Advertisment

சினிமா கொட்டகை! டைரக்டர் -ரைட்டர் வி.சி.குகநாதன் (57)

ss

cc

(57) கதை வளர்த்த இடம்

ன் முதல் கதை "புதிய பூமி'யை ஜேயார் மூவிஸ் அலுவலகத்திலுள்ள ஸ்டோர் ரூமில் தரையில் பாய் போட்டு, தரையில் அமர்ந்து கணக்குகள் எழுதும் செட்டியார் வீட்டு சிறிய மேஜையை வைத்து எழுதினேன். அதற்கு வசனம் எழுதியது மகாபலிபுரம் "டெம்பிள் பே' ஓட்டலில். "எங்க மாமா' படத்துக்கு வசனத்தை ஏவி.எம். ஸ்டுடியோவில் எனக்குத் தரப்பட்ட அலுவலக அறையில் அமர்ந்து எழுதி முடித்தேன். எஸ்.பி.முத்துராமன் வந்த பின்னால் அவருக்கு மூன்று உதவியாளர்களையும் நியமித்தேன். அலுவலகத்தில் எப்போதும் ஒரு கூட்டமிருக்கும். அதனால் வேறு எங்கேயாவது போகலாம் என திட்டமிட்டோம். கிண்டியிலிருக்கும் காந்தி மண்டபத்தில் போய் அமர்ந்தோம். போகும்போதே நொறுக்குத்தீனிகள் வாங்கிப் போனோம். மண்டபத்தின் ஒரு மூலையில் போய் அமர்ந்தோம். அதிகமான கூட்டமில்லை. நம்மை யாருக்கும் தெரியாத நிலையில், எங்களை யாரும் வேடிக்கை பார்ப்பதில்லை. பல நாட்கள் தொடர்ந்து அங்கேயே கதை விவாதத்தைத் தொடர்ந்தோம். ஒருசில நாட்கள் வல்லக் கோட்டை முருகன் கோவில் குளத்தருகே ஒரு பள்ளிக்கூடம், அதன் தாழ்வாரத்தில் போய் அமர்ந்து பேசுவோம்.

Advertisment

அந்த காலகட்டத்தில் இந்தியில் "அந்தாஸ்' என்ற படம் ஓஹோவென்று ஓடிக்கொண்டிருந் தது. அதுமாதிரி ஒரு படமாக "கனிமுத்து பாப்பா'வை உருவாக்க விரும்பினேன். "அந்தாஸ்' படத்தில் ஒரு குழந்தைக்கு தந்தையான ஷம்மிகபூர், தன் குழந்தையை ஸ்கூலில் இறக்கிவிட வருவார். அதே ஸ்கூலில் ஹேமமாலினியின் குழந்தையும

cc

(57) கதை வளர்த்த இடம்

ன் முதல் கதை "புதிய பூமி'யை ஜேயார் மூவிஸ் அலுவலகத்திலுள்ள ஸ்டோர் ரூமில் தரையில் பாய் போட்டு, தரையில் அமர்ந்து கணக்குகள் எழுதும் செட்டியார் வீட்டு சிறிய மேஜையை வைத்து எழுதினேன். அதற்கு வசனம் எழுதியது மகாபலிபுரம் "டெம்பிள் பே' ஓட்டலில். "எங்க மாமா' படத்துக்கு வசனத்தை ஏவி.எம். ஸ்டுடியோவில் எனக்குத் தரப்பட்ட அலுவலக அறையில் அமர்ந்து எழுதி முடித்தேன். எஸ்.பி.முத்துராமன் வந்த பின்னால் அவருக்கு மூன்று உதவியாளர்களையும் நியமித்தேன். அலுவலகத்தில் எப்போதும் ஒரு கூட்டமிருக்கும். அதனால் வேறு எங்கேயாவது போகலாம் என திட்டமிட்டோம். கிண்டியிலிருக்கும் காந்தி மண்டபத்தில் போய் அமர்ந்தோம். போகும்போதே நொறுக்குத்தீனிகள் வாங்கிப் போனோம். மண்டபத்தின் ஒரு மூலையில் போய் அமர்ந்தோம். அதிகமான கூட்டமில்லை. நம்மை யாருக்கும் தெரியாத நிலையில், எங்களை யாரும் வேடிக்கை பார்ப்பதில்லை. பல நாட்கள் தொடர்ந்து அங்கேயே கதை விவாதத்தைத் தொடர்ந்தோம். ஒருசில நாட்கள் வல்லக் கோட்டை முருகன் கோவில் குளத்தருகே ஒரு பள்ளிக்கூடம், அதன் தாழ்வாரத்தில் போய் அமர்ந்து பேசுவோம்.

Advertisment

அந்த காலகட்டத்தில் இந்தியில் "அந்தாஸ்' என்ற படம் ஓஹோவென்று ஓடிக்கொண்டிருந் தது. அதுமாதிரி ஒரு படமாக "கனிமுத்து பாப்பா'வை உருவாக்க விரும்பினேன். "அந்தாஸ்' படத்தில் ஒரு குழந்தைக்கு தந்தையான ஷம்மிகபூர், தன் குழந்தையை ஸ்கூலில் இறக்கிவிட வருவார். அதே ஸ்கூலில் ஹேமமாலினியின் குழந்தையும் படிக்கிறது. கணவனை இழந்த ஹேமமாலினியும், மனைவியை இழந்த ஷம்மிகபூரும் பள்ளிக்கூடத்தில் சந்திக்கின்றனர். இருவரின் குழந்தைகளும் மிக நெருக்கமான நண்பர்களாக பழகுகின்றனர்.

Advertisment

இந்தக் குழந்தைகளின் ஆதங்கம், நாம இருவரும் ஒரே வீட்டில் வாழலாமே எனத் தோன்றுகிறது. அதற்கு தங்கள் பெற்றோர்கள் மறுமணம் செய்தால் நல்லது எனத் திட்டமிடல். தகப்பனில்லாத குழந்தைக்கு ஷம்மிகபூரை மிகவும் பிடிக்கிறது. இது பெரியவர்களை அதிகமாகப் பழகவைக்கிறது. முடிவு என்னவாயிருக்கும் என்பதை நீங்களே புரிந்துகொண்டிருப்பீர்கள்.

"கனிமுத்து பாப்பா' கதை இதே ரகம். ஆனால் இது அல்ல. குழந்தைகளுக்கான டாக்டர் முத்துராமன். அவருக்கு குழந்தைகள் என்றால் உயிர். இவர் காதலித்து கல்யாணம் பண்ணும் பெண் கணவன் மேல் உயிரையே வைக்கிறாள். அதைவிட அதிகமாக அவள்மேல் அன்பு வைக்கிறார். அவள் கர்ப்பமாகிறாள். அந்த சமயத்தில் மேல்படிப்புக்காக டாக்டருக்கு "ஸ்காலர்ஷிப்' கிடைக்கிறது. மனைவி கர்ப்பமாயிருக்கும்போது வெளிநாடு போக மறுக்கிறார் முத்துராமன். மனைவியோ, வற்புறுத்தி கணவனை வெளிநாடு அனுப்பி வைக்கிறாள். டாக்டர் முத்துராமனின் ஒரே நண்பர் ஜெய்சங்கர். அவருக்கு இந்த ஜோடியை ரொம்ப பிடிக்கும். வழக்கமான பரிசோதனைக்குப் போன கர்ப்பஸ்திரியான டாக்டர் மனைவிக்கு அதிர்ச்சி சேதி காத்திருக்கிறது. அவளுக்கு "அனிமிக்' நோய் இருப்பதால் கர்ப்பத்தைக் கலைக்க வேண்டும், இல்லைன்னா அம்மா உயிருக்கு ஆபத்து எனச் சொல்லப்படுகிறது. அவள் தன் கணவனின் குழந்தையை அழிக்க விரும்ப வில்லை. பிரசவத்தின்போது குழந்தை பிறக்கிறது... தாய் இறந்துவிடுகிறாள். ஊர் திரும்பும் டாக்டர், தன் உயிருக்கு உயிரான மனைவி இறந்ததற்கு அந்தக் குழந்தையே காரணம் என நினைத்து அந்தக் குழந்தையை அடியோடு வெறுக்க ஆரம்பித்துவிடுகிறார்.

இதற்கு நேர்மாறாக ஜெய்சங்கர், தன் மனைவியின் தவறான நடத்தையால் அவள் மரணிக்க, அவள் பெற்றெடுத்த பெண் குழந்தையை அதிகமாக நேசிக்கிறார். முத்துராமனின் பையனும், ஜெய்சங்கர் மகளும் நல்ல நட்புடன் பழக ஆரம்பித்தனர். ஜெய் சங்கர் மகள், எப்படியாவது முத்துராமனின் மகனை, வெறுப்பைப் போக்கி அப்பாவோட சேர்த்துவைக்கப் போராடுகிறாள். முத்துராமன் மகன், ஜெய்சங்கருக்கு லக்ஷ்மியை திருமணம் செய்துவைக்க நினைக்கிறான். இந்த இரண்டு குழந்தைகள் முயற்சி பலித்ததா? என்பதே கதை.

பாடல்கள் வெகு சிறப்பாக அமைந்தன. இந்தப் படத்தை போராடி ஜெயிக்க வைத்தேன். அதனால் எஸ்.பி.முத்துராமனின் இயக்குநர் வாழ்வு... ஏறுமுகமாக ஆரம்பித்தது.

cc

அதேபோல் இன்னொரு படம். அது ஆங்கிலப் படம். ஆய்ற்ர்ய்ஹ் வ்ன்ண்ய் நடித்தது. அதை தமிழில் சற்று மாற்றி எழுதினால் பெரு வெற்றியடையும் என நம்பினேன். வேகவேகமாக எழுதி முடிக்காமல் ஆத்திக, நாத்திக வாதத்தை உள் நுழைத்து இரு கதாபாத்திரங்களை அற்புதமாக உருவாக்கினேன். இதைத் தெரிந்து கொண்ட ஒளிப்பதிவாளர், இயக்குநர் ஹெச்.வேணு என் அலுவலகம் வந்து இந்தக் கதை வேண்டுமென விடாப்பிடியாக வற்புறுத்திக் கேட்டார். மறுத்துப் பேச விரும்பாமல் கொடுத்தேன்.

"இறைவன் இருக்கின்றான்' என பெயர் வைத்து படம் ஆரம்பமானது. அந்த நேரத் தில் நான் பலமொழிப் படங்களில் பணியாற்றிக்கொண்டிருந்ததால்... ஷூட்டிங் போக முடியவில்லை. என் உதவியாளர்கள் இருவரை அனுப்பியிருந்தேன். அவர்களும், தங்களுக்கு அடுத்த படம் தருவதாகச் சொன்னதை நம்பி கவனக்குறைவாக நடந்துகொண்டனர். நான் சொல்வது உண்மையென நீங்கள் நம்பவேண்டும் என்பதற்காக இதைச் சொல் கிறேன்.

சில வாரங்கள் முன்பு, ஒரு விழாவில் பிரபலமான மலையாளப் பட தயாரிப்பாளர், இயக்குநர், "ஸார்... ஏதாவது புதுசா ஒரு கதை இருந்தா சொல்லுங்களேன்'' என கேட்டார். நான் இந்தக் கதையைச் சொன்னேன். உடனே அவர் அந்த ஆங்கிலப் படத்தின் பெயரைச் சொல்லி, "அதன் சாயல் இதில் தெரிகிறது, ஆனால் இது நம்ம கலாச்சாரத்துக்கு பொருத்தமா அழகா இருக்கு' என்றார். அந்த ஆங்கிலப் படத்தைப் பார்த்ததால் ஏற்பட்ட இன்ஸ்பிரேஷன்தான் இந்தக் கதை என்றேன். அத்தோடு நிறுத்தாமல் லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்த ஒருவருக்கு டைரக்ஷன் வாய்ப்புத் தருவதாகச் சொல்லியிருக்கிறேன். அவர் இந்தக் கதையை மலையாளத்தில் எடுத்து, மற்ற மொழிகளில் மொழி மாற்றம் செய்யலாம் எனச் சொல்லியிருக்கிறார். அதில் ஏதாவது மாற்றம் வந்தால் நிச்சயமாக உங்களுக்குத் தருகிறேன்'' எனச் சொன்னேன். அவரும் ஒப்புக்கொண்டார்.

சினிமா என்பதே நம்பவைப்பதுதான். திரையில் ஓடும் படம் உண்மையல்ல என்பது பார்க்கும் படித்தவனுக்கும் தெரியும், பாமரனுக்கும் தெரியும். ஆனாலும் அதை உண்மைபோல் கருதி உணர்ச்சிவசப்படுகிறான், அழுகிறான், சிரிக்கிறான், பாடல்களுக்கு எழுந்து சேர்ந்து ஆடுகிறான், சண்டைக் காட்சிகளுக்கு விசிலடித்து மகிழ்கிறான். ஏன்? நிழலை நிஜம்போல் நம்பவைக்கும் பேலன்ஸை அந்த சினிமா ஏற்படுத்துகிறது.

"ரெஸ்ட்டில்' என ஒரு மாத்திரை. மனம் கனமாக இருக்கும்போது டாக்டர், "இந்த மாத்திரையைப் போடுங்கள் சாந்தமும், அமைதியும் ஏற்படும்' என தருகிறார்... உண்மைதான்! ஆனால் அது நிரந்தரத் தீர்வாகாது.

அதேபோல்தான் சினிமாவும். அது எழுதப்பட்ட கதை. நடிப்பவர்கள் மேதைகளல்ல. வேஷம் கட்டுபவர்கள். எழுதிக் கொடுப்பதைப் பேசுவார் கள். பிறர் பாடிய பாடலுக்கு வாயசைப்பார்கள். டான்ஸ் மாஸ்டர் சொல்லிக் கொடுப்பதை ஆடுவார்கள். ஃபைட் மாஸ்டர் சொல்லித் தருவதுபோல் சண்டை யிடுவார்கள். காலையில் ஒரு கம்பெனியில் ராமர் வேஷம் போடுவார்கள், மாலையில் இன்னொரு கம்பெனியில் ராவணன் வேஷமும் போடு வார்கள். மறுநாள் வேஷப் பொருத்தமாயிருந் தால் ஆஞ்சநேயராகவும் நடிப்பார்கள். அது அவர்கள் தொழில்.

"தான வீர சூர கர்ணன்' என்ற தெலுங்குப் படத்தில் என்.டி.ராமராவ் மூன்று வேஷங்கள் பண்ணுவார். துரியோதனன், கிருஷ்ணர், கர்ணன்.... படம் பெரும் வெற்றிபெற்றது. எல்லாமே நிஜமில்லை என்பது தெரிந்தும், கூட்டம் சினிமா பக்கம் சாய்கிறது.

மனிதன் தன்னால் முடியாததை, திரையில் தன் அபிமானத்துக்குரிய நாயகன் செய்யும் போது, தானே செய்வதுபோல் உணர்ந்து கைதட்டி மகிழ்கிறான். இது உலகம் பூராவும் நிலவுகின்ற உண்மை நிலை.

(திரை விரியும்)

படம் உதவி: ஞானம்

nkn250125
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe