"அந்த தெய்வத்தோட, மகானோட கடைக்கண் பார்வை இருந்தாலே போதும், நாம் வாழ்க்கையில் முன்னேறிவிடலாம்'' என அனைவரும் மகான்களை, சித்தர்களை நாடிச் செல்கின்றனர். "மறந்தும் அந்தப் பக்கம் போகாதீங்க. அங்க போனால் உங்களிடம் உள்ளதையும் தொலைத்து அசிங்கப்பட்டுவிடுவீர்கள்' என உதாரணத்துடன் "ஜக்கிக்கு' எதிராக மீம்ஸ்களைப் பறக்கவிடுகின்றனர் வலைத்தளவாசிகள்.
"நாட்டில் கோவில் இல்லையென்றால் பாதிக்குமேல் மனநிலை பாதித்திருப்பார்கள்' என ஒரு சாராரும், "மனிதர்களின் தன்னம்பிக்கை மறைந்ததற்கு காரணம் கோவிலும் கடவுளுமே.?" என மற்றொரு சாரரும் கோவிலை விவாதத்திலேயே வைத்திருக்க... "நான்தான் சிவன்' என தன்னுடைய உருவ அமைப்பை ஒத்த அமைப்பில் ஈஷாவில் சிவன் சிலையை அமைத்து வசூல் வேட்டையில் ஈடுபட்டுவருவது ஜக்கி வாசுதேவின் ஸ்டைல். இருப்பினும், ஜக்கியின் வசூல்வேட்டையில் பணம் போனால் போகட்டும். அந்த நபர் வாழ்க்கையில் நுழைந்தபிறகு எத்தனை பிரபலங்களின் வாழ்க்கை தெருவுக்கு வந்திருக்கிறது தெரியுமா.? கோவை தொடங்கி அமெரிக்கா வரை ஜக்கியின் துரதிர்ஷ்டத்தால் ஏற்பட்ட விளைவுகள் அதிகம் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.
ஜக்கியின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட அந்த பி.ஆர்.ஓ.வோ., "மகா சிவ ராத்திரிக்கு என்னதான் உடுக்கையடித்து, ஒலி ஒளி வெள்ளத்தில் மக்களை உட்காரவைத்தாலும் இந்த வருஷம் வரும் கூட்டம் அடுத்த வருஷம் வராது. ஆகையால் செலிபிரிட்டிகள் வந்தால் மட்டுமே கூட் டத்தை நிலைக்க வைக்க முடியும். அன்றைய தினம் தாண்டி அடுத்துவரும் நாட்களில் கூட்டத்தினைக் கொண்டுவர முடியும். இதுதான் நிரந்தர வருமானத்திற்கு அடித்தளம். செலிபிரிட்டிகளை கூட்டிவாருங்கள். அது நடிகையாக இருந்தால் நல்லது எனக்கூற வருடந்தோறும் சிவராத்திரிக்கு நடிகைகளை அழைத்துவந்தோம். பெரும்தொகை செலவாகும். இருப்பினும் அவர்கள் இங்கு வந்து ஆதியோகி சிலை, தியான லிங்கம், லிங்க பைரவி என அனைத்தையும் சுற்றிப்பார்த்துவிட்டு சத்குரு ஜக்கியைப் பார்க்கும்வரை புகைப்படங்களை வலைத்தளங்களிலும், இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றுவோம். இது ஈஷாவிற்கு நல்ல விளம்பரமாக அமைந்தது. நடிகை சமந்தா இங்கு வந்து லிங்கபைரவியை வணங்கும்போது அதனை புகைப்படமாக எடுத்து, அமைச்சர் சுரேகாவிற்கு எதிராகக் காளியிடம் கோரிக்கை வைத்துள்ளார் எனப் பதிவிட்டோம். அது வைரலானது. இதுதான் ஜக்கியின் மேஜிக். இருப்பினும் இப்பொழுது செலிபிரிட்டிகளை புக் செய்ய சென்றால் "அந்த பக்கம் வேண்டாம்பா' என கையெடுத்து கும்பிட்டு நம்மை வழியனுப்பி வைக்கின்றனர் பல நடிகைகள். ஏனெனில் அந்த UnLucky சமாச்சாரமே" என்கின்றார் அவர்.
தமிழில் டாப் கியரில் இருந்த நடிகை காஜல் அகர்வால் இங்கு வந்து சென்றார். அதன்பின் அவருக்கு எந்த திரைப்பட வாய்ப்பும் அமையவில்லை. சில வெப்சீரீஸ்கள் மட்டுமே அமைந்தது. அதன்பின் திருமணமாகி செட்டிலாகிவிட்டார். நடிகை தமன்னாவுக்கோ ஒற்றைப்பாடலுக்கு ஆட வேண்டிய நிலை. இது இப்படியிருக்க... தமிழ், தெலுங்கில் லைம்லைட்டில் இருந்தவர் நடிகை சமந்தா ரூத் பிரபு. 2017-ஆம் ஆண்டு பலத்த எதிர்ப்புகளுக்கிடையே நாகசைதன்யாவை காதலித்து மணந்துகொண்டார். அதன்பின் ஈஷா சிவராத்திரியில் கலந்து கொண்டவர் அடிக்கடி ஈஷாவிற்கு வருகை புரிந்தார். ஒருகட்டத்தில் கோவை ஈஷா மையத்துக்கு வந்து தியானம் செய்த புகைப்படங் களை வெளியிட்டு, ‘"நம்மில் பலர் குரு அல்லது வழிகாட்டியைத் தேடுகிறோம். உங்கள் வாழ்வை ஒளிரச் செய்யும் தீவிரம், இரக்கம் கொண்டவர் களை கண்டால் அது பாக்கியம். உங்களுக்கு ஞானம் வேண்டுமென்றால் நீங்கள்தான் அதை இவ்வுலகில் தேடவேண்டும். அது சாதாரணமானது அல்ல. அதற்காக கடினமாக உழைக்கவேண்டும்'” என்றார். தொடர்ந்து தன்னுடைய வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் “"வீட்டுக்கு வெளியே இருக்கும் வீடு,’அதாவது தனது மற்றொரு வீடு' என்று பதிவிட்டார். "ஈஷாவிற்கு வந்த பிறகுதான் நாக சைதன்யாவுடன் பிரிவு ஏற்பட்டது. அதனை அவர் இன்றும் உணரவில்லை. இருப்பினும் பழைய லைம் லைட் கிடைக்குமா?'' என்பது பலரின் கேள்வி. இதனையே மீம்ஸாக பதிவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
UnLucky ஜக்கிக்கு எதிராக சமூக வலைத் தளங்களில் வெளியான மீம்ஸ்களில் கங்கனா ரனாவத்தின் மீம்ஸ் சற்று யோசிக்கவைக்கின்றது. தனித்திறமை மிக்கவர், ஆளுமைமிக்கவர், நடிப்பிற்காக தேசிய விருது பெற்றவர் மற்றும் ஜக்கியின் நெருக்கமான தோழிகளில் ஒருவர் என வர்ணிக்கப்பட்டவர் நடிகையும், அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத். ஈஷாவிற்கு வந்து ஜக்கியிடம் நெருக்கம் காட்டிய அவருக்கு மோசமான படமாக அமைந்து அண்மையில் வெளியாகி மண்ணைக் கவ்வியது "எமர்ஜென்சி' திரைப்படம். இது ஜக்கியால் ஆசிர்வதிக்கப்பட்ட படம் என்பதும் குறிப் பிடத்தக்க அம்சமாகும். இந்தியாவில்தான் இந்த UnLucky பிரச்சனை என்றால், வெளிநாடுகளிலும் இந்த பிரச்சனை என்கின்றது அந்த மீம்ஸ்கள்.
UnLucky மீம்ஸ் ஒன்றோ, "பெல்ஜியத்தி லுள்ள டுமாரோலேண்ட் ட்ரீம்வில்லே முகாம் தளம் ஜூலை 17, 2025 அன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. டேவிட் குட்டா, லாஸ்ட் ஃப்ரீக்வென்சிஸ், ஸ்வீடிஷ் ஹவுஸ் மாஃபியா மற்றும் சார்லோட் டி விட்டே உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கலைஞர்கள் நிகழ்ச்சி நடத்தவிருந்த நிலையில் ஜக்கி வாசுதேவும் நிகழ்ச்சி நடத்த உள்ளார் என அறிவிக்கப்பட்டது. 38,000 நபர்கள் விழாவிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜக்கி வாசுதேவின் UnLuckyயால் மேடை எரிந்து சாம்பலானது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நஷ்டம் என அறிவித்தது நிர்வாகம். இது ஜக்கியின் UnLuckyயாலே' என்கின்றது. மற்றொரு மீம்ஸோ, "நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் என பன்முகம் கொண்ட வில் ஸ்மித், ஜக்கி வாசுதேவை 2020 அக்டோபரில் சந்தித்தார். அதன்பிறகு அவர் எங்கு சென்றாலும் பிரச்சனை. 2022-ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் காமெடியன் கிறிஸ்ராக்கை அறைந்து அனைவரின் சாபத்தையும் வாங்கிக்கொண்டார். அதன்பிறகு அவரது திரைப்பட வாழ்வு கேள்விக்குறியானது. இதுவும் ஜக்கியின் UnLuckyயே." என்கிறது.
ஜக்கியைப் பார்த்தால் துரதிர்ஷ்டம், குடும்பப் பிரிவு, பொருளாதாரச் சிக்கல்கள் வரும் என்கின்ற மீம்ஸ்கள் வரிசையில் இன்னொரு சம்பவம் அமெரிக்காவையே திகைக்கவைத்துள்ளது. மிகச்சிறந்த விளையாட்டு வீரராக உலகம் முழுவதும் பிரபலமானவர் அமெரிக்க கால்பந்து வீரர் டாம் பிராடி. இவரை அழைத்துவந்தால் அமெரிக்காவில் ஈஷாவை பிரம்மாண்டப் படுத்தலாம் என டாம் பிராடி குறித்து டுவிட்டரில் அடிக்கடி பதிவிட்டுப் பாராட்டினார் ஜக்கி வாசுதேவ். பினனாளில் நேரடியாகவே சந்தித் தார். விளைவு மனைவி ஜிசெல் புண்ட் சென்னிடமிருந்து விவாகரத்து பெற்றார் அவர். எவ்வளவு ராசியான கை ஜக்கியுடையது! என்கின்றது அது.
கோவையிலுள்ள ஈஷாவிற்கு வந்து தங்களது வாரிசுகளை, குடும்பங்களை, உறவுகளை தொலைத்தவர்கள் ஆயிரக்கணக்கானோர். யாரும் வெற்றிபெற்ற கதைகளை இதுவரை கூறவில்லை. ஏனெனில் ஜக்கி என்றால் UnLucky! UnLucky என்றால் ஜக்கியே!
______________
இறுதிச்சுற்று!
நாடாளுமன்றத்தில் அமளி!
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த 21-ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. மத்திய பா.ஜ.க. அரசின் தூண்டுதலின் பேரில் பீகாரில் நடந்துவரும் வாக்காளர்கள் பட்டியல் திருத் தத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராடிவரு கின்றனர். இந்த போராட்டக் குரல் லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த 5 நாட்களாக இந்த போராட்டக் குரலை எழுப்பிவரும் காங்கிரஸ் தலைமையிலான "இந்தியா கூட்டணி' எம்.பி.க்கள், 28-ந் தேதி திங்கள்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர். பிரியங்கா காந்தி, ஆ.ராசா, ஜோதிமணி உள்ளிட்ட எம்.பி.க்கள் பலர் கலந்துகொண்டு, வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக முழக்கமிட்டனர். அதேசமயம் நாடாளுமன் றத்தில் "ஆபரேசன் சிந்தூர்' குறித்த சிறப்பு விவாதத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், திங்கள்கிழமை காலையில் துவக்கி வைப்பதாக இருந்த நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிரான முழக்கங்களையிட்டு ரகளையில் ஈடுபட்டதால், அவையில் கூச்சலும் குழப்பமும் அதிகரித்தது. இதனால், சிறப்பு விவாதம் தொடங்குவதில் தடை ஏற்பட்ட நிலையில்... இரு அவைகளும் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டன.
-இளையர்