வெப்பமான காலத் தில் வீசும் காற்று இதயத் துக்கு இதமாக இருக்கும்... எங்கோ ஓரிடத்தில் தீ பற்றி எரியும்போது பலமான காற்று வீசினால் என்ன ஆகும்? தீ வேகமாகப் பரவும். நெருப்பு தொட்டா லும் சுடும்... அதுவா பட்டாலும் சுடும். கலை உலகமும் அப்படித்தான். வெப்பக் காலத்தில் வீசிய தென்றல் "பராசக்தி', "நாடோடி மன்னன்' போன்ற படங்கள். தீ பற்றி எரியும்போது பலமாக வீசிய காற்று "அரங்கேற்றம்' போன்ற படங்கள். "பரா சக்தி'யில் கோவில் பூசாரி கல்யாணியின் கற்பை அபகரிக்க முயற்சித்ததைக் காட்டினார்கள். தன் கற்பைக் காப்பாற்ற தற் கொலை செய்ய முயல் கிறாள் கல்யாணி.
"அரங்கேற்றம்' படத்தின் ஐயராத்துப் பொண்ணு தன் கற்பை விற்று, தம்பியை டாக்ட ருக்கு படிக்க வைப்பதுடன், தன் குடும்பத்தையும் வசதியாக வாழவைக் கிறாள். மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது... "கற்பு என்ன கடைச் சரக்கா, வறுமை வந்ததும் விற்றுவிட?' கலையுலகின் முலம் நல்லதையும் செய்ய முடியும், கெடுதலையும் செய்ய முடியும் என்பதை புரிய வைக்கவே இந்த உதாரணத்தை எடுத்துக் காட்டுகிறேனே தவிர... எனக்கு வேறு நோக்கம் எதுவும் கிடையாது. "நாடகங்கள் மூலம், திரைப்படங்கள் மூலம், நல்ல பல கருத்துக்களை மக்களுக்குச் சொல்ல முடியும் என நான் நம்பினேன்' என பேரறிஞர் அண்ணா சொல்லியிருக்கிறார். அதே வழியில்தான் கலைஞரும், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரும் பயணித்தார்கள். திரைக்கலை மூலம் பாமர மக்களை எழுச்சியுற செய்த இயக்கம்தான் பேரறிஞர் அண்ணாவின் திராவிட இயக்கம்!
கலை வாயிலாக பட்டி, தொட்டியெங்கும் அறிவ

கலை வாயிலாக பட்டி, தொட்டியெங்கும் அறிவை வளர்த்தெடுத்த திராவிட இயக்கம் போல் வேறெந்த இயக்கமும் உலகிலேயே கிடை யாது. மூதறிஞர் ராஜாஜியிடம் ஒருவர் 1967இல் "நீங்கள் ஏன் தி.மு.க.வை ஆதரித்து, அவர்கள் வெற்றிக்கு வழிவகுக்கிறீர்கள்?' என்று கேட்டார்.
அவர் அளித்த பதில்... "உங்களுக்கு யார் சொன்னார்கள், நான் அவர்களை வெற்றியடைய செய்யப் போகிறேன் என்று? நான் சுவர் எழுத்துக்களைப் படித்தேன். தெளிவு பெற்று வெல்லப் போகும் அணியின் பக்கம் சேர்ந்தேன். என் ஆதரவினால் அவர்கள் வெல்வார்கள் என்றல்ல. தி.மு.க. வெல்லும் என்பதனால் அவர்களை நான் ஆதரித்தேன்' சிந்தித்துப் பாருங்கள், அவருக்கு கசப்பான உண்மைதான். ஆனாலும் ஒளிவு மறைவின்றி பதிலளிக்கிறார். கேள்வி கேட்டவருக்கு புரியாத ஒன்று மூதறிஞர் பதிலில் இருந்தது. உடனே அவர் கேட்டார் "சுவர் எழுத்துக்கள் என்றால் என்ன?'
