cc

26. காதலும் கண்ணீரும்!

தவிலக்கம் 9,

லேடி மாதவநாயர் ரோடு,

Advertisment

மகாலிங்கபுரம்,

நுங்கம்பாக்கம், சென்னை-600 034

-இது எனது அலுவலக முகவரி மட்டுமல்ல... 1970ஆம் ஆண்டிலிருந்து 2007ஆம் ஆண்டு வரை திரையுலகின் 80% பேர் வந்துபோன இடம்; வந்துபோக விரும்பிய இடம். பல புதிய கலைஞர்கள் உருவான இடம்.

Advertisment

நி எஸ்.பி.முத்துராமன், தேவராஜ்- மோகன், பஞ்சு அருணாசலம், எடிட்டர் ஆர்.டி.அண்ணாதுரை, எஸ்.ஏ.சந்திரசேகர், ஜெயக்குமார், ஜி.என்.ரங்கராஜன், செல்வபாரதி -இப்படி பட்டியல் தொடரும்...!

நி ஜெயா, ஜெயசுதா, சுமித்ரா, ராஜலட்சுமி, சத்தியப்ரியா, (பேபி) ஸ்ரீதேவி, நிஷா போன்ற எண்ணற்ற கதாநாயகிகள்

நி சந்திரமோகன், சுருளிராஜன், பானுசந்தர், சுமன் வரை பல கதாநாயகர்கள்

நி பாபு, அகமத், நாகராஜ், ராஜேந்திரன் -இப்படி பல ஒளிப்பதிவாளர்கள்

நி சந்திரபோஸ், தேவா, இசைவாணன், டி.வி.எஸ்.ராஜு போன்ற பல இசையமைப் பாளர்கள்...

மேலும் பல தயாரிப்பாளர்கள் உருவான இடம்தான் என் அலுவலகமாக இருந்த மகா லிங்கபுரம் -லேடிமாதவன் நாயர் தெரு, ஒன்பதாம் நம்பர் வீடு.

என் அலுவலகம் பல தமிழ் போராட் டங்கள் உருவான இடமாகவும் திகழ்ந்தது.

"தமிழர் அய்க்கிய முன்னேற்றக் கழகம் உருவாகி, மனிதச் சங்கிலி எழுச்சிப் பயணம், வீரவணக்க ஊர்வலம் போன்ற எண்ணற்ற ஈழ ஆதரவு போராட்டங் கள் உருவான இடமும் அதுதான்.

கவிஞர் மு.மேத்தா, சுப. வீரபாண்டியன், திருமா வளவன், வேல்முருகன் போன்ற இன்றைய தலைவர்கள் அன்று வந்துபோன இடம் என்ற பெருமையும் அந்த அலுவலகத்துக்கு உண்டு. எனது முத்துவேலர் ஸ்டேஜ் என்ற நாடக மன்றம் இயங்கிய இடமும் இதுதான். "காசி யாத்திரை', "வாடகை வீடு', "கல்யாணராமன்', "எங்கள் தமிழினம் தூங்குவதோ', "அன்னை பூமி' போன்ற பல வெற்றி நாடகங்கள் உருவானதும் இங்கு தான். பெரும், பெரும் அரசியல் தலைவர் களும், எழுத்தாளர் களும், நடிக -நடிகை யரும் அடிக்கடி வந்து போகும் இடமாக இருந்த இந்த அலுவலகம், சில அரசியல் தலை வர்களின் தொல்லை தாங்க முடியாமல் ஒருசில நடிகைகள் அடைக்கலமான இடமாகவும், ஈழப் போராளித் தலைமைகள் பலர் வந்துபோன இடமாகவும் இருந்தது.

cc

எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், குமார், சங்கர்கணேஷ், தேவா, சந்திரபோஸ், இளையராஜா போன்ற பல இசையமைப் பாளர்கள் பல படங்களுக்கு இசையமைத்த பெருமையும் என் அலுவலகத்துக்கு உண்டு.

கண்ணதாசன், வாலி, காளிமுத்து, மு.மேத்தா, புலமைப்பித்தன், தஞ்சைவாணன், பூவை செங்குட்டுவன், முத்துலிங்கம் போன்ற புகழ்பெற்ற கவிஞர்கள் வந்து பாடல் எழுதிய இடம் இது. சென்னையில் தங்க இடமில்லாமல் தவித்த இன்றைய பல பிரபலங்கள் அன்று தங்கி மகிழ்ந்த இடம் என் அலுவலகம். ஈழப்போர் கலவரத்தால் அடைக்கலம் தேடி இங்கு வந்த எம்.பி.க்கள் சிலர் தங்கியதும் இந்த அலுவலகத்தில்தான்.

இந்த அலுவலகத்துக்கு ஒருநாள் பிரபல கர்நாடக சங்கீத பாடகி கலங்கிய கண்களுடன் என்னைப் பார்க்க வந்தார். நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. "தனியாகப் பேசவேண்டும்' என்றார். என் தனி அறைக்கு அழைத்துப்பேய் அமரவைத்து பதட்டப்படாமல் என்ன விஷயம் எனக் கேட்டேன்.

"என் மகள், என்னிடம் சொல்லாமல் ஒரு மலையாள தயாரிப்பாளருடன் போய்விட்டாள். இது வெளியே தெரிஞ்சா அவமானம். அவளை திரும்ப வீட்டுக்கு அழைத்து வரவேண்டும்... உங்களால்தான் முடியும்' என்றார்.

"காதலா? அல்லது கடத்தப்பட்டாரா?' என கேட்டேன்.

"ஒரு கதாநாயகனை அவள் காதலித்தாள். ஆனால் அவர் கல்யாணம்பண்ண விரும்பவில்லை. அதில் விரக்தியடைந்த நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் இந்த தயாரிப்பாளரை நம்பி போயிருக்கிறாள்' எனச் சொன்னார்.

ஓரிரு தடவை சபையர் தியேட்டர் -எமரால்ட் தியேட்டரில் அந்த நடிகை யையும், அந்த நாயகனை யும் நானே பார்த்திருக் கிறேன். முன்பு என் நாட கத்தில் நடித்த ஒரு நாயகி யைப் பார்க்க அந்த நாய கன் அடிக்கடி மோட்டார் சைக்கிளில் நாடகம் நடக்கும் அரங்கங்களுக்கு வருவதுண்டு. மிகச் சின்ன வயசு அவருக்கு... விளை யாட்டுத்தனம் என நான் கருதியதுண்டு.

அந்த தயாரிப்பாளர் எங்கே தங்கியிருக்கிறார் என்பதை தெரிந்துகொண் டேன். அம்மையாரிடம், "தயவுசெய்து நீங்கள் வீட் டுக்குப் போங்கள், நான் விரைவில் உங்கள் மகளை வீட்டுக்கு அழைத்து வரு கிறேன்' என அந்த அம்மை யாரை அனுப்பிவிட்டு... நான் தயாரானேன்.

அந்த சமயம் லைசென் ஸோடு ரிவால்வர் வைத்தி ருக்கும் ஒரு பிரபலம் என் அலுவலகத்துக்கு வந்தி ருந்தார். அவரிடம் ரிவால் வரை பெற்றுக்கொண் டேன். அந்த சமயம் என் பல படங்களில் நடித்துக் கொண்டிருந்த விஜயகுமா ரும் என் அலுவலகத்தில் இருந்தார். என் காரில் போக விரும்பாமல், விஜயகுமார் கார் சாவியை பெற்றுக்கொண்டு புறப்பட்டேன். அந்த தயாரிப் பாளர் தங்கியிருந்த வீட்டுக்குப் போனேன். டிரைவர் என்னை தடுக்க முயன்றார். அவரை நான் பார்த்த பார்வையிலேயே விலகிவிட்டார். கீழே யாருமில்லை -மாடியில் இவர்கள் இருப்பதை புரிந்துகொண்டு, சற்று கடுமையான குரலில் அந்த நடிகையின் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டேன். உடனே பதிலில்லை.

"நீங்க கீழே வந்தா நான் மேல வரவேண்டிய அவசியம் இருக்காது... எதுவானாலும் பேசித் தீர்த்துக்கலாம் வாங்க கீழே...' எனச் சொன்னேன், வந்துவிட்டார்கள். "நீங்க ஏறுங்க காரிலே' என்றதும் மறுக்காமல் ஏறிவிட்டார்கள்.

நான் வண்டியை எடுத் தேன். நேராக அடையாறில் உள்ள அம்மா வீட்டுக்கு வண்டியை ஓட்டினேன். வழியில் அந்த நடிகை தன் பக்கமுள்ள நியாயங்களையும், பாதிப்புகளையும் கண்ணீ ரோடு சொல்லிக்கொண்டே வந்தார்.

"உங்கள் பிரச்சினை களை அம்மாவோடு பேசித் தீர்த்துவிட்டு ஒரு முடிவை எடுக்க வேண்டுமே தவிர... இப்படி நடந்தா எல்லா ருக்கும் கெட்டபேர் வராதா?'' எனக் கேட்டேன். மவுனமே பதிலாகக் கிடைத்தது.

தாயாரிடம் மகளை ஒப்படைத்துவிட்டு "நல்ல முடிவா எடுங்க'' என்று சொல்லிவிட்டு நான் கிளம்பிவிட்டேன்.

சில வருடங்கள் கழித்து நடிகை -தயாரிப்பாளர் திரு மணம் நடந்து, என் அலுவல கத்துக்குப் பக்கத்திலேயே குடிவந்தார்கள்.

அந்தப் பாடகி... எம்.எல்.வசந்தகுமாரி அம்மா! நாயகி என் "மதுரகீதம்' படத்தின் கதாநாயகி ஸ்ரீவித்யா. என்ன அருமையான நடிகை. அவரின் சோகமான முடிவு இன்னமும் என் மனதைப் பாதிக்கும் முடிவு. நல்ல ஆத்மா... பழகுவதற்கு இனிமையானவர். யாரையும் சுலபமாக நம்பிவிடும் குழந்தை மனம்.

மூன்று முகமும்... மூன்றெழுத்தும்...

(திரை விரியும்...)

படம் உதவி: ஞானம்

ck