சினிமா கொட்டகை! டைரக்டர் -ரைட்டர் வி.சி.குகநாதன் (72)

cc

cc

(72) சீமான்களும் சீமாட்டிகளும்!

சினிமாவைப் பற்றி தொடர்ந்து எழுதிவரும் நான், அநேக வாசகர்களிடமிருந்து வந்த சில கேள்விகளுக்குப் பதில் எழுதவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன். கேள்வி கேட்பவர்களில் பலர் வெளிநாடுவாழ் தமிழர்கள். தொடர்ந்து என் எழுத்துக்களை படித்துவிட்டு, தங்கள் அபிப்பிராயங்களைத் தவறாது பரிமாறிக் கொள்பவர்கள். ஆகவே இரண்டு, மூன்று வாரங்களுக்கு சினிமாவை விட்டு, அந்த வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டிய கடமையை மேற்கொள்கிறேன்.

முதல் கேள்வி... "பல அரசியல் கோமாளிகள், தந்தை பெரியாரைப் பற்றி கேவலமாகப் பேசுகிறார்களே... அதை நீங்கள் கண்டுகொள்வ தில்லையே... ஏன்? மானமிகு இனமான இயக்குநராகிய நீங்களும் அவர்களை கண்டிக்காது இருப்பது ஏன்?'' என்று கேட்டிருக்கிறார்கள்.

பக்கத்திலே துணைக்கு ஆளில்லேன்னா, படுத்து தூங்குறதுக்கே பயப்படுற ஒருத்தன்... சீன எல்லைக்குப் போய் இந்தியா இழந்திருக்கும் நிலப்பரப்பை நானே தனியாகப் போராடி மீட்டு வருவேன் என்று சொன்னால், நம்புற முட்டாள்கள் இப்பவும் இருக்கத் தான் செய்றாங்க. அதை நான் நம்பல... அதனாலே பதில் சொல்ல நினைக்கல.

இரண்டாவது, அண்ணாவை ஆசானாக ஏற்றுக்கொண்ட என்னால் அநாகரிகமாகப் பேசுவது முடியாத ஒன்று. நான் டி.வி.யில் பார்த்த ஒரு காட்சி அதுவும் அண்மையில் "அண்ணா "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு'ன்னு ஏன் சொன்னார் தெரியுமா? எதிரியோட பொண் டாட்டியா இருந்தாலும், அவ அழகா இருந்தா நாம சைட் அடிக்கலாம்னு அர்த்தம்'னு பேசுறாரு ஒருத்தர். அவர் எந்த இயக்கத்தவர் தெரியுமா? கலகம் பண்றதுக்குன்னு ஒரு கடவுளை படைச்சு... அவரையும் வணங்குகின்ற பக்தசிகாமணிகள் கூட்டத்தைச் சேர்ந்

cc

(72) சீமான்களும் சீமாட்டிகளும்!

சினிமாவைப் பற்றி தொடர்ந்து எழுதிவரும் நான், அநேக வாசகர்களிடமிருந்து வந்த சில கேள்விகளுக்குப் பதில் எழுதவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன். கேள்வி கேட்பவர்களில் பலர் வெளிநாடுவாழ் தமிழர்கள். தொடர்ந்து என் எழுத்துக்களை படித்துவிட்டு, தங்கள் அபிப்பிராயங்களைத் தவறாது பரிமாறிக் கொள்பவர்கள். ஆகவே இரண்டு, மூன்று வாரங்களுக்கு சினிமாவை விட்டு, அந்த வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டிய கடமையை மேற்கொள்கிறேன்.

முதல் கேள்வி... "பல அரசியல் கோமாளிகள், தந்தை பெரியாரைப் பற்றி கேவலமாகப் பேசுகிறார்களே... அதை நீங்கள் கண்டுகொள்வ தில்லையே... ஏன்? மானமிகு இனமான இயக்குநராகிய நீங்களும் அவர்களை கண்டிக்காது இருப்பது ஏன்?'' என்று கேட்டிருக்கிறார்கள்.

பக்கத்திலே துணைக்கு ஆளில்லேன்னா, படுத்து தூங்குறதுக்கே பயப்படுற ஒருத்தன்... சீன எல்லைக்குப் போய் இந்தியா இழந்திருக்கும் நிலப்பரப்பை நானே தனியாகப் போராடி மீட்டு வருவேன் என்று சொன்னால், நம்புற முட்டாள்கள் இப்பவும் இருக்கத் தான் செய்றாங்க. அதை நான் நம்பல... அதனாலே பதில் சொல்ல நினைக்கல.

இரண்டாவது, அண்ணாவை ஆசானாக ஏற்றுக்கொண்ட என்னால் அநாகரிகமாகப் பேசுவது முடியாத ஒன்று. நான் டி.வி.யில் பார்த்த ஒரு காட்சி அதுவும் அண்மையில் "அண்ணா "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு'ன்னு ஏன் சொன்னார் தெரியுமா? எதிரியோட பொண் டாட்டியா இருந்தாலும், அவ அழகா இருந்தா நாம சைட் அடிக்கலாம்னு அர்த்தம்'னு பேசுறாரு ஒருத்தர். அவர் எந்த இயக்கத்தவர் தெரியுமா? கலகம் பண்றதுக்குன்னு ஒரு கடவுளை படைச்சு... அவரையும் வணங்குகின்ற பக்தசிகாமணிகள் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர். இது என்னய்யா கொடுமை? கலகம் பண்றதுக்கு ஒரு கடவுளா? எனக் கேட்பவர்களுக்கு அவர்கள் சொல்லும் விளக்கம், நாரதர் கலகம் நன்மையில் தான் முடியும் என பதிலுரைக்கிறார்கள். நமது கழகக் கொள்கையில் பார்ப்பனீயம் அற்ற சமுதாயத்தை உருவாக்கி சமநீதி பெறுவோம் என எழுதப்பட்டுள்ளது. ஆக எம் எதிரி யார் என்பதை, கொள்கையை வகுத்தவர்களே தெளிவாக அடையாளம் காட்டியுள்ளனர்.

அவங்க பெரியாரை தரக்குறைவா பேசுறதுக்கு காரணம் இருக்கிறது. தோற்றுப்போன எதிரி வேற எப்படிப் பேசுவான்? ஆனால் பெரியார் பாசறையில் படித்த மாணவன் எவனாவது அப்படிப் பேசுவதும், பெரியாரை தரக்குறைவா விமர்சனம் செய்வதும் முறையான செயலா?

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள், உரிமையிழந்த மக்கள், பெறப்பட்ட சுதந்திர வெளிச்சத்தை சிறிதளவாவது அனுபவிக்காத மக்கள் ஒரு குழுவாக இணைந்து அண்ணல் அம்பேத்கரை சந்திக்கப் போனார்கள் ஒரு வேண்டுகோளோடு.

என்ன வேண்டுகோள்?

"தாங்கள் தமிழ்நாட்டிலிருக்கும் எங்கள் இயக்கத்துக்கும், தலைவராக இருக்கவேண்டும்''.

அண்ணல் அம்பேத்கர் அதற்குச் சொன்ன பதில் என்ன தெரியுமா?

"தந்தை பெரியார், எமது போராட்டத்தை தமிழ்நாட்டில் மிகச்சிறப்பாக நடத்திவருகிறார். ஆகவே நீங்கள் போய் அவர் தலைமையின் கீழ் இயங்குங்கள்'' எனச் சொல்லியனுப்பினார். இது ஒரு வரலாற்றுப் பதிவு. அண்ணல் அம்பேத்கரும், பெரியாரின் பல செயல்களைப் பார்த்து சிலிர்த்ததும் உண்டு. நாட்டுக்கு தேசப்பிதா பெற்றுத்தந்த சுதந்திரம் பெரிதா? நம்ம ஈரோட்டுக் கிழவன் பெற்றுத் தந்த சுயமரியாதை பெரிதா?

நமது மாநிலத்தில் சுதந்திர வெளிச்சம் பல பள்ளங்களை நோக்கிப் பாயவே இல்லை. மேட்டுக்குடிகளிடமே தங்கிவிட்டது சுதந்திரம். ஆனால் பெரியாரின் சுயமரியாதை, சமநீதி, சமதர்மம், பெண்ணுரிமை, பகுத்தறிவு.... இவை நுழையாத குக்கிராமங்களே தமிழ் மாநிலத்தில் கிடையாது.

