Advertisment

சினிமா கொட்டகை! டைரக்டர் -ரைட்டர் வி.சி.குகநாதன் (64)

ss

cc

ஏ.வி..எம். அப்பச்சி இருந்தவரை, எல்லாமே எனக்கு சுமூகமாகவே நடந்துவந்தது. அவர் போன பின்னால் ஏவி.எம். தொடர்பு சற்று தளர்ந்தது. அதேசமயம் தெலுங்கு பட உலகம் எனக்கு புதிய பாதை அமைத்தது. சிலகாலம் கழித்து மறுபடியும் "அம்மா' என்ற படத்துக்கு எழுதும் வாய்ப்பை எனக்களித்தனர்.

Advertisment

அதன்பின் "சங்கர் குரு', "சொந்தக்காரன்', "பேர் சொல்லும் பிள்ளை', "மனிதன்', "பாட்டொன்று கேட்டேன்', தெலுங்கு, இந்தி என பல படங்கள். அதில் "பெண்புத்தி முன்புத்தி' என்றொரு படம். திரைக்கதை -வசனம் நான் எழுதவேண்டியிருந்ததால், எங்கள் கம்பெனியின் என் கதைக்கு பிரபல எழுத்தாளர் ஏ.எல்.நாராயணன் வசனம் எழுத, வேறொரு இயக்குநரை இயக்க ஒப்பந்தம் செய்தோம். படம் முடிந்து ரீ-ரெக்கார்டிங் ஏ.வி.எம். தியேட்டரில். மியூசிக் டைரக்டருக்கு சரியான நேரத்துக்கு ரீல்கள் வராததனால்... இசைக்கருவி வாசிப் பவர்கள் காத்திருக்கும் நிலை. இதனால் நாட்கள் அதிகமாகி பணம் பல மடங்கு பெருகியது. இசையமைப்பாளர் இதை என்னிடம் சொல்லி வருத்தப்பட்டார்.

Advertisment

நான் விசாரிப்பதற்காக எடிட்டர் இடத்துக்குப் போனேன். அவர், தவறு தனதில்லை என்றும், இயக்குநர் நேரத்துக்கு வராததே காரணம் என்றும் சொன்னார். நான் சற்று கோபமாக இயக்குநரை கடிந்து பேசியது உண் மைதான். ஆனால் அது செலவு அதிகமாவதனா லும், சரியான முறையில் வாய்ப்பை பயன்படுத்த வில்லையே என்ற கோபத்திலும் வெளிவந்த வார்த்தைகள். அந்த சமயத்தில் அங்கிருந்த இயக்குநரின் உதவியாளர் அதை அப்படியே இயக்குநரிடம் போட்டுக் கொடுத்துவிட்டார்.

அந்த இயக்குநர், என் தம்பியிடம் போன்போட்டு கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார். என் கெட்டநேரம், அதேசமயம் ஏதோ வேலையாக எங்கள் அலுவலகத்துக்க

cc

ஏ.வி..எம். அப்பச்சி இருந்தவரை, எல்லாமே எனக்கு சுமூகமாகவே நடந்துவந்தது. அவர் போன பின்னால் ஏவி.எம். தொடர்பு சற்று தளர்ந்தது. அதேசமயம் தெலுங்கு பட உலகம் எனக்கு புதிய பாதை அமைத்தது. சிலகாலம் கழித்து மறுபடியும் "அம்மா' என்ற படத்துக்கு எழுதும் வாய்ப்பை எனக்களித்தனர்.

Advertisment

அதன்பின் "சங்கர் குரு', "சொந்தக்காரன்', "பேர் சொல்லும் பிள்ளை', "மனிதன்', "பாட்டொன்று கேட்டேன்', தெலுங்கு, இந்தி என பல படங்கள். அதில் "பெண்புத்தி முன்புத்தி' என்றொரு படம். திரைக்கதை -வசனம் நான் எழுதவேண்டியிருந்ததால், எங்கள் கம்பெனியின் என் கதைக்கு பிரபல எழுத்தாளர் ஏ.எல்.நாராயணன் வசனம் எழுத, வேறொரு இயக்குநரை இயக்க ஒப்பந்தம் செய்தோம். படம் முடிந்து ரீ-ரெக்கார்டிங் ஏ.வி.எம். தியேட்டரில். மியூசிக் டைரக்டருக்கு சரியான நேரத்துக்கு ரீல்கள் வராததனால்... இசைக்கருவி வாசிப் பவர்கள் காத்திருக்கும் நிலை. இதனால் நாட்கள் அதிகமாகி பணம் பல மடங்கு பெருகியது. இசையமைப்பாளர் இதை என்னிடம் சொல்லி வருத்தப்பட்டார்.