"அதுகூடத் தெரியாதா? சீனப் புரட்சியின் போது பத்திரிகைகள் அங்கே தடை செய்யப் பட்டன, எதிர்க்கட்சிகள் நசுக்கப்பட்டன. அந்தச்சமயத்தில் புரட்சிக்காரர்களுக்கு தங்கள் ஆதரவாளர்களோடு தொடர்புகொள்ள வாய்ப் பில்லாததால், ராவோடு ராவாக செய்திகளை சுவத்திலே எழுதிட்டுப் போயிடுவாங்க. பொழுது விடிஞ்சதும் ஆதரவாளர்கள் சுவத்திலே படிச்சு தெரிஞ்சுகிட்டு, செய்ய வேண்டியதை செய்வாங்க. இந்த வழியை, நல்ல முறையை 67-ல் தி.மு.க. கடைப்பிடித்தது'.
ஒரு உதாரணம்... "அரியலுர் அழகேசா... நீ ஆண்டது போதாதா? மக்கள் மாண்டது போதாதா?'
"கூலி உயர்வு கேட்டான் என் புருஷன்... குண்டடிபட்டு செத்தான்'
"அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு'
"காகிதப்பூ மணக்காது! காங்கிரஸ் சோஷலிசம் விளங்காது'
"வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கவேண்டும்'
"உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு'
இவை மட்டுமல்ல... அண்ணா, நாவலர், கலைஞர், எம்.ஜி.ஆர். எங்கே பேசுகிறார்கள், என்ன நாடகம் எங்கே நடக்கிறது, என்ன படம் எங்கே ஓடுகிறது இவை அனைத்தும் சுவரில் எழுதப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் கலை மூலம் கழகம் வளர்க்கப்பட்டது. ஆட்சியைப் பிடிக்க அது ஒரு காரணமாக அமைந்தது. தமி ழகத்தில் ஆரியம் சாய்க்கப்பட்டதற்கு கலையுலக மும் ஒரு முக்கிய காரணமானது. ஆனாலும் சில தயாரிப்பாளர்கள், சில நடிகர்கள், சில எழுத்தாளர்கள், தந்திரமாக ஆரியத்தை தாங்கிப் பிடிக்க முயன்றார்கள். நாடகத்தையும், சினிமாவையும் அதற்கு பயன்படுத்தினார்கள்.
"தெய்வத்தாய்' படத்தில் வசனகர்த்தாவாக எம்.ஜி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்ட பாலச் சந்தர்... நாகேஷ், ஸ்ரீகாந்த், மேஜர் சுந்தரராஜன், ராகவன், சவுகார் ஜானகி ஆகியோர் துணை யோடு, சபாக்களின் ஆதரவோடு நாடக உலகில் வெற்றி பவனிவந்தார். நடிகர் சோ "முகமது பின் துக்ளக்' போன்ற அரசியல் நையாண்டி நாடகங்கள் மூலம் புகழ்பெற்றார். விசு, எஸ்.வி.சேகர், மௌலி ஆகியோரும் சபாக்களில் சபாஷ் பெற்றனர். "இயக்குநர் சிகரம்' ஜெமினிகணேசனை வைத்து "கண்ணா நலமா?', "வெள்ளிவிழா' போன்ற சில படங்கள் செய்தார். எதிர் பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. சிவாஜியை வைத்து "எதிரொலி' என்ற படத்தை எடுத்தார். தோல்விப் படமானது. எம்.ஜி.ஆரை வைத்து "மெழுகுவர்த்தி' என்ற நாடகத்தை படமாக்கத் தொடங்கினார். அது மூன்றுநாட்கள் படப்பிடிப்போடு நின்று விட்டது. அந்த சமயம் இருதயநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை சென்றார். மீண்டு வந்தபின் எடுத்த "அரங்கேற்றம்', விபச்சாரத்துக்கு குடும்ப சூழ்நிலை காரணமாக தள்ளப்பட்ட ஒரு பெண்ணின் கதை. அதன்பின் பாதிக்கப்பட்ட பெண்களின் கதைகளை எடுத்தார். புதுமுகங்களை அறிமுகம் செய்வதில் ஆர்வம் காட்டினார். கமல் அவர் படங்களில் நடித்தார். மக்கள் "சின்ன சாம்பார்' என அழைத்தனர். நல்லவேளை "சகலகலா வல்லவன்' போன்ற படங்கள் வரத்தொடங்கியதால் அவர் பிழைத்தார்.
அந்த சமயத்தில் "அபூர்வ ராகங்கள்' படத்தில் ரஜினிகாந்த் அறிமுகமாகிறார். தொடர்ந்து "மூன்று முடிச்சு', "தப்புத்தாளங்கள்' போன்ற சில படங்கள். ஆனால் அவருக்கான தீனி கிடைத்த படம் "பைரவி'. அடுத்து, "முரட்டுக் காளை', "ஆறிலிருந்து அறுபது வரை', "புவனா ஒரு கேள்விக்குறி' போன்ற எஸ்.பி.முத்துராமன் படங்கள் அவரை சரியாக மக்களிடம் கொண்டு சேர்த்தது. ரஜினிக்கு எல்லாவிதமான திறமைகளும் இருந்தன என்பதனை நிரூபித்தது எஸ்.பி.எம். படங்களே.
"சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தை சூட்டி, ரஜினி மீது ஒளி பாய்ச்சியவர் "கலைப்புலி' தாணு. "மாங்குடி மைனர்' நடிக்கும்போது, பல அரசியல் வசனங்கள் பேசவேண்டிய சூழ்நிலை ரஜினிக்கு. ராவணனை புகழ்ந்து பேசவேண்டிய சில வச னங்கள். மனைவி, துணைவி போன்ற வசனங் கள், "கோடையிடி குமரப்பா' என்ற போலி தமிழ்ப்பற்றாளத் தலைவரிடம் நேரடியாக கேள்விகள் கேட்கும் வசனங்கள்... இவற்றை பேசுவதற்குத் தயங்குவார். அன்போடு கடிந்து, அவசியத்தை புரிய வைத்து பேசவைத்தேன். நல்லவேளை சென்ஸாரினால் அவர் பிழைத்துக் கொண்டார். ஆனால் அந்த வசனங்கள் அகற்றப் படாத நிலையில்... எம்.ஜி.ஆர். இந்தப் படத்தை பார்க்கவந்தார். அவர் இந்த வசனங்கள் வந்த காட்சிகளில் சத்தமாக சிரித்தார். அது படத்தையே முழுமையாக தடை செய்திருந்த நேரம். பின்னர் சில காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை ரிலீஸ் செய்யச் சொன்னபோது... இந்த சுவையான காட்சிகள் தணிக்கையில் வெட்டப்பட்டன. ஏவி.எம்.மில் இந்தப் படத்தை ஆர்.எம்.வீரப்பன் பார்த்து என்னைப் பாராட்டினார். குறிப்பாக, வசனங்கள் சூப்பர் என்றார். "ரஜினி அந்த கதாபாத்திரத்தை வெகு சிறப்பா செய்திருக்கிறார்' எனச் சொன்னார். இதைப் பார்த்த ஏவி.எம். இந்தப் படத்தை கோயம்புத்தூர் ஏரியாவுக்கு விநியோக உரிமையை வாங்கி நல்ல லாபம் சம்பாதித்தனர்.
தமிழ் திரையுலகில் ஒரு திருப்புமுனையாக அமைந்தவர் ரஜினி. மாங்குடி மைனரை தொடர்ந்து வந்தது அவர் நாயகனாக நடித்த "பைரவி'. அந்த ஆரம்ப காலங்களில்கூட, தான் எதைச் செய்யவேண்டும், எதைச் செய்யக் கூடாது, எது தன்னைப் பாதிக்கும் என்பதை உணர்ந்தவராக இருந்தார். வழக்கமான ஒரு நடிகனாக இல்லாமல், ஏன்? எதற்கு? எனக் கேட்டு... அது சரியாக இருந்தால், தன்னால் எப்படி நடிப்பு மூலம் மேலும் பிரகாசிக்கச் செய்யமுடியும் என சிந்தித்து செய்பவர் ரஜினி. தனக்கென்று ஒரு தனித்தன்மை, அதை விட்டுக் கொடுக்காமல் தன் பக்கம் ரசிகர்களை ஈர்ப்பதில் வல்லவர், விடாமுயற்சி உள்ளவர். சளைக்காமல் உழைக்கும் குணம் அப்போதே இருந்தது உண்மை. ஆதாரங்களுடன் அடுத்த இதழில் தொடருவேன்.
(திரை விரியும்)
படம் உதவி: ஞானம்