ஏவி.எம்.மில் "அம்மா' என்ற படத்தை எழுதி னேன். அது முடியும் தறுவாயில் என் தந்தையார் ஈழத்தில் இறந்து விட்டார் என்ற செய்தி வந்தது. நல்லவேளையாக மொத்த வசனத் தையும் எழுதி வெச்சிருந்தேன். அதை இயக்குநர் ராஜசேகரிடம் கொடுத்துவிட்டு கிளம்பத் தயா ரானேன்.
இந்த சேதி யை எம்.ஜி.ஆர். அவர்களிடம் போய் சொன்னேன். அன்று ஞாயிற்றுக்கிழமை. விசா, போலீஸ் க்ளீயரன்ஸ் எல்லாம் வாங்க முடியாத நிலை. சற்றும் எதிர்பாராதவிதமாக முதல்வராக இருந்த என் "இதய தெய்வம்' எம்.ஜி.ஆர். அவர்கள் தேவையான எல்லாவற்றையும் முறைப்படி செய்து முடித்து என்னையும், என் மனைவியையும் விமானத்தில் ஏற்றிவிடும்வரை ஆட்களை வைத்து செய்து முடித்தார்.
நாங்கள் கொழும்பு போனதும், அங்கே எல்லா ஏற்பாடுகளையும் என் தாய்மாமன் ஏ.கே.நேசரத்தினம் செய்திருந்தார். யாழ்தேவி ரயிலில் ஊர் போக ஏற்பாடாகியிருந்தது. ரயில் அனு ராதபுரம் ரயில்நிலையம் சென்றடைந்தபோது மொட்டைத் தலை, காவி அங்கியுடன் சில புத்த மத பிக்குகள் ரயிலில் ஏறினார்கள். ரயிலில் இருந்த தமிழ்ப்பெண்கள் என் மனைவியிடம் வந்து, "நீங்க இந்தியாவிலிருந்து வருகிறீர்களா?'' எனக் கேட்டனர்.
"ஆமா'' என என் மனைவி சொன்னதும், "அதுதான் நாட்டு நடப்பு புரியல. முதல்ல உங்க நகைகள் எல்லாத்தையும் கழட்டி உள்ளே வச்சிடுங்க. இங்கே எந்த நேரத்திலும் எதுவு
ஏவி.எம்.மில் "அம்மா' என்ற படத்தை எழுதி னேன். அது முடியும் தறுவாயில் என் தந்தையார் ஈழத்தில் இறந்து விட்டார் என்ற செய்தி வந்தது. நல்லவேளையாக மொத்த வசனத் தையும் எழுதி வெச்சிருந்தேன். அதை இயக்குநர் ராஜசேகரிடம் கொடுத்துவிட்டு கிளம்பத் தயா ரானேன்.
இந்த சேதி யை எம்.ஜி.ஆர். அவர்களிடம் போய் சொன்னேன். அன்று ஞாயிற்றுக்கிழமை. விசா, போலீஸ் க்ளீயரன்ஸ் எல்லாம் வாங்க முடியாத நிலை. சற்றும் எதிர்பாராதவிதமாக முதல்வராக இருந்த என் "இதய தெய்வம்' எம்.ஜி.ஆர். அவர்கள் தேவையான எல்லாவற்றையும் முறைப்படி செய்து முடித்து என்னையும், என் மனைவியையும் விமானத்தில் ஏற்றிவிடும்வரை ஆட்களை வைத்து செய்து முடித்தார்.
நாங்கள் கொழும்பு போனதும், அங்கே எல்லா ஏற்பாடுகளையும் என் தாய்மாமன் ஏ.கே.நேசரத்தினம் செய்திருந்தார். யாழ்தேவி ரயிலில் ஊர் போக ஏற்பாடாகியிருந்தது. ரயில் அனு ராதபுரம் ரயில்நிலையம் சென்றடைந்தபோது மொட்டைத் தலை, காவி அங்கியுடன் சில புத்த மத பிக்குகள் ரயிலில் ஏறினார்கள். ரயிலில் இருந்த தமிழ்ப்பெண்கள் என் மனைவியிடம் வந்து, "நீங்க இந்தியாவிலிருந்து வருகிறீர்களா?'' எனக் கேட்டனர்.
"ஆமா'' என என் மனைவி சொன்னதும், "அதுதான் நாட்டு நடப்பு புரியல. முதல்ல உங்க நகைகள் எல்லாத்தையும் கழட்டி உள்ளே வச்சிடுங்க. இங்கே எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கிட்டே வருது'' என்று சொன் னார்கள்.
உண்மையாகவே பயணிகள் அனைவர் முகத்தையும் பார்த்தேன். ஏதோ ஒரு பய உணர்வு தெரிந்தது. ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவும் இல்லை. அதற்குள் என் மனைவி நகைகளை கழட்டி பெட்டிக்குள் வைத்துவிட்டாள். மாகோ, மதவாச்சி, வவுனியா தாண்டி தமிழ் பகுதிக்குள் நுழையும்வரை ஒரே டென்ஷன். சிங்கள பகுதிக்குள் ரயில் வந்தபோது அனைவர் முகத்திலும் பயமும் சந்தேகமும் இருந்தது. ரயிலில் வந்த சிங்களப் பயணிகள் சத்தமாகப் பேசினர்.
இது நடந்தது 1982 ஜூன் மாதம். என் தந்தையாருக்கு மூத்த மகனாக செய்யவேண்டிய அனைத்து கடமைகளையும் செய்து முடித்தேன். ஆனாலும் நான் முப்பது நாட்கள் அங்கு தங்கி, செய்யவேண்டிய சாங்கியங் களைச் செய்து முடித்துவிட்டுத்தான் கிளம்பவேண்டும் எனச் சொன்னார்கள். ஆசிரியராக, பள்ளி முதல்வராக, நகரமன்றத் தலைவராக, ஏழை -எளியவர்களுக்கு நன்மைகள் செய்த பொதுநலத் தொண்டனாக வாழ்ந்து முடித்த என் தந்தையாருக்கு மிகச்சிறந்த மரியாதைகள் செய்யப்பட்டன. மார்க்கெட், கடைகள், ஆலயங்கள், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. எல்லா பிள்ளைகளும், உறவினர்களும், வெளிநாட்டிலிருந்து வரும்வரை... ஏழு நாட்கள் உடல் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டது. அப்பாவின் உறவினர்களுக்கு பல ஆசிரி யர்களும், மாணவர்களும் ஏழு நாட்களும் இரவு பகலென்றில்லாமல் தொடர்ந்து தேவாரம், திருவாசகம் என பக்திப் பாடல்களைப் பாடியவண்ணம் இருந்தனர். முப்பது நாட்களும் வீட்டில் சமையல் இல்லை. போட்டி போட்டுக்கொண்டு உறவினர்களும், ஊராரும் சளைக்காமல் மூன்று வேளையும் சாப்பாடு கொண்டுவந்து தந்தார்கள். ஆறுதல் சொல்ல வந்தவர்களின் எண்ணிக்கை என்னையே அசரவைத்தது. இரங்கல் பாடல்கள், ஆறுதல் செய்திகள், மார் அடித்து அழும் ஏழைப்பெண்கள், அவரிடம் படித்த பழைய மாணவர்கள்...
தனக்காக வாழாமல் பிறர் நன்மை கருதி வாழ்ந்த என் தந்தையாரின் உயரத்தைக் காண முடிந்தது.
முப்பது நாட்களும் பாச உணர்வை அனுபவித்த நான், கிளம்பும் முன் அனைத்து உறவினர் வீடுகளுக்கும் சென்று நன்றி சொன்னேன். எல்லோரும் கண்ணீல்மல்க விடை கொடுத்ததை மறக்கவே முடியாது. நானும் என் மனைவியும் வீட்டிலிருந்து கொழும்புக்கு தனி விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டோம். இரண்டு நாட்கள் கொழும்பில் தங்கி உறவினர்கள், நண்பர்களை சந்தித்துவிட்டு சென்னை திரும்பினேன்.
என் தந்தையின் மறைவு பற்றி தெரிந்துகொண்ட கலைஞர், ஏவி.எம்.சரவணன், கவிஞர் வாலி, கவிஞர் வைரமுத்து, எஸ்.பி. முத்துராமன் போன்ற பலர் அனுதாபக் கடிதங்கள் அனுப்பி யிருந்தது எனக்கு ஆறுதலைத் தந்தது.
அவற்றையெல் லாம் தொகுத்து கவிஞர் வைரமுத்து அவர் களின் இரங்கல் கவிதையிலிருந்த "ஈழம் தந்த வேழம்' என்ற வரியை தலைப்பாகப் போட்டு ஒரு நினைவாஞ்சலி நூலை வெளியிட்டேன். அதுவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
ஒரு வருடம் கழித்து ஆண்டு திவசம். காரியங்கள் செய்யவேண்டும் என்று சொல்லி 1983இல் என்னை அழைக்கவே, போக முடிவு செய்தோம். அதற்குள் இலங்கையில் இனக்கலவரம் அதிகமாக, பலர் கொல்லப் பட்டனர். ஆகவே என் மனைவியை அழைத்துப் போவது உசிதமல்ல என எல்லோரும் சொன்னதால் நான் தனியாகவே போனேன். பல இன்னல்களை சந்திக்கவேண்டியிருந்தது. இருப்பினும் தந்தைக்கு செய்யவேண்டியவற்றை துணிச்சலோடு செய்துமுடித்து தாயகம் திரும்பினேன்.
வந்த பின்னால் வேகவேகமாக சினிமாவில் வேலை செய்ய ஆரம்பித்தேன். தமிழில் என் தாய்வீடாக இருந்த ஏவி.எம்.மில் எஸ்.பி.முத்து ராமன் அவர்கள் தொடர்ச்சி யாக படங்கள் பண்ணிக் கொண்டிருந்தார். அவருக்கு பஞ்சு அருணாசலம் அவர்கள் கதை -வசனம் எழுதிக்கொண்டிருந்தார். என்னை திரையுலகில் அறிமுகம் செய்து வளர்த்துவிட்ட எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருந்தார். போராட்டக் காலமாக இருந்தது.
இந்த நிலையில் மறுபடியும் "எங்கள் தமிழினம் தூங்குவதோ' என்ற நாடகத்தை அரங்கேற்றினேன். அதேநேரம், என் கவனத்தை பிற மொழிகளில் வேலை செய்ய வாய்ப்புகளை ஏற்படுத்தும் பணியில் செலுத்தினேன். அங்கு நடந்ததை அடுத்த இதழில் தொடர்கிறேன்...
(திரை விரியும்...)
படம் உதவி: ஞானம்
________________
விஷயமற்ற எழுத்து விரயம்!
கண்டவற்றை எழுதி நமது நேரத்தையும், வாசகர்களின் நேரத்தையும் வீணடிக்கக்கூடாது. திரைப்படங்கள் எழுதும்போதும் அப்படித்தான். பார்ப்பவர்கள் சிலிர்க்க வேண்டும் அல்லது சிரிக்க வேண்டும். நமக்குத் தெரிந்ததை கதாபாத்திரங்கள் மூலம் பேச வைக்கக்கூடாது. அந்தக் கதாபாத்திரங்களின் தன்மைக்கேற்ப வசனங்கள் எழுதப்பட வேண்டும். சிவனும் தருமியும் "திருவிளையாடல்' படத்தில் பேசும் வசனங்கள் அற்புதமாக இருந்தது. அதேபோல் அரச சபையில் சிவன் -நக்கீரன் வாதம் சிறப்போ சிறப்பு. "பராசக்தி'யை பார் போற்ற வைத்தது கலைஞரின் வசனங்களா? கணேசனின் நடிப்பா? "நாடோடி மன்னன்' வெற்றிக்கு எம்.ஜி.ஆர் மட்டும்தான் காரணமா? இல்லை... கண்ண தாசனும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் பங்குதாரர்களே!
"அரசியலில் இருந்திருக்கிறேன்... ஆகவே அயோக்கியத்தனம் என்ன என்பது புரியும்''
"கழுத்திலே கத்தி விழுமுன்பே புத்தி வந்து வெளியேறி னேன்...'' எழுதியவர் கண்ணதாசன்
"எழுதுவதற்கு ஒரு இலக்கணம் வகுத்துக்கொள்ள வேண்டும். நமது எழுத்து நாம் கொண்ட கொள்கைக்கு எவ்வளவு தூரம் பயன்படும், வலுவேற்றும் என்பதை முதலில் சிந்திக்க வேண்டும். பயன்படும் என்று தெரிந்தால் மட்டுமே எழுதவேண்டும்'' -இதை சொன்னவர் பேரறிஞர் அண்ணா.
-வி.செ.குகநாதன்