Advertisment

நான் விசாரிப்பதற்காக எடிட்டர் இடத்துக்குப் போனேன். அவர், தவறு தனதில்லை என்றும், இயக்குநர் நேரத்துக்கு வராததே காரணம் என்றும் சொன்னார். நான் சற்று கோபமாக இயக்குநரை கடிந்து பேசியது உண் மைதான். ஆனால் அது செலவு அதிகமாவதனா லும், சரியான முறையில் வாய்ப்பை பயன்படுத்த வில்லையே என்ற கோபத்திலும் வெளிவந்த வார்த்தைகள். அந்த சமயத்தில் அங்கிருந்த இயக்குநரின் உதவியாளர் அதை அப்படியே இயக்குநரிடம் போட்டுக் கொடுத்துவிட்டார்.

அந்த இயக்குநர், என் தம்பியிடம் போன்போட்டு கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார். என் கெட்டநேரம், அதேசமயம் ஏதோ வேலையாக எங்கள் அலுவலகத்துக்கு ஆட்டோவில் வந்த அந்த இயக்குநரின் இன்னொரு உதவியாளரை என் தம்பி அடிக்க ஆரம்பித்ததும், அவர் ஆட்டோவை விட்டுவிட்டு பின்பக்க காம்பவுண்ட் சுவரை ஏறிக் குதித்து ஓடிவிட்டார். இந்த சேதியும் இயக்குநருக்குப் போகவே, மறுபடியும் என்னை, என் தாயாரை கெட்ட... கெட்ட வார்த்தையில் திட்டியிருக்கிறார்.

cc

சிலமணி நேரம் கழித்து எதுவுமே தெரியாத நிலையில் அலுவலகம் வந்தேன். அந்த இயக்குநரின் வீட்டுக்குப் போன்பண்ணி, "என்னைப் பற்றி பேசியதைக்கூட மன்னிப்பேன். சம்பந்தமில்லாம என் தாயாரை வசைபாடியதை மன்னிக்கவே மாட் டேன். அதற்காக அவனை மாலை ஆறுமணிக்குள் தண்டித்தே தீருவேன்' எனச் சொல்லிவிட்டு, அப்போது இங்கே யாரிடமும் இல்லாத ஒரு வெப்பனோடு காரில் கிளம்பினேன். இதற்குள் இந்த விஷயம் ஏ.வி.எம். சரவணன் சார் காதுக்குப் போயி ருக்கிறது. சரவணன் சார், எனக்குப் போன்பண்ணி "ஒரு முக்கிய விஷயமா பேசணும், உடனே ஸ்டுடியோவுக்கு வாங்க குகநாதன்'' என்றார்.

"நாளை காலை வரட்டுமா சார்'' எனக் கேட்டேன்.

"இல்லை... இப்பவே வாங்க'' என்றார்.

மறுக்க முடியாமல் போனேன். நான் அவர் அறைக்குள் போய் அமர்ந்ததும் ஒரு காரில் மூன்று, நான்கு போராளி நண்பர்கள் ஹெவி வெப்பன்ஸ் வெளியே தெரியும்படி வைத்துக்கொண்டு ஸ்டுடியோ உள்ளே வந்து என் காரின் அருகே நிறுத்திவிட்டு... அமைதியாக காரை விட்டு இறங் காமல் காத்திருந்தனர். சரவணன் சார், அறையில் அமர்ந்தவாறு பார்த்துவிட்டார். அப்பதான் அவருக்கு விஷயம் தெரிஞ்சு போச்சுங்கிறது எனக்குப் புரிந்தது. "அந்த டைரக்டர் சரியா அஞ்சு மணிக்கு இங்கே வருவார், உங்ககிட்ட மன்னிப்பு கேட்பார்'' எனச் சொன்னார்.

"இப்ப அவர் எங்கேயிருக்கிறார்?'' எனக் கேட்டேன்.

"நீங்க மறைச்சு வச்சிருக்கிற ஆயுதத் தை என் கையிலே குடுங்க சொல்றேன் னாரு.''

நான் சற்று தடுமாறினேன்.

"இதற்குள் உங்களோட வந்திருக்கிற கார், வெளியே வாசல்ல நிக்கிற வேன் எல்லாத்தையும் கிளம்பச் சொல்லுங்க'' எனக் கேட்டார். திரும்பத் திரும்ப அவர் கேட்க, எனக்கு சங்கடமாயிருந்தது.

"வேணாம் சார்... நான் காரில் இருப்பவங்க கிட்ட குடுத்திட்டு அவங்களை அனுப்பிவிட்டு வர்றேன்''னு சொல்லிட்டு வெளியே போனேன். அவர் கண்ணாடி ஜன்னல் வழியாப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் சொன்னதைச் சொன்னபடி செய்துவிட்டு அவர் அறைக்குத் திரும்பினேன். அப்போதுதான் சொன்னார், அந்த இயக்குநர் பாதுகாப்பு கருதி சகோதரர் நடிகர் விஜயகாந்த் வீட்டில் இருப்பதாக. நான் பொறுமை காத்தேன்.

சிறிது நேரத்தில் இயக்குநர் தன் குடும்பத் தோடு ஸ்டுடியோ வந்தார். அவர் பயந்த நிலையில் இருந்தார். பதட்டத்தோடு சரவணன் சார் அறைக் குள் வந்ததும், என்னைப் பார்த்தார். உடனே மன்னிப்புக் கேட்டு கண்ணீர்விட்டார். ஆனாலும் என் தம்பிகளின் கோபம் மட்டும் அடங்கவில்லை. மெதுவாகப் பேசி அவர்களையும் சமாதானப் படுத்தினேன். அன்று சரவணன் சார் அப்படி ஒரு செயலை செய்யாதிருந்தால்... நான் கொலைகார னாகியிருப்பேன் என்பது மட்டும் சத்தி யம். அதே ஏ.வி.எம். மில் இன்னொரு நிகழ்வு. எட்டாவது படப்பிடிப்புத் தளத் தில் "அட்ரா சக்கை' படத்தின் படப்பிடிப்பு வேகவேகமாக நடந்து கொண்டிருந்தது. வடிவேலு, மணிவண்ணன், இன்னும் சிலர் நடித்துக்கொண்டிருந்தபோது, ஒரு வில்லன் நடிகர் நேராக என்னிடம் வந்து பணம் வேண்டுமெனக் கேட்டார்.

cc

"உனக்கு ஒண்ணும் பாக்கி இல்லையே?'' என்று சொல்லிவிட்டு, என் இயக்குநர் பணியைத் தொடர்ந்தேன். அவர் விடுவதாக இல்லை... அவர் குடித்திருந்தார். மீண்டும் குடிக்கவே பணம் கேட்டிருக்கிறார் என்பதை யும் நான் அறிவேன். வேலை செய்ய விடாமல், "இன்னும் நான் நடிக்க வேண்டிய காட்சிகள் இருக்கே... அதுக்கு அட்வான்ஸா குடுங்க சார்' என்று சற்று மிரட்டுவதுபோல் குரல் மாறியது.

ஒரே நொடிதான், அவன் கன்னத்தில் விழுந்த அடி... நிலைதடுமாறி என் மேலேயே விழுந்தார். சுற்றிப் பார்த்தால் என் அருகே நின்ற வடிவேலு, பத்தடி தள்ளிப் போய்விட் டார். மணிவண்ணன் சற்றுத் தொலைவில் நாற்காலியில் அமர்ந்திருந்தவர், எழுந்து சற்று பின்னால் போய்விட்டார். நான் அறிமுகம் செய்த ஒளிப்பதிவாளர் கே.பி.அகமத், கேமரா வை விட்டுவிட்டு பின்னால் போய்விட்டார். என் உதவியாளர்கள் அந்த நடிகரிடம் "இதுக்கு மேல இங்கே நின்ன அடிச்சே கொன்னுப்புடு வாரு' என அவனை தள்ளிக்கிட்டுபோய் ஒரு காரில் ஏற்றி அனுப்பிவைத்தனர். மாலை ஷூட்டிங் முடிந்து போகும்போது சரவணன் சார் என்னை பார்க்கவேண்டும் எனச் சொன்ன தாக ஆபீஸ்பையன் சொல்ல, நான் போனேன்.

"என்ன நடந்தது' எனக் கேட்டார்... நடந்ததைச் சொன்னேன். "அவனை ஏன் வெளியே போக அனுமதிச்சீங்க? போலீசிலே ஒப்படைச்சிருக்கலாமே?'' எனக் கேட்டார்.

"அது செய்தியாயிடும், அந்த நடிகர் வாழ்க்கை பாதிக்கப்படும்... நம்ம ஸ்டுடியோ பேரும் பேப்பர்ல வரும்'' எனச் சொன்னதும் "குட் டெஸிசன்' என பாராட்டினார்.

ss

இன்னொரு தமாஷான நிகழ்வு. ஏவி.எம். அலுவலகத்தில் ஒரு மேனேஜர். படங்கள் வாங்க, விற்க, அவுட்டோர் போகவர ஏற்பாடுகள் செய்வார். அதிகமாகப் பேசுவார். முதலாளிகள் இல்லாத சமயத்தில் அவரே முதலாளி போல் பேசுவார். அவர் தோரணையே வித்தியாசமா இருக்கும். தான் வாங்காத, விற்காத படங்களைப் பற்றி படுமட்டமாகப் பேசுவார். இவர் தெரியாமல் ஒருநாள் எங்கிட்ட தப்புத்தப்பா பேசுனாரு. நான் பதிலே சொல்லாமல் என் அறைக்குச் சென்றுவிட்டேன். சிறிதுநேரம் கழித்து அவருக்கு வியாபார விஷயமா போன்பண்ணினேன். "முக்கியமான வியாபார விஷயம் பேசணும் வாங்க''ன்னு கூப்பிட் டேன். ஆர்வமா ஓடிவந்தார். "நல்ல வியாபாரம்... தனியா பேசுவோம்... கதவை உள்ளே பூட்டிட்டு வாங்க'' என்று சொன்னதும் உள்ளே பூட்டிவிட்டு ஆர்வத்தோடு வந்தமர்ந்தார்.

நேராக நான் டாபிக்குக்கு உள்ளே போய்விட் டேன். "இதோ பாருங்க... உங்க குரங்கு சேட்டை, போக விட்டுட்டு பின்னாடி பேசுறது, நக்கலடிக்கிறது, மத்தவங்ககிட்ட நம்மளப் பத்தி தரக்குறைவா பேசுறது, அவனுக்கென்ன தெரியும்... இப்படி, அப்படின்னு பேசுனா அக்கம் பக்கத்துல யாரு இருக்காங்கன்னு கூட பார்க்காமல் அறைஞ்சிடுவேன்''னு சொல்லச் சொல்ல... அவர் முகம் பயத்தினால் மேலும் கறுத்தது. சரியான வார்னிங் குடுத்து "இப்ப நீங்க போகலாம்...''னு சொன்னதும், ஓடிப்போயிட்டாரு. சிலமணி நேரம் கழித்து சார் கூப்பிட்டார் போனில். அவர் அலுவலகம் போனேன். சரவணன் சார், பாலு சார், குகன் சார் மூவரும் இருந்தார்கள். நானும் உட்கார்ந்தேன். "எதுக்காக அந்தாளு சட்டையைக் கிழிச்சு அப்படி அடிச்சீங்க?'' கேட்டது சரவணன் சார்.

உடன் குகன் சார் குறுக்கிட்டு, "இன்னும் நாலு சாத்து சாத்தியிருக்கப்படாது''

"யாரை...?'' ஆச்சரியமாக நான் கேட்க... பாலு சார் அவர் பேரைச் சொன்னார்.

அந்த நபர் என் அறையிலிருந்து வெளியே வந்த பின்னால், தன் சட்டையை தானே கிழித்துவிட்டுத், தலையைக் கலைத்துவிட்டு, தண்ணீரைத் தெளித்து, மூச்சு வாங்கியபடி சார் அறைக்குள் போய் அழுது குளறி... "என்னை குகநாதன் அடிச்சிட்டான்...''னு புகார் குடுத்திருக்காரு. நான் நடந்ததைச் சொன்னதும், மூவரும் விழுந்து, விழுந்து சிரித்தார்கள்.

(திரை விரியும்...)

nkn190225
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe