சினிமா கொட்டகை! டைரக்டர் -ரைட்டர் வி.சி.குகநாதன் (23)

cc

cc

(23) எண்ணத்தை எழுத்தில் சொன்னேன்!

சினிமாவில் என்னை கதாசிரியனாக அறிமுகப்படுத்தி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியவர் எம்.ஜி.ஆர். தனது ரசிகனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்த உயர்வான இடம் இது.

எதையும் எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட்டுச் செய்கிற நான்... தயாரிப்பாளராக ஆனதை மட்டும் சொல்லவில்லை. "இந்த சின்ன வயசுல... எதுக்கு பெரிய சுமையை சுமக்கிற?' என எம்.ஜி.ஆர். திட்டு வாரோ... என்கிற பயம்தான். சிவாஜி சாரின் அரவணைப்பினாலும், டைரக்டர் பி.மாதவன் அவர்களின் நட்பினாலும் "ராஜபார்ட் ரங்கதுரை' படத்தை தயாரிக்கத் தொடங்கினேன். ஏவி.எம். செட்டியார் அப்பச்சி ஃபைனான்ஸ் பண்ணினார். சிவாஜி சாரும், சிவாஜியின் கால்ஷீட்டை கவனித்துக்கொண்டிருந்த சிவாஜியின் தம்பி சண்முகம் சாரும், ஏவி.எம். ஸ்தாபனத்துடன் சிறு மனக்கசப்பில் இருந்ததால் "ராஜபார்ட் ரங்கதுரை' படப்பிடிப்பு தாமதமானது. இதேசமயத்தில் ஏவி.எம்.மை விட்டு வெளியேறிய எஸ்.பி.முத்துராமனுக்கு ஆதரவுக்கரம் நீட்டி, "கனிமுத்து பாப்பா', "பெத்த மனம் பித்து' படங்களை தயாரித்துவந்தேன்.

"ராஜபார்ட் ரங்கதுரை' படப்பிடிப்பு தாமத மாகிக்கொண்டே வந்ததால், நான் திட்டமிட்டிருந்த தயாரிப்புச் செலவு அதிகரித்துக்கொண்டே போனது. இந்தப் படத்தை நான்தான் தயாரிக் கிறேன் என்பதை எம்.ஜி.ஆரிடம் சொல்லாத போதும், எனக்காக எம்.ஜி.ஆர்., சிவாஜியிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார். ஜெமினி ஸ்டுடி யோவில் ஒரு படப்பிடிப்பின்போது பத்திரிகை யாளர்களைச் சந்தித்தார் எம்.ஜி.

cc

(23) எண்ணத்தை எழுத்தில் சொன்னேன்!

சினிமாவில் என்னை கதாசிரியனாக அறிமுகப்படுத்தி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியவர் எம்.ஜி.ஆர். தனது ரசிகனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்த உயர்வான இடம் இது.

எதையும் எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட்டுச் செய்கிற நான்... தயாரிப்பாளராக ஆனதை மட்டும் சொல்லவில்லை. "இந்த சின்ன வயசுல... எதுக்கு பெரிய சுமையை சுமக்கிற?' என எம்.ஜி.ஆர். திட்டு வாரோ... என்கிற பயம்தான். சிவாஜி சாரின் அரவணைப்பினாலும், டைரக்டர் பி.மாதவன் அவர்களின் நட்பினாலும் "ராஜபார்ட் ரங்கதுரை' படத்தை தயாரிக்கத் தொடங்கினேன். ஏவி.எம். செட்டியார் அப்பச்சி ஃபைனான்ஸ் பண்ணினார். சிவாஜி சாரும், சிவாஜியின் கால்ஷீட்டை கவனித்துக்கொண்டிருந்த சிவாஜியின் தம்பி சண்முகம் சாரும், ஏவி.எம். ஸ்தாபனத்துடன் சிறு மனக்கசப்பில் இருந்ததால் "ராஜபார்ட் ரங்கதுரை' படப்பிடிப்பு தாமதமானது. இதேசமயத்தில் ஏவி.எம்.மை விட்டு வெளியேறிய எஸ்.பி.முத்துராமனுக்கு ஆதரவுக்கரம் நீட்டி, "கனிமுத்து பாப்பா', "பெத்த மனம் பித்து' படங்களை தயாரித்துவந்தேன்.

"ராஜபார்ட் ரங்கதுரை' படப்பிடிப்பு தாமத மாகிக்கொண்டே வந்ததால், நான் திட்டமிட்டிருந்த தயாரிப்புச் செலவு அதிகரித்துக்கொண்டே போனது. இந்தப் படத்தை நான்தான் தயாரிக் கிறேன் என்பதை எம்.ஜி.ஆரிடம் சொல்லாத போதும், எனக்காக எம்.ஜி.ஆர்., சிவாஜியிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார். ஜெமினி ஸ்டுடி யோவில் ஒரு படப்பிடிப்பின்போது பத்திரிகை யாளர்களைச் சந்தித்தார் எம்.ஜி.ஆர். அப்போது...

"தம்பி குகநாதன் தயாரிக்கும் படத்தை தம்பி சிவாஜிகணேசன் விரைந்து முடித்துக்கொடுக்க வேண்டும்'' என பத்திரிகையாளர்கள் மூலம் கேட் டுக் கொண்டார். இது பரபரப்பான செய்தியாக வெளிவந்தது. இதற்காக நான் எம்.ஜி.ஆரை சந்தித்து நன்றி சொன்னால், "நம்மைப் பற்றி எம்.ஜி.ஆரிடம் குகநாதன் குறை சொல்லியிருப் பாரோ' என சிவாஜி தரப்பில் நினைப்பார்களோ...

"சிவாஜியை சந்தித்து விளக்கம் சொன்னால், எம்.ஜி.ஆர். தரப்பில் தவறாக நினைப்பார்களோ...' என தர்மசங்கடத்துக்கு ஆளானேன்.

இதனால் இரு திலகங்களிடமும் நேரடியாகப் பேசாமல் வேறொரு யுத்தியைக் கையாண்டேன். "பிலிமாலயா' பத்திரிகையில்... "இரு திலகங்களும் என்னை மன்னிக்க வேண்டும், இந்த தாமதத்திற்கு யாரும் காரணமல்ல' என்று ஒரு கட்டுரை எழுதினேன். அதோடு நின்றுவிடாமல் சிவாஜி பிலிம்ஸ் அலுவலகத்துக்குச் சென்று சிவாஜியின் தம்பி சண்முகம் சாரிடம் பேசி... உடனே கால்ஷீட் வாங்கி படத்தை வேகப்படுத்தி முடித்து வெளியிட்டேன். படம் வெளியாகி பெரிதாகப் பேசப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த பொருளாதார வெற்றியை ஈட்டவில்லை.

துவண்டுபோயிருந்த எனக்கு எம்.ஜி.ஆரைப் போய் பார்க்க கூச்சமாக இருந்தது. ஆனாலும் எனக்காக அவர் சிவாஜியிடம் கோரிக்கை வைத் ததை நான் மறக்கவில்லை, மறக்கவும்மாட்டேன்.

cc

"அனாதை ஆனந்தன்' படத்தின் திரைக் கதையை மாற்றியும், வசனத்தையும் நான் எழுத வேண்டும் என்கிற வாய்ப்பு என்னைத் தேடிவந்த போது, நான் அந்த வாய்ப்பிலிருந்து நழுவிக் கொள்ள முயற்சித்தேன். ஆனால் அந்தப் படத்தின் நாயகியாக ஜெயலலிதா நடிக்கிறார் என்றதும் ஒப்புக்கொண்டேன். (ஹீரோ ஏவி.எம்.ராஜன்) ஜெயலலிதாவோடு நான் பணியாற் றும் நாலாவது படமாக "அனாதை ஆனந்தன்' அமைந்தது. ஹிந்தியில் "நாட்டியப் பேரொளி' பத்மினி அவர்கள் நடித்த "சந்தா அவுர் பிஜிலி' என்ற ஹிந்திப் படம்தான் "அனாதை ஆனந்தன்'. ஆனால் இந்தக் கதைக்கு "ஆலிவர் டுவிஸ்ட்' என் கிற ஆங்கிலப் படம்தான் மூலக்கதையாக அமைந் தது. ஒரு சிறுவனுக்கும், ஒரு இளம் பெண்ணுக்கும் இடையே நடக்கிற முக்கியத்துவம் வாய்ந்த கதை.

பத்மினி மிகச்சிறப்பாக நடித்திருந்தார். அந்த வேடத்தில் ஜெயலலிதா எப்படி நடிப்பார் என்கிற ஆவலுடன் எழுத ஆரம்பித்தேன். பல காட்சிகளை சிறு, சிறு மசாலா அம்சங்கள் சேர்த்து, கதாநாயகி கேரக்டரை உயர்த்தினேன்.

இந்தப் படத்தின் எழுத்து வேலை நடந்து கொண்டிருந்தபோது, ஒருநாள் எம்.ஜி.ஆரை சந்தித்தேன். அப்போது "அனாதை ஆனந்தன்' கதையைப் பற்றியும், கதாநாயகனின் பாத்திரப் படைப்பு பற்றியும் கேட்டார். ஏன் கேட்கிறார் என் பது எனக்குப் புரியவில்லை. ஆனாலும் விலாவாரி யாக கதையை விளக்கிச் சொன்னேன். எம்.ஜி.ஆர். அந்தக் கதையை மிகவும் ரசித்தார் என்பதை, அவ ரின் ரியாக்ஷன் மூலமாக தெரிந்துகொண்டேன்.

அடுத்த சில நாட்களில் ஏவி.எம். ஸ்டுடியோ வில் ஏவி.எம்.ராஜன் -ஜெயலலிதா நடிப்பில் "அனா தை ஆனந்தன்' படப்பிடிப்பிற்கான பூஜை போடப் பட்டது. தொடர்ந்து படப்பிடிப்பும் சில நாட்கள் நடந்த நிலையில்... நடிகர் அசோகன் வந்து ஏவி.எம். அவர்களை சந்தித்தார்.

"இந்தப் படத்துல எம்.ஜி.ஆர். நடிக்க விரும்புவ தாக' தெரிவித்தார். ஆனால், ஏவி.எம்.ராஜன் ஒப் பந்தம் செய்யப்பட்டு சில காட்சிகளும் எடுக்கப் பட்டுவிட்ட நிலையில், அதற்கு வாய்ப்பில்லாமல் போனது. ஆனால் எம்.ஜி.ஆரே ஏவி.எம்.மிற்கு படம் தர வந்த வாய்ப்பை வேறுவிதமாகப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தார் அப்பச்சி.

என்.டி.ராமாராவ் நடித்து தயாரித்த வெற் றிப்படம் "உம்மிடி குடும் பம்'. இந்த தெலுங்குப் படத்தை டி.யோ கானந்த் இயக்கினார். யோகானந்த் கேட்டுக்கொண்டதால் இந்தப் படத்தின் கதை விவாதத்தில் நான் கலந்து கொண்டேன். என்.டி.ஆர். அவர்களை "ஆந்திர எம்.ஜி. ஆர்.' என்றே அழைப் பார்கள். மிகப்பெரிய ரசிகர் கூட்டம் அவருக்கு இருந் தது. அப்பச்சி அவர்கள் "உம்மிடி குடும்பம்' கதை யை தமிழில் தயாரிக்கும் உரிமையை வாங்கியிருந் தார். ஆனால் உடனடி யாகத் தயாரிக்கவில்லை. இப்போது எம்.ஜி.ஆர். "அனாதை ஆனந்தன்' படத் தில் நடிக்கக் கேட்டதை, இந்தப் படத்திற்கு மாற்றிக்கொள்ளலாம் என எண்ணினார். கிருஷ்ணன்-பஞ்சு அவர் களின் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். -ஜெயலலிதா நடிப்பில் அந்தக் கதையை தயாரிக்க முடிவானது. அப்பச்சியும் கிருஷ்ணன்- பஞ்சுவும் என்னை அழைத்து, "உம்மிடி குடும்பம்' கதையின் ஃபைலை கொடுத்தார்கள்.

"எம்.ஜி.ஆருக்கு தகுந்த மாதிரி திரைக்கதை யை மாத்தி வசனத்தையும் எழுதுங்க'' என்றார்கள். நான் பெரும் உற்சாகத்தோடு திரைக்கதை -வசனம் எழுதும் வேலையைத் தொடங்கினேன். 6 மாதங் கள்... அணு அணுவாக திரைக்கதையை செதுக்கி வசனம் எழுதி முடித்து படித்துக் காட்டியபோது, கேட்ட அனைவருமே "பிரம்மாதம்' என என்னை பாராட்டு மழையில் குளிப்பாட்டினார்கள்.

"எம்.ஜி.ஆரிடமும் பாராட்டுப் பெறப் போகிறோம்' என மகிழ்ச்சியோடு இருந்தேன். சில வாரங்கள் கழித்து எம்.ஜி.ஆரை சந்திக்கச் சென்றபோது, "அண்ணே, திரைக்கதையும் வசனமும் சிறப்பா வந்திருக்கண்ணே'' என்றேன்.

"எந்தக் கதை?'' என்று கேட்டார்.

எனக்குப் பேரிடியாக இருந்தது. எல்லா விஷயத்தையும் அப்டேட்டாக தெரிந்து வைத்திருப்பவர் எம்.ஜி.ஆர். அதனால் எனக்கு அதிர்ச்சி. அந்த அதிர்ச்சியுடனேயே "ஏவி.எம். எழுதச் சொன்ன "உம்மிடி குடும்பம்' கதைதான்'' என்றேன்.

"ஏம்ப்பா... எழுத ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக் கக்கூடாதா?'' என்றார்.

உடனே நான் புரிந்துகொண்டேன். ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை ஏதோ நடந்திருக்கிறது. அதில் ஒரு சின்ன தப்புக்கணக்கும் நடந்துவிட்டது. அது என்ன என்பது தெரியவில்லை. எம்.ஜி.ஆர். ஃபைனல் பண்ணவில்லை என்பதை தெரிந்து கொண்டேன்.

"உம்மிடி குடும்பம்' தமிழுக்கான கதை -திரைக்கதை -வசனம் ஃபைல் இன்னமும் என்னிடம்தான் இருக்கிறது.

ஜெயலலிதா மூன்று நாட்கள் தண்ணீரில் நனைந்தபடி நடித்த பாடல் காட்சி ஏவி.எம். அப்பச்சிக்கு திருப்தி தரவில்லை. இதனால் உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் மீண்டும் அந்தப் பாடல் காட்சியில் ஜெயலலிதா நடித்துக்கொடுத்தார்...

(திரை விரியும்...)

cc

nkn250924
இதையும் படியுங்கள்
Subscribe