Advertisment

சினிமா கொட்டகை! டைரக்டர் -ரைட்டர் வி.சி.குகநாதன் (47)

cc

cc

(47) என் காதல் கதை!

"கண்ட இடத்திலே முளைக்கிறது கள்ளிச் செடியும் காதலும்தான்'' என பல வருடங்களுக்கு முன்னால் ஒரு வசனம் எழுதியதாக எனக்கு ஞாப கம். இது என் வாழ்விலும் நடந்தது. ஹபிபுல்லா ரோட் டில் ஜேயார் மூவிஸ் அலுவலகம். அதற்குமேல் என் அறை. வேலையில்லாத நேரத்தில் நான் அருகிலிருந்த உஸ்மான் ரோட்டுக்கு வந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்பேன். அந்த முனையிலுள்ள டாக்ஸி டிரைவர்கள், கடைக்காரர்கள் அனைவரும் என் நண்பர்கள்.

Advertisment

அன்று ஏதோ ஒரு மின்னலடித்தது போல் என் கண்களில் ஒரு ஒளி. என் இதயம் நின்று மறுபடி இயங்கியது போன்ற உணர்வு. என் முதல் காதல்...! அதற்குமுன் அவள், மூன்றாவது வீட்டுப் பெண் என்னை விரட்டி, விரட்டி தன்பால் இழுத்தாள். வீட்டை காலிபண்ணிவிட்டுப் போனபின் நான் தவித்தேன். அது காதல் என நினைத்தேன். இது அப்படி யல்ல... அவள் யார்? மிகச்சிறுமி. பள்ளிக்குப் போக பஸ் ஸ்டாண்டுக்கு வருகிறாள். முதல் நாள் கே.ஆர்.விஜயா போல் காட்சி தந்தாள். இரண்டாம் நாள் அதே நேரம், அதே இடத்தில் போய் நின்றேன். வேறு ஹேர்டிரஸ், வேறு டிரஸ்... ராக்கி போல் என் கண்களுக்குத் தெரிந்தது. மூன்றாம் நாள் அதே இடம்... அவள் ஜெயலலிதா போல் என் பார்வையில் பட்டாள். நான்காம் நாள்... அவள் ஷீலா போல் காட்சியளித்தாள். எனக்குப் பிடித்த அத்தனை அழகு முகங்களும் இந்த ஒரு முகத்தில் தெரிகிறதே! இது உண்மையா... கனவா... என் கற்பனையா? நோ... எனக்கெதுக்கு காதலும் கத்தரிக்காயும். அந்த நேரத்தில் அந்த இடத்துக்குப் போவதை விட்டுவிட்டேன். ஆனால் விதி விடவில்லை. ஏவி.எம்.மில் "எங்க மாமா' படத்துக்காக பல வயதுக் குழந்தைகளுக்கான தேர்வு. அந்த அறையில் அப்படத்தின் வசனகர்த்தா என்ற முறைய

cc

(47) என் காதல் கதை!

"கண்ட இடத்திலே முளைக்கிறது கள்ளிச் செடியும் காதலும்தான்'' என பல வருடங்களுக்கு முன்னால் ஒரு வசனம் எழுதியதாக எனக்கு ஞாப கம். இது என் வாழ்விலும் நடந்தது. ஹபிபுல்லா ரோட் டில் ஜேயார் மூவிஸ் அலுவலகம். அதற்குமேல் என் அறை. வேலையில்லாத நேரத்தில் நான் அருகிலிருந்த உஸ்மான் ரோட்டுக்கு வந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்பேன். அந்த முனையிலுள்ள டாக்ஸி டிரைவர்கள், கடைக்காரர்கள் அனைவரும் என் நண்பர்கள்.

Advertisment

அன்று ஏதோ ஒரு மின்னலடித்தது போல் என் கண்களில் ஒரு ஒளி. என் இதயம் நின்று மறுபடி இயங்கியது போன்ற உணர்வு. என் முதல் காதல்...! அதற்குமுன் அவள், மூன்றாவது வீட்டுப் பெண் என்னை விரட்டி, விரட்டி தன்பால் இழுத்தாள். வீட்டை காலிபண்ணிவிட்டுப் போனபின் நான் தவித்தேன். அது காதல் என நினைத்தேன். இது அப்படி யல்ல... அவள் யார்? மிகச்சிறுமி. பள்ளிக்குப் போக பஸ் ஸ்டாண்டுக்கு வருகிறாள். முதல் நாள் கே.ஆர்.விஜயா போல் காட்சி தந்தாள். இரண்டாம் நாள் அதே நேரம், அதே இடத்தில் போய் நின்றேன். வேறு ஹேர்டிரஸ், வேறு டிரஸ்... ராக்கி போல் என் கண்களுக்குத் தெரிந்தது. மூன்றாம் நாள் அதே இடம்... அவள் ஜெயலலிதா போல் என் பார்வையில் பட்டாள். நான்காம் நாள்... அவள் ஷீலா போல் காட்சியளித்தாள். எனக்குப் பிடித்த அத்தனை அழகு முகங்களும் இந்த ஒரு முகத்தில் தெரிகிறதே! இது உண்மையா... கனவா... என் கற்பனையா? நோ... எனக்கெதுக்கு காதலும் கத்தரிக்காயும். அந்த நேரத்தில் அந்த இடத்துக்குப் போவதை விட்டுவிட்டேன். ஆனால் விதி விடவில்லை. ஏவி.எம்.மில் "எங்க மாமா' படத்துக்காக பல வயதுக் குழந்தைகளுக்கான தேர்வு. அந்த அறையில் அப்படத்தின் வசனகர்த்தா என்ற முறையில் நானும் இருந்தேன்.

Advertisment

cc

அதே மின்னல்... செலக்ஷனுக்கு அவளும் வந்திருந்தாள். படப்பிடிப்பு நடந்தபோது அவள் இல்லை. அப்பா, தப்பித்தேன் என்று நினைத் தேன். சில நாட்கள் கழித்து "நாலும் தெரிந்தவன்' படத்தின் பாடல் காட்சி. அதில் அவளும் ஆடி னாள். பல கிழங்கள் அவளைப் பற்றி விசாரிப் பதை நானே பார்த்தேன். ஒதுங்கிப் போனேன். சில மாதங்கள் பின்னால் அவள், அதே பஸ் ஸ்டாண்டில். கல்லூரிக்குப் போகிறாள். நான் என் முதல் சொந்தக் காரில் அமர்ந்து பார்க்கின்றேன். இந்தி நடிகை போல் தோற்றம். எப்படியாவது அவளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முடிவோடு எங்கள் ஆபீஸ் பையன் கனகராஜ் உதவியை நாடினேன். அவன் விலாசத்தோடு வந்தான். அவள் என் நாடகத்தில் நாயகியாக நடிப்பாளா எனக் கேட்டுவரச் செய்தேன். கையில் கிடைக்கும் காசுக்காக கனகராஜ் உண்மையாக உழைத்தான்.

"நாடகமெல்லாம் வேண்டாமப்பா. சினிமாவானால் யோசிக்கலாம்'' என அவள் வீட்டில் சொல்லிவிட்டார்கள். ஆனால் மிகச் சிறிய வீட்டில் மிகப்பெரிய குடும்பம். அதனால் இந்தப் பெண் நடிக்கவேண்டிய சூழ்நிலை. இதற்கிடையில் "பாமா விஜயம்', "காவல்காரன்' போன்ற தமிழ்ப் படங்களிலும், சில மலையாளப் படங்களிலும் சற்று வளர்ந்த பெண்ணாக இப்பெண் நடித்ததைப் பார்த்தேன். காதல், திருமணம் என்றெல்லாம் இல்லாமல் இவளை நடிக்கவைத்து... பின்னர் அடுத்த கட்டத்தை சிந்திக்கலாம் என முடிவெடுத்தேன். இதெல்லாம் அவளுக்குத் தெரியாது. குழந்தைகளை ஷூட் டிங் அழைத்துப்போகும் ஏஜெண்டை அழைத்து, இவர் குடும்பத்தைப் பற்றி சில தக வல்கள் சேகரித்தேன். அதேசமயத்தில் ஏவி.எம். அவர்கள் "நீங்க சொந்தமா ஒரு படம் எடுங்க''ன்னு சொன்னார். இது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது மட்டுமில்லாம, அந்தப் பெண்ணை அறிமுகம் செய்ய வாய்ப்பாக அமை யும் என நம்பவைத்தது. கதையை எழுதும் போதே, அவள் தோற்றம், அப்பாவித்தனம், அந்த அழகு, எக்ஸ்பிரஸிவ் கண்கள் அனைத் தையும் மனதில் கொண்டு ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கினேன். ஏவி.எம்.மிலுள்ள என் அலுவலகத்துக்கு வரவழைத்து கதையைச் சொல்ல ஏற்பாடு செய்தேன். அன்றுதான் அவள் என்னை நேரில் பார்த்தாள். கதையும் அவளுக்கு மிகவும் பிடித்துப்போனது. மகிழ்ச்சியோடு காணப்பட்டாள். தனியாக ஒரு போட்டோ கிராபரை ஏற்பாடு செய்து அவளுக்கு டெஸ்ட் மேக்கப் போட்டு பலவிதமாக ஸ்டில்ஸ் எடுத்து வைத்துக்கொண்டேன். ஏவி.எம். அவர்களிடம் கதையைச் சொன்னதும், மனம் திறந்து பாராட்டினார். அப்பவே இந்த குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு ஒரு புதுமுகம் இருந்தால் நன்றாக இருக்கும் எனச் சொன்னேன். அவரும் ஒப்புக்கொண்டார். ஆகவே ஏவி.எம். புதுமுகம் தேட ஆரம்பித்தது. பல பெண்கள் வந்தார்கள். அதில் பலபேர் பின்னாட்களில் அகில இந்திய நட்சத்திரங்களாக மாறியுள்ளார்கள். உதாரணம் ரேகா, ஹேமமாலினி. ஏதேதோ காரணத்தைச் சொல்லி வந்தவர்களை திருப்பியனுப்பி வைத்தேன். இதுக்கெல்லாம் காரணம் அவள். அவளை நாயகியாக்கவில்லை என்றால் அவள் எனக்கு கிடைக்கமாட்டாள். அவர்கள் குடும்ப சூழ்நிலை அப்படி.

இன்னொரு விஷயம் எனக்கு அப்போது தான் தெரியவந்தது. அவள் சகோதரிகள் சினிமாவில் நடித்திருக்கிறார்கள். அதிலும் "களத்தூர் கண்ணம்மா', "குழந்தையும் தெய்வமும்' ஆகிய படங்களில் குழந்தைகளாக நடித்திருக்கிறார்கள். படிப்பு, நடிப்பு என்ற குழப்பத்தில் கிருஷ்ணன்-பஞ்சு ஸாரிடம் திட்டு வாங்கியிருக்கிறார் கள். இது எனக்கு இன்னொரு கண்டம் ஆனது. ஆனால் நான் விரும்பும் நாலைந்து நாயகிகளின் சாயல் இவள் ஒருத்தியிடம் இருந்ததால் இவளை விட எனக்கு மனமில்லை. அதுமட்டு மல்ல... குழந்தைத்தனமான அப்பாவியான நடத்தை. அதனால் இயக்குநர் சொன்னதாக அப்பச்சி யிடமும், அப்பச்சி சொன்னதாக இயக்குநரிட மும் சொல்லி இந்தப் பெண்ணை ஓ.கே. என சொல்ல வைத்துவிடலாம் எனத் திட்டமிட்டேன்.

முதலில் போட் டோக்களை செட்டியா ரிடம் காட்டினேன். அவர் பார்த்தவுடனேயே "அட... இது வெண்ணிற ஆடை நிர்மலாதானே?'' என்றார்.

"இல்ல அப்பச்சி, இது புதுப்பொண்ணு.'' கல்லூரியிலே பி.யு.சி. படிப்பதாக மட்டும் சொல்லி நிறுத்தினேன்.

படங்களை மறுபடி யும் பார்த்துவிட்டு, "இயக்கு நர்கிட்டே காட்டுங்க. அவர் ஓ.கே. என்றால் படப்பிடிப்பை ஆரம்பிச்சிடலாம்'' என்றார்.

அவர் பச்சைக்கொடி காட்டியதும் காய் நகர்த்துவது எனக்குச் சுலபமானது. அந்தப் பெண்ணின் நிஜப்பெயரை மாற்றி ஜெயா என பெயரிட்டோம். அடுத்து அவர் தாயாரிடம் தனியாகப் பேசினேன். ஏவி.எம். படத்து நாயகின்னா, அதற்கான ஸ்டேட்டஸ் வேணும். முதலில் ஒரு காரை வாங்கிக் கொடுத்தேன். அடுத்து ஒரு தனி பங்களாவை தியாகராஜ கிராமணி தெருவில் வாடகைக்கு எடுத்துக் கொடுத்தேன். அங்கே அவள் தாயாரோடு தங்கவேண்டும் என விரும்பினேன். ஆனால் மொத்த குடும்பமும் குடியேறியது. இது எனக்கு பெரும் அதிர்ச்சிதான். ஆனால் கண்டிப்பாக நடக்க மனசு வரவில்லை. பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாட்டுக்கு உட்லண்ட்ஸில் ஏற்பாடு செய்தேன். என் செயல்கள் அவளுக்குப் பிடித்திருந்ததால், என்னுடன் தனிமையில் பேச ஆரம்பித்தாள்... அதுதான் காதலாக மாறியது.

(திரை விரியும்...)

படம் உதவி: ஞானம்

_______________

கடுக்கனும்... பொருத்தமும்!

"தங்களின் அண்மைக் கட்டுரையில் கோபம் கொந்தளித்ததே. அரசியலுக்கு வர உத்தேசமா?' என பலரும் கேட்டார்கள். வரலாறே வாய்ப்புத் தர தயாராக இருந்தபோது, மறுத்தவன் நான். வரப்புகளை நம்பி வருவேனா?

cc

ஈ.வி.கே.சம்பத்தும், கண்ணதாசனும் தி.மு.க. பொதுக்குழுவில் கலவரம் செய்ததாக குற்றச்சாட்டு. அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப் பட்டார்கள்.

"இது நிரந்தர நீக்கமா?' என அண்ணாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டனர்.

"நீக்கம் என்று யார் சொன்னது? ரொம்ப வருஷமா என் இரு காது களிலும் கடுக்கன் மாட்டியிருந்தேன். இப்போது என் காதுகளில் புண் வந்திருக்கிறது. அதனால் கழட்டி பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். புண் குணமானதும் மறுபடியும் எடுத்து மாட்டிக்கொள்வேன்'' என பதிலளித்தார் அண்ணா. எம்.ஜி.ஆர். "என் கடமை' பட ரிலீஸ் நேரத்தில், "காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி'' என்றார். "என் கடமை' தோல்வி. பத்திரிகையாளர்கள் அண்ணாவிடம் கேட்டார்கள். அண்ணா வார்த்தையை விடவே இல்லை.

அடுத்து ஆனைக்கவுனியில் ஒரு பொதுக்கூட்டம். ஒரு அரசியல் அதிமேதாவி "பொருத்தம்' என்ற தலைப்பில் அண்ணாவை பேசச் சொன்னார். எப்படியும் எம்.ஜி.ஆரைப் பற்றி அண்ணா ஏதாவது சொல்வார் என்று எதிர்பார்த்தவர்கள், ஏமாற்றமடைந்தனர்.

ஆனால் பின்னர் ஒரு கூட்டத்தில்... "ஒரு பழுத்த கனி மரத்திலே தொங்கிக்கொண்டிருந்தது. பலபேர் அதை அடைய விரும்பி தங்கள் மடியை விரித்து வைத்துக் காத்திருந்தனர். அந்தக் கனி என் மடியில் விழுந்தது. அதை பத்திரமாக எடுத்து என் இதயத்தில் வைத்துக்கொண் டேன். அந்த இதயக்கனிதான் எம்.ஜி.ஆர்.'' என்றார் அண்ணா.

கழகத் தோட்டங்கள் மக்களின் சொத்து, அதில் கூ-க்கு மாரடிக்க வந்த ஓரிரு காவல்காரர்கள் சரியில்லையென்றால் காவல்காரனை மாற்றலாமே தவிர, தோட்டத்தை சிதைப்பதா? அப்படி ஒரு தவறை ஒருபோதும் நான் செய்யமாட்டேன்.''

nkn211224
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe