(93) கெடுக்கிற கோபமல்ல... கொடுக்கிற கோபம்!
"மைனர் மாப்பிள்ளை', "அட்ரா சக்கை... அட்ரா சக்கை...'. முன்னது நூறாவது நாள் விழா, இரண்டாவது படத்துக்கான தொடக்க விழா ஏவி.எம். சரவணன் ஸார் தலைமையில், பிலிம் சேம்பர் தியேட்டரில்! எப்போதும் போல் சரவணன் ஸார் பேசும்போது, "குகநாதன் மிகவும் திறமைசாலி. அவரது முன்கோபம் மட்டும் இல்லாதிருந்தால் அவர் சாதனையாளர் பட்டியலில் முன்னணியில் இருந்திருப்பார்'' என்றார். நடிகர் பாண்டியராஜன் பேசும்போது, "அவரது பல படங்களை வியந்து பார்த்தவன் நான். "தனிக்காட்டு ராஜா', மைக்கேல்ராஜ்' என்னை சிலிர்க்க வைத்த படங்கள். அவர் எம்.ஜி.ஆரோடு நெருக்கமாகப் பழகுவார் என்பதெல்லாம் தெரியும். ஆனால் ஒரு விஷயம் பலபேருக்குத் தெரியாது. நான் இந்த பங்ஷனுக்கு புறப்படும்முன் என் உதவியாளர்களிடம் பேசுகிக்கொண்டிருந்தேன். அதில் அழகுசுந்தரம் என்ற உதவியாளர் ஒரு விஷயத்தைச் சொன்னார். என்னிடம் சேருமுன் சில வருடங்களுக்கு முன்பாக குகநாதன் ஸார்கிட்ட உதவியாளரா சேர வாய்ப்புக் கேட்டு போனாராம். "மிக சிறு வயசா இருக்கே... ஏன் படிக்கலையா?, படிப்பு வரலையா?' என்று கேட்டாராம். இவர், "பச்சையப்பன் கல்லூரியிலே பி.காம் சேர்ந்தேன், குடும்ப சூழ்நிலையில் எதிர்பாராத சரிவு ஏற்பட்டதால் படிப்பைத் தொடர முடியலே' என்று சொன்னதும், "முதல்ல பி.காம். படிச்சு முடிச்சுட்டு வாங்க. முழு செலவையும் நான் ஏத்துக்கிறேன்'னு சொல்லி... என்னை பட்டதாரி ஆக்கியது அவர்தான்' எனச் சொன்னார். இன்னும் பலபேர் எங்கிட்ட குகநாதன் ஸார் செய்த உதவிகளைப் பற்றி சொல்லியிருக்காங்க. எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அவர், தன்னை ஆளாக்கியவரின் குணநலன்களோடு வாழ்வது மிக நல்ல விஷயம்'' எனப் பேசி முடித
(93) கெடுக்கிற கோபமல்ல... கொடுக்கிற கோபம்!
"மைனர் மாப்பிள்ளை', "அட்ரா சக்கை... அட்ரா சக்கை...'. முன்னது நூறாவது நாள் விழா, இரண்டாவது படத்துக்கான தொடக்க விழா ஏவி.எம். சரவணன் ஸார் தலைமையில், பிலிம் சேம்பர் தியேட்டரில்! எப்போதும் போல் சரவணன் ஸார் பேசும்போது, "குகநாதன் மிகவும் திறமைசாலி. அவரது முன்கோபம் மட்டும் இல்லாதிருந்தால் அவர் சாதனையாளர் பட்டியலில் முன்னணியில் இருந்திருப்பார்'' என்றார். நடிகர் பாண்டியராஜன் பேசும்போது, "அவரது பல படங்களை வியந்து பார்த்தவன் நான். "தனிக்காட்டு ராஜா', மைக்கேல்ராஜ்' என்னை சிலிர்க்க வைத்த படங்கள். அவர் எம்.ஜி.ஆரோடு நெருக்கமாகப் பழகுவார் என்பதெல்லாம் தெரியும். ஆனால் ஒரு விஷயம் பலபேருக்குத் தெரியாது. நான் இந்த பங்ஷனுக்கு புறப்படும்முன் என் உதவியாளர்களிடம் பேசுகிக்கொண்டிருந்தேன். அதில் அழகுசுந்தரம் என்ற உதவியாளர் ஒரு விஷயத்தைச் சொன்னார். என்னிடம் சேருமுன் சில வருடங்களுக்கு முன்பாக குகநாதன் ஸார்கிட்ட உதவியாளரா சேர வாய்ப்புக் கேட்டு போனாராம். "மிக சிறு வயசா இருக்கே... ஏன் படிக்கலையா?, படிப்பு வரலையா?' என்று கேட்டாராம். இவர், "பச்சையப்பன் கல்லூரியிலே பி.காம் சேர்ந்தேன், குடும்ப சூழ்நிலையில் எதிர்பாராத சரிவு ஏற்பட்டதால் படிப்பைத் தொடர முடியலே' என்று சொன்னதும், "முதல்ல பி.காம். படிச்சு முடிச்சுட்டு வாங்க. முழு செலவையும் நான் ஏத்துக்கிறேன்'னு சொல்லி... என்னை பட்டதாரி ஆக்கியது அவர்தான்' எனச் சொன்னார். இன்னும் பலபேர் எங்கிட்ட குகநாதன் ஸார் செய்த உதவிகளைப் பற்றி சொல்லியிருக்காங்க. எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அவர், தன்னை ஆளாக்கியவரின் குணநலன்களோடு வாழ்வது மிக நல்ல விஷயம்'' எனப் பேசி முடித்தார்.
கூட்டம் தொடர்ந்து நடந்துகொண்டேயிருந் தது. பல வி.ஐ.பி.க்கள் பேசினார்கள். ஆனால் என் சிந்தனை எம்.ஜி.ஆர். பற்றி நினைக்க ஆரம்பித்தது. என்னைப்போல் எத்தனை இளைஞர்களை உருவாக்கியிருக்கிறார். எத்தனைபேரை படிக்க வைத்து அரசியலுக்கு வரவைத்து கழகத்துக்கு வலு சேர்த்திருக்கிறார். எத்தனை லட்சம் ஏழை -எளிய மக்களுக்குத் தன் படங்கள் மூலம், பாடல்கள் மூலம், பகுத்தறிவையும், சமதர்மம், சமூகநீதியையும் வளர்த்திருக்கிறார். அநீதியை எதிர்க்கும் தைரியத்தை இளைஞர்களிடம் வளர்த்திருக்கிறார். அண்ணாவைப்போல் நாகரிக அரசியலைச் செய்தவர்... கட்சி பேதங்களைத் தாண்டி அனைவரும் போற்றிப் பாராட்டும்விதமாக வாழ்ந்து காட்டியவர்.
எந்த தலைவரைச் சொன்னாலும் அவர்போல் இன்னொருவர் தோன்றுவாரா எனக் கேட்டால், அதற்கான வாய்ப்பு இல்லை என உறுதியாகச் சொல்லிவிட முடியாது. தோன்ற வாய்ப்புகள் ஏராளம் என அடித்துச் சொல்லிவிட முடியும். ஆனால் ஒரே ஒரு தலைவரின் பெயரைச் சொல்லி, இவரைப்போல் இன்னொருவர் தோன்றுவாரா எனக் கேட்டால், நிச்சயமாக வாய்ப்பில்லை என உறுதியாகச் சொல்லிவிட முடியும். யார் அத்தகைய தலைவர்?
இந்திராகாந்தி, காமராஜர், கிருபானந்த வாரியார், உலகத் தமிழர்களின் உன்னதத்தலைவர் பிரபாகரன் உட்பட அனைத்து இதயங்களின் பற்றையும், பாராட்டையும் பெற்றவர் எம்.ஜி.ஆர். இவரைப்போல் இன்னொருவர் வருவாரா எனக் கேட்டால்... இல்லை என்றே என் பதில் இருக்கும். அதற்கான காரணங்களை விளக்கிச் சொல்கிறேன்.
நிழல் எங்கேயாவது நிஜமாவதைக் கண்டதுண்டா? அது காணக்கூடிய காட்சியா? இவர் அதை நடத்திக் காட்டினார். தன் "நாடோடி மன்னன்' படத்தில் நிழல் மன்னனாகத் திரையில் , தான் சார்ந்த கட்சியின் கொள்கைகளை பிரகடனப்படுத்திய அவர், பின்னாளில் கோட்டை யைப் பிடித்து மாநில முதல்வராகி அந்தக் கொள்கைகளை அமல்படுத்தி மக்களிடம் நன்மதிப்பை மேலும் பெருக்கிக்கொண்டார். ஒரே நேரத்தில் இரட்டைக் குதிரைகளில் லாவகமாக பயணப்பட்டு, இரண்டு பக்கமும் வெற்றிச் சக்கரவர்த்தியாக பவனிவந்தார். "அரசியலில் தோற் கடிக்க முடியாத ஒரு தலைவனாக இறுதி மூச்சு வரை இருந்தார். தன் தலைவரின் இதயக்கனியாக இருந்த எம்.ஜி.ஆர்., மக்களின் இதயங்களில் இதய தெய்வமாக வாழ்ந்தார்... இன்னமும் வாழ்கின்றார். வள்ளலாக வாழ்ந்த அவர் என்ன தானதர்மங் களைச் செய்தார் என்பதை இன்றுவரை பட்டியல் போட முடியவில்லை. புதிது புதிதாக ஒவ்வொரு சேதியும் இன்னமும் வந்துகொண்டுதானிருக்கிறது. குக்கிராமங்களில் கூட அவரது தான தர்மங்கள் அன்றே போய்ச் சேர்ந்திருக்கிறது. அந்த நன்மைகளைப் பெற்றவர்களின் பிள்ளைகளோ, பேரப்பிள்கைகளோ இப்போது சொல்லும்போது கேட்பதற்கு நமக்கே வியப்பாக இருக்கிறது. எம்.ஜி.ஆர். என்ற மனிதர் ஒரு இறைதூதராகவே இருந்திருக்கிறார் எனப் புரிகிறது. அவருடைய கோபம்கூட கெடுக்கிற கோபமாக இருக்காது' என கா.காளிமுத்து எழுதியுள்ளார். "கொடுத்ததனால் வாழ்கின்றார்... இன்றும்கூட கொற்றவராய் எம்.ஜி.ஆர் என்னும் மன்னர்' எனச் சொன்னார் நெல்லை கண்ணன்.
ஒரு விபத்தென்றால்... பட்டவர் துன்பங்களைச் சுமப்பார். வெறுத்து ஒதுக்கினால் ஒதுக்கப்பட்டவர் தனி மரமாக தவிப்புக்கு ஆளாவார். கொலை முயற்சி நடந்தால்.. அதன் பின் மீண்டு வருவதற்கு பகீரத பிரயத்தனம் தேவை. எம்.ஜி.ஆர். கால்முறிந்து, திரையுலகில் பலர் அவர் கதை முடிந்தது என்றனர்.
அவரோ, முன்னைவிட அதிவேகத்தோடு வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறினார். கட்சிப் பொரு ளாளரான அவரை தூக்கி வெளியே வீசினார்கள். வீசியது தலைவர்கள்... தாங்கிப்பிடித்தவர்கள் தொண்டர்கள். அவர்களே ஒரு கட்சியை ஆரம்பித்து இவரை தலைவர் என்றார்கள். இவர் வீட்டுக்குள் நுழைந்து, பிறரால் தூண்டப்பட்டு வந்த ஒரு நடிகர் இவரை துப்பாக்கியால் சுட்டார். மாவுக்கட்டோடு மருத்துவமனையில் அவர் இருக்கும் படம் தமிழகம் எங்கும் ஒட்டப்பட்டது. தேர்தலில் அவர் சார்ந்த கட்சி ஆட்சியைப் பிடித்தது. பல ஆயிரம் நற்செயல்கள் அவரது வாழ்க்கையில். இப்போது சொல்லுங்கள்... இவர்போல் ஒரு தலைவர் பிறந்து வருவது சாத்தியமா?
(திரை விரியும்)
கண்ணியமும் காவல்துறையும்!
என் வயது காரணமாக.. சீட் பெல்ட் மாட்டிக்கொண்டு வண்டி ஓட்டினால் சற்று மூச்சுத் திணறும். இப்பல்லாம் அதிக தூரம் வண்டி ஓட்டுவது கிடையாது. கடைக்கு, ஸ்கூலுக்கு, தம்பி வீட்டுக்கு, கோயி லுக்கு அவ்வளவுதான். ஆனாலும் சில இடங்களில் காவல்துறையினர் நிறுத்துவார்கள். விளக்கி சொல்லி... டாக்டர் சர்டிபிகேட் காட்டியதும் போகச் சொல்வார்கள். அண்மையில் என் வீட்டிலிருந்து மெயின்ரோட்டில் வண்டி வந்ததும் ஒரு புது ஆபீசர், சில போலீஸ்காரருடன் நின்றிருந்தார். அவர் என் வண்டியை மறித்தார். நான் டாக்டர் தெரிவித்ததைச் சொன்னேன். "நான் அதற்காக நிறுத்தவில்லை. உங்கள் வண்டிக்கு இன்சூரன்ஸ் இல்லை'' என்றார். "நான் கவனிக்க வில்லை... ஸாரி...'' என்றேன். "போங்க...'' என்றார்.
இரண்டு நாட்கள் கழித்து மறுபடியும் வண்டியை நிறுத்தினார். வண்டியை ஓரமாக நிறுத்தச் சொல்லி என்னை இறங்கி வரச்சொன்னார். இறங்கிப் போனதும், "உங்க பெயரென்ன?'' எனக் கேட்டார். பெயரைச் சொன்னதும், "செல் போனை கொடுங்க'' எனக் கேட்டு வாங்கி ஃபேஸ்புக்கை பார்த்தார். "அட எம்.ஜி.ஆர்., ரஜினி, அமிதாப் கூட இருக்கிறார்...'' என மற்ற போலீஸ் காரரிடம் சொன்னார். இதற்குள் கூட்டம் சேர்ந்தது. அவருக்கு நான் குகநாதன்தானா என்பதில் சந்தேகம். மீண்டும் ஒருநாள் என் மனைவி யோடு மெயின்ரோடில் ஏறியதும், தன் கான்ஸ்டபிளிடம் சைகை செய்து, என் வண்டியை மடக்கச் சொன்னார். "பெரிய ஆளுன்னு பெருசா பேசுனீங்க. இன்சூரன்ஸ் எடுக்கலே. ஃபைன் எவ்வளவு தெரியுமா? நாலாயிரம்'' என்றார். "இப்ப நான் டாக்டர்கிட்ட போய்க்கிட்டிருக்கேன். போகவா?'' எனக் கேட்டேன். ரொம்ப அலட்சியமாக போகும்படி கையைச் காட்டினார். பலர் இதைப் பார்த்தனர்.
ஒருவாரம் கழித்து வேறொரு ஆபீசர் என் அலுவலகம் வந்தார். என் இன்சூரன்ஸ், லைசன்ஸ் ரினீவல் எல்லாவற்றையும் ஒரு கவரோடு என்னிடம் தந்தார். "என்ன இதெல்லாம்?'' என்று கேட்டேன். "ஏழு முதல்வர்களோடு பணியாற்றியவர் நீங்கள். ஒன்பது இந்திய மொழிகளில் படங்கள் செய்தவர். பல போராட்டங் களை நடத்தியவர். "பெப்சி' தலைவர், அகில இந்திய திரைப்பட தொழிலா ளர் மன்ற செயலாளர், எல்லாத்துக்கும் மேலாக என் தந்தைக்கு அவர் படிக் கும் காலத்தில் பல உதவிகளைச் செய்தவர். நீங்கள் ஒரு குற்றவாளி போல் பலர் முன்னிலையில் வீதியில் நின்று ஒரு இன்ஸ்பெக்டரிடம் விளக்கம் கொடுத்ததைப் பார்த்த யாரோ எங்கப்பாகிட்ட சொல்லியிருக்காங்க. அவர்தான் இதை நான் செய்யணும்னு கண்டிப்பாகச் சொன் னார். உங்க ஏவி.எம். அலுவலகத்தில் பழைய லைசென்ஸ் போட்டோ, சீல் கையொப்பம் எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டேன். உங்க ஏரியா ஆர்.டி.ஓ. ஆபீசில் உங்களை நன்கு தெரிந்தவர்களே இருக்கிறார்கள். என் வேலை உங்களை தொல்லை பண்ணாமல் முடிந்ததில் மகிழ்ச்சி'' என்றார். அவரை கட்டியணைத்து, "நான் உங்கப்பாவைப் பார்க்கணும்... வர்றேன்னு சொல்லுங்க'' என்றேன். காவல்துறையே என் கண்ணியத்தைக் காப்பாற்றியது!