சினிமா கொட்டகை! டைரக்டர் -ரைட்டர் வி.சி.குகநாதன் (76

ss

cc

(76) கற்றது மறக்காது... கற்பனை இறக்காது!

லை உலகில் தொடர் வெற்றியோடு பயணிக்க வேண்டுமானால் திறமை மட்டுமே போதாது. என் அடுத்த கதைதான் எனது நாயகன். இந்தக் கதையை எழுதி முடிக்க எனக்கு ஏழு வருடங்களானது.

"சங்கர் குரு' படத்தின் கதையை பத்தொன்பது பேரிடம் சொல்லவைத்தார் ஏவி.எம்.சரவணன். சளைக்காமல் எல்லோரின் அபிப்பிராயங்களையும் கேட்டு, அதில் சரியான அபிப்பிராயங்களுக்கேற்ப மாற்றங்கள் செய்து அதன்பின்னரே தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஆரம்பிக்கப்பட்டது. வெள்ளிவிழா கண்டது.

1965இல் கலையுலகில் எழுத்தாளராக வாய்ப்பு பெற்று நுழைந்த எனக்கு, 1970இல் இயக்குநராகும் வாய்ப்புக் கிட்டியது. பலமொழிப் படங்கள், பெரிய ஹீரோக்கள், பெரிய பெரிய கம்பெனி கள். பல படங்களை வாங்கி மொழிமாற்றம் செய்து வெளியிடவும் செய்தேன். "சூப்பர் போலீஸ்', "வாழ்ந்தால் உன்னோடுதான்', "கனவுக் கன்னி'... பெருவெற்றி ஈட்டியவை.

2025ஆம் ஆண்டு மீண்டும் என் தொடக்கம்... மறுபிரவேசம். அதற்கான முதல் கதை "தேன்நிலவில் மனைவி எங்கே?'. போன வாரம்தான் இந்த டைட்டில் உறுதி செய்யப்பட்டது. முதலில் "தேன்நிலவில் மனைவியை காணோம்' என்பதே. டைட்டி லைச் சொன்ன உடனேயே அபிராமி ராமநாதன் இந்தப் படத்தை என் கம்பெனிக்கு செய்யுங்கள் என கேட்டுக் கொண்டார். என்னோடு சில வருடங்கள் பணியாற்றிய பஞ்சு அருணாசலத்தின் மகன் சுப்புவை இயக்குநராக அறிமுகம் செய்ய முடிவு செய்தோம். அவர் நடிக ராக பிஸியாகிவிட்டதால் தள்ளிப்போனது. அடுத்து கதையை, வசனம் எழுத

cc

(76) கற்றது மறக்காது... கற்பனை இறக்காது!

லை உலகில் தொடர் வெற்றியோடு பயணிக்க வேண்டுமானால் திறமை மட்டுமே போதாது. என் அடுத்த கதைதான் எனது நாயகன். இந்தக் கதையை எழுதி முடிக்க எனக்கு ஏழு வருடங்களானது.

"சங்கர் குரு' படத்தின் கதையை பத்தொன்பது பேரிடம் சொல்லவைத்தார் ஏவி.எம்.சரவணன். சளைக்காமல் எல்லோரின் அபிப்பிராயங்களையும் கேட்டு, அதில் சரியான அபிப்பிராயங்களுக்கேற்ப மாற்றங்கள் செய்து அதன்பின்னரே தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஆரம்பிக்கப்பட்டது. வெள்ளிவிழா கண்டது.

1965இல் கலையுலகில் எழுத்தாளராக வாய்ப்பு பெற்று நுழைந்த எனக்கு, 1970இல் இயக்குநராகும் வாய்ப்புக் கிட்டியது. பலமொழிப் படங்கள், பெரிய ஹீரோக்கள், பெரிய பெரிய கம்பெனி கள். பல படங்களை வாங்கி மொழிமாற்றம் செய்து வெளியிடவும் செய்தேன். "சூப்பர் போலீஸ்', "வாழ்ந்தால் உன்னோடுதான்', "கனவுக் கன்னி'... பெருவெற்றி ஈட்டியவை.

2025ஆம் ஆண்டு மீண்டும் என் தொடக்கம்... மறுபிரவேசம். அதற்கான முதல் கதை "தேன்நிலவில் மனைவி எங்கே?'. போன வாரம்தான் இந்த டைட்டில் உறுதி செய்யப்பட்டது. முதலில் "தேன்நிலவில் மனைவியை காணோம்' என்பதே. டைட்டி லைச் சொன்ன உடனேயே அபிராமி ராமநாதன் இந்தப் படத்தை என் கம்பெனிக்கு செய்யுங்கள் என கேட்டுக் கொண்டார். என்னோடு சில வருடங்கள் பணியாற்றிய பஞ்சு அருணாசலத்தின் மகன் சுப்புவை இயக்குநராக அறிமுகம் செய்ய முடிவு செய்தோம். அவர் நடிக ராக பிஸியாகிவிட்டதால் தள்ளிப்போனது. அடுத்து கதையை, வசனம் எழுதச் சொல்லி எழுத் தாளர் அரவிந் திடம் கொடுத் தேன். அவர் இயக்குநர் எழிலுடன் தொடர்ந்து பல படங் களை எழுதி வந்ததால் காலதாமத மானது. இதற்கிடை யில் ஏவி.எம். சரவணன் கதையைக் கேட்க விரும்பினார். கேட்டதும் அவர் வேறு ஒரு வசனகர்த்தாவையும், இயக்குநரையும் சொன்னார். அதுவும் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. முக்கிய கதாபாத்திரத் தில் யோகிபாபு நடிக்கலாம் என சில லட்சங்களை முன்பணமாகக் கொடுத்தேன். இதற்கிடையில் அவர் நடித்த "காவி, ஆவி, நடுவுலே தேவி' படம் வியாபாரம் ஆகவில்லை. மீண்டும் பல லட்சங்கள் செலவு செய்து படத்தை குறைந்தபட்ச வெற்றியை எட்டும் அளவுக்கு மாற்றங்களைச் செய்தேன். ஆனால் படத்தைப் பார்க்காமலே, படத்தைப் பற்றி அபிப்பிராயங்கள் பேசப்பட்டன. திரையுலகில் பல மாற்றங்கள், பல கார்ப்பரேட்டுகளின் வருகை. பழைய கம்பெனிகளின் புதிய பரிமாண வளர்ச்சி. பான் இந்தியா படங்கள் தயாரிப்பு... இந்த நிலையில் என் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்... உயிர் பிழைத்தேன். ஆனால் heavy diet restrictions. விரும்பியதை சாப்பிட முடியாது. ஆனாலும் சும்மா இருக்க முடியவில்லை என்னால்.

ccs

கலைஞரின் பாசத்துக்குரிய ஒருவரின் உந்துதலின் பேரில் முரசொலியில் மூன்றரை வருடங்களுக்கு அப்பப்ப கட்டுரைகள் எழுதிவந்தேன். தொடர்ந்து நக்கீரனில் எழுதும் வாய்ப்பு வந்தது. இடையிடையே சில கூட்டங்கள். ஆனால் என் தேடல் வேறு பக்கம் இருந்தது. புது சினிமா பண்ணக்கூடிய... அதற்காகப் படித்த இளைஞர்களைத் தேடினேன். அதேசமயம் ஓ.டி.டி.யில் உலக நாடுகளின் இன்றைய படங்களை தேடித் தேடி பார்த்தேன். மூன்று புதிய கதைகள் எழுதுவதென முடிவு செய்தேன். புதிய இயக்குநர், புதிய ஒளிப்பதிவாளர், புதிய எடிட்டரை இணைத்துக்கொண்டேன்.

இந்த சமயத்தில் என் நீண்ட கால நண்பர் தாணு, என் படத்தின் ஆடியோவை வாங்கிக்கொண்டார். என் புதிய படத்தின் தலைப்பை அவரிடம் சொன்னேன். "ஒரு சிறு மாற்றம், பிடித்தால் வைத்துக்கொள்ளுங்கள்' என்றார். "சொல்லுங்கள்' என்றேன். "தேன்நிலவில் மனைவியை காணோம் என்பதை தேன்நிலவில் மனைவி எங்கே?' என்று வைக்கலாமே' என்றார்... மாற்றிவிட்டேன்.

மாற்றம் தெரிகிறது. "ஆஸ்கார்' பெற்ற பழைய படம் 'Hour weddings and one funeral'. அதன் கதாசிரியர், தான் அனுபவித்த துன்பங்களையும், எத்தனை தடவைகள் மாற்றி மாற்றி எழுதினார் என்பதையும் ஒரு புத்தகமாக எழுதியிருந்தார். அதனை பல தடவைகள் படித்திருக்கிறேன்.

இன்றைய சினிமா சூழ்நிலைகள் மாறிய நிலையில்... என் படங்களை ஒதுக்கிவிட முயலு கின்ற முதலைகள் மத்தியில் மீண்டும் உயிர்த் தெழுகிறேன், புதிய பேனாக்காரனாக. கற்றது மறக்காது... கற்பனை இறக்காது. முன்னூறு படங்கள்... இவை பழசு. இனி எல்லாமே புதுசு. மக்களை, ரசிகர்களை மட்டுமே நம்பி கள மிறங்குகிறேன். திரைக்கதையே முதுகெலும்பு. திரைக்கதாசிரியர்கள் என்ற இனம் அழிக்கப் பட்டது என்ற எண்ணமே தவறானது. இனி அவர்கள் காலம்தான் என நம்பும்விதமாக என் சகாக்களும் நானும் பேனாவை திரைக்கள ஆயுதமாக்கி வெற்றிகளை உருவாக்குவோம்.

ss

Feelgood films, Pan India films, Action movies, Artistic movies இப்படி எத்தனை ரகமான பெயர்களைச் சூட்டினாலும், தியேட்டரில் ஓடும் படமானாலும், வெப் சீரிஸ் ஆனாலும், ஓ.டி.டி.க்கான படமானாலும், சேட்லைட்டுக் கான படமானாலும், யுடியூப் சேனலுக்கான படமானாலும், நல்ல கதையும்... திரைக் கதையுமே படங்களின் வெற்றிக்கான அஸ்திவாரம்... ஆணிவேர். ஏனைய தொழில் நுட்பங்களும் படங்களுக்கு அவசியமே. ஆனால் புதுமைகளை ரசிகர்கள் வரவேற் பார்கள். ஆல்பிரெட் ஹிட்ச்காக் என்ற பிரபல இயக்குநர் 1948இல் 'Rope' என்றொரு படத்தை இயக்கினார். ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் என விளம்பரப் படுத்தப்பட்டு... ஒரு அதிசயத்தை பார்ப்பது போல் மக்கள் முட்டி மோதி அந்தப் படத்தைப் போய் பார்த்தனர். அதேபோல் ''Benhur' என்ற படத்தில்'Chariot race' உலகம் பூராக வியந்து பார்த்த காட்சி. 'Ten commandments' என்ற படத்தில் பெரும் சமுத்திரம் பிரிந்து நடுவிலே பாதையாக அது வழியாக கடவுள் செயலால் மக்கள் தப்பிப் போனதும், மீண்டும் கடல் மூடிக்கொள்ள துரத்தி வந்தவர்கள் சிக்கி அழிவது. அதேபோல் 'Yel Brynet' ஒரு வசனம் சொல்வார் ஹீரோவைப் பார்த்து. Your wife shall near my child' என்று.

பிற்காலத்தில் Stephen Spielburg படங்கள். Marlon Brandoவின் படங்கள், அவர் நடிப்பு. Sydney Poitவின் நடிப்பு, 'To sir with her' என்ற படம். Anthony queen படங்கள். Guns for St.sebastian, War and peace, Tale of two cities அதில் The lion behind the Jackal' என Sydney carten கதாபாத்திரத்தை அடையாளம் காட்டும் புதுமை. படம் முழுக்க ஒரே நடிகர் சுனில்தத் நடித்த "யாதேன்' இந்திப் படம். ''Mother India' நர்கீஸ் நடித்த படம். 'Bicycle thives' என்ற படம். Charlie Chap படங்கள். அகிரா குரோசாவா படங்கள். Richard Burtion #Elizabeth Taylor நடித்த Cleopatra படம். நமது சத்யஜித்ரேயின் "பதேர் பாஞ்சாலி-' போன்ற பல படங்கள். Becket என்ற மத போதகர், நாட்டின் அரசன் மோதும் படம், பீட்டர் Tool and Richard Burton நடித்த படம். 'Lawrence of arabia', 'Sound of Music', 'Hercules' போன்ற பல படங்கள். அண்மைக் காலங்களில் நகைச்சுவை நிரம்பிய 'Mr Beans' தொடர்கள். பல அற்புதமான 'Cow Boy' படங்கள்.

இப்படி இன்றுவரை உலகே வியந்து பார்க்கும் பல நூறு படங்கள். ஒரு சத்யஜித்ரே படத்தில் ஒரு நேர்காணல் காட்சி. அதில் ஒரு கேள்வி... "கடந்த பத்து ஆண்டுகளுக்குள் உலகில் நடந்த உங்களால் மறக்க முடியாத ஒரு நிகழ்வை சொல்லுங்கள்' எனக் கேட்க... பதில் சொல்பவர், "நிலவில் மனிதன் கால் பதித்தது... மறக்க முடியாதது' என்பார்.

"ஏன்? லட்சக்கணக்கான மக்கள் வியட்நாமில், திணிக்கப்பட்ட போரினாலும், பசி, பட்டினியாலும், பலதரப்பட்ட நோயினாலும், மருந்துகள் கிடைக் காமலும் மாண்டு போனார்களே, அது உங்கள் மனதை பாதிக்கவில் லையா?' என கேள்வி கேட்டவர் திருப்பிக் கேட்டார். பல ஆண்டுகள் முன் நான் பார்த்தது. சப்-டைட்டில் படித்து புரிந்துகொண்டது... இன்னமும் என் நினைவில் நிற்கிறது.

(திரை விரியும்)

படம் உதவி: ஞானம்

nkn020425
இதையும் படியுங்கள்
Subscribe