Advertisment

சினிமா கொட்டகை! டைரக்டர் -ரைட்டர் வி.சி.குகநாதன் (74)

cc

xx

(74) எரிதணல் மெழுகாவார் எதிரிகள்...!

Advertisment

குரைக்கிற நாய் கடிக்காது என்பார்கள்... ஏன்? அது வாயினால்தான் குரைக்க வேண்டும். கடிக்க வேண்டுமானால் அதே வாயைத்தான் பயன்டுத்த வேண்டும். ஆகவே குரைக்கின்ற நேரத்தில் எப்படி கடிக்க முடியும்? ஆங்கிலத்திலும் இன்னொரு விதமாக சொல்வார்கள். Why dog wags its tail? Because the tail cannot wag the dog.

தந்தை பெரியாரை விமர்சிக்கும் சில இரண்டுகால் பிராணிகளின் நிலைமையும் இதுதான். விமர்சிக்கலாம், அவரை விமர்சிப்ப தால் விளம்பரம் பெறலாம். ஆனால் வளர முடியுமா? நம் தமிழர்களுக்குப் பிரத்யேகமான குணம் ஒன்றுண்டு.

யாரையாவது ஒருத்தன் கலாய்த்தால்... அதை வேடிக்கை பார்க்கும் பழக்கம் உண்டு. இப்படி வேடிக்கை பார்க்கின்ற கூட்டம் கலாய்க்கிறவனுக்கு ஓட்டுப் போடுமா? என்று கேட்டால்... நிச்சயம் போடாது. சர்க்கஸ் கோமாளி போன்ற நிலைதான் பெரியாரை விமர்சிப்பவன் நிலையும்.

Advertisment

தமிழனின் நிலையும் நினைப்பும் வெவ்வேறு. துருப்பிடித்து எங்கோ மூலையில் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு எடைக் கல்லை எடுத்துவந்து இதைவச்சு இமயமலையை எடை போடப் போறேன்னு எவனாவது சொல் வானா? சொன்னால்தான் யாராவது நம்புவார் களா? யானையைத் தடவிப் பார்த்த பார்வை யற்ற மாற்றுத் திறனாளி கதை தெரியுமல்லவா உங்களுக்கு?

அறிவுக்கண்ணற்ற உன்னால் பகுத்தறியும் பகலவனின் நிழலைக்கூட தொட்டுப் பார்க்க முடியாது. மக்களுக்காக தன்னை அர்ப்பணித் தவர் பெரியார். இந்த விமர்சகர்கள் தங்கள் வளர்ச்சிக்காக வாயாலே வடை சுடக் கற்றவர்கள். சுயவிளம்பரத்துக்காக, மற்றவரை நிந்திக்கத் தெர

xx

(74) எரிதணல் மெழுகாவார் எதிரிகள்...!

Advertisment

குரைக்கிற நாய் கடிக்காது என்பார்கள்... ஏன்? அது வாயினால்தான் குரைக்க வேண்டும். கடிக்க வேண்டுமானால் அதே வாயைத்தான் பயன்டுத்த வேண்டும். ஆகவே குரைக்கின்ற நேரத்தில் எப்படி கடிக்க முடியும்? ஆங்கிலத்திலும் இன்னொரு விதமாக சொல்வார்கள். Why dog wags its tail? Because the tail cannot wag the dog.

தந்தை பெரியாரை விமர்சிக்கும் சில இரண்டுகால் பிராணிகளின் நிலைமையும் இதுதான். விமர்சிக்கலாம், அவரை விமர்சிப்ப தால் விளம்பரம் பெறலாம். ஆனால் வளர முடியுமா? நம் தமிழர்களுக்குப் பிரத்யேகமான குணம் ஒன்றுண்டு.

யாரையாவது ஒருத்தன் கலாய்த்தால்... அதை வேடிக்கை பார்க்கும் பழக்கம் உண்டு. இப்படி வேடிக்கை பார்க்கின்ற கூட்டம் கலாய்க்கிறவனுக்கு ஓட்டுப் போடுமா? என்று கேட்டால்... நிச்சயம் போடாது. சர்க்கஸ் கோமாளி போன்ற நிலைதான் பெரியாரை விமர்சிப்பவன் நிலையும்.

Advertisment

தமிழனின் நிலையும் நினைப்பும் வெவ்வேறு. துருப்பிடித்து எங்கோ மூலையில் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு எடைக் கல்லை எடுத்துவந்து இதைவச்சு இமயமலையை எடை போடப் போறேன்னு எவனாவது சொல் வானா? சொன்னால்தான் யாராவது நம்புவார் களா? யானையைத் தடவிப் பார்த்த பார்வை யற்ற மாற்றுத் திறனாளி கதை தெரியுமல்லவா உங்களுக்கு?

அறிவுக்கண்ணற்ற உன்னால் பகுத்தறியும் பகலவனின் நிழலைக்கூட தொட்டுப் பார்க்க முடியாது. மக்களுக்காக தன்னை அர்ப்பணித் தவர் பெரியார். இந்த விமர்சகர்கள் தங்கள் வளர்ச்சிக்காக வாயாலே வடை சுடக் கற்றவர்கள். சுயவிளம்பரத்துக்காக, மற்றவரை நிந்திக்கத் தெரிந்தவர்கள், சிந்திக்க மறுப்பவர்கள்.

பெரியார் கருத்துச் சொல்லவில்லை, விமர்சிக்கவில்லை. கடவுளைத் தவிர வேறு யாரையும் இழித்தோ, பழித்தோ பேசவில்லை. அவர் மனித ஜாதிக்கான தத்துவங்களை எடுத்துரைத்தார். அவற்றையெல்லாம் கட்சி களைக் கடந்து நின்று பார்க்கவேண்டும்.

அவரது தத்துவங்கள் சமூகத்துக்கானது... மனித இனத்துக்கானது. அதிலே அரசியலை கலப்பதும், அரசியலுக்காக அவற்றை விமர்சிப் பதும் நுனிக் கிளையில் அமர்ந்துகொண்டு அடிக்கிளையை வெட்டுவதற்கு சமமானது.

ஆலயப் பணி, அரசியல் பணி, அரசுப் பணி... மூன்றுமே நாட்டின் சமூக, பொருளாதார ஏற்ற இறக்கங்களை நிர்ணயிக்கும் இடங் களாகும். இந்த மூன்றையும் பார்ப்பனர்கள் கைப்பற்றி வைத்திருந்தனர். அதில் ஆலயப் பணி... அதிகம் படிக்காதவர்களை பயமுறுத்தி பணியவைக்க முடிந்த இடம். சாமி கண்ணைக் குத்தும் என சிறு பிள்ளைகளிடம் சொல்லி மிரட்டி வைத்தனர்.

xx

அதனால்தான் பட்டுக் கோட்டையார், "வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த் தைகளை வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே... நீ வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே' என எழுதி வைத்தார். இதே கருத்தைத்தான் பெரியாரும் சொல்லி வைத்தார்.

மூன்று சதவீதமிருந்த வந்தேறிகள், மீதி தொண்ணூற்றிஏழு சதவீத மக்களை ஏமாற்றி வந்த சூழலையும், சூழ்ச்சியையும் கண்டு கொதித்துப்போன பெரியார் சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை... மனிதனுக்கு அவசியம் வேண்டும் என்றார்.

பிறரிடம் காசு வாங்கி அரசியல் கட்சிகள் நடத்துபவர்கள், எதற்காக பெரியாரை விமர்சனம் பண்ணவேண்டும்? யாரை மகிழச் செய்வதற்காக பெரியாரை இகழ்ந்து பேசவேண்டும்.

கட்சி நடத்துறவ னெல்லாம் கழகங்களைப் பற்றிப் பேசவே கூடாது. கழகங்கள் மனிதர்களுக்கு, குறிப்பாக திராவிட மக்களுக்காக, அவர்கள் வளர்ச்சிக்கு துணை நிற்க உருவாக்கப் பட்டவை.

அதில் அவர்களின் அரசியல் ஈடுபாடு ஒரு பகுதிதான். விமர்சனம் பண்ணுகிற வர்கள் இதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். பார்ப்பனீயப் பிடியிலிருந்து நம் பாமர மக்களை மீட்டது பெரியாரே!

இன்னமும் அது முழுமையாக முடிந்துவிடவில்லை. ஆட்டிப்படைத்த மூன்று சதவீத வந்தேறிய இனம், தங்கள் வீட்டுப் பெண்களை அடிமைப்படுத்தியே வைத்திருந்தது.

ஏன்?

தன்னைமீறிப் போய்விடுவாளோ என்ற பயத்தில், பெண்களுக்கு பல கொடூரமான கட்டுப்பாடுகளை வைத்திருந்தனர். கணவன் இறந்துவிட்டால் உடனே பொண்டாட்டிக்கு மொட்டை போட்டு முக்காடு போட வச்சு, மூலையிலே உட்கார வைத்துவிடுவார்கள்.

அவர்கள் குலப் பெண்களை பிறகுல ஆடவன் தொட்டாலே தோஷம் என்றனர். குலநாசம் என பயமுறுத்தினர்.

ஆளவந்த வெள்ளைக்காரனோடு பழகி னால்... அது தோஷமில்லை என்றதோடு... அவள்மூலமாக வெள்ளையனிடமிருந்து மானியங்கள், பதவிகள் பெற்றனர்.

இதையெல்லாம் பார்த்து மனமுடைந்த பெரியார், பெண் விடுதலை, பெண்ணு ரிமைக்காகவும் போராட ஆரம்பித்தார். இதன் விளைவாகத்தான் தமிழ்நாட்டில் தேவதாசிகள் வழக்கம் சட்டம் மூலம் ஒழிக்கப்பட்டது. பெண்களுக்கு சட்டம் மூலம் சொத்துரிமை வழங்கப்பட்டது.

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு பெண்ணியம் தமிழகத்தில் ஏற்றம் பெற்றது. அந்த உரிமைகள் வரக் காரண மாயிருந்த தந்தை பெரியாரை இழிவுபடுத்து பவர்களைப் பழி வாங்க வேண்டும், அவமானப் படுத்த வேண்டும், அடித்து விரட்ட வேண்டும் என பெண்கள் பேசியது என் காதுக்கும் எட்டியது. ஆனால் அதெல்லாம் தவறானது. பெரியாரால் ஏற்றம் பெற்ற தாய்க்குலம்... துரோகிகளுக்கு தேர்தல் களங்களில் ஆதரவு தராமல் இருந்தாலே போதும்... அவர்கள் அழிந்து போவார்கள்.

நான் நெற்றியில் பொட்டு வைக்கும் சைவ சமயத்தைச் சார்ந்த வன். என் மொழி தமிழ், என் இனம் தமிழினம், என் சமயம் சைவ சமயம். நான் இந்து அல்ல... நான் பேரறிஞர் அண்ணாவின் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற வழி வாழ் பவன். பலா- விமான நிலையத்தில் கைதாகியிருந்த புலேந்திரன், குமரப்பா போன்ற பதின்மூன்று போராளி தலைவர்கள், கொழும்புக்கு அழைத்துச் செல்லப்படுவதை தடுக்க தமிழ்நாட்டில் பல இடங்களில் கழகத் தோழர்கள், கருஞ்சட்டை வீரர்கள் போராட்டங்கள் நடத்தினார்கள்... பலனின்றிப் போனது. மவுனம் காத்தது அன்றைய மத்திய அரசு. அமைதிப்படை பலனற்றுப் போனது. வேறு வழியின்றி பதின்மூன்று முக்கிய தளபதி கள் குப்பியடித்து உயிர்த் தியாகம் செய்தனர்.

அடுத்து நடந்த திருச்சி திராவிட கழக மாநாட்டில், அந்த மாண்ட பதின்மூன்று மாவீரர்கள் படங்களைத் திறக்கும் பெருமையை திராவிட கழகம் எனக்குத் தந்தது. நானும் கலந்துகொண்டேன். அவர்களது ஊர்வலத் திலும் பங்கேற்றேன். ஆனால் "சைவன்' என்ற கோதாவில் என் நெற்றியில் நீறும், பொட்டும் இருந்தது. அன்று மட்டும் அழித்துவிட்டு கலந்து கொள்ளப் போயிருக்கலாம்.

அது என் போலித்தனத்தைக் காட்டுமே தவிர, உண்மை ஒளிந்துகொள்ளும். அன்று நம் தமிழனத் தலைவர் அய்யா வீரமணி, படங்களைத் திறந்துவைத்து என்னைப் பேச அழைக்கும்போது, "நமது இயக்குநருக்கு பகுத்தறிவுக் கொள்கைகள் மீது முழு நம்பிக்கை இல்லை என்றாலும்... மொழிப்பற்று, இனப் பற்று, தமிழ் தேசியம் இவற்றிலெல்லாம் எம்மை விட அதிகப் பற்றுள்ளவர். ஆகவேதான், அவருக்கு இந்த வாய்ப்பினை மகிழ்வோடு அளித்தோம்'' என்றார்.

திராவிட இயக்கம் மூடநம்பிக்கைகளை எதிர்க்கிறதே தவிர, தனிப்பட்ட மனிதர்களின் சுதந்திரத்தில் தலையிடுவதே கிடையாது. எதைப் பேசினாலும் ஆதாரத்துடன் பேசுவார்கள் பெரியார் திடல் கருஞ்சட்டை வீரர்கள். அங்கு நடக்கும் பயிற்சிகள் அனைத்தும் அறிவுபூர்வமானது. பெரியார் தத்துவங்கள் திராவிடத் தமிழர் களுக்கானது. இன்று அது உலகத் தலைவர்கள் பலரால் உற்றுக் கவனிக்கப்படுகிறது.

முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின், "இந்தியாவின் இன்றைய ஆட்சி முறைக்கு மாற்று திராவிட அரசியலே' என பிர கடனப்படுத்திய பின்னர், மாநிலங்கள் பெரியாரை படிக்க ஆரம்பித்தன. சில மாநிலங்கள் சம்மதமும் தந்துவிட்டன.

ஆக திராவிட அரசியலை அறியத் துடிக்கும் ஆர்வலர்கள் ஆசான் பெரியாரைப் படிக்க ஆரம்பித்துவிட்டனர். இந்த நிலையில் பெரியாரை பழித்தால் பெண்களே துடைப்பத்தை தூக்கத் தயாராகிவிட்டார்கள்.

பெரியார் அரசியல் தலைவரல்ல, அவர் ஒரு தத்துவஞானி. சமுதாய சிற்பி, சமூக சீர்திருத்தவாதி. அவர் சாதனைகள் சமுதாயத் துக்கானது, மனிதர்களுக்கானது, தாழ்த்தப் பட்டவர்களுக்கானது, பிற்படுத்தப்பட்டவர் களுக்கானது, பெண்களுக்கானது.

அப்படிப்பட்ட அதிசயப் பிறவியை விமர்சிப்பதற்குக்கூட ஒருவனுக்கு அருகதை வேண்டும். ஆகவே, கண்டவனெல்லாம், பெரியார் மீது சேற்றை வாரியிறைத்தால்.. பார்த்துக்கொண்டு சும்மா இருக்கலாமா?

(திரை விரியும்)

nkn260325
இதையும் படியுங்கள்
Subscribe