுவார்களா இல் லையா? அந்த, அச்சம் வரும் போதுதான் குடிமக்கள் திருத்தச் சட்டம் 2019 பதட்டத்தை உருவாக்குகிறது.
இந்திய அரசியலைப்புச் சட்டம் சமத்துவக் கோட்பாட்டை அடிப்படையாக கொண்டது. சமய சார்பற்ற ஜனநாயக குடியரசு என்கிற விழுமியங் களை தாங்கி நிற்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினுடைய நோக்கத்திற்கும் அதன் பிரிவுகளுக்கும் குறிப்பாக சட்டப்பிரிவு 14க்கும் நேர்விரோதமாக குடிமக்கள் திருத்தச்சட்டம் 2019 (சி.ஏ.ஏ) அமைந்துள்ளது.
நாங்கள், தேசிய அளவில் குடிமக்கள் பதிவேட்டை பற்றி இன்னும் யோசிக்கவே இல்லை என்று பிரதமர் முதல் தமிழக முதலமைச்சர்வரை சொல்லுவது உண்மை என்றால் குடிமக்கள் சட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் விதிகளின் அடிப்படையில் எடுக்கப்படும் என்.பி.ஆர் எதற்கு? என்றுதான் கேட்கிறோம்'' என்கிறார்.
நேர்மையாக மக்களிடம் சென்சஸ் சட்டத் தின்படி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துங் கள். தேசிய மக்கள் தொகைப் பதிவேடு எனச் சொல்லி விவரங்களை சேகரித்து தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கான வேலையை செய்தால், மக்களை ஏமாற்றுவதாகத்தான் பொருள் கொள்ளப்படும்.
-மனோசௌந்தர்