Advertisment

சினிமா கொட்டகை! டைரக்டர்- ரைட்டர் வி.சி.குகநாதன் (31)

ss

(31) பர்தா அணிந்துவந்து படம் பார்த்த ஜெயலலிதா!

போயஸ் கார்டன் வீட்டுக்கு என்னை அழைத்து, "என் வீட்டை சினிமா ஷூட்டிங்கிற்கு விடப்போறேன்' என்று சொன்னதுடன், மாற்றங்கள் செய்யப்பட்ட வீட்டை சுற்றிக்காட்டினார் ஜெய லலிதா. பொறுமையாக எல்லாவற்றையும் பார்த்து விட்டு, காபியும் சாப் பிட்டுவிட்டு, கிளம்பும் போது... "தயவு செய்து அவசரப்படாதீங்க, மீண்டும் இது பற்றிப் பேசலாம்'' என்று சொல்லிவிட்டு வந்தேன்.

Advertisment

அடுத்த சந்திப்பின் போது அவர் மனம்விட்டுப் பேசினார். அவர் நடந்ததை யெல்லாம் விவரித்தபோது... அவர் குரல் தழுதழுத்ததே தவிர, கண்கள் கலங்க வில்லை. ஆனால் என் கண்கள் கலங்கின. நன்றி கெட்டவர்கள் நம் சினிமா உலகில் ஏராளம். நம்பிக் கெட்டவர்கள் பரிதாபத்துக் குரியவர்கள். ஒரு சில வருமான வரி பிரச்சினை அவருக்கு இருந்ததையும் சொன்னார்.

பேச்சின் இறுதியில்... "நான் ஒரு கதை சொல்றேன், அதைக் கேட்க இப்ப உங்களுக்கு நேர மிருக்கா?'' என கேட்டார்.

வேறு எதுவுமே சொல்லாமல் "கதையை சொல்லுங்க'' என்றேன். ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம், ஒரு படத்தைப் பார்ப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தும்விதமாக, முக்கிய வசனங்களுடன், கை தேர்ந்த ஓர் இயக்குனரைப் போல் கதையை சொன்னார்.

Advertisment

சில காலம் கலை உலகிலிருந்து விலகியிருக்க நேர்ந்த போது, அவர் இதயமும் எண்ணமும் இங்கேயேதான் வாழ்ந்திருக்கிறது என்பதை அவர் கதையை எழுதி யிருந்த பாங்கும், அதைச் சொன்ன விதமும் எனக்குப் புரியவைத்தது.

"இதை நானே இயக்க ஆசைப்படுகிறேன்'' என்றும் சொன்னார். நான் மனம் திறந்து பாராட்டி னேன். வீட்டை ஷூட்டிங் கிற்கு விட நினைத்த ஜெய லலிதா, இதனைச் சொன்ன போது... நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைந்தேன்.

"நிச்சயமாக நீங்கள் மிகப் பெரிய இயக்குனராகப் பரிமளிப்

"நிச்சயமாக நீங்கள் மிகப் பெரிய இயக்குனராகப் பரிமளிப்பீர் கள். உங்களுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்'' என்று சொல்லி விடை பெற்றேன்.

அடுத்த தடவை நான் அவரை சந்திக்கப் போனபோது, வீட்டிலுள்ள தன் நூலகத்துக்குள் அழைத்துப் போனார். அழகான நூலகம். நாலு பக்கமும் அலமாரிகளும் அதில் நிறைய புத்தகங்களும்... பார்க்கவே அழகாக இருந்தது.

என் தந்தை ஓர் ஆசிரியர். என் தாத்தாவும் ஆசிரியர். அதனால் மூன்று மர பீரோக்கள் நிறைய புத்தகங்கள் இருந்தன. சின்ன வயதிலிருந்தே எனக்கு ஒரு ஆசை. தனியாக ஒரு வீடு கட்டினால் ஓர் அறையில் நூலகம் வைக்கவேண்டுமென்ற கனவு இருந்தது. அந்த சின்ன வயதிலேயே என் சுய சம்பாத்தியத்தில், நுங்கம்பாக்கத்தில் இரண்டு வீடுகள் வாங்கியிருந்தேன். நூலகம் மட்டும் வைக்க முடியவில்லை. அம்மு அவர்களின் நூலகத்தைப் பார்த்ததும் மனம் துள்ளிக் குதித்தது. ஒரு குழந்தையைப்போல சுற்றி சுற்றிப் பார்த்தேன்.

cc

நூலகத்தில் சுற்றிப் பார்க்கையில்... இடையில் என் மனதில் ஒரு கேவலமான எண்ணம் உண்டானது.

"ஒரு நடிகையான இவர் இந்தப் புத்தகங்களையெல்லாம் படித்திருக்கவா போகிறார்... சோதித்துப் பார்த்துவிடலாமே?'' என அலமாரியில் தேடினேன். நான் படித்த புத்தகமாக இருக்க வேண்டும், அவர் படிக்காததாக இருக்க வேண்டும். ஓஹம்ங்ள் ஐஹழ்க்ப்ங்ஹ் ஈட்ஹள்ங் எழுதிய சர் ஞழ்ஸ்ரீட்ண்க்ள் ச்ர்ழ் ஙண்ள்ள் இப்ஹய்க்ண்ள்ட் புத்தகத்தைப் பார்த்தேன்.

"இந்தப் புத்தகத்தைப் படித்திருக்கிறீர்களா?'' என்று கேட்டேன். "உட்காருங்க'' என்று என்னை அந்த அறையிலேயே உட்கார வைத்துவிட்டு, எதிர் நாற்காலியில் அமர்ந்து அந்த நாவலின் கதையை சொல்ல ஆரம்பித்துவிட்டார். அந்தக் கதை எப்படி நாவலில் எழுதப்பட்டிருந்ததோ... அதேபோல் சொல்லி முடித்துவிட்டு, இதைத் தமிழில் திரைப்படமாக எடுக்கலாம் என்றும் சொன்னார். அந்த நாவலாசிரியர் பற்றி குறிப்பு களையும் சொன்னார். திகைத்துப் போனேன்.

எந்தக் குறிப்பும் இல்லாமல், யாரிடமும் எதையுமே கேட்காமல் பிற்காலத்தில் சட்டசபை யில் எதிர்க்கட்சியினர் கேள்விகளுக்கு பட்டுப்பட் டென்று, முதல்வராக செல்வி ஜெயலலிதா அவர்கள் பதிலளிப்பதை, நேரலையில் தொலைக்காட்சியில் பல தடவை நான் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் ஜெயலலிதா அவர்கள் எவ்வளவு ஞாபக சக்தி உள்ளவர் என்பதை உணர்த்தும் பழைய நிகழ்வுகள் நினைவுக்கு வரும்.

அவரிடமிருந்து விடைபெறும்போது... "நீங்கள் ஏன் மறுபடியும் நடிக்கக் கூடாது?'' என்று மட்டும் கேட்டுவிட்டு கிளம்பி விட்டேன். சில வாரங்கள் கழித்து அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்தன; மகிழ்ச்சியடைந்தேன். அதேபோல், முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்களை சந்திக்கப் போன போது..."ஜெயலலிதாவைப் போய்ப் பார்த்தியாமே?'' என்று கேட்டார். நான் எதையும் மறைக்காமல் எதையெல்லாம் சொல்லலாம் என என் மனசுக்குப் பட்டதோ, அதையெல்லாம் சொன்னேன். அவரும் நிறைய விஷயங்களைத் தெரிந்து வைத்திருந்தார் என்பதை அவர் பேச்சிலிருந்து புரிந்துகொண்டேன்.

வாழ்க்கையில் திருப்பம் என்பது நேர்விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் இருக்கலாம், எதிர் விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் இருக்கலாம். ஜெயலலிதாவின் நூறாவது படம் "திருமாங்கல்யம்.' பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் டி.ராமாநாயுடு "வசந்த மாளிகை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவராக பாராட்டப்பட்ட நேரம். நான் அவரது நிறுவனத்தில் நாற்பது படங்கள் வரை பணியாற்றியிருக்கிறேன். சில படங்களை அவரோடு இணைந்து தயாரித்தும் இருக் கிறேன். என்னை "மதுரகீதம்' படம் மூலம் இயக்குநர் ஆக்கியவர் அவர்தான்.

"ஜீவன தரங்காலலோ' என்ற தெலுங்குப் படத்தை வாணிஸ்ரீயை கதாநாயகியாக வைத்து தயாரித்தார். அந்தப் படம் வெள்ளிவிழா கண்டது. அந்தப் படத்தைப் பார்த்த ஜெயலலிதாவுக்கு வாணிஸ்ரீ கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. இதையறிந்த ராமாநாயுடு இந்தப் படத்தை ஜெயலலிதாவின் நூறாவது படமாக தமிழில் தயாரிக்க முன்வந்தார். பெரும் பொருட்செலவில், தலைசிறந்த ஒளிப்பதிவாளர் வின்சென்ட்டின் ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தில் பிர மாண்டமாக வாஹினியில் செட் போட்டு எடுக்கப்பட் டது. "வசந்த மாளிகை' போல இந்தப் படமும் பெரிய ஹிட்டடிக்கும்; ஜெயலலிதாவுக்கு ஒரு தனி நட்சத்திர அந்தஸ்து கிடைக்கும் என பெருமள வில் எதிர்பார்க்கப்பட்டது.

படத்தை மக்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்பதைப் பார்க்க முஸ்லிம் பெண்ணைப் போல புர்கா அணிந்து வந்து தியேட்டரில் "திரு மாங்கல்யம்' படத்தைப் பார்த்தார் ஜெயலலிதா. படம் எதிர்பார்த்த வெற்றியைத் தராதது அவருக்கு ஏமாற்றத்தைத் தந்தது. "குமரிப்பெண்', "நான்', "எங்கிருந்தோ வந்தாள்', "சூரியகாந்தி', "மூன்றெழுத்து', "அன்புத் தங்கை', "முத்துச்சிப்பி' போன்ற பல படங்களின் வெற்றிக்கு ஜெயலலிதாவே முக்கிய காரணம் என என்னால் அடித்துச் சொல்லமுடியும். அந்தப் படங்களின் வெற்றிகள் அவருக்குத் தந்த ஏற்றத்தைவிட, "திருமாங்கல்யம்' படம் ஏற்படுத்திய எதிர்பாராத திருப்பம் அவரது திரையுலக வாழ்வில் பாதிப்பை ஏற் படுத்தியதை பலவகைகளில் நான் உணர்ந்தேன். சில திரையுலக எதிரிகள் இதை தமக்கு சாதக மாகப் பயன்படுத்தி, அவருக்கு விரோதமாக சதிவலைகளை பின்ன ஆரம்பித்தனர். ஆனால் அவரோ, இதற்கெல்லாம் கலங்கவில்லை. அவர் எடுத்த சில முடிவுகள் சரியா? தப்பா? என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. அந்தக் காலகட்டங்களில் தாயாரையும் இழந்து ஒரு தனிப்பறவை போல போயஸ் கார்டன் வீட்டில் இருந்தார். "திருமாங்கல்யம்' -அதிலும் அவரின் நூறாவது படம் எதிர்பார்த்த வெற்றியைத் தராதது, இதனால் சினிமாவை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போய்க்கொண்டிருந்தார்.

கெமிஸ்ட்ரி லெக்சரர் கதாபாத்திரத்தை வைத்து ஜெயலலிதாவுக்கு நான் சொன்ன கதை. உடனே நாற்பத்தைந்து நாட்கள் கால்ஷீட் ஒதுக்கித்தந்தார்.

ஆனால்...

(திரை விரியும்)

___________

ஹீரோவுக்கு இணையான டைரக்டர்!

cc

ந்தக் காலத்தில் பிறமொழிப் படங்களை ரிலீஸான உடனே பார்க்க வேண்டும் என்றால் பெங்களூரு போகவேண்டும். வெள்ளிக்கிழமை இரவு, எனது உதவியாளர்களுடன் காரில் புறப்பட்டு, நாலுமணி நேரத்தில் பெங்களூரு. ஹோட்டலில் சிறிது ஓய்வுக்குப் பின் கன்னடப் படங்களைப் பார்ப்பேன். சனி, ஞாயிறு இரண்டு நாட்களில் சுமார் எட்டு முதல் ஒன்பது படங்களைப் பார்த்துவிடுவேன். திங்கள்கிழமை அதிகாலை நாலுமணிக்கு பெங்களூருவிலிருந்து கிளம்பி, சென்னை வந்துவிடுவேன். நாங்கள் பார்த்த ஒவ்வொரு படங்களின் அம்சத்தையும் விவாதிப்போம். தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிப் படங்களும் ஓடும். அப்படி அங்கே பார்க்கப்போன நாட்களில் "கெஜ்ஜ பூஜா', "எடக்கல்லு குட்டடு மேலர்', "நாகரஹாவு' என டைரக்டர் புட்டண்ணா கனஹல் அவர்கள் இயக்கிய படங்களைப் பார்த்து வியந்துபோனேன். அவை திரைப்படங்களல்ல... திரைக் காவியங்கள். என்னை அவரின் மானசீக குருவாக போற்றிக்கொண்டிருக்கிறேன்.

சூப்பர் ஸ்டார் நடிகர்களின் புதிய படங்கள் ரிலீஸாகுமே... அதுபோல புட்டண்ணா சாரின் படம் ரிலீஸானால் இளைஞர்கள் கூட்டம் தியேட்டரில் முட்டி மோதுவதைப் பார்த்திருக்கிறேன்.

ஏவி.எம். நிறுவனம் மூலம் புட்டண்ணா ஹனகல் தமிழுக்கு வருவதற்கு நானும் மிக முக்கிய காரணமாக இருந்தேன்.

அந்த அனுபவத்தை அடுத்துச் சொல்கிறேன்!

nkn231024
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe