சினிமா கொட்டகை! டைரக்டர் -ரைட்டர் வி.சி.குகநாதன் (67)

ss

ct

(67) பட்டயக் கிளப்பிய பாடல்கள்!

"ஜவானி திவானி' என்ற இந்திப் படத்தில் ஒரு சூப்பர் பாடல். ஒரு குரல் பேஸ்லிஇல் பாடும்போது அடுத்த குரல் டாப்பில் பாடும். அது ரந்தீர்கபூர், ஜெயபாதுரி பாடும் காதல் பாட்டு. "ராஜபார்ட் ரங்கதுரை' படத்தில் ஒரே ஒரு நவீன ரக காதல் பாட்டு. அதுக்கான கம்போஸிங் ஏவி.எம்.மில். எம்.எஸ்.வி. பல டியூன்களைப் போட்டுவிட்டார். எனக்கு முழு திருப்தி ஏற்படவில்லை. இந்த ஹிந்திப் பாட்டைச் சொல்லி காப்பி அடிங்கன்னு எம்.எஸ்.வி. ஸாரிடம் சொல்லும் தைரியம் எனக்கில்லை. எந்தக் காலத்திலும் அப்படி காப்பியடிக்கிற ஆளும் அல்ல எம்.எஸ்.வி.

பலவிதமாக சொல்லிப் பார்த்தேன், பலனில்லை. என் ஆபீஸ் பையன் சுப்பையா எல்லாருக்கும் காப்பி கொடுக்க தயாராகிக் கொண்டிருந்தான். அவனை தனியாகக் கூட்டிப் போய் எம்.எஸ்.வி. ஸாருக்கு காப்பி குடுக்கும் போது "இரண்டாவது டியூனையும் ஆறாவது டியூனையும் இணைச்சுப் பாருங்க... சரியா வரும் என சொல்லிவிட்டு வா'' என்றேன். அவன் பயந்தான். நான் தைரியப் படுத்தி அனுப்பினேன். அவனும் குனிந்து அவர் காதுக்குள் முணுமுணுத்தான். அவர் கோபப் படவில்லை. காப்பியை குடித்து முடித்துவிட்டு அவன் சொன்ன இரண்டு டியூன்களையும் இணைத்து தத்தகாரம் அமைத்தார். நான் விரும்பியது கிடைத்தது.

கவிஞர் கண்ணதாசன் வந்தார்... வார்த்தைகள் வழுக்கிக்கொண்டே போனது.

"மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்... உதயகாலம் வர

"மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்... உதயகாலம் வரை உன்னத லீலைகளாம்...''

ஒரு குரல் பேஸ்... மற்ற குரல் டாப்பில்... பாடல் பெரிய ஹிட்.

எம்.எஸ்.வி., பல வருடங்களாக, ஒரு ஆபீஸ் பையன் சொல்லித்தான் இப்பாடல் பிறந்தது என சொல்லிவந்தார். அதேபோல் "எங்க மாமா' படத்தில், "என்னம்மா சொல் லும்மா... இப்பவா... அப்பவா' இதுவும் ஒரு இந்திப் பாடலின் தழுவலே!

என் "காசி யாத்திரை' நாடகத்தின் இசை "போஸ் தேவா' இருவர். இவர்களை திரை இசையமைப்பாளர்களாக்க முடிவெடுத்தேன். முதல் பாட்டு கம்போசிங் அமர்ந்தபோது ஒரு அம்மன் பாட்டில் ஆரம்பிக்கலாம் என்று சொன்னேன். "வண்ணக்கிளி' படத்தில் வரும் "சித்தாடை கட்டிக்கிட்டு' என்ற பாடல் மாதிரி என எடுத்துக் கொடுத்தேன். "எங்கம்மா மகராசி... எல்லாம் உன் கைராசி' பாடல் பிறந்தது. பெரிய வெற்றிபெற்றது. அதேபோல் "மதுர கீதம்' படத்தில் "கண்ணன் எங்கே? ராதை மனம் தேடுதம்மா' பாடல் சூப்பர் ஹிட்டானது. இதுவும் இந்திப் பாடலின் தழுவல். ஆர்.டி. பர்மன் இசை. "மச்சானைப் பாத்தீங்களா? படத் தில் "மாம்பூவே சிறு மைனாவே... மச்சானின் பச்சைக்கிளி' பாடல் இன்றும் பிரபலம். இவை உருவாகக் காரணமாயிருந்ததில் மிக்க மகிழ்ச்சி எனக்கு. அதேபோல் "மைக்கேல்ராஜ்' படத்தில் "காலம் பிறந்திருச்சு சின்ன மயிலே... காற்றும் அடிச்சிடுச்சு சின்ன மயிலே' பாடல். பாஸிட் டிவ் உணர்வை வளர்க்கும் அர்த்தமுள்ள பாட்டு.

