Advertisment

சினிமா கொட்டகை! டைரக்டர் -ரைட்டர் வி.சி.குகநாதன் (24)

cc

cc

(24) ஜெயலலிதாவும் ஜெயாவும்!

Advertisment

"அனாதை ஆனந்தன்' படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள், சண்டைக் காட்சிகள் ஐதராபாத்தில் கோல்கொண்டா கோட்டையில் படமாக்கப்பட்டன. அப்போது ஜெயலலிதா அவர்களுக்கு நிறைய ஓய்வு நேரம் இருந்தது. நிறைய படிப்பார். தான் படித்த புத்தகங்கள் பற்றி என்னிடம் சொல்வார். எதைப் படிப்பது என்றில்லாமல்... பல ரகமான நூல்களைப் படிப்பார். அதுபற்றியெல்லாம் தெளிவாகப் பேசுவார். எந்த நோக்கத்தோடு இத்தனை நூல்களையும் படிக்கிறார் என்பது அப்போது எனக்கு புரியாத புதிராக இருந்தது.

அதைவிட எனக்கு பெரும்புதிராக இருந்த விஷயம் ஒன்று உண்டு. ஐதராபாத்தில் "அனாதை ஆனந்தன்' படப்பிடிப்பு முடிந்ததும் சென்னை திரும்பினேன். அண்ணன் எம்.ஜி.ஆரை பார்க்கப் போயிருந்தேன். கலகலப்பாக பேசிய அவர், ஐதராபாத்தில் நடந்த பல விஷயங்களை நேரில் பார்த்தது போல் சொன்னார். நான் ஆச்சரியமானேன். அதைவிட... அதிர்ச்சி யடைந்தேன்.

"எப்படி இங்கிருந்து கொண்டு ஹைதராபாத்தில் நடந்த விஷயங்களை துல்லியமாகச் சொல்கிறார்...' என வியந்துபோனேன்.

Advertisment

இந்தப் படத்தில் ஜெயலலிதா குளியல் தொட்டியில் குளிப்பது போல ஒரு பாடல் காட்சி எடுக்கப் பட்டது. அத்தியாவசிய தொழில்நுட்பக் கலைஞர்கள் தவிர, பார்வையாளர்களோ... மற்ற கலைஞர்களோ, ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

இந்தியில் இந்தப் பாடல் காட்சியில் பத்மினி தூள்கிளப்பியிருப்பார். சும்மா சொல்லக்கூடாது... ஜெயலலிதாவும் மிகுந்த சிரத்தை எடுத்து நடித்துக்கொடுத்தார்.

பாடல் காட்சியை திரையிட்டுப் பார்த்த ஏவி.எம். அவர்களுக்கு திருப்தி ஏற்படவில்லை. எவ்விதமான நகைகளும் அணியாமல் "மொழ

cc

(24) ஜெயலலிதாவும் ஜெயாவும்!

Advertisment

"அனாதை ஆனந்தன்' படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள், சண்டைக் காட்சிகள் ஐதராபாத்தில் கோல்கொண்டா கோட்டையில் படமாக்கப்பட்டன. அப்போது ஜெயலலிதா அவர்களுக்கு நிறைய ஓய்வு நேரம் இருந்தது. நிறைய படிப்பார். தான் படித்த புத்தகங்கள் பற்றி என்னிடம் சொல்வார். எதைப் படிப்பது என்றில்லாமல்... பல ரகமான நூல்களைப் படிப்பார். அதுபற்றியெல்லாம் தெளிவாகப் பேசுவார். எந்த நோக்கத்தோடு இத்தனை நூல்களையும் படிக்கிறார் என்பது அப்போது எனக்கு புரியாத புதிராக இருந்தது.

அதைவிட எனக்கு பெரும்புதிராக இருந்த விஷயம் ஒன்று உண்டு. ஐதராபாத்தில் "அனாதை ஆனந்தன்' படப்பிடிப்பு முடிந்ததும் சென்னை திரும்பினேன். அண்ணன் எம்.ஜி.ஆரை பார்க்கப் போயிருந்தேன். கலகலப்பாக பேசிய அவர், ஐதராபாத்தில் நடந்த பல விஷயங்களை நேரில் பார்த்தது போல் சொன்னார். நான் ஆச்சரியமானேன். அதைவிட... அதிர்ச்சி யடைந்தேன்.

"எப்படி இங்கிருந்து கொண்டு ஹைதராபாத்தில் நடந்த விஷயங்களை துல்லியமாகச் சொல்கிறார்...' என வியந்துபோனேன்.

Advertisment

இந்தப் படத்தில் ஜெயலலிதா குளியல் தொட்டியில் குளிப்பது போல ஒரு பாடல் காட்சி எடுக்கப் பட்டது. அத்தியாவசிய தொழில்நுட்பக் கலைஞர்கள் தவிர, பார்வையாளர்களோ... மற்ற கலைஞர்களோ, ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

இந்தியில் இந்தப் பாடல் காட்சியில் பத்மினி தூள்கிளப்பியிருப்பார். சும்மா சொல்லக்கூடாது... ஜெயலலிதாவும் மிகுந்த சிரத்தை எடுத்து நடித்துக்கொடுத்தார்.

பாடல் காட்சியை திரையிட்டுப் பார்த்த ஏவி.எம். அவர்களுக்கு திருப்தி ஏற்படவில்லை. எவ்விதமான நகைகளும் அணியாமல் "மொழுக்' என ஜெயலலிதா நடித்திருந்தது ஒரு குறையாகப் பட்டிருக்கிறது அவருக்கு.

"கழுத்தில் ஏதாவது நகை (செயின்) போட்டு, அந்தப் பாடல் காட்சியை திரும்ப எடுக்கலாம்' என ஏவி.எம். அபிப்பிராயப் பட்டார். தகவல் ஜெயலலிதாவுக்கு சொல்லப் பட்டது. ஏற்கனவே மூன்று நாட்களாக குளியல் தொட்டியிலேயே இருந்து நடித்துக்கொடுத்த ஜெயலலிதா, தன் உடல்நலத்தைப் பற்றி கவலைப்படாமல் மீண்டும் மூன்று நாட்கள் கால்ஷீட் கொடுத்து அந்த குளியல் பாடல் காட்சியில் நடித்துக்கொடுத்தார்.

Ammu was a very co-operative artist.

நடிகர் திலகம் சிவாஜி சார் என்னை அழைத்து "படம் பண்ணு... நல்ல கதையா ரெடி பண்ணு' என்று சொன்னதும், நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

கதையை தயார் செய்து சொன்னேன். ஓ.கே. சொல்லி கால்ஷீட் தேதிகளும் ஒதுக்கித் தந்தார். கதாநாயகியாக ஜெயலலிதா நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு, தியாகராய நகர் சிவஞானம் தெருவிலிருந்து ஜெயலலிதாவின் வீட்டிற்குச் சென்று கதையைச் சொன்னேன். மறுப்பேதும் சொல்லாமல் நடிக்க ஒப்புக் கொண்டார். முதலில் கருப்பு-வெள்ளை படமாக ஆரம்பிக்கப்பட்டு, பிறகு சிவாஜி சார் கேட்டுக்கொண்டதால் கலர் படமாக எடுக்க முடிவுசெய்யப்பட்டது. கதையும் மாறியது. நண்பர் பாலமுருகன் எழுதிய கதையை படமாக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. கதாநாயகி ஜெயலலிதாவின் கால்ஷீட் மொத்தமாக தேவைப்பட்டதால் ஜெயலலிதாவிடம் பேசினேன். மிகப் பொறுமையாகவும், விளக்கமாகவும் எனக்கு பதில் சொன்னார்.

ck

"என்னால நிச்சயமா நீங்க கேட்கிற தேதிகளைத் தரமுடியாது. ஒருநாள், ரெண்டு நாள் என்றால் அட்ஜஸ்ட் பண்ணலாம். நீங்க கேட்கும் தேதிகளை எம்.ஜி.ஆர். படங் களுக்காகக் கொடுத்துட்டேன்''

"நான் வேணும்னா அண்ணன்கிட்ட போய் கேட்டுப் பார்க்கிறேன்''

"இல்ல... அது உங்களோட ஷூட்டிங்கிற்கு இடையூறா வந்துடலாம். எம்.ஜி.ஆர். கிட்ட கேட்க வேணாம் குகநாதன்'' என்று சொன்னார்.

ஜெயலலிதா நடிக்க முடியாமல் போன வருத்தம், ஆயினும் சிவாஜிக்கு ஜோடியாக உஷா நந்தினி நடிக்க "ராஜபார்ட் ரங்கதுரை' படத்தை எடுத்து முடித்தேன். ஆனால் படம் பார்க்க ஜெயலலிதாவை அழைக்க மறந்துவிட்டேன். அவராகவே படத்தைப் பார்த்துவிட்டு, என் னைக் கூப்பிட்டு மனம்திறந்து பாராட்டினார்.

"ஒரு நல்ல படத்தை, பெரிய படத்தை தயாரிச்சு, பெரிய தயாரிப்பாளர்கள் பட்டிய லில் சேர்ந்துட்டீங்க, "ந்ங்ங்ல் ண்ற் ன்ல்" என பாராட்டியதுடன், என் சொந்த வாழ்க்கை பற்றியும் மிக நாசூக்காக விசாரித்தார்.

"உங்க படத்திலே தங்கச்சியா நடிச்சிருக் கிற ஜெயா... கொஞ்சம் என்னோட சாயல்ல இருக்காங்கள்ல...'' என்று கேட்டார்.

"அவங்கதான் என் முதல் படமான "சுடரும் சூறாவளியும்' படத்தோட ஹீரோயின்.

"ஆமா... அதுக்குப் பிறகு "கனிமுத்துப் பாப்பா', "பெத்த மனம் பித்து' இதுலயெல்லாம் நடிச்சாங்கள்ல?' என கேட்டார் ஜெயலலிதா.

நான் அந்தக் கேள்வியை சற்றும் எதிர்பார்க்காததால் அதிர்ச்சியடைந்தேன். மத்தவங்க நலனில் அக்கறை காட்டுற நல்ல குணம் அப்பவே ஜெயலலிதாகிட்ட இருந்தது.

நான் இறுதிவரை ஜெயலலிதாகிட்ட சொல்லாத ஒரு விஷயம் உண்டு. என் மனைவி பெயர் ஷீலா. ஆனால் நான் தயாரித்த முதல் பட மான "சுடரும் சூறாவளியும்' படத்தில் நாயகியாக அவரை அறிமுகப்படுத்தும்போது ஷீலாவை "ஜெயா' என மாற்றி அறிமுகப்படுத்தினேன்.

ஏவி.எம். ஸ்டுடியோவில் பணியாற்றிய சுந்தரமூர்த்தி என்பவரின் சிபாரிசுடன் கோவிந்தன் என்றொரு தயாரிப்பாளர் படம் தயாரிக்க வேண்டும் என்று என்னிடம் வந்தார். அந்த சமயம் லட்சுமி, "வெண்ணிற ஆடை' நிர்மலா, ஜெயா, ஜெயசுதா, பிர மிளா, பத்மினி, சத்யப்ரியா, வரலட் சுமி, ஸ்ரீவித்யா, ராஜலட்சுமி என பல கதாநாயகிகள் என் படங்களில் தொடர்ந்து நடித்துவந்தனர்.

ஜெயலலிதா என் படங்களில் நடிக்காததால் அவருக்காக ஒரு கதையை தயார் செய்து "ஜெயலலிதாவை வைத்து இந்தப் படத்தை தயாரிக்க லாம். நானே ஃபுல் ஃபைனான்ஸும் பண்ணுகிறேன்'' என்றேன், கோவிந் தனும் சம்மதித்தார். எஸ்.பி.முத்து ராமனிடம் இயக்கும் பொறுப்பைக் கொடுத்து, ஜெயலலிதாவிடம் கதை யைச் சொல்லிவிட்டு வரச்சொன் னேன். "நீங்களே ஒப்புதல் பெற்று வாங்க'' என எஸ்.பி.முத்துராமன் சொல்ல... ஜெயலலிதாவை சந்தித்து கதையைச் சொன்னேன். வித்தியாச மான கதை என்பதால் ஒப்புக்கொண் டதுடன்... "டைரக்டர் யாரு? உங்க நண்பர் முத்துராமனா?'' என்று கேட்டார். நான் சிரித்தேன்.

"அவர் நல்ல உழைப்பாளி. திருலோகசந்தர் படங்கள்ல அசோஸி யேட்டா வேலை செய்யும்போது பாத்திருக்கேன்'' என பாராட்டி விட்டு, "ஆமா... இந்தக் கதையிலே ஒரு தங்கச்சி கேரக்டர் இருக்கே... அதுல யாரு நடிக்கப்போறா? உங்க ஜெயாவா?'' என்று கேட்டார்.

நான் அசடுவழிய சிரித்தேன்.

கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க ஜெயலலிதா ஏன் மறுத்தார்?

(திரை விரியும்...)

படம் உதவி: ஞானம்

_______________

கோவிலும் ஆலயமும்!

ர் ஆங்கிலப் படம்... பெயரை மறந்துவிட்டேன். நல்ல கதைக்களம். முக்கிய கதாபாத்திரங்கள் மூன்றே மூன்றுதான். அதை ஆதாரமாக வைத்து கதையாக தமிழில் எழுதி "இதயக் கோயில்' என பெயரிட்டு பத்திரிகைக்கு அனுப்பிவைத்தேன். அது பிரசுரமானது மட்டுமல்ல பரிசுப் பணமும் கிடைத்தது. அதைவிட ஆச்சரியம், சில மாதங்கள் கழித்து அதே ஆங்கிலப்படம் தமிழ்ப் படமாக வந்தது. ccபடத்தின் பெயர் "நெஞ்சில் ஓர் ஆலயம்'. ஸ்ரீதரின் வெள்ளிவிழா படம். ஆங்கிலப் படத்தில் டாக்டரின் மாஜி காதலி தன் "கான்சர்' நோயாளியான கணவனை அழைத்து வந்து கான்சர் ஸ்பெஷலிஸ்ட் ஆன டாக்டரிடம் ஒப்படைத்து கணவனை காப்பாற்ற கெஞ்சுவாள். தன் மனைவியின் மாஜி காதலனே அந்த டாக்டர் என்பது கணவனுக்குத் தெரியாது. டாக்டரோ எப்படியாவது அவனைக் காப்பாற்றப் போராடுவார். கணவனுக்கு ஒரு கட்டத்தில் டாக்டர், தன் மனைவியின் மாஜி காதலன் என்பது தெரியவருகிறது. தான் நிச்சயமாக காப்பாற்ற முடியாத வியாதி வந்திருப்பதனால் இறந்துவிடுவோம் என்பதை கணவன் உணர்ந்துவிடுகிறான். அதனால் மாஜி காதலியை அவள் விரும்பிய டாக்டருடன், தன் மரணத்துக்கு முன்னால் சேர்த்துவைக்க முயற்சிகள் எடுக்கிறான். அது நடக்கும் என்ற நம்பிக்கை வந்ததும் இறந்துபோகிறான். அருமையான படம்.

அதை அப்படியே எழுதி, நான் பரிசு பெற்றேன். ஆனால் மிகச்சிறந்த தொழில்நுட்பக் கலைஞரும், காதல் கதைகளில் மிரட்டும் ஸ்ரீதர் அவர்கள், தன் மாஜி காதலிக்காக இரவு, பகல் பாராது உழைத்து அவளின் கணவனை நோயிலிருந்து மீட்டு, அவளிடம் ஒப்படைத்துவிட்டு... இறந்துபோகிறார் அந்த டாக்டர் என க்ளைமாக்ஸை மாற்றியமைத்து "நெஞ்சல் ஓர் ஆலய'த்தின் பெயருக்கு ஏற்ற மாதிரி மாஜி காதலிக்காக தியாகியாகி, அவர்கள் வழிபடும் கோவிலாகவும்... அதில் வீற்றிருக்கும் தெய்வமாகவும் ஆகிறார் டாக்டர். முரசொலி மாறனின் "நல்ல தீர்ப்பு' படமும், ஸ்ரீதரின் "நெஞ்சில் ஓர் ஆலயம்' படமும் எனக்கு ஒரு புது வழியைக் காண்பித்தது.

nkn280924
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe