Advertisment

சினிமா கொட்டகை! டைரக்டர் -ரைட்டர் வி.சி.குகநாதன் (49)

ss

ss

சுயமரியாதை அவசியம். அதைவிட நம்மை நம்பி வருபவர்களை அசிங்கப்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். திரையுலகில் சர்வசாதாரணமாக இது நடக்கும்.

Advertisment

ராமாநாயுடு அவர்கள் என் கதை, வசனம், இயக்கத்தில் ஒரு பெரிய படம்பண்ண விரும்பி னார். அதற்கான கதையை ரெடிபண்ணச் சொன்னார். பத்து நாட்களுக்குள் கதையைச் சொன்னேன்... ஓ.கே. ஆனது. ஷோபன்பாபு, ஸ்ரீதேவி, முரளிமோகன், ஜெயசித்ரா, மோகன்பாபு, ஜமுனா, ஏ.சகுந்தலா, சத்யநாராயணா, அல்லூர் ராமலிங்கய்யா என ஏகப்பட்ட புகழ்பெற்ற நடிகர், நடிகையர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ஊட்டி, சிக்மகளூர் என பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தினோம்.

Advertisment

நல்ல கதை, சுவையான கதாபாத்திரங்கள், பெரிய கம்பெனி என்பதால் அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தது.

ஒரு பாடல் காட்சி... காதல் பாட்டு. அதனை சாத்தனூர் அணைக்கட்டுப் பூங்காவில் எடுக்கத் திட்டமிட்டு தேதி பெறப்பட்டது. வால்மீகி தெருவிலிருந்த சுரேஷ் புரொடக் ஷன்ஸ் ஆபீஸிலிருந்து கிளம்ப ஏற்பாடானது. நான் என் காரில் அலுவலகம் போனேன். அங்கே ஒரு கன்ஷ்ன்ழ்ஹ் பஸ் நின்றிருந்தது. நான் என் உதவியாளர்களுடன் என் காரில் செல்ல திட்டமிட்டிருந்தேன். அதைப்பார்த்த நாயுடு ஸார், என்னைக் கூப்பிட்டு "எல்லாரும் ஒரே பஸ்ல போகலாமே? நீ வண்டி ஓட்டி சிரமப்பட வேண்டாமே'' என்றார். அது சரியாகப்படவே நாங்களும் பஸ்ஸில் ஏறினோம். சில நிமிடங்கள் கழித்து கம்பெனி கார் வந்தது. அதில் ஷோபன்பாபு, ஸ்ரீதேவி வந்தனர். அதில் ராமாநாயுடு ஸாரும் ஏறிக்கொள்ள.... வண்டிகள் புறப்பட்டன. எல்லோரும் ஒரே பஸ்ஸில் போகலாம் என்றவர்... நடிக, நடிகையருடன்

ss

சுயமரியாதை அவசியம். அதைவிட நம்மை நம்பி வருபவர்களை அசிங்கப்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். திரையுலகில் சர்வசாதாரணமாக இது நடக்கும்.

Advertisment

ராமாநாயுடு அவர்கள் என் கதை, வசனம், இயக்கத்தில் ஒரு பெரிய படம்பண்ண விரும்பி னார். அதற்கான கதையை ரெடிபண்ணச் சொன்னார். பத்து நாட்களுக்குள் கதையைச் சொன்னேன்... ஓ.கே. ஆனது. ஷோபன்பாபு, ஸ்ரீதேவி, முரளிமோகன், ஜெயசித்ரா, மோகன்பாபு, ஜமுனா, ஏ.சகுந்தலா, சத்யநாராயணா, அல்லூர் ராமலிங்கய்யா என ஏகப்பட்ட புகழ்பெற்ற நடிகர், நடிகையர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ஊட்டி, சிக்மகளூர் என பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தினோம்.

Advertisment

நல்ல கதை, சுவையான கதாபாத்திரங்கள், பெரிய கம்பெனி என்பதால் அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தது.