cc

கவிஞர் குடியரசுவின் மகன் இசை வாணன், அஜித் நடித்த "மைனர் மாப்பிள்ளை' என்ற படத்தில் "தந்தி கொடு... தந்தி கொடு காமனுக்குத் தந்தி கொடு' என்று எழுதிய பாடல் சூப்பர் ஹிட் ஆனது.

"தனிக்காட்டு ராஜா' படப் பாடல்கள் முழு ஸ்டீரியோவில் இளையராஜாவால் ரிக்கார்ட் செய்யப்பட்டது. மங்களூர், ஊட்டி, கேரளா, மைசூர் இப்படி பல இடங்களில் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடந்துகொண்டி ருக்கும்போது ஸ்ரீப்ரியா கதாபாத்திரத்துக்கு "ராசாவே உன்னைத்தான் எண்ணித்தான் பல ராத்திரி மூடலே கண்ணைத்தான்' பாடல் சூப்பராக அமைந்திருந்தது. ஆனால் ஸ்ரீதேவி -ரஜினிக்கு நல்ல பாடல் இல்லையெனத் தோன்றியது. படப்பிடிப்பில் இருந்தபடியே இளையராஜாவிடம் தொலைபேசியில் பேசி ஒரு பாடல் வேண்டுமெனக் கேட்டேன். இரண்டு, மூன்று டியூன்களை போட்டு அனுப்பினார். அதில் தேர்வு செய்து பின்னர் பாட்டு எழுதப்பட்டு வந்த பாடல்தான், " சந்தனக்காற்றே செந்தமிழ் ஊற்றே... சந்தோஷப் பாட்டே வா' என்ற பாடல். ஊட்டியில் படமாக்கினேன். இது இன்றுவரை பலரும் விரும்பிப் பார்க்கும் பாடலாக இருக்கிறது.

இதேபோல் ரஜினிக்கு "தம்பிக்கு எந்த ஊரு' என்ற கதையைச் சொல்லி அட்வான் சும் கொடுத்த பின்னால், அருணாசலம் ஸ்டுடியோவிலிருந்த யேசுதாஸ் ரிக்கார்டிங் தியேட்டரில் கங்கைஅமரன் எழுத, இளையராஜா இசையமைத்த பாடல்... சில பல காரணங்களினால் கிடப்பில் போடப் பட்டது. பின்னர் ஏவி.எம்.மில் "நல்லவனுக்கு நல்லவன்' படம் நடந்துகொண்டிருக்கும் போது... சரவணன் சார் என்னை அழைத்து, நான் பதிவு செய்த பாட்டை தர முடியுமா எனக் கேட்டார். அந்த காலகட்டத்தில் ரஜினி, இளையராஜாவின் அந்தப் பாட்டு, இந்த இரண்டையும் வைத்தே படத்தை வியாபாரம் பண்ணிவிட முடியும். ஆனால் சரவணன் சாரே கேட்ட பின்னால் என்னால் மறுக்க முடியுமா? கொடுத்தேன். அது "உன்னைத்தானே' என்ற சூப்பர் ஹிட் பாடல் ஆனது. இதில் இன்னொரு விஷயம் டி.கே.சண்முகம் அண்ணாச்சிதான் என்னை நடிப்புப் பள்ளியில் சேர்த்து விட்டார். அந்த நன்றிக் கடனாக டி.கே.எஸ். கலைவாணனை அந்தப் பாடலை பாடவைத்தேன். ஏவி.எம்.மில் அந்தப் பாடலை யேசுதாஸை பாட வைத்தனர். நான் செய்யவேண்டிய கைமாறு தவறியது. இந்தப் பாடலுக்கான செலவை நான் பெற்றே தீரவேண் டும் என வற்புறுத்தி பதினேழா யிரத்து ஐநூறு ரூபா கொடுத்தார்கள். இதை நான் ஏன் சொல்லுகிறேன் என்றால்... என் படங்களுக்குத் தேர்வு செய்யும் "டியூன்கள்' வெற்றிபெற்றே தீரும்.

"மணிப்பூர் மாமியார்' என்றொரு படம், ஜெயலலிதா விரும்பி நடித்த படம். பாடல்கள் பதிவானபோது அவர்களே நேரில் ரிக்கார்டிங் தியேட்டருக்கு வந்து கேட்டு மகிழ்ந்தார்கள். அதற்கான ஐந்து பாடல்களும் செம பாப்புலர். சில பல காரணங்களினால் எட்டாயிரம் அடிகள் வளர்ந்த பின்னால் நிறுத்தும் நிலை ஏற்பட்டது. தற்போது இளையராஜாவிடம் பேசி இன்னொரு நகைச்சுவைப் படத்தில் அந்தப் பாடல்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்.

cc

அதேபோல் விஜயகாந்த் நடித்த எனது "ஏமாறாதே ஏமாற்றாதே' படத்தில் "தானா வம்புக்கு வரமாட் டேன்... அதுதான் பண்பாடு! அது தானா வந்தால் விடமாட்டேன்... அப்புறம் உன்பாடு' இது பேசப்பட்ட பாடல். "அட்ரா சக்கை' வெற்றிகரமாக ஓடிய என் நகைச்சுவை படம். இதிலும் பாடல்கள் சூப்பர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இரு படங்கள், "சூப்பர் போலீஸ்', "மின்சாரக் கனவு'. எல்லா பாடல்களுமே வேற லெவல். தற்போது பத்து நகைச்சுவை நடிகர்கள் நடிக்கும் "காவி, ஆவி, நடுவுலே தேவி' என்ற படத்தில் ஒரு அம்மன் பாடல், ஒரு ஆஞ்சநேயர் பாடல். இரண்டுமே ஆட வைக்கும் லெவல். இதில் யோகிபாபுவுக்கு ஒரு பாடல். "இந்திரன் கெட்டதும் பெண்ணாலே, சந்திரன் கெட்டதும் பெண்ணாலே... ராஜதந்திரி கெட்டதும் பெண்ணாலே' இது ஒரு மினி தேசியகீதமாக மாறும். தயாரிப்பாளர் சகோதரர் தாணு, இப்பட பாடல்கள் உரிமையை வாங்கியுள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் ஜொலிக்கின்றன.

முன்னாள் கல்வியமைச்சர் என் அன்பு சகோதரர் காளிமுத்து, சந்திரபோஸ் இசையில் என் படத்துக்காக எழுதிய பாடலே இன்றும் தமிழர்கள் வாழும் இடமெல்லாம் ஒலிக்கும் "எங்கள் தமிழினம் தூங்குவதோ' என்ற பாடல்.

ஏறத்தாழ அறுபது வருடங்கள் என் திரைப்பயணம். இதில் என் கதைகளும், என் படப் பாடல்களும் தொண்ணூறு சதவீத வெற்றியைப் பெற்றன என அடக்க மாகச் சொல்லிக்கொள்வதில் பெருமிதமடைகிறேன். தமிழ் மக்களின் பேராதரவோடு, இறையருளோடு இந்த வெற்றி தொடரட்டும்.

(திரை விரியும்...)

படம் உதவி: ஞானம்

nkn010325
இதையும் படியுங்கள்
Subscribe