இன்று சீமான்களும், சீமாட்டிகளும் அக்ரஹார தெருக்களிலே நவீன ஆடை அணிகளோடு, காலிலே செருப்போடு நெஞ்சை நிமிர்த்தி நடக்க முடிகிறதென்றால், அதற்கு யார் காரணம்?

தமிழ் மாநிலத்தில் 1967இல் புதிய ஆட்சி அமையவும், சமநீதி பெருகவும், பார்ப்பனீயம் விலகவும், அனைத்து ஜாதியினரும் அர்ச்சனையும் செய்யலாம், ஆட்சியிலும் பங்கேற்கலாம் என்ற நிலைகள் வரவும் தந்தை பெரியார்தானே தளம் அமைத்தார். அவரை சொந்த அரசியல் நோக்கங்களுக்காக விமர்சிப்பது தரமான செயலா? தோற்றுவிட்ட வந்தேறி மந்தைகள்... அந்த விந்தை மனிதர்களின் தந்திர விளையாட்டுதான் பெரியார் என்ற ஆணிவேரில் வெந்நீரை, நம்மில் சிலரை வைத்தே ஊற்றி, அதை சேதப்படுத்த நினைப்பது. நாம் அதற்கு துணை போகலாமா? அரசியல் கொள்கைகள் உங்களிடமிருந்தால் அரசியல்வாதிகளிடம் பேசுங்கள்... மோதுங்கள். அதைவிடுத்து ஒப்பற்ற ஒரு சமூகநீதிப் போராளியை வம்புக்கிழுப்பது உண்மையான ஆண்மகனுக்கு அழகா?

ck

ஈட்டி எட்டிய வரையில்தான் பாயும். ஈரோட்டுக் கிழவரின் கொள்கைகள் மனித சமுதாயம் மண்ணில் இருக்கும்வரை வாழும். பெரியாரைப் பற்றி பேசுவதற்கு ஒரு தகுதி வேண்டும். அதற்கு ஒரு சிறு உதாரணம்...

அண்ணா, தாய்க் கழகத்தை விட்டுப் பிரிந்து வந்து தி.மு.க.வைத் தொடங்கிய நாள் முதல் தலைமைப் பதவியையும், அவருக்கான நாற்காலியையும் காலியாகவே வைத் திருந்தார். அவர் சொன் னது, "எங்களுக்கு எப்போதுமே பெரியாரே தலைவர். அவர் வந்து அமரும்வரை இந்தப் பதவியும் நாற்காலியும் காலியாகவே இருக்கும்'' என்றார். ஜனநாயகத்தில் இப்படி ஒரு நிகழ்வு எங்குமே நிகழ்ந்ததில்லை. ஒவ்வொரு தமிழனின் உடலிலும் நுரையீரல் உண்டு. அதற்குள் வந்துபோகும் மூச்சுக்காற்றுதான் பெரியார்.

தந்தை பெரியாருக்கும், தம்பி பிரபா கரனுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. இருவருமே பதவிகளை நாடாதவர்கள். அரசியலில் ஆர்வம் காட்டாதவர்கள். மக்களின் சுதந்திரம், சுயமரியாதை, சமநீதி, ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை போன்றவற்றிற்காக போராடியவர்கள். பெரியார் தன் மாநாடுகளுக்கு... "நாம செலவு செய்து விளம்பரம் தேடவேண்டியதில்லை. எம் எதிரிகளே அப்பணியினை செய்வார்கள்'' என்பார்.

பிரபாகரன், "போர்க் களத்தில் நமக்குத் தேவைப்படும் ஆயுதங்களை நம் எதிரிகளே நமக்குத் தருவார்கள்'' என்று சொல் வார். நடைமுறையிலும் அப்படித்தான் நடக்கும்.

ஈழப் போராளிகளுக்கு பெருமளவு ஆதரவு தந்து தமிழ்நாட்டில் பெரும் ஆதரவை ஈட்டித் தந்தது பெரியாரின் கருஞ்சட்டை வீரர்களே. கோவை ராமகிருஷ்ணன், கொளத்தூர் மணி, அனகாபுத்தூர் ஜெகதீசன், தங்கை அருள்மொழி போன்ற எண்ணற்ற கழகத்தோர், ராஜேந்திரன், கலி.பூங்குன்றன் ஆகியோர், அய்யா வீரமணி தலைமையில் நல்கிய ஒத்துழைப்பையும், நடத்திய போராட்டங்களையும் மறக்க முடியுமா? திருப்பத்தூர் தொழிலதிபர், கழகத்தின் பழம்பெரும் உறுப்பினர் கே.சி.அவர்களும், அவர் பிள்ளைகளான எழில், வீரமணி ஆகியோரும் ஆற்றிய பணிகள் வார்த்தைகளால் வடித்துவிட முடியாது.

அந்த காலகட்டத்தில் அண்ணன் பழ.நெடுமாறன், அண்ணன் வைகோ, சகோதரர் சுப.வீரபாண்டியன், சகோதரர் திருமாவளவன், சகோதரர் வேல்முருகன், கோவில்பட்டி கோபி, ராவணன் போன்றோர் திடலில் கண்டனக் கூட்டங்களில் பலமுறை பங்கேற்றுள்ளனர். இவர்களில் பலர் மிகமிக ஆபத்தான கட்டங்களில் மேதகுவை சந்தித்துள்ளனர். அந்த காலகட்டங் களில் எம்.ஜி.ஆர். அளித்த நிதி, பயிற்சிக்கான பாசறைகள், போர்க்களத்தில் காயம்பட்டு வந்தவர்களுக்கு மருத்துவ வசதி இப்படி அவர் செய்த உதவிகள் எண்ணற்றவை. ஈழப்போரின் களம் அங்கே... அவர்களுக்கு ஆதரவளித்த தளம் பெரியார் திடலே! இன்றும் திராவிடத் தமிழனுக்கு ஆபத்தென்றால் முதல் ஆதரவுக் குரல் அபயக்குரல் பெரியார் திடலிலிருந்தே வரும். அப்படி உருவாக்கி வைத்த தந்தை பெரியாரை விமர்சிப்பவன், ஒன்று பார்ப்பானாக இருக்கவேண்டும், அல்லது அரசியலுக்காக அவர்களுக்கு வெண்சாமரம் வீசுபவனாக இருக்கவேண்டும். யார், எப்படிப் பேசினாலும் சூரியனைப் பார்த்து எத்தனை நாலுகால் பிராணிகள் குரைத்தாலும் சூரியனின் பயணம் நிற்காது, பாதை மாறாது, ஒளி குன்றாது.

ck

ஒரு தலைமை நீதிபதி பெரியார் மீதுள்ள வழக்கு முடிந்து தீர்ப்பு சொல்லும் போது இப்படிச் சொல்லியிருக்கிறார்...

"தீண்டாமை ஒழிப்பு, ஜாதி அமைப்பு முறை ஒழிப்பு, பெண்களின் உரிமைகளை நிலைநாட்டுதல் மற்றும் சமூகநீதிப் போராட்டம், பகுத்தறிவு பரப்புதல், சுயமரியாதை மற்றும் சமூகப் புரட்சி ஆகிய பணிகளிலேயே பெரியார் ஈ.வெ.ராமசாமி தனது வாழ்நாள் முழுவதையும் செலவழித்தார். ஒரு பகுத்தறிவாளரான அவர் தங்களுள் அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளவும், தங்களது நேரத்தையும் பொருளையும் வீணாக்கி தீய விளைவுகளை அளிக்கும் கண்மூடித்தனமான மூடநம்பிக்கைகளை யும் பழக்க வழக்கங்களையும் கைவிடும்படியும் அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.''

நீதிபதியே இப்படி ஒரு நற்சான்றிதழ் வழங்கிய பின்னால், பெரியாரை கேலி செய்பவன் தரக்குறைவாகப் பேசுகிறவன் ஒன்று அடிமுட்டாளாக இருக்கவேண்டும்... அல்லது மக்களைப் பற்றியோ, மாற்றம் முன்னேற்றம் பற்றியோ கவலைப்படாத அரசியல்வாதியாக இருக்கவேண்டும்.

(திரை விரியும்)

nkn190325
இதையும் படியுங்கள்
Subscribe