(20) பாட்டுக்கு பட்ட பாடு!
துப்பாக்கியால் சுடப்பட்டு, சிகிச்சைக்குப் பின் மீண்டும் "புதிய பூமி' படப்பிடிப்பு தொடங்கியது. பொதுவாக எம்.ஜி.ஆர். படங்களில் பாடல்கள் மிகவும் ஸ்பெஷலாக இருக்கும். அதனால்... இதுவரை எம்.ஜி.ஆர். படங்களில் வராத அளவு வித்தியாசமான பாடல் ஒன்றை வைக்க விரும்பி, எனக்கு நண்பராகிவிட்ட கவிஞர் பூவை செங்குட்டுவனிடம் சொன்னேன். அவரும் ஒப்புக்கொண்டார். படத்தின் மற்ற பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதி, ஏற்கனவே எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பதிவு செய்யப்பட்டு விட்டது. இது புதிதாக உரு வாக்கப்பட்ட பாடல் காட்சி.
"இந்தப் பாடலில் எம்.ஜி. ஆரைப் பற்றி மக்களின் எண் ணம் வெளிப் பட வேண்டும்; மக்களுக்கு எம்.ஜி.ஆர். சொல்லும் பண்பான மெஸேஜும் இருக்கவேண்டும்; எம்.ஜி.ஆரின் தலைவர் அறிஞர் அண்ணா பற்றியும் குறிப்பிட வேண்டும்' என பாடலின் பொருளடக்கத் தையும் முடிவு செய்தோம்.
நாட்கணக்கல்ல... வாரக்கணக்கல்ல... மாதக்கணக்கில்...
நடு ஜாமங்களில்... சாலைகளில் நடந்தபடியே நானும், கவிஞரும் பாடல் பற்றியே சிந்தித்தோம்.
"நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
இது ஊரறிந்த உண்மை'
என்கிற இரு வரிகள் கிடைத்தது. தொடர்ந்து யோசித்தோம்.
ஒருநாள் நள்ளிரவு தாண்ட
(20) பாட்டுக்கு பட்ட பாடு!
துப்பாக்கியால் சுடப்பட்டு, சிகிச்சைக்குப் பின் மீண்டும் "புதிய பூமி' படப்பிடிப்பு தொடங்கியது. பொதுவாக எம்.ஜி.ஆர். படங்களில் பாடல்கள் மிகவும் ஸ்பெஷலாக இருக்கும். அதனால்... இதுவரை எம்.ஜி.ஆர். படங்களில் வராத அளவு வித்தியாசமான பாடல் ஒன்றை வைக்க விரும்பி, எனக்கு நண்பராகிவிட்ட கவிஞர் பூவை செங்குட்டுவனிடம் சொன்னேன். அவரும் ஒப்புக்கொண்டார். படத்தின் மற்ற பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதி, ஏற்கனவே எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பதிவு செய்யப்பட்டு விட்டது. இது புதிதாக உரு வாக்கப்பட்ட பாடல் காட்சி.
"இந்தப் பாடலில் எம்.ஜி. ஆரைப் பற்றி மக்களின் எண் ணம் வெளிப் பட வேண்டும்; மக்களுக்கு எம்.ஜி.ஆர். சொல்லும் பண்பான மெஸேஜும் இருக்கவேண்டும்; எம்.ஜி.ஆரின் தலைவர் அறிஞர் அண்ணா பற்றியும் குறிப்பிட வேண்டும்' என பாடலின் பொருளடக்கத் தையும் முடிவு செய்தோம்.
நாட்கணக்கல்ல... வாரக்கணக்கல்ல... மாதக்கணக்கில்...
நடு ஜாமங்களில்... சாலைகளில் நடந்தபடியே நானும், கவிஞரும் பாடல் பற்றியே சிந்தித்தோம்.
"நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
இது ஊரறிந்த உண்மை'
என்கிற இரு வரிகள் கிடைத்தது. தொடர்ந்து யோசித்தோம்.
ஒருநாள் நள்ளிரவு தாண்டிய இரண்டு மணி அளவில்...
"நான் செல்லுகின்ற பாதை...
பேரறிஞர் காட்டும் பாதை...'
இப்படி அருமையாக கிடைத்தது பல்லவி.
முழு பாடலையும் சிறப்பாக எழுதித் தந்தார் கவிஞர்.
இந்தப் பாடல் வரிகளையும், விலாவாரியாக நான் சொன்ன திரைக் கதையையும் கேட்டுத்தான் கனகசபை செட்டியார் "புதிய பூமி'க்கு ஃபைனான் ஸியராகவும், விநியோகஸ்தராகவும் வந்தார்.
எம்.ஜி.ஆர். இருக்கும் படப்பிடிப்புத் தளம் எப்போதும் நிசப்தமாக இருக்கும். யூனிட் ஆட்கள் வேலை சம்பந்தமாகப் பேசும்போது கூட சத்தமாகப் பேசமாட்டார்கள். அவர்மேல் அவ்வளவு மரியாதை. "மேக்-அப் அறையிலிருந்து எம்.ஜி.ஆர். வருகிறார்' என்ற தகவல் படப்பிடிப்புத் தளத்திற்கு எட்டியதுமே... "சின்னவர் வர்றாரு' என ஃப்ளோர் மிக அமைதியாகிவிடும்.
உள்ளே நுழைந்ததும் அனைவருக்கும் வணக்கம் வைத்தபடி நேரே கேமரா முன் ஷாட்டுக்குப் போய்விடுவார். ஷாட் முடிந்ததும் யூனிட்டுக்குத் தொல்லை இல்லாதபடி ஒரு இடத்தில் நாற்காலியைப் போடச் சொல்லி அமர்ந்துகொள்வார். அவர் ஏதோ செய்து கொண்டிருக்கிறார் என்பதுபோல் வேறு, வேறு வேலைகளில் கவனமாக இருப்பதுபோல் மற்றவர்களுக்குத் தோன்றும். ஆனால், அவரை நன்கு அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்... அவரின் கவனமெல்லாம் படமாகும் காட்சியின் மீதுதான் இருக்கும்.
காட்சி படமாகும்போது யாராவது முணுமுணுப்பாகப் பேசினால்கூட அவருக்குப் பிடிக்காது. எம்.ஜி.ஆரைப் பார்த்து நானும் கற்றுக்கொண்ட விஷயம் பல. அதில் முக்கியமானது...
படப்பிடிப்பின்போது படக்காட்சிகளைப் பற்றியே சிந்திப்பது!
"புதிய பூமி' படத்தில் எம்.ஜி.ஆர். சம்பந்தப்பட்ட காட்சிகளை மாற்றி, மாற்றி புதிதாய் சிறப்பாய் எழுதியது போல, நாகேஷ் சம்பந்தப்பட்ட நகைச்சுவைக் காட்சிகளையும் மாற்றியமைத்து "கடுமையான உழைப்பாளி குகநாதன்' என்ற பெயரை வாங்கினேன்.
"நான் உங்கள் வீட்டுப் பிள்ளை' எழுதி முடித்து தயார் செய்துவிட்டோம். ஆனால் "புதிதாக ஒரு பாடலைச் சேர்க்க எம்.ஜி.ஆர். சம்ம திக்கணுமே' என சந்தேகப்பட்டார் கவிஞர். ஆனால் எனக்கு ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை "சிறப் பான அம்சமுள்ள எதையும் எம்.ஜி.ஆர். கண்டிப்பா ஏத்துக்குவார்' என்றேன். என் அழுத்தமான வார்த்தைகளில் அவரது சந்தேகம் தீர்ந்தது.
படப்பிடிப்புத் தளத்தில் அந்தப் பாடல் வரிகளை முணுமுணுத்தபடியே... எம்.ஜி.ஆரையே சுற்றிச் சுற்றி வந்தேன். இரண்டு மூன்று நாட்கள் என் முணுமுணுப்பால் பயனில்லை. நாலாம்நாள்.. கொஞ்சம் சத்தமாக முணுமுணுத்தேன்.
"ஸ்பாட்டில் முணுமுணுத்தால் எம்.ஜி.ஆருக்கு பிடிக்காது' என்று சொன்னேனில்லையா... எம்.ஜி.ஆர். கோபமாகி விட்டார்.
"இங்க வா' என்றார்.
"என்கிட்ட ஏதாவது சொல்லணும்னா... நேரடியா சொல்லவேண்டியதுதானே... முட்டை போடப்போற கோழி மாதிரி ஏன் முணு முணுக்கிற?' என கேட்டார்.
பாடல் வரிகளைச் சொன்னேன்.
எம்.ஜி.ஆர்., என்னைக் கூர்ந்து பார்த்துவிட்டு... "நீங்க எழுதினதா? பாட்டும் எழுதுவீங்களா?'' என கேட்டார்.
"இது கவிஞர் பூவை.செங்குட்டுவன் எழுதுனது. "திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா... திருத்தணி மலைமீது எதிரொலிக்கும்'ங்கிற பக்திப் பாடலை எழுதியவர், தி.மு.க.காரர்!''
"உங்க நண்பரா?''
"இந்தப் பாட்டு வரிகள் "புதிய பூமி' கதைக்குப் பொருத்தமா இருந்துச்சு.''
"விஸ்வநாதன்கிட்ட சொல்லி ட்யூன் போடச் சொல்லு... போதுமா திருப்தியா?'' என்றார்.
நான் எம்.ஜி.ஆரின் காலை தொட்டு வணங்கிவிட்டு எம்.எஸ்.வி.யை சந்திக்க ஓடினேன்.
"நான் உங்கள் வீட்டுப் பிள்ளை' பாடல் காலத்தால் அழியாத பாடலாக இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
வைத்தியரா? வாத்தியாரா?
(திரை விரியும்...)
படம் உதவி: ஞானம்
________
முதல்வரின் முத்தான முழக்கம்!
"திரைகடலோடியும் திரவியம் தேடு' பழமொழிதான்... ஆனால் பழந்தமிழர் நடை முறையில் வழக்கத்தில் இருந்துவந்தது. பண்ட மாற்றும் இருந்ததை பாரதியே பாடியுள்ளார். இன்றும் நமது முதல்வர்கள் வெளிநாடுகள் சென்று முதலீடுகள் பெற்றுவருவதை காண் கின்றோம். ஆனால் நமது முத்துவேலர் பேரன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிகாகோவில் பேசிய கருத்துக்கள் பெருமைப் படவேண்டியவை.
"ஆண்டுக்கு ஒரு தடவையாவது தாயகம் வாருங்கள்... வானுயர்ந்து நிற்கும் வள்ளுவரை உங்கள் பிள்ளைகளுக்கு காட் டுங்கள். அங்கு நடப்பது ஒரு கட்சியின் ஆட்சி யல்ல, அது ஒரு இனத்தின் ஆட்சி... தமிழினத் தின் ஆட்சி என்பதனை உலகறியச் செய்யுங் கள்'' இவை வெறும் வார்த்தைகளல்ல... உலகத் தமிழரின் ஒற்றுமைக்கான முதல் குரல்! வீரவடுக்கள், விதைமதிப்பற்ற உயிர் தியாகங் கள், எண்ணற்ற சதிவலைகள்... இப்படி எல்லாவற்றையும் எதிர்கொண்டு மீண்டெழுந்த தமிழகம், இன்று திராவிட அரசியலை இந்தியா முழுவதும் பரப்பும் வேலையை ஆரம்பித்துவிட் டது. இது நடந்துவிட்டால்... தமிழனின் பெருமை உலக மக்களால் போற்றப்படும்! உலகத் தமிழர் கள் வீரநடை போடும் காலம் மலரும்! இதற்கு அடித்தளம் அமைத்த பெரியாரும், அண்ணா வும், கலைஞரும், எம்.ஜி.ஆரும், தம்பியும், ஏனைய தலைவர்களும் நினைக்கப்படுவர்.