ஒரு பாடல் காட்சி... காதல் பாட்டு. அதனை சாத்தனூர் அணைக்கட்டுப் பூங்காவில் எடுக்கத் திட்டமிட்டு தேதி பெறப்பட்டது. வால்மீகி தெருவிலிருந்த சுரேஷ் புரொடக் ஷன்ஸ் ஆபீஸிலிருந்து கிளம்ப ஏற்பாடானது. நான் என் காரில் அலுவலகம் போனேன். அங்கே ஒரு கன்ஷ்ன்ழ்ஹ் பஸ் நின்றிருந்தது. நான் என் உதவியாளர்களுடன் என் காரில் செல்ல திட்டமிட்டிருந்தேன். அதைப்பார்த்த நாயுடு ஸார், என்னைக் கூப்பிட்டு "எல்லாரும் ஒரே பஸ்ல போகலாமே? நீ வண்டி ஓட்டி சிரமப்பட வேண்டாமே'' என்றார். அது சரியாகப்படவே நாங்களும் பஸ்ஸில் ஏறினோம். சில நிமிடங்கள் கழித்து கம்பெனி கார் வந்தது. அதில் ஷோபன்பாபு, ஸ்ரீதேவி வந்தனர். அதில் ராமாநாயுடு ஸாரும் ஏறிக்கொள்ள.... வண்டிகள் புறப்பட்டன. எல்லோரும் ஒரே பஸ்ஸில் போகலாம் என்றவர்... நடிக, நடிகையருடன் கிளம்பியது எனக்கு கவலையைத் தந்தது.

காலை டிபனுக்காக மதுராந்தகத்தில் பஸ் நிறுத்தப்பட்டது. காரில் வந்தவர்கள் மூவரும் தனியாக சாப்பிட்டனர். மதியம் ஒரு மணிக்கு மேல் சாத்தனூர் அணைக்கட்டு சென்றுவிட் டோம். அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு அனுப்பப்பட்டனர். சாமான் களை வைத்துவிட்டு கை, கால் அலம்பிவிட்டு ஒரு ஓட்டலில் மதிய உணவு சாப்பிடவேண்டும். மறுநாள் காலைதான் படப்பிடிப்பு. சாப்பாடு முடிந்ததும் என் பழக்கப்படி, என் தொழில் நுட்பக் கலைஞர்கள் தங்கும் இடத்தைப் போய் பார்த்து வசதிகள் எப்படி, வேறு தேவைகள் இருக்கா எனக் கேட்பேன்.

cc

அப்படி நான் போனபோது... ஒரு தகரக்கொட்டாய் அறை, அதற்குள் சிமெண்ட் மேடையிலான படுக்கும் கட்டில்... ஏறத்தாழ ஜெயிலில் உள்ள கைதிகளுக்கான அறை போல் இருந்தது. அதில் பிரபல ஒளிப்பதிவாளர் வின்சென்ட் மாஸ்டர், தன் பெரிய விலை உயர்ந்த சூட்கேஸை மேடை மீது தூக்கி வைப்பதைப் பார்த்தேன்.

"ஸார்... நீங்க இங்கே என்ன பண்றீங்க?''ன்னு கேட்டேன்.

"இதுதான் என் ரூம்'' என்றார்.

எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

"இதோ வர்றேன்''னு சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.

"எவ்வளவு பெரிய ஒளிப்பதி வாளர். ஒளிப்பதிவாளர் மட்டுமா? மலையாளி கள் அவரை வின்சென்ட் மாஸ்டர் என்றுதான் அழைப்பார்கள். நல்ல பெரிய இயக்குநரும் ஆவார். அதுமட்டுமல்ல, இந்தப் படத்துக்கு அவர் உதவியாளர் வெங்கட் என்பவரே ஒளிப்பதிவாளர். அவர் வரமுடியாததால், தன் குருவை அனுப்பி வைத்துள்ளார். அவரை எவ்வளவு மரியாதையாக நடத்தவேண்டும். இதே எண்ணத்தோடு தயாரிப்பாளரை தேடிப் போனேன். அவரும், நடிக லிநடிகையரும் மெயின் பில்டிங்கில் உள்ள முதல்தர அறை களில் தங்கியிருப்பதைப் பார்த்தேன். கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

தயாரிப்பாளரை சந்திக்காமல் வீதியை நோக்கி நடந்தேன். பஸ் வந்தது, திருவண்ணா மலை போகும் பஸ்... நிறுத்தி ஏறிக்கொண் டேன். என்னை இழிவுபடுத்தியிருந்தால் தாங்கியிருப்பேன். அவ்வளவு பெரிய மனிதரை, சாதனையாளரை இப்படியா நடத்துவது? என் உள்மனம் அழுதது. திருவண்ணாமலையிலிருந்து பஸ் ஏறி சென்னை வந்தேன். நல்ல மழை பெய்துகொண்டிருந்தது. நனைந்தபடி ஒரு டாக்ஸி பிடித்து, இரவு பதினோரு மணியளவில் வீடு வந்து சேர்ந்தேன். யார் போன்பண்ணி னாலும் நான் வந்திருக்கும் செய்தியை சொல்ல வேண்டாமென என் மனைவியிடம் சொல்லிவிட்டுத் தூங்கிவிட்டேன்.

சாத்தனூர் அணைக்கட்டில் தங்கியிருந்த மொத்த யூனிட்டும் என்னைத் தேடியிருக்கிறார் கள். பக்கத்தில் ஏதாவது டூரிங் கொட்டாய் இருந் தால் படம் பார்க்கப் போயிருப்பார் எனவும் பேசினார்களாம். ஏனெனில், அது என் பழக்கம் என்பது பலருக்கும் தெரியும். மறுநாள் காலை யிலும் தேடியிருக்கிறார்கள். இரவில் வாக்கிங் போய் அணைக்கட்டு பகுதியில் விஷப் பூச்சி கள் கடித்திருக்கலாம் அல்லது ஏதாவது விபத்து நடந்திருக்க லாம் என எண்ணி அந்தப் பகுதிகளிலும் தேடியிருக் கிறார்கள். அதன்பின் ஷூட்டிங் நடத்த முடியாத நிலையில் சென்னை திரும்பிவிட்டார்கள்.

வந்ததும் மேனேஜர் மொகிதீன் வீட்டுக்கு வந்தார்... தன்னுடன் அலுவலகம் வரும்படி அழைத்தார். நான் மறுத்து, அவரை திட்டி அனுப்பினேன். ஒருவர் பின் ஒருவராக வந்தனர். நான் மனம் மாறவில்லை. அடுத்து என் நல்ல நண்பர், தெலுங்கில் பிரபலமான இயக்குநர் வந்தார். "நீங்கள் ஏன் திரும்பி வந்தீர்கள்? என்ற காரணம் யாருக்கும் தெரியவில்லை. அதை தெரிவிக்காவிட்டால் உங்களின் நியாயம் மற்றவர்களுக்குத் தெரியாமல் போய்விடும், ஆகவே வாருங்கள்'' என அழைத்தார். அது சரியாகப்படவே அவருடன் அலு வலகம் போனேன். தயாரிப்பாளர் அறைக்குள் என்னைத் தள்ளி விட்டார். நாயுடு ஸார் பயங்கர கோபத்தோடு, சிவந்த பெரிய கண்களோடு அமர்ந்திருந்தார்.

சற்றுநேர மௌனத்திற்குப் பின், "தெலுங்கிலே இயக்குநர்கள் இல்லாமல் உனக்கு நான் இந்தப் படத்தைக் கொடுக்கலே'' என்றார் கோபமாக.

"எனக்கு தமிழ்ப் படம் கிடைக்காமல் நானும் உங்க தெலுங்குப் படத்தில் வேலை செய்ய வரலே'' என்றேன் சற்று கடுமையாக.

"ஏற்கனவே பலபேர் எங்கிட்ட சொன்னாங்க... நீ ரொம்ப திமிர் பிடிச்சவன், கோபக்காரன், குழப்பம் பண்றவன்''னு... அவர் சொல்லி முடிப்பதற்குள்...

"தெரிஞ்சும் ஏன் எனக்கு வேலை குடுத்தீங்க?''

நான் சற்றும் அசராமல் பேசுவதைப் பார்த்து, "சரி, உனக்குப் பிடிக்கலேன்னா, "நானா விலகிக்கிறேன்'னு எழுதிக் குடுத்துட்டுப் போ'' என்றார்.

நானும் "சரி...'' என்று சொல்லி, போகத் திரும்பினேன்.

"நில்லு... எதுக்காக அங்க இருந்து கிளம்பி வந்தே? அதைச் சொல்லிட்டுப் போ'' என்றார்.

"இதைத்தானே நீங்க முதல்ல கேட்டிருக் கணும்'' எனச் சொல்லிவிட்டு, நடந்ததை விபரமாகச் சொன்னேன்.

கேட்ட அவர் முகம் மாறியது.

"வா... வந்து முதல்ல உக்காரு'' என அமர வைத்து, அமைதியாகப் பேச ஆரம்பித்தார்.

அன்றிலிருந்து இன்றுவரை அவர் போக்கில் பெரிய மாறுதல். என் மீது பாசம் அதிகமானது. உடன்பிறந்த அண்ணன்போல் பாசம் காட்ட ஆரம்பித்தார். ஏறத்தாழ பல மொழிகளில் அவர் கம்பெனியில் நாற்பத்தொரு படங்கள் பணியாற்றியுள்ளேன்.

(திரை விரியும்...)

______________

எப்படி நான் மறப்பேன்?!

நான் இலங்கையிலிருந்து சென்னை வந்ததே சினிமா தொழிலை செய்ய மட்டும்தான். பல ஆண்டுகள் கழித்து, என் தம்பி வி.சி.வரதானந்தனும் இங்கு வந்தார். என் தந்தையாரின் மறைவுக்குப் பின், எனது மற்ற தம்பிகள் வெளிநாடுகளில் படித்து, அங்கேயே வேலைகளில் சேர்ந்தனர். நான் இங்கே வராமல் இருந்திருந்தால்... என் தாயோ, தம்பியோ இங்கே வந்திருக்க மாட்டார் கள். பிரபு, சுலோசனா, அஞ்சலிதேவி, நம்பியார் நடிப்பில் கங்கைஅமரன் எழுதி இயக்கிய, இளையராஜா இசையமைத்த "பொழுது விடிஞ்சாச்சு' என்ற படத்தை என் தம்பி வரதன் தயாரித்தார். பின்னர் நான் இயக்கிய "மைனர் மாப் பிள்ளை', "கைநாட்டு' படங்களின் இணை தயாரிப்பாளர் ஆனார்.

ss

இரு வாரங்களுக்கு முன்... பிரபல மருத்துவமனையின் தவறான முடிவுகளாலும், மருத்துவரின் கவனக்குறைவாலும் அநியாயமாக இறந்துவிட்டார் என் தம்பி வரதன்.

"நல்ல திடமாக இருந்தாரே... இப்போவெல்லாம் பை-பாஸ் சர்ஜரியில் மரணங்கள் நிகழ்வது மிக மிகக் குறைவாச்சே. நவீன நுட்பம் மருத்துவத் துறையில் வந்துவிட்டதே... பிறகு எப்படி வரதன் இறந்தார்?' என நம்ப முடியாமல் தவிக்கிறார்கள்.

எனக்கு மட்டும் மனதுக்குள் ஒரு உறுத்தல். "சினிமா ஆசை எனக்கு வராமல் இருந்திருந்தால், நான் சென்னைக்கு வந்திருக்கமாட்டேன். என் தாயோ, தம்பியோ இங்கே வந்திருக்க மாட்டார்கள். எங்காவது ஒரு நாட்டில் அவர்கள் உயிரோடு இருந்திருக்கக்கூடும். ஆனாலும்... எனது சினிமா ஆசையை அங்கீகரித்து, அடையாளம் தந்து, எனக்கு பெரும் வெற்றியையும் தந்த என் தொப்புள்கொடி உறவான இந்த தமிழகத்தை நான் எப்படி மறப்பேன்!

-வி.செ.குகநாதன்

nkn281224
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe