cc

Advertisment

ங்கள் காதல் பிரச்சினைகள் ஒன்றல்ல... இரண்டல்ல. நான் திருமணம் செய்துகொண்டு, விரைவில் திருமண வாழ்க்கையை ஆரம்பிக்க விரும்பினேன். ஆனால் சூழ்நிலைகள் வேறு மாதிரி அமைந்துவிட்டன. அவளின் தாயாரை அழைத்து திருமணம் பற்றி பேசினேன். "தற்போதைய சூழ்நிலையில்... அவ சம்பாதித்து குடும்பத்தை கரை சேர்க்கவேண்டும். திருமணம் சரிப்பட்டு வராது' எனச் சொன்னார்.

நான் சற்று பிடிவாதமாகப் பேச ஆரம்பித்ததும், "வேண்டுமானால் என் இன்னொரு பெண்ணை கட்டித் தருகிறேன்' என்றார். நான் சம்மதிக்கவில்லை.

"பொண்ணு கிடைக்காமல் நான் உங்ககிட்ட வரல. உங்க கடைசி மகளை காதலிக்கிறேன். அவளுக்கும் என்னைப் பிடிச்சிருக்கு'' என விளக்கமாகச் சொன்னதும் அம்மா புரிந்துகொண்டார்.

Advertisment

இதற்கிடையில் லயோலா கல்லூரி எதிரில் மூன்று கிரவுண்டில் ஒரு பங்களாவும், பஹய்ந் இன்ய்க் ரோடில் இன்னொரு வீட்டையும் நான் எழுதி சம்பாதித்த பணத்தில் வாங்கிவிட்டேன். அதனால் தைரியமாக அவளை கருமாரி அம்மன் கோயிலுக்கு அழைத்துப்போய் மாலை மாற்றிக்கொண்டோம். என் பெற்றோர் கள் இதை எப்படியோ தெரிந்து கொண்டனர். முதலில் அவர்கள் சம்மதிக்கவே இல்லை. அவர்கள் மனம் மாறி சம்மதம் தருவது மட்டுமல்ல, அவர்களே நேரில் வந்து திருமணத்தை நடத்தி வைக்கவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தேன். அவளும் சரி என்றாள். வெறிபிடித்தவன் போல் படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தேன். அதன்மூலம் அவள் குடும்ப சூழ்நிலை மேன்மையடைந்தால், நிச்சயம் நமது திருமணம் நடக்குமென்று எனக்குத் தெரியும்.

"சுடரும் சூறாவளியும்', ராஜபார்ட் ரங்கது ரை', "கனிமுத்துப் பாப்பா', "பெத்த மனம் பித்து', "ராணி யார் குழந்தை', "மஞ்சள் முகமே வருக', "அன்புத் தங்கை', "இறைவன் இருக்கின்றான்' ...இப்படி வரிசையாகத் தொடர்ந்து பல தமிழ்ப் படங்கள், சில தெலுங்குப் படங்கள், பல மலை யாளப் படங்கள். காதல் வெற்றிக்காக கடுமையாக உழைத்தேன். அவளும் ஓய்வின்றி உழைத்தாள்.

அவள் குடும்பத்தில் அவள் அண்ணன் திருமணம், அக்காக்கள் முன்னேற்றம், பல பிரசவங் கள், சிலரின் படிப்பு, சிலரின் மறுமணங்கள்... அனைத்தையும் அவளே பொறுப்பேற்று செய்தாள்.

Advertisment

cc

அவள் அப்பா கேன்சரால் பாதிக்கப்பட்டு இறுதிநாட்கள் போராட்டம், அதன்பின் இறுதிச் சடங்கு... எல்லாமே அவள் பொறுப்பேற்று நன்றாகச் செய்தாள்.

சுமார் 12 ஆண்டுகள் நானும் காத்திருந்தேன். இதற்கிடையில் இலங்கையில் ஒரு தமிழ்ப் படம், அதில் நடிக்கும் வாய்ப்பு இவளுக்கு வந்தது. அதற் காக இலங்கை சென்றபோது என் பெற்றோரைப் போய்ப் பார்த்து சுமார் ஐந்து நாட்கள் எங்கள் வீட்டிலேயே தங்கியிருந்தாள். என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அவளைப் பிடித்துவிட்டது. மகிழ்ச்சியோடு என் திருமணத்துக்கு ஒப்புக்கொண் டனர். அதேபோல் அவளது தாயாரும் "எந்த ஏவி.எம்.மில் என் குழந்தைகளை அவமானப்படுத்தி னார்களோ, அதே ஏவி.எம்.மில் என் கடைசிப் பெண்ணை நாயகியாக நடிக்கவைத்து கவுரவப்படுத் திய என் மருமகன் அல்ல மகன்' எனச் சொல்லி என் கல்யாணத்துக்கு சம்மதம் தர... என் பெற்றோர் சென்னை வந்து இணைந்து வாழ்ந்துகொண்டிருந்த என்னையும், அவளையும் வாழ்த்தி பெரும் பரபரப் பில்லாமல் திருமணத்தை நடத்தி வைத்தனர்.

அதன்பின்தான் சற்று உஷாரானேன். அதுவரை அவள் சம்பாதித்த அனைத்தையும் தன் குடும்பத்துக்காக செலவு செய்தாள். என் வீடுகள் தவிர மீதியெல்லாம் அப்படியே செலவானது. ஆகவே அவர்களை வேறு வீடு பார்க்கச் செய்து அனுப்பிவிட்டோம். அது அவர்களுக்கு அவள் மீது கோபத்தை உண்டாக்கியதே தவிர அதுவரை செய்ததை மறந்துவிட்டனர். ஆனாலும் அவள் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவளே கவனித்துவந்தாள். மரணித்தபோது என்னிடம் கேட்டு இறுதிச்சடங்கை என் வீட்டில் வைத்தே செய்தாள். வருத்தமான சேதி ஒன்றுண்டு. குடும்ப சூழ்நிலையால் குழந்தை பெற முடியாத நிலை. உருவான குழந்தையையும் குடும்பத்துக்காக துணிந்து கருக்கலைப்பு செய்தாள். ஆனால் தான் வளர்த்த குடும்பம் வானுயர வளர வேண்டும் என்பதற்காக உழைத்தாள். அதற்கான பலன் கிடைக்கவில்லை.

cc

அடுத்த குழந்தை உருவானபோது "என்டோப்பிக்' செய்ய வேண்டிய நிலை. தற்போது நானும் அவளும் தனிமையில்... ஆனால் அவளின் தியாக வாழ்க்கை பலன் தரவில்லை. என் காதல் வாழ்க்கை இன்றுவரை அவள் தியாகத்துக்காக... பட்ட துன்பங்களுக்காக... முடிந்தவரை அவளை மகிழ்விப்பதில் சென்றுகொண்டிருக்கிறது.

என் தாயார் அவள்மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். என் தாயார் சமைக்கும் போது கவனித்துவந்த என் மனைவி, எங்கம்மா சமையலைப் போலவே ருசியாக சமைப்பாள். எனக்குப் பிடிக்கும்விதமாக சமைத்துப் பரிமாறுவாள். என் தாயார் இறப்பதற்கு முதல்நாள்... நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார். நான் புறப்படும்போது என் கைகளைப் பிடித்து, "தம்பி... எதுக்கும் கவலைப்படாதே! ஷீலாவை நல்லா பார்த்துக்கோ. (ஜெயாவின் இயற்பெயர் ஷீலா) உன்னை கவலைப்படாமல் பார்த்துக்குவா... நல்ல பாசக்காரி அவ'' எனச் சொன்னார்கள்.

என் தாயாரின் இறுதி வார்த்தைகளை நான் மதித்து வாழ்ந்துகொண்டிருக்கிறேன். பொருளா தார ரீதியாகவும் நல்ல நிலையில் இருக்க வைத்துள் ளேன். ஆனால் ஆலவிருட்சம் போன்ற தன் பெரிய குடும்பத்தை ஒரு தாய்போல் தலையில் சுமந்தவள், தான் தாயாக முடியாத சோகத்தை தற்போது சுமக்கிறாள்... அதனால் கோபப்படுவாள்; நான் பொறுத்துப்போகப் பழகிவிட்டேன். இதுவும் ஒருவிதமான காதல் கதைதான்!

(திரை விரியும்...)

________________

தெற்கு சிவக்கிறது!

தமிழ்நாட்டில் கோயில்களிலே அர்ச்சனை சமஸ்கிருதத்தில். நீதிமன்றங்களிலே வாதங்கள், தீர்ப்புகள், எல்லாமே ஆங்கிலத்தில். மத்திய அரசிலிருந்து வரும் ஆணைகள் இந்தியில். தெருவோர சாயா கடைகளில் மலையாளம். உடுப்பி ஓட்டல்களில் கன்னடம். மூலை முடுக்கெல்லாம் மார்வாடிக் கடைகள். அங்கெல்லாம் பிறமொழி படையெடுப்பு. தொலைக் காட்சியில் இந்தியின் ஆதிக்கம். நம்மவர்களின் தொலைக்காட்சிகளின் பெயர்கள் எல்லாமே ஆங்கிலத்தில். மெட்ரிகுலேஷன் பள்ளி களிலே ஆங்கிலம். திரைப்படங்களில் பாதி வசனங்கள் பிறமொழிக் கலப்படம். படத்தின் தலைப்புகள் ஆங்கிலத்தில். கடைகளில் பெயர்ப்பலகைகள் ஆங்கிலத்தில். சென்னை மாநகரில் உள்ள நிலப்பரப்பில் அறுபது சதவீதத்துக்கு மேலும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும், அதிக விலை கொடுத்துப் பிற மாநிலத்தவர் நிலங்களை வாங்கிக் குவித்தவண்ணம் இருக்கின்றனர்.

cc

தமிழ்நாட்டின் "ஹாங்காங்' என்றும், குட்டி ஜப்பான் என்றும் பெயர்பெற்ற சிவகாசியின் முக்கிய வியாபார ஸ்தலங்கள் பிற மாநிலத்தவர் கைக்குப் போய் சில ஆண்டுகள் ஆகின்றன. நாட்டுக்கோட்டை செட்டியார்கள் கையிலிருந்த Money Market பிற மாநிலத்தவர் பிடிக்குள் போய் நாட்கள் பலவாகின்றன. ஆலைகள், தொழிற்சாலைகள், கல்விக்கூடங்கள் எல்லாமே பெரும்பாலும் பிற மாநிலத்தவர் வசமாகிவிட்டன. கலை உலகம் பிற மொழிக்காரர்கள் கைக்குப் போய்க் காலம் பலவாகிவிட்டது.

"மெட்ராஸ் ஸ்டேட்' என்றிருந்ததை, தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்தார் அண்ணா. அவர் உயிரோடு இருந்திருந்தால்... "ஐயோ! இதற்காகவா நான் தமிழர்களின் ஆட்சியை ஏற்படுத்திக் கொடுத்தேன் என்று கதறி அழுதிருக்கமாட்டாரா?'

பஸ் டிரைவர்களாக, கண்டக்டர்களாக, ஆட்டோ ஓட்டுநர்களாக, காலணிகள் தைப்பவர்களாக, கார்ப்ப ரேஷன் தொழிலாளியாக, கூலிகளாக, அடியாட்களாக, சாலை ஓரத்து வேலையற்றதுகளாக, வெட்டிப்பேச்சுப் பேசும் அரசியல் எடுபிடிகளாக, பிறமொழி நடிகர்களின் ரசிகர் மன்றத்து நிர்வாகிகளாக, வீடுகளில் பத்துப் பாத்திரம் தேய்க்கும் அன்றாடங் காய்ச்சிகளாக, மரம் வெட்டிகளாக, துணி துவைப்பவர்களாக. சர்வர்களாக, சமையல்காரர்களாக, காய்கறி விற்பவர்களாக, கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்களாக.... இப்படிக் கீழ்நிலைகளில் தமிழன் வாழ, பிழைக்க வந்த பிறமொழிக் காரர்கள் வசதியாக வாழ்கிறார்கள்.

திருக்குறளாய், கலிங்கத்துப்பரணி யாய், புறநானூறாய், சீவக சிந்தாமணியாய், சிலப்பதிகாரமாய் இன்னும் பல, காலத்தை வென்ற காவியங்கள் நூலகங்களிலும், கல்லூரி வகுப்பறைகளிலும் தூங்கிக்கொண் டிருக்கிறது. அவ்வப்போது பாவலர் அறிவுமதி யின் கவிதைகளாய், உணர்ச்சிக் கவிஞர் காசி.ஆனந்தனின் நறுக்குகளாய், மேத்தா, வைரமுத்து போன்றோரின் வைர வரிகளாய் காட்சி தந்துவிட்டு, சில கூட்டணித் தலைவர்கள்போல் ஓரமாக ஒதுங்கிக்கொள்கிறது... ஆட்சியில் பங்கு கேட்காமல்!

கோட்டையைப் பிடிக்கத் தமிழை ஏணியாகப் பயன் படுத்தியவர்களும் இதைப்பற்றிக் கவலைப்படவில்லை. உலகம் சுற்றிவர... தமிழைத் தோணியாகப் பயன் படுத்தியவர்களும் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை. வந்தாரை வாழ வைப்பதில் வரலாறு படைத்துக்கொண்டி ருக்கும் இந்தத் தமிழ் இனத்தின் தூக்கம் எப்போது கலையுமோ? கன்னித் தமிழ்மொழியின் துயரம் எப்போது தீருமோ? தெற்கு சிவக்கிறது! மெய் சிலிர்க்கிறது!

விடியல் வேறு திசையிலிருந்துதான் நமக்கு வந்து சேருமோ?

-வி.செ.குகநாதன்

(லண்டன் தமிழ் பத்திரிகைக்காக எழுதியது.)