ck

(84) எழுத்தின் எழுச்சி.. பேச்சின் வீச்சு!

ரசியலும், சினிமாவும் ஒன்றை ஒன்று பிரியாத -பிரிக்க முடியாததாக இருந்தது. அன்று சினிமா எனும் திரைகடல் ஓடி திரவியம் வளர்த்தது தமிழ்நாடு. பாமர மக்களுக்கு விளக்க முடியாத கட்சியின் கொள்கையை, மிக எளிமையாக திரைப்பட வசனங்கள் மூலம் கொண்டு சேர்க்கப்பட்டது. ஒருசமயம் அறிஞர் அண்ணா மேடையில் பேசும்போது, ஒரு விஷயத்தைக் கூறினார்.

"எது கழகத்தின் கொள்கை -கோட்பாடு என்ன என என்னிடம் கேட்கப்பட்டபோது, "தம்பி எம்.ஜி.ராமச்சந்திரனின் "நாடோடி மன்னன்' படத்தைப் பாருங்கள், அந்தப் படத்திலே சொல்லப்படும் எல்லா கருத்துக்களும் கழகத்தின் கொள்கை கோட்பாடுகளே' என்று சொன்னேன்'' எனச் சொன்னார்.

Advertisment

அந்த அளவுக்கு "நாடோடி மன்னன்' படத்தில் எம்.ஜி.ஆர். பேசிய வசனங்கள் வீரியமும் வீச்சுமாக இருந்தது. அன்றைய தினம் கழகத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த கண்ணதாசன் எழுதிய வசனங்கள் அவை. "மதுரை வீரன்' படத்திற்கும் மிகச் சிறப்பான வசனங்களை எழுதினார் கண்ணதாசன்.

திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவது மிகவும் கடினமான பணி. அதிலும் தமிழ் திரைப்படங்களில் எப்போதுமே வசனங்களும், நகைச்சுவைக் காட்சிகளும் வேறு எந்த மொழிப் படங்களிலும் இல்லாத அளவுக்கு சிறப்பாகவும், சிந்தனையைத் தூண்டுவதாகவும் இருக்கும்.

உதாரணத்திற்கு சில புகழ்பெற்ற வசனங்களைப் பார்க்கலாம்...

Advertisment

"உங்கள் அதிகாரம் என்ன சிலப்பதிகாரமா? -மாற்ற முடியாது என்று சொல்வ தற்கு?!'

"மனசாட்சி தூங்கும் போது மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பிவிடுகிறது.'

"அப்படியானால் இனிமேல் பணக்காரர் களே இருக்கமாட்டார்களா?', "பணக்காரர்கள் இருப்பார்கள், ஏழைகள் இருக்கமாட்டார்கள்'

"நெல்லைக் கொட்டினால் அள்ளிவிடலாம், நெய்யைக் கொட்டினால் அள்ள முடியுமா?'

"நீ நல்லவதான்கிறதுக்கு என்னம்மா ஆதாரம்?'

"பூசாரியைத் தாக்கினேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல... கோவில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது என்பதற்காக!'

-இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

ck

கலைஞர், கண்ணதாசன், ஏ.பி.நாகராஜன், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்... இவர்களின் வசனங்கள் மிகச் சிறப்பாக இருக்கும். இவர்களின் வசனங்கள்தான் திரையுலகையே புரட்டிப் போட்டது. நாடகங்களில் அரசியல் சிலேடை, நையாண்டி வசனங்கள் மூலம் புகழ்பெற்றவர் சோ.

என் பட வசனங்களிலும் சில பாராட்டைப் பெற்றிருக்கிறது. கலைஞரே என் வசனத்தை சிலாகித்திருக்கிறார். "தனிக்காட்டு ராஜா', "மனிதன்', "மாங்குடி மைனர்', "கைநாட்டு', "முதலாளியம்மா', "மதுரைக்காரத் தம்பி', "மைக்கேல்ராஜ்' போன்ற படங்களில் சமுதாயத்துக்குப் பயன்படும் வசனங்களை எழுதினேன். "முதல் குரல்' படத்தில் அரசியல் வசனங்களை எழுதினேன். அந்த நேரத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் படத்தை வெளியிட முடியவில்லை. வாய்ப்பிருந்தால் புதுக்குரலாக "முதல் குரல்' படத்தை வெளியே கொண்டுவருவேன்.

என் காலத்தில் எனக்குப் பிடித்தது ஷேக்ஸ்பியரின் வலிமையான வசனங்கள்.

மாவீரன் சீஸரை, அவனின் நம்பிக்கைக் குரிய பாத்திரமான புரூட்டஸ் தனது ஆதர வாளர்கள் மூலம் கொலை செய்ய ஏற்பாடு செய்கிறான். கொலு மண்டபத்திற்கு வரும் சீஸரை புரூட்டஸின் ஆதரவாளர்கள் பலரும் கத்தியால் குத்துவார்கள். சீஸர் தாக்குப்பிடிப் பான். இதனால் சீஸரின் பின்னால் நின்றிருக்கும் புரூட்டஸ், தன் உடைவாளால் சீஸரின் முதுகில் ஆழமாக குத்துவான். பலமிழந்து சாயும் சீஸர், தன்னை முதுகில் குத்தியது யார்? எனப் பார்ப்பான். புரூட்டஸ் ரத்தம் சொட்டும் வாளை பிடித்தபடி நின்றிருப்பான். அப்போது சீஸர் கீழே சாய்ந்தபடி உயிர்போவதற்கு முந்தைய கடைசி வாக்கியமான 'வர்ன் ற்ர்ர் இழ்ன்ற்ன்ள்?' (நீயுமா புரூட்டஸ்) எனக் கேட்பான்.

சீஸரின் உடல் அடக்கத்தில் கலந்துகொள்ள வரும் அவனது நண்பன் மார்க் ஆண்டனி, "புரூட்டஸ்தான் கொன்றான்' என்பதை கோபப்படாமல் நிதானமாக வஞ்சப்புகழ்ச்சியாகத் தெரிவிப்பான். அவ்வளவு வீரியமான வார்த்தைகளை... நாடக வசனங்களை எழுதியிருப்பார் ஷேக்ஸ்பியர்.

"கண்ணகி', "பூம்புகார்', "மனோகரா' போன்ற படங்களில் வார்த்தைகள் வில்லாகவும், வேலாகவும் பாய்ந்ததை, பறந்ததை நாம் பார்த்து மகிழ்ந்தோம், கேட்டு மகிழ்ந்தோம். "பராசக்தி' கோர்ட் ஸீன் வசனங்களும், "ராஜாராணி' படத்தில் சேரன், செங்குட்டுவன் ஓரங்க நாடக வசனங்களை மறந்திட முடியுமா?

பேச்சுக்கலை என்பது அரசியலில் முக்கிய மாக இருந்த காலம் அது. அன்றைய திரையுலகின் வசனகர்த்தாக்கள் பலரும் சிறந்த பேச்சாளர்களாக வும் திகழ்ந்ததால் நட்சத்திரங்களிலும் சிறந்த பேச்சாளர்கள் இருந்தார்கள். அண்ணா, கலைஞர், கண்ணதாசன் மிகச்சிறப்பாக பேசக்கூடியவர்கள். கே.ஆர்.ராமசாமி, எம்.ஆர்.ராதா, டி.வி.நாராயண சாமி, எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர். ஆகியோர் நன்கு பேச்கூடியவர்கள்.

"மேடைப்பேச்சு... அரசுகளை, நல்லாட்சி யாளர்களைக் கூட ஆட்டிவைக்கும் அளவுக்கு ஆற்றல் அமைந்தது. மேலும் பேச்சு எனும் சக்தி, சாதனம் ஒருசிலருக்கு மட்டுமே வாய்க்கிறது. "அந்த சக்தியை அவர்கள் தவறாகப் பயன்படுத்தினால் மக்களின் நலன் பாறை மோதிய கப்பல் போலாகும்' என அண்ணா சொல்லியிருக்கிறார். அவரின் ஆற்ற லும், கருத்தும், ஆழமும் கொண்ட பேச்சு அவரை கோட்டையில் முதல்வராக அமரவைத்தது.

ck

ஆனால் இன்று பெரியாரை இழிவுபடுத்தும் பேச்சாளர்கள் மறைமுகமாக மாநில சுயாட்சியை சிதைக்க நினைக்கும் ஒன்றிய அரசின் சர்வாதிகார ஆட்சியாளர்களை இங்கே காலூன்ற வழி செய்து விடுமோ என்ற பயம் ஏற்படத்தானே செய்கிறது. அண்ணா, கலைஞர் போன்றோரின் பேச்சு தமிழகத்தின் வாளாக, கேடயமாக, இருளகற்றும் தீபமாக விளங்கியது. இன்று பெரியாரையும் அவரது கருத்துக்களையும் மறுத்து கேவலப்படுத் திப் பேசும் பேச்சு. நமது வரலாற்றை, வாழ்வியலை, சீரிய கொள்கைகளை, அடைந்திருக்கும் வளர்ச்சி களை, அகற்றப்பட்ட ஆரிய வாரிசுகளையெல்லாம் மீண்டும் துளிர்க்க வைத்துவிடுமோ என்று நினைக்கத்தானே தோன்றுகிறது. ஆகவே பேச்சுக்கலையில் வல்லமை பெற்றோர்... தவறான நோக்கத்தோடு பேசுவார்களேயானால், அவர்கள் வாயை அடைப்பது மக்கள் பணியாகும்.

ஆர்ப்பரித்து அளவுக்கு அதிகமாக பாய்ந்து வரும் ஆற்றுநீர்... எங்கோ ஓரிடத்தில் கரை உடைந்து... ஊருக்குள் நுழைந்து வீடுகளையும், உடமைகளையும், மனிதர்களையும் அடித்துச் செல்ல முற்பட்டால்... வேடிக்கைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா?

எதிர்விûனையாற்றி ஆற்றுநீரை மடைமாற் றம் செய்து, ஊர்ப்பக்கம் அது வராமல் செய்திடல் வேண்டும். அதேபோல்தான் திராவிடத்தின் ஆணி வேரான பெரியாரை கேவலப்படுத்துபவர்களை, மக்களே வெளிவந்து தவறான அந்தக் குரல்களை ஒலிக்காமல், மடைமாற்றம் செய்திடல் வேண்டும்.

(திரை விரியும்)

_____________

பெரியாரை தூண்டிவிட்ட காமராசர்!

ck

இன்று பெரியாரிசத்தையும், அண்ணா யிசத்தையும் இழிவுபடுத்திப் பேசுகின்றவர்கள் தங்கள் தற்காப்புக்கு கர்மவீரர் காமராசரை பயன்படுத்துகிறார்கள். அவர் என்ன காவிக் கட்சிக்காரரா? காங்கிரஸ் கட்சிக்காரரல்லவா? உங்களுக்கு நீங்கள் மறைமுகமாக ஆதரிக்கும் காவியில் உதாரணம் சொல்ல ஆளில்லை போலும்? அமெரிக்க ஜனாதிபதி, அண்ணாவை சந்திக்க மறுத்தார். அதனால் தன்னைப் பார்க்க விரும்பிய அமெரிக்க ஜனாதிபதியை காமராஜர் சந்திக்க மறுத்தாராம்.

நானும் நடந்த ஒரு நிகழ்வைச் சொல்கிறேன் சில மொழிவாரியான மாநில கட்சிகளின் பிரிவினைவாதத்தை தடுக்க இந்தியாவை நான்காக மட்டும் பிரித்துவிட எண்ணினார் ஜவஹர்லால் நேரு. எல்லா மாநில முதல்வர்களும் சம்மதித்த நிலையில்... தமிழக முதல்வர் காமராசர், நேருவை சந்திக்கிறார். "எங்கள் மாநிலத்தில் மக்கள் பலம்வாய்ந்த ஒரு கிழவர் இருக்கிறார். அவர் இதை எதிர்ப்பார். அவர் எதிர்ப்பை என்னால் சமாளிக்க முடியாது. அவரிடம் பேசிப் பார்த்துவிட்டு வந்து சொல்கிறேன்'' என சொல்லிவிட்டு வந்து நேராக பெரியாரை சந்தித்து, "நீங்கள் பெரிய போராட்டம் நடத்தி மொழிவாரி மாநிலங்கள் நீடிக்கச் செய்யுங்கள்'' என பச்சைத் தமிழர் காமராசர் பெரியாரை தூண்டிவிட்டார்.