dd

(99) கலையும் கழகமும்!

கொலைக் குற்றத்துக்காக ஒரு ராணுவ வீரன் நீதிமன்ற குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்படுகிறான். அவன் செய்த குற்றம் வாசிக்கப்படுகிறது, வாதிடப்படுகிறது. அது ஈர்ப்க் க்ஷப்ர்ர்க்ங்க் ம்ன்ழ்க்ங்ழ் என சாட்சியங்களை வைத்து நிரூபிக்கப் படுகிறது. நீதிபதி தன் தீர்ப்பை வாசிக்கும் முன் குற்றவாளி ஏதாவது சொல்ல விரும்புகிறாரா எனக் கேட்கப்படுகிறது. கூண்டிலே நிற்பவர் ராணுவ உயரதிகாரிக் கான ஆடைகளோடு, தன் பணிக்கு கிடைத்த பல முக்கியமான பதக்கங்களை அணிந்துகொண்டு மிகக்கம்பீரமாக நிற்கிறார். "கனம் நீதிபதி அவர்களே... என்னை ஒரு ராணுவ வீரனாகத் தேர்ந்தெடுத்த பின்னால், பாரத அரசாங்கம் எனக்கு எல்லாவிதமான பயிற்சிகளையும் அளித்தது. அதில் எதிரிகளை எப்படி அழிக்கவேண்டும் என்ற பயிற்சியும் வழங்கப்பட்டது. தீவிர தாக்குதல் நடந்தால் எதிரிகளை எப்படிக் கொன்று குவித்து நம் பாரதமாதாவை, அதன் மக்களை, அதன் நிலப்பரப்பை எப்படி காப்பாற்ற வேண்டும் என நவீனமயமான பயிற்சிகள் தரப்பட்டன. அதன்படி நானும் பல விரோதிகளை கொன்று குவித்திருக் கிறேன். ஈவிரக்கம் இல்லாத எதிரிகளை, தீவிரவாதி களைக் கொன்று குவித்தபோதெல்லாம் பாரத அரசாங்கம் என்னைப் பாராட்டி இந்தப் பதக்கங் களை என் நெஞ்சிலே அணிவித்து கௌரவித்தது. பல பதவி உயர்வுகளையும் தந்து மகிழ்ந்தது. பாரதத்தாயைக் காப்பாற்றப் போராடிய எனக்குத் தரப்பட்ட பதக்கங்களும், பாராட்டும் எண்ணி லடங்காதவை. இன்றும் என் கண்முன்னே ஒரு காமக்கொடூரன், கல்லூரியில் படிக்கும் ஒரு இளம்பெண்ணை கற்பழிப்பதை நான் பார்த்தேன். அப்போது அந்தப் பெண் என் பார்வையில் பாரதமாதாவாகவும், அந்தக் காமக்கொடூரன் எல்லைதாண்டி வந்த தீவிரவாதியாகவும் என் கண்ணில் பட்டனர். அதைப்பார்த்த என்னால் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்க முடியவில்லை. அவனைக் கொன்று அந்தப் பெண்ணை மீட்பது என் கடமை எனப்பட்டது. என் உறுதிமொழி கவனத்துக்கு வந்தது... அவனைக் கொன்றேன். ராணுவத்தில் நான் எதிரிகளைச் சுட்டு வீழ்த்திய எண்ணிக்கை ஏற... ஏற... என் நெஞ்சில் இந்தப் பதக்கங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இப்போதும் நான் என் கடமையைத்தான் செய்திருக்கிறேன். அதற்காக தாங்கள் எனக்குத் தரப்போவது இன்னும் ஒரு பதக்கமா? அல்லது தூக்குக் கயிறா? எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள நான் தயார். ஒரே ஒரு வித்தியாசம்... போர்க்களத்திலே நான் கொல்லப்பட்டிருந்தால், தியாகி என்ற பட்டத்துடன் தேசியக்கொடியால் போர்த்தப்பட்டு, முப்பத்தாறு குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எரிக்கப்பட்டிருப்பேன். இங்கு அதற்கான வாய்ப்பில்லை... பரவாயில்லை. எனக்கு என் கடமையைச் செய்த மனநிறைவு நிச்சயமாக இருக்கும்''

கோர்ட்டில் அவன் பேசி முடித்ததும் அனைவரும் எழுந்து நின்று கைதட்டுவார்கள்.

Advertisment

-இதுதான் "நீதிதேவன் மயக்கம்' என்ற படத்துக்காக எழுதிய வசனங்கள். இதைப் பேசி நடித்தவர் என் இனிய இளவல் கமல். இந்தக் காட்சியை எழுத எது தூண்டுகோலாக இருந்திருக் கும் என நான் சொல்லவேண்டியதில்லை. என் துரோணரின் பராசக்தியும், கோர்ட்டில் வாதாடும் குணசேகரனும்தான். ஆனாலும் இந்தக் காட்சிக்கும் மக்களிடத்தில் நல்ல வரவேற்பிருக்கிறது.

ss

தாசரி நாராயணராவ் சென்னையில் இருந்தபோதே என்னோடு நன்றாகப் பழகுவார். சில காலம் இயக்குநர் பீம்சிங் அவர்களோடும் உதவியாளராகப் பணியாற்றினார். பின்னர் "மந்திர மூர்த்தி' என்ற என் கதையை இயக்கிய இயக்குந ரிடம் உதவியாளராகப் பணியாற்றினார். சரோஜா தேவி, ஹரிநாத் ஆகியோர் நடித்த அந்தப் படத்தின் இயக்குநர் இடையில் காலமானார். அதை முடித் தவர் தாசரி ஸார். அவரது முதல்படம் "தாத்தா மனவாடு'. இதை தயாரித்தவர் மகா-ங்கபுரம் சரஸ்வதி தெருவில் அலுவலகம் வைத்திருந்த பிரதாப் ஆர்ட் புரொடக்ஷன் கே.ராகவா. இவர்தான் "சூரிய சந்திரலு' படத்தின் மூலம் என்னை தெலுங்கு இயக்குநராக அறிமுகம் செய்தவர். "தாத்தா மனவாடு' படத்துக்குப் பிறகு தாசரி ஸார் தெலுங்குப் படவுலகில் முக்கியபுள்ளி யாக பார்க்கப்பட்டார். தயாரிப்பாளர்கள் இவர் சம்மதத்துக்காக வரிசையில் காத்திருந்தனர். இவர் படங்களும் தொடர் வெற்றியடைந்தன. பெரிய ஹீரோக்கள் கூட இவர் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டினர். நூறு படங்களை இயக்கிய தென்னிந் திய இயக்குநர்களில் முதல் ஆள் இவர்தான். கின்னஸில் இடம் பெற்றார். தென்னிந்திய பி-ம் சேம்பர் தலைவராகவும் இருந்தார்... பெப்சி தலைவராகவும் இருந்தார்.

Advertisment

ஹைதராபாத் போன பின்னால் அரசிய-லும் ஈடுபட்டார். நல்ல பேச்சாளர், பின்னர் காங் கிரஸில் இணைந்து எம்.பி.யானார். அடுத்து மத்திய அமைச்சரானார். என்னிடம் எப்போதும் ஒரு தனிப்பாசம் கொண்டவராக இருந்தார். "சூரியகாடு', "கொண்டப்பள்ளி ரத்தையா' ஆகிய இரு படங்கள் இவருக்காக நான் எழுதிய படங்கள். அந்த ஷூட்டிங் நேரத் தில் அவரோடு இருக்கும்படி கேட்டுக்கொண் டார், இருந் தேன். தினமும் மூன்று வேளை யும் சாப்பாடு என்று சொல்ல முடியாது. மூன்றுவேளையும் நான்-வெஜிட்டேரியன் விருந்து தான். என் "மைக்கேல்ராஜ்' கதையை நான் எல்லா மொழிகளிலும் இயக்கு வதாகத்தான் ராமாநாயுடுவோடு என் ஒப்பந்தம். ஆனால் தாசரி ஸார், தெலுங்குப் படத்தை வெங்கடேஷை வைத்து தானே இயக்க விரும்புவ தாகக் கேட்டார். மறுப்பே பேசாமல் கொடுத்தேன். "பிரம்ம புத்ருடு' தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்க வெள்ளிவிழா கண்டது.

அவருக்கு கிடைத்த மரியாதை, பதவிகள், அந்தஸ்து, அரசியல் அனைத்தும் தமிழ்நாட்டில் நிச்சயமாக எனக்கும் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் என்னைப் பிழிந்தெடுத்து சக்கையாகத் தூக்கியெறிந்தார்கள். அல்லது ஏறி மிதித்து பலர் மேலே ஏறிப் போனார்கள். நான் சிரமப்பட்டு தயாரித்த பல படங்களை அஞ்சுக்கும், பத்துக்கும் ஆயுள்காலத்துக்கும் வாங்கி வைத்துக்கொண்டு சம்பாத்தியமே பெரிதென வாழ்கிறார்களே தவிர, இதை உருவாக்க இவன் எவ்வளவு சிரமப்பட்டிருப்பான் என்பதை சிந்திக்கவே மறுக்கிறார்கள். "ஏங்க இப்படி?'ன்னு கேட்டால், எல்லாரும் ஒரே மாதிரி பதிலையே சொல்கிறார்கள். "ஏமாற்றுவது என் தொழில், நீங்க ஏன் ஏமாறுறீங்க?' இதுதான் ஒரே பதில். வா-ப வயதில் போகட்டும் என அமைதியாக இருந்தேன். இனி இந்த எண்பது வயது இளைஞன் ஏமாற மாட்டான். நான் சிவன் மகன் குகன். என் எழுத்துக்கள்... புதிய, படித்த, கற்பனை வளமுள்ள இளைஞர்கள் துணையோடு எல்லா திரைகளிலும் அரங்கேறும். அப்போது தெரியும் இது எ- அல்ல பு- என்று. என் ஏ.சி.சி. சேனல் ஆரம்பித்து ஒரு வருடம் கூட ஆகவில்லை. அறுபது லட்சம் பார்வையாளர்கள். Just wait... These are only rehersals. Main picture yet to come. Don't ever underestimate the power of a common man..

இந்த நாலு வருடங்களுக்குள் நடந்த நல்ல விஷயங்கள்... என் மனைவி சுங்குவார்சத்திரத்தின் அருகே ஒரு தோட்டம், அதில் ஒரு வீடு, ஒரு மினரல் வாட்டர் கம்பெனி நடத்திவருகிறார். பத்து வருடங்களாக நடந்துவரும் அந்த கம்பெனியி-ருந்து மாதாமாதம் நமக்கு அந்த மாதத்துக்கான செலவுக்கான பணம் வந்துவிடும். மூன்று வருடங்களுக்கு முன்னர் மொத்த பாக்டரியும் களவாடப்பட்டதுடன், அடித்து நொறுக்கப்பட்டது. உடனே புகார்கள் மாண்புமிகு முதல்வர் அலுவலகத்தி-ருந்து, உள்ளூர் போலீஸ்வரை கொடுக்கப்பட்டது. விசாரணை செய்ய பெண் போலீசார் வந்தனர். உயர் போலீஸ் அதிகாரிகள் போனில் அக்கறையோடு விசாரித்தனர். அதன்பின் இன்றுவரை எதுவும் நடக்கவில்லை. மனைவியின் வாட்டர் கம்பெனி மூன்றரை வருடங்களாக மூடிக் கிடக்கிறது... மொத்தமும் நஷ்டம். பின்னர் கலைஞர் நூற்றாண்டு மகளிர் விருதுக்கு என் மனைவியை விண் ணப்பிக்கச் சொன்னார்கள். அவரும் ஓடி, ஓடி பழைய போட் டோக்களைத் தேடி, விவரங்களைச் சேகரித்து விண்ணப்பம் செய்தார்... அவ்வளவுதான்! அடுத்து இயல், இசை, நாடக மன்றத் துக்கு சென்று "கலைமாமணி' விருதுக்கு விண்ணப்பித்தார்.

பத்து நாட்கள் முன்பு மனைவியின் செல்போனை ஹேக் பண்ணிட்டாங்க. அதன்மூலம் அவ வங்கியி-ருந்து பணத்தையும் திருடிட்டாங்க. தெரிந்த வக்கீல் மூலம் சைபர் க்ரைமுக்கு ஆன்லைனில் கம்ப்ளைண்ட் கொடுத்தா... இதுவரை எந்த நடவடிக்கையுமே இல்லை. நூறு படங்களுக்கு மேல் நாயகியாக நடித்தவர். ஜனாதிபதி பரிசு வாங்கியவர்... அவருக்கே இந்த நிலைமை?

(வரும் இதழில் நிறைவடையும்...)

படம் உதவி: ஞானம்