சினிமா கொட்டகை! டைரக்டர் -ரைட்டர் வி.சி.குகநாதன் (97)

ss

ck

(97) லட்ச ரூபாய் கதை!

ரு பிரபல தெலுங்கு தயாரிப்பாளர், ஆந்திராவின் அன்றைய சூப்பர் ஸ்டார்ஸ் ராமாராவ் மற்றும் நாகேஸ்வரராவ் இருவரிடமும் பேசி, பதினோரு வருடங்களுக்குப் பின்னால் ஒரு சமூக கதையில் மீண்டும் இணைந்து நடிக்க சம்மதம் பெற்றார். ஆனால் கதை இருவருக்கும் பிடிக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் தயாரிப்பாளர் கதைக்காக அலைந்தார்... கிடைக்கவில்லை. ஒரு நாள் திடீரென என் அலுவலகம் வந்தார். அந்தக் காலகட்டத்தில் நான் பிஸி. இருப்பினும் வந்தவர் பெரிய தயாரிப்பாளர் மட்டுமல்ல, மிகவும் நல்லவர். அவர் இரு நாயகர்களுக்கு கதை வேண்டுமென்றார். சில நிமிடங்கள் சிந்தித்தேன். இரு வரையும் திருப்திபடுத் தும் விதமாக கதையை ரெடி பண்ணுவது சுலபமான விஷயமல்ல. அப்பல்லாம் கலைஞர் மட்டும்தான் படத்துக்கு லட்ச ரூபா பெறுபவர் எனச் சொல்லுவார்கள். அதையே நானும் கேட்டேன். இருவரும் கதையை ஓ.கே. செய்ததும் எனக்கு லட்ச ரூபாய் தரவேண்டும் எனக் கேட்டேன்... அவர் சம்மதித்தார். "கதை எப்போது சொல்ல முடியும்' எனக் கேட்டார். ஒரு வாரத்தில் தயார்பண்ணிவிடுவதாகச் சொன்னேன், ஒப்புக் கொண்டார். இது வெறும் பணத்துக்கான வேலையல்ல. ஒரு எழுத்தாளனுக்கான சவால். ஈசன் அருளால் இன்றுவரை எந்தக் கதையையும் யாரும் வேண்டாமெனச் சொன்னதில்லை. ஒருவாரம் கழித்து தயாரிப்பாளரிடம் கதைûயைச் சொன்னேன். அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஹைதராபாத் சென்று ராமாராவின் ராமகிருஷ்ணா ஸ்டுடியோவில் அதிகாலை ஐந்துமணிக்கு அவருக்கு கதை சொல்ல ஆரம்பித்தேன். இன்டர் வெல் வரை சொன்னபோது, ஒரு அழகான இளை ஞர் இரண்டு, மூன்று டிபன் கேரியர்கள் அடங்கிய கூடையை தூக்கிக்கொண்டு உள்ளே வந்தார்.

"குகநாதன்காரு என் சாப்ப

"குகநாதன்காரு என் சாப்பாடு வந்தாச்சு... சாப்பிட்டிட்டு மீதியைக் கேட்கலாமா?'' என்று கேட்டார். அந்தப் பண்புக்கே நான் தலையாட்டித் தான் ஆகணும். கூச்சப்படாமல் கோழி, மட்டன், முட்டை, காய்கறி சகிதம் ஃபுல் மீல்ஸ் சாப் பிட்டார். அப்போதுதான் அப்பாவுக்கு சாப்பாடு கொண்டு வந்தது அவர் கடைசி மகன் பால கிருஷ்ணா எனத் தெரிந்துகொண்டேன். அச்சமயம் கனவில் கூட நினைக்கவில்லை... நான் பிற்காலத்தில் அவருக்கு கதைகள் எழுதுவேன் என்று.

மறுபடி ராமாராவ் ஸார் வந்தமர்ந்தார் கதை கேட்பதற்கு. அப்போது அவர் ஒரு தகவலைச் சொன்னார். அதைக் கேட்டதும் நான் அதிர்ந்து போனேன். அவர் அதிகமாக புராணப் படங்களில் ராமர், கிருஷ்ணர், கண்ணன், கர்ணன், துரியோ தனன் போன்ற வேஷங்களில்தான் நடிப்பார். அந்த வேஷம் போட்டு தயாராக எப்படியும் இரண்டு மணி நேரத்துக்கு மேலாகும். அந்தக் காலத்தில் புஜம், கை, கால், நெஞ்சு, இடுப்பு, கழுத்து, வயிறு எல்லா இடத்துக்கும் நகைகள், கவசங்கள் மாட்டவேண்டும். அவை தகரம்போல் இறுக்கமாக கட்டினால் உடலின் சதையை வெட்டும். கிரீடம் செம பாரம். இதையெல்லாம் போட்டுக்கொண்டு "கதை' (கதாயுதம்) போன்ற ஆயுதங்களை தூக்கி சண்டை வேறு போடவேண்டும். அது சாதாரண விஷயமில்லை. அவர் இதையெல்லாம் அணிந்து கொண்டு எட்டரை மணிக்கெல்லாம் செட்டில் ஆஜராகிவிடுவார். லஞ்ச் பிரேக் நேரத்தில் இதையெல்லாம் கழட்டிவிட்டு சாப்பிட்டுவிட்டு மறுபடி மாட்ட வேண்டுமானால் குறைந்தபட்சம் மூன்று மணி நேரமாகும். அதனால் மதியம் ஏதாவது குடிப்பார்... சாப்பிடமாட்டார். அது மட்டுமல்ல, இந்த நகைகளை அணிந்துவிட்டால் குனிந்து, நிமிர்ந்து, வளைந்தெல்லாம் உட்கார முடியாது. சதையை வெட்டிவிடும்... அதனால் எப்போதும் நிமிர்ந்தே உட்காரவேண்டும். அவர் அணியும் அந்த நகைகள் குறைந்தபட்சம் முப்பது கிலோ இருக்கும். அதனால் மாலை ஆறுமணிக் கெல்லாம் படப்பிடிப்பை முடித்துவிடுவார். இரவு ஒன்பது மணிக்கு முன் படுக்கப் போய்விடுவாராம். அதனால் அவரின் மதிய போஜனம் காலை ஐந்தரை மணி என வழக்கமாகிவிட்டது. அவரது புன்னகை எப்போதும் அழகாயிருக்கும். அவர், நான் எப்ப போனாலும் "பிரதர்காரு எலா உன்னாரு?'' எனக் கேட்கத் தவறுவதேயில்லை. எம்.ஜி.ஆர். மீது அவ்வளவு பிரியம் உள்ளவர். இதில் இன்னொரு விஷயம் எம்.ஜி.ஆருக்கும் இவருக்கும் ஒரே ஒப்பனையாளர்தான். அவர்தான் பீதாம்பரம் ஸார். நம்ம இயக்குநர் வாசுவின் தந்தையார்.

ck

ராமாராவ் ஸார், பின்னர் கதையின் இரண்டா வது பகுதியையும் கேட்டுவிட்டு என்னைப் பாராட்டினார். தயாரிப்பாளரிடம் "ஓ.கே.' சொன் னார். இன்னும் ஒன்றையும் சொன்னார். "எனக்கு பூரண சம்மதம்... ஆனால் இந்தக் கதையிலே அவருக்கு என்ன இருக்கு? சம்மதிப்பாரா? கதை யைச் சொல்லி அபிப்பிராயத்தை தெரிஞ்சுக்குங்க'' என்றார். அன்றே பதி னோரு மணிக்கு நாகேஸ்வரராவுக்கு கதை சொல்லப் போனோம். அவர் கதையை கேட்டு, என்னைப் பாராட்டி விட்டு தயாரிப்பாளரிடம், "இதிலே பிரதருக்கு என்ன இருக்கு? அவர் சம்மதிப்பாரா? போய் முதல்ல அதைத் தெரிஞ்சுக்குங்க'' என்றார். முதல்லே அவர்கிட்ட கதையைச் சொல்லிவிட்டு வந்தோம்னு தயாரிப்பாளர் சொல்லவே... நானும் வாயைத் திறக்கவில்லை. மகிழ்ச்சியிலிருந்த தயாரிப்பாளர், சென்னை வந்ததும் எனக்கு லட்ச ரூபாயைத் தந்துவிட்டார். இது ஒரு சாதனை என்றே எனக்குத் தோன்றியது. இந்த சேதி ஊடகங்கள் மூலம் பரவியதும், எனக்கு பாராட்டுக்கள் குவிந்தன.

சென்னை வந்த பின்னால் பாலாஜி என்னை சந்திக்க வந்தார். "அந்தக் கதையை எனக்குச் சொல்ல முடியுமா?' என்று கேட்டார். அவரின் திட்டம் எனக்குத் தெரியாது. ஓரளவு புரியும்படி யாக முழு திரைக்கதையையும் சொல்லாமல் அவுட்லைனை மட்டும் சொன்னேன், பாராட்டினார்.

ராமாராவ், நாகேஸ்வரராவ் நடித்த ஷூட்டிங்கிற்கு என்னால் போகமுடிய வில்லை. எழுத்துப் பணி, இயக்கும் பணி, தயாரிப்பு என பல கம்பெனிகளின் வேலை. படம் முடிந்ததும் போட்டுக் காட்டினார் கள். இரு பெரும் ஹீரோக்கள் என்பதால் ஒன்பதுக்கு மேல் பாடல்கள். அவர், இவ ரைப் புகழ... இவர், அவரை பதிலுக்குப் புகழ... நிறைய அனாவசிய வசனங்கள் படத்தின் வேகத்தை இது குறைத்து விட்டது. ஆனாலும் படம் வெள்ளிவிழா கண்டது. இதற்குள் "ரீமேக்' மன்னன் பாலாஜி இந்தப் படத்தை எம்.ஜி.ஆர். -சிவாஜி இருவரையும் நடிக்க வைத்து எடுக்கத் திட்ட மிட்டுவிட்டார். படத்தை வாங்கவும் பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டார். திடீரென எனக்கு எம்.ஜி.ஆரிடமிருந்து அழைப்பு வந்தது, போனேன். "இந்தக் கதை உங்களது தானா?'' என்று கேட்டார். இதைவிட பலமடங்கு நல்ல படங்களில் நீங்கள் நடித்துவிட்டீர்கள் என வெளிப் படையாகச் சொன்னேன். மறுநாள் முன்பணத்தோடு போன பாலாஜியை, வேறு படம் பண்ணலாம் என்று சொல்லி, திருப்பியனுப்பிவிட்டார் எம்.ஜி.ஆர்.

'பர் ப்ங்ஹழ்ய் ஈண்ய்ங்ம்ஹ ஹ்ர்ன் ம்ன்ள்ற் ள்ங்ங் ம்ர்ழ்ங் ய்ன்ம்க்ஷங்ழ் ர்ச் ல்ண்ஸ்ரீற்ன்ழ்ங்ள்' என என் தலையில் ஏறும்விதமாக சிறுவயதில் யாரோ சொன்னது... அதை இன்றுவரை கடைப்பிடித்து வருகிறேன்.

ck

படம் பார்ப்பது என்பது எனக்கு பைத்தியம் போல ஆகிவிட்டது. புதிய தெலுங்குப் படங்கள் வந்தால் திருப்பதிக்குப் போய் பார்த்துவிடுவேன். ராமாராவ் நடித்த படமொன்று ரிலீஸ் எனத் தெரிந்ததும் காரில் திருப்பதி போனேன். விநியோகஸ்தர்கள் அலுவலகம் போய் டிக்கெட் ஏற்பாடு செய்து படம் பார்த்தேன். பிளாக் அண்ட் ஒயிட் படம்தான். ஆனால் கதை சூப்பர். அதை யாராவது வாங்கி தமிழில் எடுத்தால், அதில் எம்.ஜி.ஆர். நடித்தால் நிச்சயம் வெற்றிவிழா ஓடும் என எண்ணினேன். அதே எண்ணத் தோடு சென்னை திரும்பிய நான், எம்.ஜி.ஆரை சந்தித்து, "கதாநாயகுடு' என்ற அப்படத்தின் கதைக் கருவைச் சொன் னேன். தன்னிடம் வேறு யாரோகூட இந்தப் படத்தைப் பற்றிச் சொன்னதாகச் சொன்ன அவர்... "ஏற்பாடு பண்ண லாம்'' எனச் சொன்னார். சில நாட்கள் கழித்து பத்திரிகை யில் சேதி பார்த்தேன். நாகிரெட்டியார் தயாரிப்பில் எம்.ஜி.ஆர். -ஜெயலலிதா நடிக்கும் "நம் நாடு'. இது "கதா நாயகுடு' படத்தின் ரீ-மேக் என்று. படம் சூப்பர் ஹிட். அதேபோல் என்.டி.ஆர். சொந்தப் படம்... "மதுரை வீரன்' இயக்குநர் டி.யோகானந்த் இயக்கத்தில் தெலுங்கில் வெள்ளிவிழா கண்ட படம். படத்தின் பெயர் "உம்மிடி குடும்பம்'. எனக்கு மிகவும் பிடித்த குடும்பப் படம். எம்.ஜி.ஆர். நடித்தால் சூப்பரா வரும் என ஏவி.எம்.மில் வாங்க வைத்தனர். தமிழ் திரைக்கதை -வசனத்தை நான் எழுதினேன். ஆனால் படம் டேக்ஆஃப் ஆகவில்லை.

ஒருசில வருடங்கள் முன்னால் ராஜ்கிரண், இன்னும் பல பிரபலங்கள் நடிக்க "எம்.ஜி.ஆர். இல்லம்' என்ற ஒரு படத்துக்கு ரிக்கார்டிங்கோடு பூஜை போட்டேன். எம்.எஸ்.வி. தொடர்ந்து ஏழு அருமையான பாடல்களை ஒலிப்பதிவு செய்து தந்தார். ஒருசில அரசியல் காரணங்களுக் காக அது தொடர முடியாத நிலை ஏற்பட்டது. ஏகப்பட்ட பணம் முடங்கியது. ஆனால் இந்தக் கதையை எப்ப எடுத்தாலும் எம்.ஜி.ஆர். கட்சிக்கு ஆதரவை திருப்பிவிடும் என்பது நிஜம்.

(திரை விரியும்...)

படம் உதவி: ஞானம்

nkn140625
இதையும் படியுங்கள்
Subscribe