(29) ஒண்ணு அடைச்சா... இன்னொண்ணு திறக்கும்!
தேள் கொட்டியது... தேனாக இனித்தது!
ஆமாம்...
ஒரு கதவை மூடும்போது... இன்னொரு கதவைத் திறக்கிறான் இறைவன். "இழப்பு' என்பது இன்னொன்று நம் வாழ்க்கையில் கிடைப்பதற்கான அறிகுறி. இது என் வாழ்விலும் நடந்தது. இப்படியான முரண்பட்ட அனுபவங்கள் திரையுலகில் வெகுசாதாரணமாக நடக்கக்கூடியதுதான்.
எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா நடித்த "புதிய பூமி' படத்தைத் தயாரித்த ஜேயார் மூவீஸ் உரிமையாளர்கள், சிவாஜியை வைத்து படம் தயாரிக்க கதை கேட்டார்கள். அதுதான் "எங்க மாமா' திரைப்படம். சிவாஜி-ஜெயலலிதா நடித்த இந்தப் படம் மூலம் தயாரிப்பாளருக்கு எட்டு லட்ச ரூபாய் லாபம். இதற்காக மறந்தும்கூட யாரும் என்னைப் பாராட்ட வில்லை.
அடுத்து இந்திப் படத்தைத் தழுவி "அனாதை ஆனந்தன்' படம் எடுக்க விரும்பினார்கள். அந்தக் கதை வேண்டாம் என நான் சொல்லியும், என்னை எழுதவைத்து, ஏவி.எம்.ராஜன்-ஜெயலலிதாவை வைத்து எடுத்தார்கள். படத்தால் நஷ்டம் வந்ததும், மறக்காமல் என்னை விமர்சித்தார்கள்.
ஜேயார் மூவீஸ் அலுவலகத்தில் சாயங்காலமாகத் தொடங்கிய சீட்டு விளையாட்டு, நான் மாலைக் காட்சி படம் பார்த்துவிட்டு, நான் தங்கியிருந்த ஜேயார் மூவீஸ் அலுவலக மாடிக்கு திரும்பும் வரை நீடித்துக்கொண்டிருந்தது. அவர்கள் விளையாடிக் கொண்டிருந்த அறையைத் தாண்டித்தான் என்னுடைய அறைக்குப் போக வேண்டும். சீட்டாட்டத்தில் மும்முரமாக இருந்தவர்களின் பேச்சில் என் பெயர் அடிபட்டதா
(29) ஒண்ணு அடைச்சா... இன்னொண்ணு திறக்கும்!
தேள் கொட்டியது... தேனாக இனித்தது!
ஆமாம்...
ஒரு கதவை மூடும்போது... இன்னொரு கதவைத் திறக்கிறான் இறைவன். "இழப்பு' என்பது இன்னொன்று நம் வாழ்க்கையில் கிடைப்பதற்கான அறிகுறி. இது என் வாழ்விலும் நடந்தது. இப்படியான முரண்பட்ட அனுபவங்கள் திரையுலகில் வெகுசாதாரணமாக நடக்கக்கூடியதுதான்.
எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா நடித்த "புதிய பூமி' படத்தைத் தயாரித்த ஜேயார் மூவீஸ் உரிமையாளர்கள், சிவாஜியை வைத்து படம் தயாரிக்க கதை கேட்டார்கள். அதுதான் "எங்க மாமா' திரைப்படம். சிவாஜி-ஜெயலலிதா நடித்த இந்தப் படம் மூலம் தயாரிப்பாளருக்கு எட்டு லட்ச ரூபாய் லாபம். இதற்காக மறந்தும்கூட யாரும் என்னைப் பாராட்ட வில்லை.
அடுத்து இந்திப் படத்தைத் தழுவி "அனாதை ஆனந்தன்' படம் எடுக்க விரும்பினார்கள். அந்தக் கதை வேண்டாம் என நான் சொல்லியும், என்னை எழுதவைத்து, ஏவி.எம்.ராஜன்-ஜெயலலிதாவை வைத்து எடுத்தார்கள். படத்தால் நஷ்டம் வந்ததும், மறக்காமல் என்னை விமர்சித்தார்கள்.
ஜேயார் மூவீஸ் அலுவலகத்தில் சாயங்காலமாகத் தொடங்கிய சீட்டு விளையாட்டு, நான் மாலைக் காட்சி படம் பார்த்துவிட்டு, நான் தங்கியிருந்த ஜேயார் மூவீஸ் அலுவலக மாடிக்கு திரும்பும் வரை நீடித்துக்கொண்டிருந்தது. அவர்கள் விளையாடிக் கொண்டிருந்த அறையைத் தாண்டித்தான் என்னுடைய அறைக்குப் போக வேண்டும். சீட்டாட்டத்தில் மும்முரமாக இருந்தவர்களின் பேச்சில் என் பெயர் அடிபட்டதால் ஓரமாக நின்று கவனிக்க வேண்டியதாகிவிட்டது.
"ஏவி.எம். பேச்சைக் கேட்டு, குகநாதன் எங்களை "அனாதை ஆனந்தன்' படத்தை எடுக்க வச்சார். அதனாலதான் இந்த நஷ்டம்' என ஏதேதோ பேசிக்கொண்டே போனார்கள். சீட்டாட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஒரு கதாசிரியரும், ஒரு டைரக்டரும் "ஆமா.. ஆமா..' போட்டுக் கொண்டிருந்தார்கள். "உண்மை என்ன என்பதைச் சொல்லி, என் பக்கத்து நியாயத்தை உடனே சொல்லவேண்டும்' என என் மனம் விரும்பியது. ஆனால் அங்கிருந்தவர்களின் "மயக்க நிலையைப் புரிந்துகொண்டு... "இது விளக்கம் சொல்வதற்கான நேரமல்ல' என என்னைச் சமாதானப்படுத்திக்கொண்டு, என் அறைக்குப் போய்விட்டேன்.
அந்த நிறுவன முதலாளிகளுடன் ஒரு உறவுக்காரனைப் போல் நன்கு பழகிவிட்டேன். அவர்களின் வீட்டில் சாப்பிட்டிருக்கிறேன். ஆகவே அவர்களுடனான நட்பை முறித்துக்கொள்ள விரும்பவில்லை. அதே சமயம் "இனி தொழில் ரீதியாக அந்த கம்பெனியுடன் எவ்விதத் தொடர்பும் வேண்டாம்' என முடிவு செய்தேன்.
ஒருநாள்... அவர்களாகவே என்னிடம் "அடுத்து சிவாஜி சாரை வச்சு ஒரு படம் எடுக்கலாம்; கதை ரெடி பண்ணுங்க' என்றார்கள். எனக்கு விருப்பமில்லை, ஆனாலும் தலையை ஆட்டிவிட்டு, என் அறையின் பால்கனி வழியாக வீதியைப் பார்த்தபடி யோசித்துக்கொண்டிருந்தேன். அப்போது தெருவில் "வியட்நாம் வீடு' சுந்தரம் நடந்து போய்க்கொண்டிருந்தார். அவர் எனது நண்பர். சில நாட்களுக்கு முன்பு, அவரை நான் சந்தித்தபோது மேஜர் சுந்தர்ராஜன் நாடகத்துக்காக ஒரு கதையை எழுதி யிருப்பதாகச் சொன்னது ஞாபகத்திற்கு வர, "சுந்தரம்... மேல வாங்க' என சத்தம்போட்டு அழைத்தேன்.
என் அறைக்கு வந்தார். அவரை முதலாளிகளின் அறைக்கு அழைத்துச் சென்று, "சிவாஜி சாருக்கு ஏற்ற மாதிரி கதை இவர்கிட்ட இருக்கு; கேளுங்க' என அறிமுகப்படுத்தி வைத்தேன். சுந்தரம் சொன்ன கதையில் அவர்கள் ஆர்வமானார்கள்.
"இனி ஜேயார் மூவீஸுக்கு எழுதுவதில்லை' என்கிற என் முடிவில் திடமாக இருந்தேன். புதிய கதைகளை எழுதும் பணியில் ஈடுபட்டேன். சுந்தரம் சொன்ன கதையை படமாக்க... ஏவி.எம். அப்பச்சியிடம் ஃபைனான்ஸ் கேட்க இந்த முதலாளிகள் போனார்கள். அப்போது அப்பச்சி "ஏன்... இந்தப் படத்துக்கு குகநாதன் எழுதலையா?' என கேட்டிருக்கிறார். இவர்கள் என்ன பதில் சொன்னார்களோ...
இரண்டு நாட்கள் கழித்து, நான் அப்பச்சியைச் சந்தித்தபோது... "ஏன் ஜேயார் மூவீஸ் படத்துக்கு நீங்க எழுதல?' என வற்புறுத்திக் கேட்டதால்... நடந்ததைச் சொல்லி, உடைந்து அழுதுவிட்டேன். ஜேயார் மூவீஸ் முதலாளிகள் மிகவும் அன்பானவர்கள்தான். விருந்தோம்பலில் சிறந்தது அவர்களின் குடும்பம். அதனால்தான் அவர்களுக்கு கதை எழுத விரும்பாத சூழலை எண்ணி, அப்பச்சியிடம் பேசும்போது அழுதுவிட்டேன்.
அடுத்த பத்து நாட்களில் ஏவி.எம். அப்பச்சி தன் பங்களாவிற்கு என்னை அழைத்தார்.
"குகநாதன்... நீங்களே படம் தயாரியுங்க. நான் பணம் தர்றேன்' என்றார். அன்று உருவானதுதான் ஏவி.எம். சித்ரமாலா கம்பைன்ஸ். அப்பச்சி கைதொட்டு, ஆசிர்வதித்து ஆரம்பித்து வைத்த நிறுவனம்... ஐம்பத்து நான்கு ஆண்டுகள் கடந்தும் இன்னமும் வெற்றிகரமாக நடக்கிறது.
இறைவன்... ஒரு கதவை மூடும்போது... இன்னொரு கதவை திறக்கிறான்.
தன் வீட்டை சினிமா சூட்டிங்கிற்கு வாடகைக்கு விட விரும்பிய ஜெயலலிதா...
(திரை விரியும்)
படம் உதவி: ஞானம்
_______
அந்தக் கதை!
புலவர் இந்திரகுமாரி படம் தயாரிக்க விரும்பியதால் வாத்தியார் எம்.ஜி.ஆரே புலவரை என்னிடம் அனுப்பி வைத்தார். அதனால் வித்தியாசமான கதையாக எழுதி இயக்கினேன். "நீ தொடும்போது' படத்தின் கதை இதோ...
மேற்கத்திய இசைப் பிரிய னும் ட்ரம்ஸ் வாசிப்பவனுமான இளைஞன், மியூஸிக் டீச்சர் மேல் காதல்வயப்பட்டு, அவளிடம் கர்தாடக சங்கீதம் கற்க அவளது வீட்டுக்கு வர ஆரம்பிக்கிறான். காதல் வளருகிறது. ஒருநாள்... அந்த இளைஞனின் தந்தை, சங் கீத டீச்சர் வீட்டுக்கு வருகிறார். அமைதியாகப் பேசி, அவள் தன் மகனைவிட வயதில் பெரியவள், அது எதிர்காலத்தைப் பாதிக்கும் என்பதை புரியவைத்துப் போகிறார். இதனால் அவளுக்கு பெரும் மனப் போராட்டம். யாருக்கும் சொல்லா மல் வீட்டை காலி பண்ணிவிட்டு மாயமாகிவிடுகிறாள். இளைஞன் தேட ஆரம்பிக்கிறான், பலனில்லை. அவள் வெளிநாடு, வெளி மாநிலம் இப்படி பல இடங்களில் கச்சேரி கள்பண்ணி பிரபலமாகிறாள். "இவ கச்சேரிகளுக்கு கூட்டம் கூடுவதற்கு காரணம் அவள் அழகுதான், சங்கீதமல்ல' என மட்டம்தட்டிப் பேச ஆரம்பிக் கின்றனர். அவள் தன் அடுத்த கச்சேரியில்... மூடப்பட்ட திரை யின் பின்னால் அமர்ந்தே பாடப் போவதாக விளம்பரம் செய்யப் படுகிறது. அதைத் தெரிந்ததும் கூட்டம் சாய்கிறது, டிக்கெட் கிடைக்கவில்லை... கச்சேரி பெரும் வெற்றி! ஏதேதோ பேசி யவர்கள் மவுனிக்கிறார்கள்.
இந்த நிலையில் தன் அண்ணன்களிடம்... தன் எல்லா கச்சேரிகளுக்கும் மட்டுமல்ல, திரை போட்டு பாடியபோதும் கூட, முதல் வரிசையில் வந்து அமர்ந்து ரசித்த ஒரு சாமானியனை கட்டிக் கொள்ள விரும்புவதைச் சொல் கிறாள். திருமணம் நடக்கிறது. முதலிரவில் "உங்கள் இசை ரசனைதான் இந்த கல்யாணத் துக்கு அடித்தளம்' என்கிறாள்.
அவனோ, "தனக்கு சங்கீத சாஸ்திரம் தெரியுமென்றும், தன் குரல் வளம் சரியில்லை என்பதால் எவரும் பாட்டுக் கற்றுக்கொடுக்க முன்வரவில்லை' என்றும் சொல் கிறான். மேலும்... "உன்னைப் போல் குரல் வளம் கொண்ட சங்கீதப் பேரரசி பாடுவதை நிறுத்தி அதனால் அவள் படும் துயரத்தை நான் பார்த்து ரசிக்க வேண்டும். ஆகவே "இனிமேல் பாடமாட்டேன் என சத்தியம் பண்ணினால்தான் நாம் கணவன்-மனைவியாக வாழ முடியும்'' என்கிறான். அவள் கதறி அழுகிறாள். "இதற்குப் பதிலாக இந்த தாலியை கழட்டிக்கிட்டு எனக்கு விடுதலை தாருங்கள்'' என கெஞ்சுகிறாள்... பலனில்லை. சத்தியம் செய்து கூண்டுக்கிளி யாக வாழ்கிறாள்.
இந்த சமயத்தில் அவள் காதலன் இந்த ஊரில் அவள் வாழ் வதை தெரிந்து வந்து சேருகிறான். "நான் உன் காதலனாக வர வில்லை. உன் மாணவனாக, உன் ரசிகனாக வந்திருக்கேன். உன்னை மறுபடியும் பாட வைக்காமல் இங்கிருந்து போகமாட்டேன்'' என சபதம் செய்கிறான். அதில் கணவன் ஜெயித்தானா? மாஜி காதலன் ஜெயித்தானா? என்பதே கதை!